கிரேக்க மருத்துவ தந்தை ஹிப்போகிரேட்டஸ்

கிரேக்க மருத்துவ தந்தை ஹிப்போகிரேட்டஸ், ஜெகதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.80. பாவம் செய்பவர்களுக்கு ஆண்டவனால் தரப்படும் தண்டனையே நோய் என்ற கருத்தை உடைத்து நொறுக்கிய மருத்துவ அறிவியல் முன்னோடி பற்றி எழுதப்பட்டுள்ள நுால். பேய், பயம், கடவுள் கோபத்தால் நோய் வருகிறது என்பதெல்லாம் அப்பட்டமான பொய் என நிரூபித்து, அறிவியல் அணுகுமுறையால் வெற்றி பெற்றவர். இவரது கருத்துகள் மருத்துவ உலகில் இன்றும் அறியப்படுகின்றன. மருத்துவ சேவை புரிய விழையும் டாக்டர் எடுக்கும் சத்தியப் பிரமாணத்துக்கு, ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழி என பெயர். பல நாடுகளில் […]

Read more

கால்தடம் இல்லா நீலவானம்

கால்தடம் இல்லா நீலவானம், ஓஷோ, தமிழில் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 230ரூ. சீனாவைச் சேர்ந்த புத்தமதத் துறவியான இஸான் ரியு என்ற குரு தொடர்பான பல செய்திகளை இந்த நூலில் தந்து இருக்கிறார் ஓஷோ, இந்தத் தகவல்களுடன், வழக்கம்போல அவரது கேள்வி-பதில் ரூபமான பிரசகங்கங்களும் பெரும் அளவில் இந்த நூலில் இடம்பிடித்து இருக்கின்றன. இடையிடையே அவர் கூறி இருக்கும் கவுதம புத்தர் பற்றிய கதைகளும், ஜென் கதைகளும் ருசிகரமானவை என்பதோடு ஆழமான கருத்துகளையும் கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் வழியிலேயே ஞானம் […]

Read more

ஓஷோ தத்துவ விளக்கக் கதைகள்

ஓஷோ தத்துவ விளக்கக் கதைகள், மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.140. தத்துவ ஞானி ஓஷோவின் எழுபது தத்துவங்களும், அந்தத் தத்துவங்களை விளக்குவதுபோல் அமைந்த எழுபது சிறுகதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. புதிய முயற்சியாக இருக்கிறதே என்று நூலைப் படிக்கத் தொடங்கினால், டூ- இன்-ஒன் என்பதுபோல இரு நூல்களை வாசித்த அனுபவம் ஏற்படுகிறது. “நாட்டை ஆள்வதற்கு நேருவுக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று வல்லபபாய் படேல் காந்தியடிகளைப் பார்த்துக் கேட்க, “பதவி ஆசையே இல்லாதவன் நேரு ஒருவன்தான். அந்த ஒரு தகுதி போதும்’ […]

Read more

முக்திக்கு வழி

முக்திக்கு வழி, நரேஷ் குப்தா, தமிழில்: கே.சீ, சிபிஆர் பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.150 ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் குப்தா, தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர் எனப் பல முக்கியமான பதவிகளை வகித்தவர். அவர் எழுதிய ‘தி பாத் டு சால்வேஷன்’ எனும் புத்தகம் ‘முக்திக்கு வழி’ என்ற பெயரில் இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியத் தத்துவச் சிந்தனைகளில் புலமை கொண்ட ஆளுமைகளின் கருத்துகளை எளிமையான முறையில் இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார். பல்லாயிரம் வருட வயது கொண்ட சிந்தனைகள் […]

Read more

மனம் அது செம்மையானால்

மனம் அது செம்மையானால்? ,  க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்: 160,  விலை ரூ.200. மனம் என்பது என்ன? அது எப்படிச் செயல்படுகிறது? மனத்தை எப்படிச் செம்மையாக்குவது? மனத்தின் நோய் எது? அதிலிருந்து எப்படி விடுபடுவது? ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய மனம் என்னவாகும்?இத்தனை கேள்விகளுக்கும் தத்துவரீதியாகவும் அறிவியல்ரீதியாகவும் இந்நூலில் விளக்கங்களை அளித்துள்ளார் நூலாசிரியர். மேல்மனம் என்பதையும் ஆழ்மனம் என்பதையும் வேறுபடுத்தி விளக்கியுள்ளார் (மேல்மனம் அறிவுமயமானது; ஆழ்மனம் உணர்வு மயமானது). நம் உயிர்தான் நம் மனம் என்பதை தெளிவாக விளக்குகிறார்.  மனம் உடலில் உள்ளவரை […]

