எடர்னல் அண்டு எவர் குரோயிங் பிராப்ளம்ஸ் ஆப் என்க்ரோச் மென்ட்ஸ் (ஆங்கிலம்)

எடர்னல் அண்டு எவர் குரோயிங் பிராப்ளம்ஸ் ஆப் என்க்ரோச் மென்ட்ஸ் (ஆங்கிலம்), நீதியரசர் எஸ். ஜெகதீசன், பாரதி நிலையம், பக். 128, விலை 200ரூ. இந்த நூல், தமிழகத்தில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகளை பப்ற்றி பேசுகிறது. சாலையோரம், நடைமேடை என ஆக்கிரமிப்புகள் பற்றிய முதல் கட்டுரையில் துவங்கி, அரசு நிலங்கள், ஏரிகள், வழக்கறிஞர்களின் வரம்பு மீறிய செயல்பாடுகள், நீதிமன்ற ஆணைகளை புறக்கணிக்கும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகள் என, பல்வேறு விதமான பிரச்னைகளும், 12 கட்டுரைகளாக அலசப்பட்டுள்ளன. முதல் 72 பக்கங்கள் கட்டுரைகள், அடுத்த […]

Read more

கனடா நாட்குறிப்பு

கனடா நாட்குறிப்பு, சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 110ரூ. 60 ஆண்டு காலமாக சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிவரும் படைப்பு எழுத்தாளர் சா. கந்தசாமி படைத்த பயணக் கட்டுரை நூல். கனடா நாட்குறிப்பு தனிப்பட்ட வாழ்க்கை என்பதைத் தாண்டி, பொதுவாகவே இருக்கிறது. வேறுநாடு, வேற்று மனிதர்கள் என்பதால் வாழ்க்கை அடியோடு மாறிவிடுவதில்லை. அது எப்போதும் போலவே இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு, தாங்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வாழ்கிறார்கள். அதுவே வாழ்க்கை என்பதை […]

Read more

பாண்டியர் வரலாறு

பாண்டியர் வரலாறு, பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 315ரூ. மூவேந்தர்களில் மிகப் பழமையானவர்கள் பாண்டியர்கள். நீண்ட காலம் ஆட்சி நடத்தியவர்கள். கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ்வாராய்ச்சிகள் முதலியவற்றால் இவர்களது வரலாற்றை அறிய முடிகிறது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் ஆகியோர், பாண்டியர் வரலாறு பற்றி சிறந்த நூல்கள் எழுதியுள்ளனர். எனினும், அவர்கள் காலத்துக்குப்பின், புதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் பல கிடைத்துள்ளன. அவற்றையும் சேர்த்து, இந்த நூலை எழுதியுள்ளார், பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி. அவர் தெரிவிக்கும் சில கல்வெட்டுச் செய்திகள் மூலம் […]

Read more

தேசம் மறந்த ஆளுமைகள்

தேசம் மறந்த ஆளுமைகள், ராபியா குமாரன், தூண்டில் பதிப்பகம், திருச்சி, விலை 100ரூ. 200 ஆண்டுகளுக்குமேல் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாடு, எத்தனை தியாகங்களைப் புரிந்து இந்த சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்கிறது என்பதை இந்நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக முஸ்லிம்கள் இப்போராட்டத்திற்கு எப்படி முன்னோடிகளாக விளங்கினார்கள் என்பதைப் புள்ளி விபரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். ‘தேசம் மறைந்த அரசர்’ என்ற முதல் கட்டுரையில் இந்தியாவின் கடைசி முகலாய மன்னர் பஹதூர் ஷாவும், அவரது குடும்பத்தினரும் 1850-களில் ஆங்கிலேயரால் எப்படியெல்லாம் பழி வாங்கப்பட்டார்கள் என்ற வரலாற்றுச் செய்திகள் […]

Read more

ஜெயகாந்தன்-ஒரு மனிதன் ஒரு உலகம்

ஜெயகாந்தன்-ஒரு மனிதன் ஒரு உலகம், தொகுப்பாசிரியர் மணா, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 256, விலை 170ரூ. எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவைப் போற்றும்விதமாக உருவாகியுள்ள நூல். எனது வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாகவே வைத்துக் கொள்ள நான் முயலுகிறேன்’ என்று சொன்னார் ஜெயகாந்தன். அவர் தன்னைப் பற்றி எழுதிய கட்டுரைகள், அவர் அளித்த நேர்காணல்கள், ஜெயகாந்தனுடன் பழகியவர்கள் எழுதிய கட்டுரைகள், ஜெயகாந்தன் மணிவிழா மலரில் ஜெயகாந்தனின் துணைவியார் எழுதிய கட்டுரை, ஜெயகாந்தன் எழுதிய ‘ஒரு பிடி சோறு’ சிறுகதை, பிரபல ஓவியர்கள் வரைந்த ஜெயகாந்தனின் […]

