ஒரு கதை ஒரு விதை

ஒரு கதை ஒரு விதை, குமுதம் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. வாழ்க்கை என்பதே போராட்டம்தான். தினமும் எத்தனையோ பிரச்சினைகளை சந்திக்கிறோம். எதிர்நீச்சல் போடுகிறவர்கள்தான், வாழ்க்கையில் முன்னேற முடியும். பிரச்சினைகளை சமாளித்து, வெற்றி பெறுவது எப்படி என்பதை, சின்னச்சின்ன கதைகள் மூலம் விளக்குகிறார், இராம்குமார் சிங்காரம். ஒவ்வொரு கதையிலும், நம்பிக்கையூட்டும் பொறிகள் பளிச்சிடுகின்றன. வெற்றி பெறுவோர் கையில் இருக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 13/5/2015.   —- வேரென நீ இருந்தாய், வசந்தா அம்பலவாணன், காரைக்கால், விலை 150ரூ. உலகிற்கு நல்லறம் புகட்டிய […]

Read more

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள், அருள்மொழி பிரசுரம், சென்னை, விலை 110ரூ. எளிமையாகவும், இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் விக்கிரமாதித்தன் கதைகளை எழுதியுள்ளார் கள்ளிப்பட்டி சு. குப்புசாமி. நன்றி: தினத்தந்தி, 27/5/2015   —-   வழக்கறிஞராக என் அனுபவங்கள், சந்திராமணி பதிப்பகம், திருவண்ணாமலை, விலை 140ரூ. இந்நூலை இளம் வழக்கறிஞர்களின் வளமான வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டி நூலாக படைத்திருக்கிறார் வழக்கறிஞர் பா. பழனிராஜ். நன்றி: தினத்தந்தி, 27/5/2015   —-  வியப்பூட்டும் விடுகதைகள் 1000, சங்கர் பதிப்பகம், சென்னை, விலை 35ரூ. சிந்திக்க தூண்டும் வகையில் 1000 விடுகதைகள் […]

Read more

இறையன்புவின் சிறுகதைகள்

இறையன்புவின் சிறுகதைகள், வெ. இறையன்பு, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. இன்றைய இளைஞர் உலகத்துக்கு எதிர்காலத்தை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ள இவருடைய பேச்சும், எழுத்துகளும் ஒன்றுபோல உத்வேகம் அளிக்கிறது, என்றால் அது ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்புதான். இதுவரை 40 நூல்கள் எழுதியுள்ள இறையன்புவின் 16 சிறுகதைகளின் தொகுப்புதான் நின்னினும் நல்லன். புத்தகத்தை புரட்டும் முன்பே ‘அம்மாவிற்கு காணிக்கை, என்னை எப்போதும் குழந்தையாகவே பார்த்த அந்த மகராசிக்’ என்ற வரிகள் கண்களில் கண்ணீரை ததும்ப வைக்கின்றன. தொடர்ந்து ஒவ்வொரு கதையாக படிக்கும் போது, […]

Read more

பொன் வேய்ந்த பெருமாள்

பொன் வேய்ந்த பெருமாள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. சடையவர்மர் சுந்தரபாண்டியர், மூன்றாம் ராகவேந்திர சோழர், விசயகண்ட  கோபாலன் ஆகிய சரித்திர நாயகர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட வரலாற்றுப் புதினம் பொன்வேய்ந்த பெருமாள். சரித்திரக் கதைகளுக்கு அடிப்படைத்தேவை கம்பீரமான நடை. கோவி. மணிசேகரன் இயற்கையாகவே கம்பீர நடையை கைவரப்பெற்றவர். காட்சிகளை வர்ணிப்பதிலும், அசகாய சூரர். அவருடைய இந்த முத்திரைகள், இந்த நாவலிலும் அழுத்தமாகப் பதிந்துள்ளன. இதைப் படிக்கும் எல்லோருமே, நல்லதொரு சரித்திர நாவலைப் படித்தோம் என்ற மன நிறைவைப் பெறுவார்கள். நன்றி: தினத்தந்தி, 27/5/2015. […]

Read more

தமிழ்ச் சுரபி

தமிழ்ச் சுரபி, இலக்கியப்பீடம், சென்னை, விலை 450ரூ. அமுத சுரபியின் ஆசிரியராக இருந்த விக்கிரமன் 1948ம் ஆண்டு முதல் 1958ம் ஆண்டு வரை, 10 ஆண்டுகளில் பிரசுரித்த சிறந்த கதை, கட்டுரை, கவிதைகளைத் தொகுத்து தந்துள்ளார். தமிழ்த்தென்றல், திரு.வி.க., ரா.பி.சேதுப்பிள்ளை, கி.ஆ. பெ. விசுவநாதம், யோசி சுத்தானந்த பாரதியார், எஸ். வையாபுரிப்பிள்ளை, க.நா. சுப்பிரமணியம், தி.க.அவிநாசிலிங்கம் செட்டியார், கி.வா. ஜெகந்நாதன் உள்பட 44 பேர்களின் கட்டுரைகளும், உமாசந்திரன், குசுப்பிரியை, எம்.எஸ். கமலா, சரோஜா ராமமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, பெ. தூரன், பி.எஸ். ராமையா, லா.ச. […]

