உடுமலை வரலாறு

உடுமலை வரலாறு, பதிப்பக வெளியீடு, மணிமேகலை பிரசுரம், விலைரூ.500 உடுமலை என்ற ஊரைப் பற்றிய தகவல்கள் நிரம்பிய நுால். அவ்வூரின் பல்வேறு பெருமைகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. ஊர் வளர்ந்த வரலாறு பற்றிய குறிப்பிடத்தக்க செய்திகளைத் தொகுத்து வழங்கியுள்ளது. மலைகளின் ஊடே இருப்பதால் உடுமலை. உடு என்பது விண்மீனைக் குறிக்கும். எத்திசையில் இருந்து வந்தாலும் விண்மீன் தென்மலைக்கு அடையாளமாக இருந்து வருவதால், உடுமலை என்ற பெயர் பூண்டதாகச் சொல்லப்படுகிறது. சங்க காலத்தில் உதியன் மரபினர் ஆண்டதான குறிப்புண்டு. அங்கு கிடைத்த காசுகளும், தாழிகளும், நடுகற்களும், […]

Read more

நாட்டுப்புறவியலும் மக்கள் வாழ்வியலும்

நாட்டுப்புறவியலும் மக்கள் வாழ்வியலும்,  சரசுவதி வேணுகோபால்,மணிவாசகர் பதிப்பகம்,  பக்.159,  விலைரூ.125.  நாட்டுப்புற இலக்கியம் பற்றிய நூல்கள், கருத்தரங்கக் கட்டுரைகள் எனப் பலவும் வெளிவந்துள்ளன. அவ்வரிசையில், நாட்டுப்புற இலக்கியக் கூறுகளான வாய்மொழிப் பாடல்கள், கூத்து, ஆட்டம், விளையாட்டு, பழமொழி, விடுகதைகள், கதைப் பாடல்கள், ஆட்டப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரி பாடல்கள், மக்கள் வாழ்வியல், பண்பாடு முதலியவற்றை சாறு பிழிந்து தந்திருக்கும் இந்நூல், கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட, சில மாத, நாளிதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நாட்டுப்புறவியல்துறைத் தலைவராகப் பணியாற்றிய நூலாசிரியை, நாட்டுப்புறவியலின் போக்குகள், அணுகுமுறைகள், கோட்பாடுகள், […]

Read more

தேவேந்திர குல வேளாளர் வரலாறு

தேவேந்திர குல வேளாளர் வரலாறு, தே.ஞானசேகரன், காவ்யா பதிப்பகம்,  பக்கம் 160,  விலை ரூ.170 . கடந்த 2000-ஆம் ஆண்டு மள்ளர் சமூக வரலாறு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்தநூல், தற்போது தேவேந்திரகுல வேளாளர் வரலாறு என்ற பெயரில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மருத நில உழவர் பெருமக்களான தேவேந்திர குல வேளாளர்களின் தோற்ற வரலாறு 12 கதைகள் மூலமும், தொல்காப்பியச் சான்று, இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகள், நாட்டுப்புற வழக்காறு, பள்ளு நூல்கள், சடங்கு பாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் தொகுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் […]

Read more

உலகப் பெரும் புலவர் வீரமாமுனிவர்

உலகப் பெரும் புலவர் வீரமாமுனிவர், முதுமுனைவர் பால் வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், விலைரூ.120. வீரமாமுனிவர் இத்தாலி நாட்டில் இருந்து தமிழகத்துக்கு, 18ம் நுாற்றாண்டில் வருகை தந்தவர். தன் பெயரைத் தைரியநாதர் என்று ஆக்கியவர். மதுரைப் புலவர் பெருமக்கள் வீரமாமுனிவர் என்றும், திருமதுரைச் செந்தமிழ்த் தேசிகர் என்றும் அழைத்து மகிழ்ந்தனர். தேம்பாவணி, அன்னை அழுங்கல் அந்தாதி, திருக்காவலுார் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, அடைக்கல மாலை, பெரியநாயகி மேல் பெண் கலிப்பா ஆகியவற்றை படிப்போர், வீரமாமுனிவரின் இலக்கிய ஆளுமையை உணர முடியும்.இந்த நுால் ஒரு இலக்கியப் […]

Read more

சாவர்க்கரின் வாக்குமூலம்

சாவர்க்கரின் வாக்குமூலம், ஜனனி ரமேஷ், தடம் பதிப்பகம், விலை 100ரூ. மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இந்து மகாசபைத் தலைவரான சாவர்க்கர், தான் குற்றமற்றவர் என்று கொடுத்த வாக்குமூலத்தின் முழு விவரம் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாவர்க்கரின் இந்த வாக்குமூலத்தில் இந்திய வரலாற்றுச் செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/5/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031349_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

