தமிழ்த் திரையிசை ஆளுமைகள்

தமிழ்த் திரையிசை ஆளுமைகள்,  ஞா.கற்பகம், கற்பக வித்யா பதிப்பகம், பக்.400, விலை ரூ.300.   தமிழ்மொழியில் முதல் பேசும் படம் 1931 – ஆம் ஆண்டில் வெளியானது. அதற்கு முன்னர் மெளனப் படங்களே வெளிவந்தன. தமிழ்த் திரைப்படம் பேசத் தொடங்கிய, பாடத் தொடங்கிய 1931 முதல் 2000 -ஆம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் தமிழ்த் திரைப்பட உலகில் பணியாற்றிய 61 இசையமைப்பாளர்கள், 64 பாடகர்கள், 54 பாடகிகள், 22 இசைக்கருவி இசைக்கும் கலைஞர்கள் என மொத்தம் 201 பேரைப் பற்றிய தகவல்கள் இந்நூலில் தொகுத்துக் […]

Read more

பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்

பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஅரசன் பதிப்பகம், விலை 999ரூ. கவிதை உலகில் சாதனைகள் படைத்து வரும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தனது 86 – வது பிறந்தநாளையொட்டி இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள், பெரியோர்கள் பல ஆண்டுகளில் அவருக்கு எழுதிய கடிதங்களை எல்லாம் சேகரித்து வைத்து இருக்கிறார். அவற்றில் 600க்கும் மேற்பட்ட கடிதங்களைத் தொகுத்து இந்த நூலை உருவாக்கி இருக்கிறார். இந்தக் கடிதங்கள், பெருங்கவிக்கோவின் கவிதைகள், காப்பியங்கள், இலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள், பயண நூல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து […]

Read more

சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள்

சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள், ம.சுஜாதா, காவ்யா, விலை 580ரூ. சங்க இலக்கியங்களில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள் தொடர்பாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது ஆய்வு அறிக்கையை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க காலப் பாடல்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இல்வாழ்க்கை, விருந்தோம்பல், உணவு முறை, வாணிபம், விளையாட்டு, சடங்குகள், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், அழகுக் கலை ஒப்பனை ஆகியவை சங்க காலத்தில் எவ்வாறு இருந்தன என்பது தகுந்த மேற்கோள்களுடன் தரப்பட்டு இருக்கின்றன. […]

Read more

ஆளுமைகளுடன் எனது அனுபவங்கள்

ஆளுமைகளுடன் எனது அனுபவங்கள், துக்ளக் ரமேஷ், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.232. விலை ரூ.220; பத்திரிகைத்துறையில் நாற்பதாண்டு அனுபவம் உள்ள இந்நூலாசிரியர், தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகள் பலருடனான தனது அனுபவங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். முரசொலி அடியார் நடத்திய நீரோட்டம் பத்திரிகையில் பணியில் சேர்ந்ததில் தொடங்கி, மாஃபா பாண்டியராஜனுக்காக ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்தது வரை நூலாசிரியரின் எல்லா அனுபவங்களுமே மிகவும் சுவையாக இருக்கின்றன. குறிப்பாக திமுகவைச் சேர்ந்த ரகுமான் கானும், அதிமுகவைச் சேர்ந்த பி.எச்.பாண்டியனும் பேரவை வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு வரை போனது, தனக்கு முதல்வராகும் […]

Read more

மனத்தில் மலர்ந்த மடல்கள்

மனத்தில் மலர்ந்த மடல்கள், இறையன்பு, கற்பகம் புத்தகாலயம், பக்.64, விலை ரூ.40. அஞ்சல் மூலம் கடிதம் எழுதுவது அறவே இல்லாமல் போன நிலையில், தன்னுடைய மனத்தில் மலர்ந்த மடல்களை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர். ஒரு தந்தை என்கிற முறையில் மகன்களுக்கு, கொஞ்சம் வயதானவர் என்கிற முறையில் கல்லூரிப் படிப்பில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு, பழைய விடுதி மாணவன் என்கிற முறையில் வீட்டில் இருந்து விடுதிக்குப் புலம்பெயர்ந்த இளம் நண்பர்களுக்கு, தகப்பன் என்ற நிலையிலிருந்து இன்றைய மாணவர்களுக்கு, பெற்றோர் என்ற நிலையில் இன்றைய […]