Read more

வைணவ வாழ்க்கை தத்துவங்கள்

வைணவ வாழ்க்கை தத்துவங்கள், ந.இரா.சீனிவாச ராகவன், வானதி பதிப்பகம், விலைரூ.200. ஆன்மிகத்தில் ஆழ்ந்த அறிவு பெற்ற ஆன்மிக அனுபவத்தின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால்.‘ஷேமநிதி’ என்ற தலைப்பிலான கட்டுரையில், பாவ மற்றும் புண்ணியங்களின் கணக்குகளைக் குடும்ப உறவுகளிடையே ஒருங்கிணைத்து, அதன் மூலம் வரும் லாப நஷ்டக் கணக்குகளை அருமையாக குறிப்பிடுகிறார். புண்ணிய பலத்தால் சந்ததியினருக்கு எவ்வாறு இறையருளைப் பெற முடியும் என்றுரைக்கிறார். ‘ஸீதாராமன் திருக்கல்யாணம்’ என்ற தலைப்பிலான கட்டுரையில், தினமும் ஸீதாராமன் திருக்கல்யாணம், காசியில், 200 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிரத்தையுடன் நடத்துவதை விளக்குகிறார்.திருமலை ஸ்ரீநிவாஸ பெருமாளுக்கும், […]

Read more

பட்டினத்தார் தத்துவம்

பட்டினத்தார் தத்துவம், கு. பொன்மணிச்செல்வன், செந்தமிழ் பதிப்பகம், பக். 192, விலை 175ரூ. காதறுந்த ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே என்ற ஞான வரிகளுக்கும், பட்டினத்தாருக்கும் உள்ள தொடர்பு தமிழகம் அறிந்தது. அத்தகைய சித்தர், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சோழநாட்டின் பெருநகரமாகவும், மிகப்பெரிய துறைமுகமாகவும் விளங்கிய காவிரிப் பூம்பட்டினத்தில், செல்வம் கொழிக்கும் முதன்மை வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருவெண்காடர். இவர் மாடமாளிகை, அயல்நாட்டு வணிகம், இன்பமான குடும்ப வாழ்க்கை, ஏராளமான பணியாளர்கள்… என்று செல்வச் செழிப்போடு வாழ்ந்தார். ஒருநாள் […]

Read more

ஜென் பாடங்கள்

ஜென் பாடங்கள், தொகுப்பு யோமே எம்.குபோஸ், தமிழில் ந.முரளிதரன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.238, விலை 180ரூ. ஜென் தத்துவங்களை விளக்கும் நூல். குருவிடம் மாணவத்துறவிகள் கேள்விகள் கேட்பதும், அதற்கு குரு பதில் சொல்வதும் என்கிற முறையில் ஜென் தத்துவங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. ஜென் வாழ்க்கை மற்றும் இறப்பைப் பற்றி பேசுவதால் அது மதமே. ஆனால் இயற்கையைக் கடந்த, காரணகாரிய விதிக்கு அப்பாற்பட்ட ஒரு தனி இருத்தலின் மீது நம்பிக்கை வைக்காமல், சுவர்க்கம் அல்லது நரகம் போன்ற கோட்பாடுகள் இல்லாமல் ஜென் இருக்கின்றது. பெரும்பாலான மதங்கள் […]

Read more

தந்த்ரா ரகசியங்கள்

தந்த்ரா ரகசியங்கள், ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 250ரூ. விஞ்ஞான் என்றால் உணர்வு. “பைரவ் என்றால் உணர்வு கடந்த நிலை. “தந்த்ரா என்றால் யுக்தி, வழிமுறை, டெக்னிக். அதாவது, உணர்வை கடத்திச் செல்லும் யுக்தி. மற்ற மரபுகளுக்கெல்லாம் முற்றிலும் முரணானதாக தந்த்ரா தெரிவது இப்படித்தான். ஜைனர்கள் சுவையே இருக்கக் கூடாது என்கின்றனர். மகாத்மா காந்தி தன்னுடைய ஆசிரமத்தில், சுவை கூடாது என்பதை ஒரு விதியாகவே வைத்திருந்தார். எதையும் சுவைக்கக் கூடாது. சாப்பிடு, ஆனால், சுவைக்காதே; சுவையை மறந்துவிடு. சாப்பிடுவது தேவையானது. ஆனால், அதை இயந்திரத் […]

Read more

தத்வமஸி

தத்வமஸி, பேரா.சு.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 112, விலை 150ரூ. தத்வமஸி என்றவார்த்தையை கேட்டவுடன், அய்யப்பன் கோவில் தான் நினைவுக்கு வரும். ஏனெனில், அய்யப்பன் கோவில்களில் சன்னிதி முகப்பில், இந்த வார்த்தை எழுதப்பட்டிருக்கும். ஆனால், இந்த வார்த்தைக்கு பலருக்கு அர்த்தம் தெரியும். ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என்பது தான் இதன் அர்த்தம். இறைவனும் நாமும் ஒன்று தான் என்ற, அத்வைத தத்துவத்தை விளக்கும் வாசகம். ஆதிசங்கரர் எழுதிய, ‘வாக்கிய விருத்தி’ என்ற நுாலை, ஆங்கிலத்தில், சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மொழிபெயர்த்துள்ளார். அதை தமிழாக்கம் […]

Read more
1 2 3 8