புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பும் ஆய்வும்

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பும் ஆய்வும், பேராசிரியர் முனைவர் ரா. நாராயணன், அலைகள் வெளியீட்டகம், பக். 184, விலை 140ரூ. பக்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’’ என்ற பழைய பாடல், பக்றுளி ஆறும், பல மலைகளும் கடலால் சூழப்பட்டு அழிந்து போயின. பல இலக்கண, இலக்கிய நூல்களும் அழிந்தன என்று வரலாறு கூறுகிறது. தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளின் துணையோடு’ 58 – துணை நூல்களின் மேற்கொள்களுடன், புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும் என்ற நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலக்கிய உளப்பகுப்பாய்வு, […]

Read more

நாட்டுப்புற இலக்கிய வரலாறு

நாட்டுப்புற இலக்கிய வரலாறு, பேராசிரியர் க. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 240ரூ. நாட்டுப்புற இலக்கியம் பற்றிய தகவல்களை விளக்கமாகவும், சுவைபடவும் எழுதியுள்ளார் பேராசிரியர் க. சண்முகசுந்தரம். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்,  க.வெள்ளைவாரணன், பூம்புகார் பதிப்பகம்,  பக். 461, விலைரூ.290. தமிழ் மொழியின் இலக்கணத்தையும், தமிழர் வாழ்வியல் நெறிமுறைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைக்கும் தொல்காப்பியத்தை உள்ளது உள்ளவாறு அறிந்துகொள்ள வேண்டுமானால், நூலாசிரியர் வாழ்ந்த காலம், இந்நூல் இயற்றப்பட்டதன் நோக்கம், நூலின் அமைப்பு, சமயச்சார்பு முதலியவற்றை அறிந்துகொள்வது அவசியம். இந்நூலின் நோக்கமும் அதுதான். இந்நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. முற்பகுதியில் தொல்காப்பியத்தின் தோற்றம், நூலாசிரியரான தொல்காப்பியர் வாழ்ந்த காலம், இந்நூலை இயற்றியதற்கான காரணம் முதலியவற்றை விரித்துரைக்கிறது. இறையனார் களவியலுரை ஆசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், பேராசிரியர், அடியார்க்கு […]

Read more

வண்டல் தஞ்சை வட்டார எழுத்துக்கள்

வண்டல் தஞ்சை வட்டார எழுத்துக்கள், இரா. காமராசு, சாகித்ய அகாடமி, பக். 240, விலை 115ரூ. மொழியின் ஆளுமையில், இன்று வட்டார மொழிகளின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. புதினம், சிறுகதைகளின் நேர்முகப் பதிவே வட்டார மொழிகளை உயர்த்துகின்றன. தஞ்சை வட்டார எழுத்துக்களை வண்டல் என்ற எல்லைக்குள் வைத்து நிகழ்த்திய உரையரங்கின் தொகுப்பே இந்நூல் ஆகும். திறனாய்வாளர்கள் தஞ்சை வட்டார வழக்குகள் பற்றிய மதிப்பீட்டையும், படைப்பாளர்களின் குரலையும் இங்கு பதிவு செய்துள்ளனர். சுபாஷ் சந்திரபோஸ் படைப்புகள், பாவை சந்திரனின் நல்ல நிலம், சிந்துக் கவிஞர் வாய்மைநாதன் […]

Read more

தமிழர் வாழ்வும் பண்பாடும்

தமிழர் வாழ்வும் பண்பாடும், தமிழறிஞர் சாமி. சிதம்பரனார், சாரதா பதிப்பகம், விலை 250ரூ. பண்டைத் தமிழர் வாழ்க்கை பற்றியும், தமிழர் இலக்கியங்கள் பற்றியும் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் எழுதிய அரிய நூல், நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றி முழு விவரங்களும் இதில் உள்ளன. தமிழ் இலக்கியங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 4/7/2017.