பாண்டிய மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு

பாண்டிய மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு, மு.நீலகண்டன், கனிஷ்கா புத்தக இல்லம்,  பக்.202, விலை ரூ.180. தொன்மைக்கால பாண்டிய மண்டலம் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைக் கொண்டதாக இருந்தது. கி.மு. 3 – ஆம் நூற்றாண்டில் பெளத்தம் பாண்டிய மண்டலத்துக்கு வந்திருக்கலாம் என்று கூறும் நூலாசிரியர், பாண்டிய மண்டலத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பெளத்த சமயமும், சமண சமயமும் உயர்ந்தநிலையில் இருந்திருக்கின்றன; நாட்டின் பல பகுதிகளில் பெளத்த விகாரங்கள் அமைக்கப்பட்டன; புத்த பள்ளிகள் இருந்தன என்கிறார். அதற்கான பல வரலாற்று ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறார். […]

Read more

இந்தியா – அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு

இந்தியா – அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு: ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498 – 1765), ராய் மாக்ஸம், தமிழில் – பி.ஆர். மகாதேவன்; கிழக்கு பதிப்பகம், பக். 280; விலை ரூ. 325.   ராய் மாக்ஸமின் தி தெப்ஃட் ஆஃப் இந்தியா நூலின் மொழிபெயர்ப்பு இந்த நூல்.இந்தியாவின் உப்புவேலி, ஆப்பிரிக்காவின் தேயிலைச் சுரண்டல் பற்றிய நூல்களுக்கான தரவுகளைத் தேடியபோது கண்டடைந்த தகவல்களின் அடியொற்றி மேற்கொண்ட தொடர் தேடுதல்களின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தியா மீதான ஆக்கிரமிப்பு கால கறுப்புப் பக்கங்களை விவரிக்கும் இந்நூலில், ஐரோப்பிய ஆதிக்க […]

Read more

ஒரு கதைசொல்லியின் கதை

ஒரு கதைசொல்லியின் கதை, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. கதை சொன்னா அன்பும் நம்பிக்கையும் வந்துருமா… ஏன் சின்ன குழந்தையா இருக்கறப்போ அம்மா நிலாவை காட்டி கதை சொல்லி தானே சோறு ஊட்டுனாங்க. அப்போ நம்பினோம். மனமும் உடலும் ரணப்பட்டு கிடக்கும் போது, யாராவது பேசுவாங்களானு ஏங்குற மனசுக்கு கதை சொன்னா பிடிக்கும். அதை சிவா செய்து கொண்டிருக்கிறான். வேண்டாமென்று உதறித் தள்ளிய காதலி, குண்டடிபட்டு கிடக்கும் போதும் அன்பு மாறாமல் சிவாவால் பாதுகாக்க முடிகிறதென்றால், அந்த காதல் […]

Read more

உண்மை வாரிசு

உண்மை வாரிசு, ப.பாலசுப்ரமணியன், சங்கர் பதிப்பகம், பக். 152, விலை 150ரூ. திருநங்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாடக நூல். அரவாணிகள் என்று சொல்லும் பெயர் காரணமும் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் வெற்றி பெற்ற திருநங்கை பட்டியலும் சொல்லப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக அரவாணியாக பிறந்து பெற்றோருக்கு தலைக்குனிவு வரக்கூடாது என்று வீட்டை விட்டு விலகிய பின் அதிர்ஷ்டவசமாக, தொழில் அதிபரின் வாரிசகாக ஆகி, திருநங்கையர் தலைநிமிர வழி காட்டுவதுடன், தன்னை வெறுத்து ஒதுக்கிய பிறந்த குடும்பத்தை சீராக்கியதை அழகாக சித்தரித்துள்ளார். -சீத்தலைச்சாத்தனார். நன்றி: தினமலர், 16/5/21. […]

Read more

அறவாணர் திறனுரைகள்

அறவாணர் திறனுரைகள், க.அ.அறிவாளன், தமிழ்க் கோட்டம், விலைரூ.180. திறனாய்வு உலகத்தில் புதிதாக வந்துள்ளது இந்த நுால். ஐம்பத்தொன்பது நுால்கள் பற்றிய திறனாய்வுக் கருத்துரைகளின் தொகுப்பு. க.ப.அறவாணனின் காலத்திற்குப் பின் வெளிவந்துள்ளது. படைத்துள்ள திறனாய்வுரைகள் அனைத்தையும் தொகுத்து நன்கு வடிவமைத்து வெளியிட்டு உள்ளனர்.தொடக்க நிலை எழுத்தாளர் முதல் புகழ்பெற்ற எழுத்தாளர் வரை பேதம் இல்லாமல் திறனாய்வு வழங்கியுள்ளார் அறிஞர் அறவாணன். தந்தையின் நினைவைப் போற்றும் வகையில் மகன்கள் எடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. ஒரே புத்தகத்தில் ஐம்பத்தொன்பது புத்தகங்களைப் படிக்க முடியும் என்பதற்கு இந்தத் திறனுரைகள் சான்று […]

Read more
1 83 84 85 86 87 505