தமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்

தமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார், டாக்டர் உ.வே.சாமிநாதையர், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், பக். 798,விலை 400ரூ. அனலுக்கும், புனலுக்கும் இரையாகாமல் ஆங்காங்கே மறைந்து கிடந்த, தமிழ் இலக்கியச் செல்வங்களைச் சிரமப்பட்டு, தேடிக் கண்டுபிடித்ததோடு அல்லாமல், அவற்றைத் தமிழ் அன்னையின் அழகிய ஆபரணமாக வடித்துத் தந்தவர் தமிழ்த் தாத்தா. உ.வே.சா., 87 ஆண்டு காலம் (1855 – 1942) வாழ்ந்தபோதிலும், ‘என் சரித்திரம்’ நூல் மூலம், தம் வாழ்நாளின், 44 ஆண்டு கால (1889 முடிய) வரலாற்றை நயம்பட ஒரு புதினம் போல சுவைபட […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், எழிலினி பதிப்பகம், விலை 600ரூ. ஆறடுக்கு முறைப் பதிப்பு ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது சேர முனிவரான இளங்கோ அடிகளால் இயற்றப்பட்டது. கற்பில் சிறந்த கண்ணகி, அவளுடைய கணவன் கோவலன் ஆகியோரின் சரித்திரத்தைக் கூறும் நூல். இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் எனும் முப்பெரும் காண்டங்களைக் கொண்டது. இது மூவேந்தர்களின் தலைநகரான புகார், (காவிரிப்பூம்பட்டினம்), மதுரை, வஞ்சி என்னும் மூன்று பெருமைகளையும் விளக்குகிறது. சிலப்பதிகாரத்திற்கு ஆறடுக்கு முறைப் பகுப்பில் புலவர் மா.நன்னன், அழகிய முறையில் உரை எழுதியுள்ளார். முதலில் ஒவ்வொரு காதைகளிலும் உள்ள […]

Read more

அகநானூறு

அகநானூறு, தொகுப்பு முனைவர் மா.பரமசிவன், இராசகுணா பதிப்பகம், விலை 300ரூ. பதிப்பாசிரியர் ராஜகோபாலார்யன் உரை எழுதி பதிப்பித்த அகநானூற்றுப் பாடல்கள் 91 முதல் 160 வரையில் உள்ள 70 பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. பின்னிணைப்பாக ராஜகோபாலார்யன் உரை நெறியும் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

அகநானூறு – ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும்

அகநானூறு – ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், பதிப்பும் ஆய்வும்: மா.பரமசிவன், இராசகுணா பதிப்பகம்,  பக்.374, விலை ரூ.300. அகநானூற்றுக்கு இதுவரை 17க்கும் மேற்பட்ட சிறந்த உரைகள் (கவிதை, வசனநடை நீங்கலாக) வெளிவந்துள்ளன. ‘கம்பர் விலாசம் 39’ ராஜகோபாலார்யன் என்ற உரையாசிரியர்தான் அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. 20ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு வெளிவந்த முதல் உரை நூல் ராஜகோபாலார்யன் உரைநூல்தான். இவர், தம் உரையை குறிப்புரை என்றே குறிப்பிட்டுள்ளார். அவர் பதிப்பு நெறி, பதிப்பு அறங்களைக் கைக்கொண்டு அகநானூற்றைப் பதிப்பித்திருக்கிறார். இவர், […]

Read more

இராமாயணம் காவிய நாயகர் கலைக் களஞ்சியம்,

இராமாயணம் காவிய நாயகர் கலைக் களஞ்சியம், த.வ.சிவசுப்பிரமணியன், கல்வி உலகம் பதிப்பகம், விலை 200ரூ. இது ஒரு அருமையான புத்தகம். ராமாயணத்தில் வருகிற எண்ணற்ற கதாபாத்திரங்கள் யார் என்பதை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இதை த.வ. சிவசுப்பிரமணியன் எழுதியுள்ளார். இதில் உள்ள சில தகவல்கள்: அக்க குமாரன் (அட்சய குமாரன்); இலங்கை வேந்தன் ராவணனின் இரண்டாம் மகன். அக்கயன்: முப்பதினாயிரம் கோடி வானர சேனைக்குத் தலைவன். அகத்திய முனிவர்: பிரம தேவரின் மகனான புலத்தியரின் மகன். விதரபர்கோன் மகளாகிய உலோப முத்திரையை மணந்து சித்தன் என்னும் […]