Read more

இன்றைய தமிழும் எதிர்காலத் தமிழும்

இன்றைய தமிழும் எதிர்காலத் தமிழும்,  ப. முருகன், கங்காராணி பதிப்பகம்,   பக்.223, விலை ரூ.140. சங்க இலக்கியம், சித்தர் இலக்கியம், பக்தி இலக்கியம், அற இலக்கியம், இதழியல் இலக்கியம், கடித இலக்கியம், சொற்பொழிவு என மொத்தம் இருபது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முதல் கட்டுரை ‘அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மைக்ரோ சாப்ஃட் நிறுவனம் தயாரித்துள்ள ‘சொல்39’ மென்பொருளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது 39’ என்ற தகவலையும், தமிழ்மொழியின் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பதினொரு நீதி நூல்களுடன் ஒüவையாரின் நான்கு நூல்களையும் சேர்த்து, அவை […]

Read more

அகநானூறு

அகநானூறு, ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், பதிப்பும் ஆய்வும்: மா.பரமசிவன், இராசகுணா பதிப்பகம், பக்.374, விலைரூ.300. அகநானூற்றுக்கு இதுவரை 17க்கும் மேற்பட்ட சிறந்த உரைகள் (கவிதை, வசனநடை நீங்கலாக) வெளிவந்துள்ளன.‘கம்பர் விலாசம் 39‘; ராஜகோபாலார்யன் என்ற உரையாசிரியர்தான் அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. 20ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு வெளிவந்த முதல் உரை நூல் ராஜகோபாலார்யன் உரைநூல்தான். இவர், தம் உரையை குறிப்புரை என்றே குறிப்பிட்டுள்ளார். அவர் பதிப்பு நெறி, பதிப்பு அறங்களைக் கைக்கொண்டு அகநானூற்றைப் பதிப்பித்திருக்கிறார். இவர், 91 முதல் 400 […]

Read more

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம்

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம், இரா. இளங்குமரனார், தமிழ்ப்பேராயம் திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், பக். 384, விலை 200ரூ. தமிழ்மொழியில் மிகப்பழமையான இலக்கணநூலான தொல்காப்பியத்துள் விளங்கும் கலைச்சொற்களும், அவற்றுக்கு அடியாக விளங்கும் சொற்களும் அகரவரிசையில் தொகுக்கப்பட்டு, பொருள் அளிக்கப் பெற்றுள்ளதாக இந்நூல் அமைந்துள்ளது. தமிழில் எழுத்து, சொற்களைக் கற்றவர் யாவரும் அறியும் வகையில், தொல்காப்பியம் எளிய நூலாக இருப்பினும், அதில் உள்ள கலைச்சொற்களை அறிந்து கொண்டால், அதை நன்கு உணர்ந்து கற்க இயலும் என்ற நோக்கில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. நூலில் தொல்காப்பியத்தில் விளங்கும் கலைச்சொற்கள் அகரவரிசைப்படுத்தப்பட்டு […]

Read more

குறுந்தொகை

தமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல் குறுந்தொகை, மூலமும் உரையும், உ.வே.சா. நூல் நிலையம், பக். 800, விலை 500ரூ. சங்க இலக்கியங்களிலே அதிகளவில் மேற்கோள் காட்டப்பட்ட நூல் என்ற பெருமையைப் பெற்ற நூலான குறுந்தொகை, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா., அவர்களால், 1937ல், பதிப்பிக்கப் பெற்றது. இந்நூலை, 82வது வயதில் பதிப்பிக்கும் உ.வே.சா., அவர்கள், 100க்கும் அதிகமான பக்கங்களில் நூலாராய்ச்சியை கொடுக்கிறார். அதில், ஏட்டுப் பிரதிகள் பலவற்றையும் ஒப்பிட்டு, பாட வேறுபாடுகளை குறித்துக் கொண்டது மட்டுமன்றி, பிற இலக்கண, இலக்கிய உரைகளில் காணலாகும் மேற்கோள் பாடல்களையும் […]

Read more

யாதும் ஊரே

யாதும் ஊரே – 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர்; பதிப்பாசிரியர்கள்: ப.முத்துக்குமார சுவாமி, கிருங்கை சேதுபதி, சொ.அருணன்; தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், பக்.800. விலை ரூ.1000. தமிழகம், அயலகம் எனும் இரு பகுப்புகளை உடையதாக இம்மலர் மலர்ந்துள்ளது. தமிழர்க்கு, மொழி வளர்ச்சி, இலக்கணம், வரலாறு, கலை, இலக்கியம், சமயம், அறிவியல், அயலகம் ஆகிய ஒன்பது பெருந் தலைப்புகளில் இம் மாநாட்டு மலர் கட்டமைக்கப்பட்டுள்ளது. தொல் தமிழின் மாண்புகள், தமிழரின் தொல் மரபு தொடங்கி அறிவியல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் தற்போது கணினித் […]

Read more
1 19 20 21 22 23 56