மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

மார்க்சிய அறிவுத் தோற்றவியல், நா.வானமாமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 70, விலை50ரூ. இந்நுால், தமிழ்ப் புலமைத் தளத்தின் வழியாக, மார்க்சிய அறிவு ஆராய்ச்சி இயலைச் சிறப்பாகக் கற்பிக்கிறது. அறிவின் தோற்றம், உண்மை, பிழை முதலான அறிவுத் தத்துவப் பிரச்னைகளை எடுத்து விளக்கும்போது, தமிழ்த் தத்துவ நிலைப்பாடுகள் வழியாக விளக்குவதும், மார்க்சிய நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவதும் மார்க்சியத்தை கற்க வழிவகுக்கிறது. இந்நுால் வழியாக வெளிப்படும் மார்க்சிய சிந்தனை, தமிழ் மரபில் வேர் பிடித்து வளரும் என்பது முன்னிறுத்தப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 1/7/2018. இந்தப் […]

Read more

எம்.ஜி.ஆர். என்ற ஹிந்து

எம்.ஜி.ஆர். என்ற ஹிந்து, ம.வெங்கடேசன், கிழக்கு பதிப்பகம் ம.வெங்கடேசனின் சமீபத்தைய புத்தகம் ‘எம்.ஜி.ஆர். என்கிற ஹிந்து’. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை சொந்தம் கொண்டாட திராவிடர் கழகம் முனைந்ததை ஒட்டி ஏற்பட்ட ஆய்வில் இப்புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார் ம.வெங்கடேசன். சில புத்தகங்கள் உணர்வுப் பூர்வமாக இருக்கும். சில புத்தகங்கள் வெறும் தகவல்களாக இருக்கும். இப்புத்தகம், ம.வெங்கடேசனின் மற்ற புத்தகங்களான ‘ஹிந்துத்துவ அம்பேத்கர்’, ‘தலித்துகளுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி’ போன்ற புத்தகங்களைப் போலவே, மிகவும் விவரமாக தரவுகளுடன் எழுதப்பட்ட புத்தகம். ஹிந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயர் […]

Read more

காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள்

காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள், சி.பி.சரவணன், வி கேன் புக்ஸ், பக்.174, விலை ரூ.170. காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான சிக்கல்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டன. மெட்ராஸ் மைசூர் மாகாண அரசுகளுக்கிடையில் கி.பி. 1892, 1924, 1929 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், மைசூர், தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளுக்கிடையில் 1972 இல் ஏற்பட்ட ஒப்பந்தம் ஆகியவை பற்றி இந்நூல் விரிவாகக் கூறியிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் காவிரிப் படுகையின் மகசூல் மற்றும் நீர்ப் பயன்பாடு பற்றிய உண்மை விவரங்களைச் சேகரிப்பதற்காக […]

Read more

வேலுப்பிள்ளை பிரபாகரன்

வேலுப்பிள்ளை பிரபாகரன் – விடுதலைப் போராட்ட வரலாறு, செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை, வ.உ.சி நூலகம், பக்.1328, விலை ரூ.1500. ‘வெற்றிக்கு விளக்கம் சொல்லக் கூடாது; தோல்வி என்றால் ஏன் தோற்றோம் என சொல்ல ஆளே இருக்கக் கூடாது‘ என்ற பிரபல வாசகத்துக்கு சொந்தக்காரர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இன்று அவர் குறித்து பல விமரிசனங்கள், விவாதங்கள் – பதிலளிக்க அவர் இல்லை. அப்படிப்பட்ட பிரபாகரனின் வரலாற்று நூலினை இரு பிரிவாக படைத்திருக்கிறார்கள். முற்பகுதி பிரபாகரன் வரலாறு – பிற்பகுதி ஆவணங்கள். […]

