வெல்லுங்கள் இந்த வழிச் செல்லுங்கள்

வெல்லுங்கள் இந்த வழிச் செல்லுங்கள், மனிதவள மேம்பாடுட நிபுணர் மல்லியம் வெ. ராமன், புத்தகச் சோலை, மயிலாடுதுறை, விலை 80ரூ. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடிப்பவர்கள் படிக்க வேண்டிய நூல் இது. மனிதவள மேம்பாட்டு நிபுணரான மல்லியம் வெ. ராமன் வெற்றியின் ரகசியத்தை எளிய தமிழில் சுவைபட எழுதியுள்ளார். வெற்றியடைய வேண்டுமானால் முதலில் தேவை வெற்றி மனப்பான்மை. நிதானமாக, பொறுமையாக, அதே சமயம் விடாப்பிடியாகத் தொடர்ந்து லட்சியத்தை நோக்கி நடந்தால், ஒருநாள் வெற்றி சாத்தியமாகும் என்கிறார் ஆசிரியர். இது இவருடைய முதல் நூல் […]

Read more

கடமையைச் செய் பலன் கிடைக்கும்

கடமையைச் செய் பலன் கிடைக்கும், வாரண்ட் பாலா, கேர் சொசைட்டி, ஓசூர், பக். 376, விலை 200ரூ. சாதாரண மனிதர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்ட அறிவூட்டும் நூல்களை எழுதியுள்ள நூலாசிரியரின் மற்றுமொரு படைப்பு இந்நூல். நாம் நம் கடமையைச் செய்தால், நம்மைப் பின் தொடரும் நிழல்போல், கடமையின் விளைவான நமது உரிமைகளும், தானே நம்மைப் பின்தொடரும் என்கிறார் நூலாசிரியர். சேவை என்பது கடமை என்பதும் ஒன்றே என்று பலரும் கருதுகிறார்கள். இதற்கு ஏற்ப காசு வாங்காமல் செய்வது சேவை. காசு வாங்கினால் […]

Read more

மாற்றமுடியாதவை மகிழ்ச்சியின் மந்திரங்கள்

மாற்றமுடியாதவை மகிழ்ச்சியின் மந்திரங்கள், டேவிட் ரிகோ, தமிழில் அகிலன் கபிலன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 248, விலை 150ரூ. நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகின்றன. அவற்றை நாம் தவிர்க்கவும் முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில், 1. எல்லாமே மாறுகின்றன, முடிவடைகின்றன. 2. எல்லாமே நினைக்கிறபடி நடப்பதில்லை. 3. வாழ்க்கை எப்போதும் நியாயமாய் இருப்பதில்லை. 4. வலி என்பது வாழ்வின் அங்கம். 5. மனிதர்கள் எப்போதும் அன்பாகவும், விசுவாசமாகவும் நடப்பதில்லை என்ற இந்த ஐந்தும் சவாலாகவே இருக்கின்றன. இந்த விஷயங்கள் […]

Read more

ரகசிய ஆசைகள்

ரகசிய ஆசைகள், ப்ரீத்தி ஷெனாய், தமிழில் என்.டி. நந்தகோபால், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 200ரூ. பெண் விடுதலையைப் பேசும் நாவல் இது. நாவலின் கதாநாயகி பள்ளிப்பருவத்தில் ஒருவனைக் காதலிக்கிறாள். அவர்கள் முத்தமிட்டுக் கொள்கின்றனர். நாயகியின் பெற்றோர் வெகுண்டு எழுந்து காதலரைப் பிரித்து, நாயகியை வேற்றூரில் படிக்க வைக்கின்றனர். 19 வயதிலேயே அவளுக்கு வலுக்கட்டாயமாக ஒரு திருமணமும் செய்கின்றனர். கட்டிய கணவன் மனதிற்கு இனியவனாக இல்லை. கணவனின் முட்டாள் தனங்களாலும், சுயநலமான நடத்தைகளாலும் கதாநாயகி மனம் சோர்ந்து போகிறாள். கடைசியில் தன் […]

Read more

மனிதன் வெற்றிக்காக படைக்கப்பட்டவன்

மனிதன் வெற்றிக்காக படைக்கப்பட்டவன், டாக்டர் ஒய். லிவிங்ஸ்டன், ஆரோவ்ஸ் கிரியேஷன்ஸ், சென்னை, பக். 427, விலை 240ரூ. கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை குறித்து பேசிக் கொண்டிருப்பதோ, சிந்தித்துக் கொண்டிருப்பதோ வாழ்க்கை இல்லை. நாம் ஒவ்வொரு விநாடியும் எவ்வாறு சிந்தித்துச் செயலாற்றுகிறோமோ, அதுவே உண்மையான வாழ்க்கை என்று, அர்த்தமுள்ள வாழ்க்கை குறித்து நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். வாழ்க்கையின் பல்வேறு கோணங்களையும் அலசி ஆராய்ந்து, ஒருவர் வெற்றியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது எப்படி? அவ்விதம் வெற்றியான வாழ்க்கையை அமைக்க முயல்வோர் சந்திக்கும் பிரச்னைகள் எவை? அதற்கான […]

