சோதிட இயல்

சோதிட இயல், டாக்டர் தி. மகாலட்சுமி, நர்மதா பதிப்பகம், பக். 376, விலை 200ரூ. ஜோதிடத்தை முழுவதும் பொய் என்று அறவே ஒதுக்கவும் முடியாத. அதே நேரம் அது நூற்றுக்கு நூறு உண்மை என்று தலையில் தூக்கி வைத்து கூத்தாடவும் முடியாது என்ற ஒரு நிலைமையை விளக்க, ஆசிரியர் மேற்கொண்ட முயற்சியே இந்த நூல். ஜோதிடவியல் எங்கே தோன்றியது, யார் இதைத் தோற்றுவித்தது. அது தோன்றிய காலம் எது என்பனவற்றை உறுதியாகக் கூற முடியாது. ஜோதிடத்தின் தோற்றமும், வளர்ச்சியும், ஜோதிடத்தின் வகைகள், இந்திய மேனாட்டு […]

Read more

பெருவெடி பிரபஞ்ச வரலாறு

பெருவெடி பிரபஞ்ச வரலாறு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவியல் வெளியீடு, சென்னை, விலை 75ரூ. குழந்தைகளுக்கான சிறந்த அறிவியல் அறிமுக நூல். பெருவெடிப்பு நிகழ்வில் இருந்து பிரபஞ்சம் உருவாகி, கோள்களும், உயிரினங்களும் வந்த வரலாற்றை குழந்தைகளுக்காக படக்கதைபோல வண்ணப்படங்களுடன் எளிமையாக உருவாக்கி வழங்கி உள்ளது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- நவக்கிரக தோஷ நிவர்த்திக்காக சித்தர்கள் அருளிய நெறிமுறைகள், சகுந்தலை நிலையம், சென்னை, விலை 35ரூ. துன்பம் தருகிற கிரகங்களை வேதங்களில் ரிஷிகள் உபதேசித்த நெறிமுறை வணங்கி வழிபட்டால் […]

Read more

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள், நயவுரைநம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 200ரூ. வால்மீகி எழுதிய ராமாயணத்தில், ராமனை ஒரு மாவீரனாகத்தான் சித்தரிக்கிறார். திருமாலின் அவதாரம் என்று கூறவில்லை. ராமனை திருமாலின் அவதாரம் என்று எழுதியவர் கம்பர்தான். கம்பராமாயணத்தில், பலஇடங்களில் அடியெடுத்துக் கொடுத்தவர்கள் ஆழ்வார்கள் என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்கூறுகிறார் நயவுரைநம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சன். கம்பராமாயணத்தின் சுவையான பல பகுதிகளை எடுத்துக்கூறி, அவற்றுக்கு அழகிய நடையில் பொருள் கூறுகிறார் ஜெகத்ரட்சகன். எனவே நூலைப் படித்து முடிக்கும்போது, கம்பராமாயணத்தையே படித்து முடித்த […]

Read more

சாதகலங்காரத்தில் சித்தர் கருத்துகள்

சாதகலங்காரத்தில் சித்தர் கருத்துகள், ஜோதிடர் தி. கல்பனா தேவி, ராசகுணா பதிப்பகம், பக். 160, விலை 130ரூ. ஜோதிட சாஸ்திர தொடர்புடைய நமக்குக் கிடைத்திருக்கும் நூல்களில் மிகப் பழமை வாய்ந்ததும், தலைசிறந்ததுமான நூல் சாதகலங்காரம். வடமொழியில் அமைந்துள்ள இந்த மூலநூல், தமிழில் கீரனூர் நடராஜன் எனும் புலவரலால், கி.பி. 1587ல் எழுதப்பட்டது. அகத்தியர், புலிப்பாணி, போகர், மச்சமுனி போன்ற சித்தர்களும் ஜோதிட நூல்களை இயற்றியிருக்கின்றனர். சித்த மருத்துவம், ஜோதிடம், யோகம், ஞானம், ரசவாதம் போன்றவை, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. சித்தர்கள் சமயம், மருத்துவம், ஜோதிடம் […]

Read more

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள், யசோதரை கருணாகரன், விகடன் பிரசுரம், விலை 115ரூ. நீரிழிவு நோய் பற்றிய நல்ல விளக்கம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த என்ன விதமான உணவைச் சாப்பிடலாம் என்பதுடன், அந்த உணவு வகைகளைத் தயாரிக்கும் முறையும் கொடுத்து இருப்பது பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- சோதிடப் பேரகராதி, சோதிட சாஸ்திரி எஸ். கூடலிங்கம் பிள்ளை, அழகு பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. சோதிட சாஸ்திரத்தில் இடம் பெற்றுள்ள செய்யுள் நடைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் […]

