அரங்கமா நகருளானே!
அரங்கமா நகருளானே!, வேதா டி. ஸ்ரீதரன், வேத ப்ரகாசனம் வெளியீடு, சென்னை, பக். 270, விலை 250ரூ. பூலோக வைகுந்தம் என்று வைஷ்ணவர்களால் போற்றிப் புகழப்படும் ஸ்ரீ ரங்கத்து திருக்கோவிலின் தல வரலாறு மற்றும் ஆலயம் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்து எளிய தமிழில் இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். பன்னிரு ஆழ்வார்களில் பதினோரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே பெருமாளாகிய அரங்கநாதர் வீற்றிருக்கும் இத்திருத்தலத்தையும், அவரின் அருமை பெருமைகளையும் பற்றி 22 தலைப்புகளில் விரியும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பகத்ர்களுக்கு பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. […]
Read more