Read more

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு, டாக்டர் லக்ஷ்மி விஸ்வநாதன், சுரா பதிப்பகம், சென்னை, விலை 110ரூ. எல்லா நோய்களுக்கும் மூல காரணம் மனக்கவலையே. இது அதிகரிக்க அதிகரிக்க அது மன அழுத்த நோயாக உருமாறுகிறது. இந்த மன அழுத்தம் உருவாக பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதில் முதன்மையானது, தாழ்வு மனப்பான்மையே. இதை வெற்றி கொள்ள எதையும் ஆக்கபூர்வமாக சிந்திக்கும் தன்னம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொள்வது மிக அவசியம் என்பது மனநல மருத்துவர்களின் கருத்தாகும். நற்சிந்தனை மற்றும் நல்ல செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் இந்த தன்னம்பிக்கையைப் பெற […]

Read more

உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்

உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள், ஜி. பிரான்சிஸ் சேவியர், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக். 216, விலை 195ரூ. நூல் ஆசிரியர், இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னனி கல்வி நிலையங்களில் பேராசிரியராக, முதல்வராக பணியாற்றியவர். இவர்தான் பயணம் செய்த நாடுகளில் படித்த புத்தகங்களில், பெற்ற அனுபவங்களை கதை வடிவில் எழுதி உள்ளார். தான் சொற்பொழிவுகளில் கேட்டது முதல், தன் தாத்தா கூறியது வரையிலான 100 கதைகளை தொகுத்திருக்கிறார். கவலைக்கும் பரிதவிப்புக்கும் ஏற்ற சிறந்த மாற்று மருந்து, வேலை. எடிசனின் சில நிமிட பொறுமை, […]

Read more

நிச்சய வெற்றி

நிச்சய வெற்றி, பிரகாஷ் ஐயர், விகடன் பிரசுரம், சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-863-5.html ஆற்றல் இல்லாத மனிதனே இல்லை. அந்த ஆற்றலே அவனை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது. அது என்ன என்பதை அறிந்து, தன்னை உயர்த்திக் கொள்ளும் யுத்திகளைக் கூறுவதே இந்நூலின் நோக்கம். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி, சவாலான தருணங்களை எதிர்கொண்டு முன்னேறி, தலைமைப் பதவியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இந்நூலாசிரியர். அந்த அனுபவங்கள் தந்த உந்துதலே இந்நூல் என்கிறார் நூலாசிரியர். திறமைக்கே முதலிடம் என்ற […]

Read more

வெற்றி வெளிச்சம்

வெற்றி வெளிச்சம், இயகோகா சுப்பிரமணியம், விகடன் பிரசுரம், பக். 176, விலை 95ரூ. 25 தலைப்புகளில், வெற்றியின் வழிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த நூல். தனது கட்டுப்பாடும், பிறருக்குக் கொடுக்கும் மதிப்பும், மிகுதியான உழைப்புமே வெற்றி எனும் வீட்டிற்கு அழைத்து செல்பவை என்பதை எளிய தமிழில் எடுத்துக்கூறும் இந்த நூல், அனுபவத்தின் வெளிப்பாடு. எதையும் எடுத்துக்காட்டுடன் தெரிவிக்கும்போது எளிமையான புரிதல் என்பது இயல்பாக அமைகிறது என்பதை, இந்த நூலைப் படிப்பவர்கள் எளிதில் உணர முடியும். பண்பும், நாடு சார்ந்த நெறிமுறைகளும், அனுபவசாலிகளின் ஆக்கப்பூர்மான […]

Read more

தங்க விலை ரகசியம்

தங்க விலை ரகசியம், கே.எஸ். ராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 204, விலை 90ரூ. சின்னச் சின்ன விஷயங்கள். ஆனால் அதில் அடங்கும் பெரிசு. அதை நேரடியாகச் சொல்லாமல் ஹாஸ்யமாக, படித்தால் சிரிப்பு வரும் வகையில் எளிய தமிழில், ஆங்கிலம் அதிகம் கலந்தாலும் நெருடல் இல்லாமல் தங்க விலை ரகசியமாக தந்துள்ளார் ஆசிரியர். கணவன் மனைவி அல்லது நண்பர்கள் இருவர் உரையாடலில் எவ்வளவு செய்தியை உட்புகுத்தித் தந்துள்ளார். அதிரசம் சொல்லும் ருசியும், தங்கவிலை தரும் நாட்டு நடப்பும், ரியல் எஸ்டேட் தகிடுதத்தம், ஆபீஸ் […]

Read more
1 14 15 16 17 18 23