Read more

மகாகவி பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள், வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.250. மகாகவி பாரதியின் பாடல், கவிதைகளை உள்ளடக்கிய முழுமையான மறு பதிப்பு நுால். எளிதாக புரியும் வண்ணம் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. பாடல்களை சுலபமாக அடையாளம் காணும் வகையில் நிரல்படுத்தப்பட்டுள்ளது. கெட்டி அட்டையில் சிறப்பாக, ‘பைண்ட்’ செய்யப்பட்டுள்ளது. பாரதி பாடல்களில் உள்ள கம்பீரம் இந்த நுாலிலும் தெரிகிறது. தெளிவான எழுத்துக்கள், வாசிப்பைத் துாண்டுகின்றன. வீடுகளில் இருக்க வேண்டிய காலப்பெட்டகம். நன்றி: தினமலர், 2.5.21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

சிறுவருக்கான அறக்கவிதைகள்

சிறுவருக்கான அறக்கவிதைகள், செ.ஏழுமலை, பானு ஏழுமலை, விலை 125ரூ. எளிமையான பாடல்கள் மூலம் சிறுவர்களின் மனதில் நல்ல கருத்துகளை விதைக்க முடியும் என்று அடிப்படையில் இந்த நூல் ஆக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கவிதைகளில் வாழ்வுநெறி, கல்வியின் முக்கியத்துவம், பெற்றோரின் சிறப்பு, யோகா, நடைப்பயிற்சியின் அவசியம் உள்பட பல நல்ல கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி,2/5/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சர்வ ஜோதிட சஞ்சீவி

சர்வ ஜோதிட சஞ்சீவி, கண்ணையா நாயுடு, ஆனந்த நிலையம், விலை 220ரூ. 1907-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஜோதிட நூல் இப்போது மறுபதிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. குழந்தை பிறந்தபோது லக்னம் குறிப்பது, ஓரை பற்றிய விவரம், விவாகப்பொருத்தம் போன்ற பல தகவல்கள் இதில் உள்ளன. ஜோதிடம் பற்றிய அடிப்படை தெரிந்தவர்களுக்கு இந்த நூல் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி,2/5/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கலாட்டா குடும்பம்

கலாட்டா குடும்பம், மு.அருளப்பன், விலை 90ரூ. ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று பன்முகம் கொண்ட இந்த நூலின் ஆசிரியர் எழுதிய முதல் கவிதை தொகுப்பு இது. கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்பு, நல்ல இல்லறம், வரதட்சணைக்கொடுமை, பாலியல் கொடுமை, கொரோனாவை விரட்டுவோம் என்பது போன்ற சமூக அக்கறை கொண்ட கவிதைகள் சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளன. காதல், ஊடல் ஆகியவற்றை சித்தரிக்கும் கவிதைகளும் மனதைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி,2/5/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

பாகவதப் பாரதம்

பாகவதப் பாரதம், டாக்டர் சிவ. விவேகானந்தன், காவ்யா பதிப்பகம், விலைரூ.600 பகவான் கண்ணனின் வரலாறு கூறுவது பாகவதம். கண்ணன், பாண்டவரை வழிநடத்தி சென்றது மகாபாரதம். இரண்டு மகா காவியங்களையும் இணைத்து, அம்மானை என்ற செய்யுள் யாப்பு வடிவில், 24 ஆயிரம் பாடல்களாக இயற்றப்பட்டுள்ள நுால். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபல்பனாப புலவர், பனையோலைச் சுவடியில் வில்லுப் பாட்டு கலை வடிவத்தில் எழுதி உருவாக்கியிருந்தார். இதை தேடி கண்டுபிடித்து புத்தகமாக பதிப்பித்துள்ளார் சிவ.விவேகானந்தன். பாமரரும் படித்து மகிழும் வகையில், உரைநடைக் காப்பிய நுாலாக உள்ளது. முதலில் […]

Read more
1 84 85 86 87 88 505