Read more

பாரதப் பெருமகன், டாக்டர் ப. சுப்பராயன்

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன், செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு, பக். 212, விலை 120ரூ. அகன்ற சென்னை மாநிலத்தின் முதல்வராக ஆட்சி புரிந்த முதல் தமிழர் என்ற பெருமையுடைய டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். சட்டப்பேரவை உறுப்பினர் தொடங்கி மாநில ஆளுநர் வரையான அவர் வகித்த பதவிகள், அவரது முன்னோர் பற்றிய வரலாறும் அவரது குமரமங்கலம் இன்றைய தலைமுறை வரையான வரலாறும் கணக்கிடைக்கும் நூல். டாக்டர் சுப்பராயனின் கல்வி, அவர் வகித்த பதவிகளை […]

Read more

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள்

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 130ரூ. எக்காலத்தும் தனிப்பெருமையுடன் மேலோங்கி நிற்கும் இலக்கிய சிற்பிகளில் முதன்மையாக நிற்பவர் ரவிந்திரநாத் தாகூர். அவர்தம் படைப்புகள் ஓராயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சமயம், கல்வி, அரசியல், இலக்கியம் பற்றிய கட்டுரைகள் ஏராளம். அவற்றிலிருந்து தெரிந்து எடுக்கப்பட்ட சிந்தனை வரிகளின் தொகுப்பு நூல். தாகூரின்பால் ஈடுபாடு கொண்ட டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் அவரது படைப்புகள் ஒவ்வொன்றையும் படித்து இன்புற்றார். அவ்வாறு படித்ததில் பிடித்த முத்தான சத்தான வரிகளை அவ்வப்போது […]

Read more

நடிப்பு

நடிப்பு, (கூடுவிட்டுக் கூடு பாயும் ஒரு பண்டுவம்), மு. இராமசுவாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், பக். 172, விலை 145ரூ. நாடகம் பற்றிய கட்டுரைகள், திரைப்பட விமர்சனம், பெரியார், தனிநாயக அடிகளார் பற்றிய கட்டுரைகள் என 10 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பகுத்தறிவுப் பரப்புரையாளர் சொல்லின் செல்வர் பெரியார் என்ற கட்டுரையில் பெரியாரின் மனைவி நாகம்மை மறைந்தபோதும், மணியம்மையை அவர் மணம் முடித்தபோதும் பெரியார் சொன்ன கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு அவரைச் சொல்லின் செல்வர் என நிறுவுகிறது. தனிநாயக அடிகள் ஈழப் […]

Read more

சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்

சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார், பூங்கொடி பதிப்பகம், விலை 140ரூ. நாட்டுப்பற்று, இந்துமதப்பற்று, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழிப்பு ஆகிய பல கண்ணோட்டங்களில் பாரதியார் சமூக சீர்திருத்தத்தின் தேவைகளை வலியுறுத்தும் கருத்துக்களின் தொகுப்பு நூல். இந்தியாவில் விசேஷ கஷ்டங்கள் இரண்டு. 1. பணமில்லாதது, 2. சாதிக்குழப்பம். வறுமை எதிர்ப்புப் போராட்டமும், சாதி எதிர்ப்புப் போராட்டமும் இணைந்து நடந்தால்தான் சமத்துவம் ஏற்பட வழி பிறக்கும் என்றெல்லாம் பொருள் விரித்துக் கூறும் அளவிற்கு சூத்திரமாக அமைந்துள்ளது பாரதியாரின் இந்தக் கருத்து. சமூக சீர்திருத்தத்திற்காக பாரதியார் எழுப்பிய பல […]

Read more

இஸ்லாமும் ஜீவகாருண்யமும்

இஸ்லாமும் ஜீவகாருண்யமும், கவி கா.மு. ஷெரீப், கலாம் பதிப்பகம், விலை 50ரூ. புலால் உண்ணும் முஸ்லிம்களுக்கும், ஜீவ காருண்யத்திற்கும் என்ன தொடர்பு என்று சிலர் வினவலாம். ஆனால் இந்த நூலில் ஜீவ காருண்யம் என்பது வேறு, புலால் உண்பது என்பது வேறு. இரண்டுமே பிரித்து வைத்து பார்க்க வேண்டியவை என்பதே கவி கா.மு.ஷெரீப் ஆய்வு செய்து எழுதியுள்ளார். மேலும் ஜீவகாருண்ம் – புலால் உணவு ஆகியவைகளில் உலகப் பெரும் சமயங்களின் கொள்கை, கோட்பாடுகளையும் அவர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 19/8/2015.   […]

Read more
1 18 19 20 21 22 88