Read more

சங்கரன் கோவில்

சங்கரன் கோவில், மங்கையர்க்கரசி பதிப்பகம், விலை 600ரூ. சங்கரன் கோவில் – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஊர். அந்த ஊரின் திருக்கோவில், அந்த நகரின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த முன்னாள் நகர்மன்றத் தலைவர் அ. பழநிசாமி ஆற்றிய பணிகள், மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர் என நகரின் முதல் பட்டதாரிகள், சங்கரன் கோவிலில் பிறந்த தமிழ் அறிஞர்கள் தேவநேயப் பாவாணர், இ.மு. சுப்பிரமணியம், முதல் திரையரங்கம், 62 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் பஸ், நெசவுத் தொழில் வளர்ந்த கதை என சங்கரன்கோவிலில் நிகழ்ந்த […]

Read more

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன், வெ. நீலகண்டன், சூரியன் பதிப்பகம், விலை 150ரூ. இந்திய மன்னர்களில் எவரும் செய்யாத சாதனையாக, தெற்கு ஆசியாவின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த மாமன்னர் ராஜேந்திரன் பற்றிய முழுமையான தகவல்கள், சுவையான நாவல் போல விறுவிறுப்புடன் ஆக்கித் தரப்பட்டுள்ளது. சோழர்களின் வரலாறு, மன்னர் ராஜேந்திரன் ஆட்சித் திறன், அவரது கப்பல் படை சாகசங்கள், இலங்கை மன்னன் மகிந்தனை போரில் வென்று கைதியாகக் கொண்டுவந்தது, கங்கை கொண்ட சோழீச்வரம் கோவில் எழுப்பப்பட்ட விதம், அவரது இறுதிக் காலம் எப்படி […]

Read more

எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி

எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி, விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. திரைப்பட உலகில் மிகப்பெரும் சாதனை நிகழ்த்தியவர்களில் ஒருவர் நாகி ரெட்டி. அவரை முதலாளி என்றே எம்.ஜி.ஆர். அழைப்பார். எம்.ஜி. ஆரை வைத்து நாகிரெட்டி தயாரித்த மிகப்பெரிய வெற்றிப்படம் எங்கவீட்டுப் பிள்ளை. அதுமட்டுமல்ல, எம்ஜி.ஆரை வைத்து நம் நாடு படத்தை பத்தே நாட்களில் எடுத்து சாதனை படைத்தார். என்.டி.ராமாராவ் நடித்த பாதாள பைரவி ஜெமினிகணேசன் – சாவித்திரி நடித்த மிஸ்லியம்மா, மாயாபஜார் உள்பட ஏராளமான படங்களை நாகிரெட்டியின் விஜயா – வாகினி ஸ்டூடியோ தயாரித்தது. […]

Read more

தித்திக்கும் தீந்தமிழ்

தித்திக்கும் தீந்தமிழ், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. மரபுக் கவிதைகள் எழுதுவதில் புகழ் பெற்று விளங்கும் முன்னாள் அமைச்சர் கா. வேழவேந்தன், கட்டுரைகள் தீட்டுவதிலும் வல்லவர். தித்திக்கும் தீந்தமிழ் என்ற இந்த நூலில், எத்திக்கும் போற்றும் தித்திக்கும் தீந்தமிழ், திருக்குறள் ஏன் தேசிய இலக்கியம்? காந்தி அண்ணாவின் தமிழ்த் தொடர்புகள், அறிஞர் அண்ணாவின் உயர் தனிப்பண்புகள், டாக்டர் மு.வ. அவர்களின் தனிப்பெருமைகள், கலைஞரின் நகைச்சுவை தோரணங்கள், பாவேந்தர் விதைத்த புரட்சிக் கவிதைகள் உள்பட 24 கட்டுரைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் தமிழின் பெருமையையும், […]

Read more

காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம்

காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம், முருகு பாலமுருகன், ராம் பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 50ரூ. உலகில் ஒப்பற்ற செல்வம், உடல் ஆரோக்கியம்தான். நம்மில் தினம் தினம் ஏதாவது நோய் நொடியால் அவதிப்படுவோர், அவ்வப்போது, சிறு ஆரோக்கிய பாதிப்புகள் வந்து குணமாவோர், எப்போதுமே பெரும் பாதிப்பு ஏதுமின்றி நல்ல ஆரோக்கியமாகவே வாழ்வோர்கள் உண்டு. முற்பிறவியில் அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, கிரக அமைப்புகளும், கிரக அமைப்புகளுSககு ஏற்ப நோய்களும் உண்டாகின்றன என்பது தான் இதற்கு காரணம். ஜனன ஜாதகத்தில், லக்னத்திற்கு […]

Read more
1 3 4 5 6 7 10