Read more

திருக்குறள்

திருக்குறள், புலவர் துரை தமிழரசன், கதிரவன் பதிப்பகம், விலை 400ரூ. உலக அளவில் திருக்குறளுக்கு வெளியான உரைகள் போல வேறெந்த நூலுக்கும் உரைகள் வெளியானதில்லை. இவ்வளவு உரைகள் இருந்தபோதிலும் தமக்குத் தோன்றும் புதிய கருத்துகளை – சிந்தனைகளை தமிழ் உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் புதிய உரைகளை பலரும் எழுதி வருகிறார்கள். அந்த வகையில் புலவர் துரை தமிழரசனின் ‘திருக்குறள் எளிய தெளிவுரையும், இனிய ஆய்வுரையும்’ என்ற இந்த நூலில் பல சிறப்புகள் காணப்படுகின்றன. […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், பேராசிரியர் நன்னன், எழிலினி பதிப்பகம், விலை 600ரூ. 94 வயதான பேராசிரியர் நன்னன் 724 பக்கங்களில் இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகாரம் நூலை தமிழ் கூறும் நல் உலகுக்கு விளக்கவுரையுடன் வடித்து தந்திருக்கிறார். சிலப்பதிகாரத்தின் ஒவ்வொரு பகுதியையும், முழுப்பாட்டு, அந்த பாட்டின் உரைப்பாட்டு, அதன் பொழிப்பு, அதில் உள்ள அருஞ்சொற்களின் பொருட்கள், அந்த பகுதியின் விளக்கம் என்று எல்லோருக்கும் எளிதில் புரியும்படி எழுதி இருக்கிறார். சிலப்பதிகாரம் வாழ்க்கைப் போராட்டத்தை எடுத்து இயங்கும் காப்பியம் என்று கூறியுள்ள பேராசிரியர் நன்னன், கண்ணகி தன் வாழ்வை இழந்து […]

Read more

உண்மை விளக்கம்

உண்மை விளக்கம், பதிப்பாசிரியர் சென்னை பல்கலைக்கழக சைவசித்தாந்த துறை தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்த வெளியீடு, விலை 80ரூ. மனவா சகங்கடந்த தேவநாயனார் இயற்றிய உண்மை விளக்கம் எனும் சைவ சித்தாந்தச் சாத்திர நூல். உண்மை விளக்கம் நூலுக்கு தெளிவான பொழிப்புரையும் விளக்கமும் தந்த க.வச்சிரவேலு முதலியார் வழங்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள்

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள், புலவரேறு அரிமதி தென்னவன், டி.எஸ். புத்தக மாளிகை, விலை 120ரூ. மனித மனங்களின் நிலையான உயர்வு என்பது அறநூல்களைப் பொறுத்தே உள்ளது. அந்த உணர்வோடு ஆத்திச்சூடி, நன்னெறி ஆகிய ஏழு அறநூல்களுக்கு புலவரேறு அரிமதி தென்னவன் கருத்தும், விளக்கமும் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும்

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும், முனைவர் ப. கமலக்கண்ணன், காவ்யா, விலை 150ரூ. திராவிட இயக்கம் சமூக நீதி, இட ஒதுக்கீடு, தமிழ்மொழி ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு களப் போராட்டங்களை முன்னின்று நடத்தியது. திராவிட மொழியியலின் தந்தை என அழைக்கப்படும் கால்டுவெல் ‘தமிழ் மொழி தனித்து இயங்கும் வல்லமைமிக்கது’ என்று முதன் முதலாகக் கூறினார். தமிழில் பிற மொழிக் கலப்புக்கு எதிராக மறைமலையடிகள், திரு.வி.க. தேவநேயப் பாவாணர் போன்ற மூத்த தமிழறிஞர்கள் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்தனர். திராவிட இயக்கம் மற்றும் தனித்தமிழ் இயக்க வரலாற்றை […]

Read more
1 18 19 20 21 22 56