Read more

சின்னாலும் ஒரு குருக்கள்தான்

சின்னாலும் ஒரு குருக்கள்தான், ஆ. சிவராஜ், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 236, விலை 150ரூ. திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் வசிக்கும் அருந்ததியர்களான, மாதாரிகளின் வாழ்க்கையை இந்த நாவல் சித்தரிக்கிறது. பள்ளர், பறையர், அருந்ததியினர் என, மூன்று முக்கியமான ஜனத்தொகை அதிகமுள்ள தலித் உட்பிரிவுகளில், அருந்ததியினரே எல்லா விதத்திலும் மிக மோசமாகப் பின்தங்கி உள்ளனர் என்பது, இந்த நாவலைப் படிக்கும் எவருக்கும் புரியும் கசப்பான உண்மை. மண்ணின் மைந்தர்களான சின்னான், குப்பாயி, வெள்ளச்சி, நல்லச்சி, அருக்காணி முதலிய குகைச்சித்திரங்களும், மாதாரிகளை ஆட்டிப் […]

Read more

வையத் தலைமைகொள்

வையத் தலைமைகொள், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ், புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. எந்த ஒரு துறையில் யார் கால் பதித்தாலும், அது கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை எந்த இடம் என்றாலும், மற்றவர்களை விட உயர்ந்த இடத்தில் திறமையோடு மிளிர்வதை காட்ட வேண்டும் என்ற இயல்பு உள்ளவர்கள் தான் சிறந்தவர் என்று பொருள்படுவர் ஆவார். அப்படி தனித்துவத்தை அடைய வேண்டும் என்றால் அந்த நிலை தானாக வந்துவிடாது. உழைப்பே உயர்ந்த ஓய்வு என்று தொடங்கி என்னென்ன வகை முயற்சிகளை மேற்கொண்டால் இறுதியாக […]

Read more

வர்ம விமானம்

வர்ம விமானம், இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் தாணுவாலஜி, சென்னை, விலை 10,000ரூ. வர்மம் என்றால் நரம்பில் எழும் பிணக்கம். நம் உடலில் எண்ணிறைந்த நரம்புகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. உடலில் படும் பல்வேறு பாதிப்புகள் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. வர்ம பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வர்ம மருத்துவத்தால் மட்டுமே சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும். அந்த வகையில் 828 வர்மங்களின் இலக்கணம், பாதிப்பால் நிலவும் நிலைமை, சிகிச்சை வகைகள், பல்வேறு மருந்துகள் போன்றவை குறித்து இந்த நூலில் டாக்டர் எஸ். சிதம்பர தாணுப்பிள்ளை விரிவாக எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பொருள் […]

Read more

நீங்களும் வாகை சூடலாம்

நீங்களும் வாகை சூடலாம், இளசை சுந்தரம், நேசம் பதிப்பகம், சென்னை, பக். 190, விலை 125ரூ. ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை செதுக்க என்னென்ன கருத்துக்கள், சிந்தனைகள் தேவையோ அத்தனையும் இதில் அடேக்கம். நம் வாழ்வியல் சூழலை சின்னஞ்சிறு உதாரணங்கள், குட்டிக் கதைகள், திருக்குறள் மேற்கோள்கள் மூலம் படம்பிடித்துக் காட்டிச்செல்கிறார் நூலாசிரியர் இளசை சுந்தரம். எதையும் எந்தச் செயலையும் முழுமை பெற வைப்பதில்தான் நம் உயர்வு அடங்கியிருக்கிறது என்பதை குறிப்பிடும் இடங்கள் அழகு. நம் தகுதியை நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. உங்கள் பிரச்னைக்குத் தீர்வு […]

Read more

சென்று வா உறவே சென்று வா

சென்று வா உறவே சென்று வா, கவிஞர் தியாரூ, ஜேபிரூபன் பப்ளிகேஷன்ஸ், பக். 122, விலை 100ரூ. இரண்டே இரண்டு பாத்திரங்கள். தமிழமுதன் மற்றும் வதனா. தமிழமுதன் வதனாவைக் காதலிக்கிறான். காதல் புலம்பல்களாக மட்டும் இல்லாம் சமூக சிந்தனைகளும் அந்த காதல் வெளிப்பாடுகள் ஊடே விரவிக்கிடப்பதுதான் இந்த நூலின் தனிச்சிறப்பு. பிளாட்பாரவாசிகளின் பிள்ளைகளைப் பார்த்தால், நாட்டின் எதிர்காலம் பயங்கரமாக தெரிகிறது. பாவம். ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடாவது, அவர்களுக்கு ஒழுங்காகக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் பட்டினத்தில் சிற்றுண்டிச் சாலைகளுக்கும், தரமிக்க உணவு […]

Read more
1 12 13 14 15 16 23