Read more

உலக அரசியல் வரலாறு

உலக அரசியல் வரலாறு, மன்னை சம்பத், அனிதா பதிப்பகம், விலை 110ரூ. அரசியல் என்பது என்ன? என்பதில் ஆரம்பித்து கம்யூனிசம் எப்படி வந்தது என்பது வரை உலக அரசியல் வரலாறு தெளிவாக தரப்பட்டுள்ளது. மேலும், தமிழர்கள் அரசியலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூலை எழுதி உள்ளார் ஆசிரியர் மன்னை சம்பத். நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027066.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

காவிரி ஒப்பந்தம்: புதைந்த உண்மைகள்

காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள், சி.பி.சரவணன், வி கேன் புக்ஸ், விலை 170ரூ. தமிழகத்தில் கோடை வெப்பத்தை விட அனலெனத் தகிக்கும் பிரச்சினை ஒன்று உண்டென்றால் அது காவிரி தொடர்பானதே. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காட்டிவரும் மெத்தனமும், உரிமைகளைப் போராடிப் பெற வேண்டிய தமிழக அரசின் மௌனமான இருப்பும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பெரும் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன. காவிரி ஒப்பந்தம் தொடர்பாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப் பாதுகாப்புகள் குறித்து மிக விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். நன்றி: தி இந்து, 12/5/2018. […]

Read more

எம்.ஜி.ஆர். அரசியல் பாதை

எம்.ஜி.ஆர். அரசியல் பாதை, துரை கருணா, எம்.ஜி.ஆர். பாசறை, பக்.264, விலை 160ரூ. ‘மக்கள் திலகம்’ என்று கொண்டாடப்படும் எம்.ஜி.ஆர்., அவர்களின் அரசியல் வரலாற்றை இந்நுால் பதிவு செய்துள்ளது. காந்தியவாதியாகவும், நேதாஜியை நேசிப்பவராகவும், காங்கிரஸ் அனுதாபியாகவும் இருந்த எம்.ஜி.ஆர்., 1952ம் ஆண்டு, நடிகமணி டி.வி.நாராயணசாமி மூலம் அண்ணாதுரையின் அறிமுகம் கிடைத்த பின், தி.மு.க., அனுதாபியாக மாறினார் என்று அறிகிறோம் (பக். 15). நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம், தி.மு.க.,வின் கொடியையும், கொள்கைகளையும் பட்டி தொட்டியெங்கும் பரவச் செய்தார் என்றும் (பக். 18), அண்ணாதுரை […]

Read more

பிரதமர் விஸ்வநாதன்

பிரதமர் விஸ்வநாதன், பி.விஸ்வநாதன், அசோக்ராஜா பதிப்பகம், பக். 168,விலை 90ரூ. தொழிலால் மேன்மை அடைந்த பணக்காரர்கள், பொது வாழ்வில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மற்றும் படித்து பட்டம் பெற்ற அதிகாரிகளால், நம் நாடு உலக அரங்கில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இவர்களில் சில பேர் செய்யும் தவறுகளை, நம்மால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதை கட்டுப்படுத்தி, நமக்கு அப்பாற்பட்ட சக்தியிடம் பொறுப்பை ஒப்படைத்து, நல்லதை பேசுவது, நினைப்பது, செய்வது என்ற கொள்கையை கடைபிடித்து வாழ்ந்தால், ஒவ்வொருவருக்கும் வெற்றி நிச்சயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்ற உண்மையை உணர்த்துகிறது […]

Read more

புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்.

புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்., மணவை பொன்.மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், பக். 376, விலை ரூ.270. எம்.ஜி.ஆரின் திரையுலக அனுபவங்களையும், அரசியல் அனுபவங்களையும் ஏராளமான தகவல்களுடன் அள்ளித் தந்திருக்கிறார் நூலாசிரியர். சிறுவயதில் நாடகத்துறையில் நுழைந்து நடிப்புப் பயிற்சியை காளி என். ரத்தினத்திடமும், நடனப் பயிற்சியை ஸ்ரீ ராமுலுவிடம் பெற்று ‘ராஜபார்ட்‘ ஆக உயர்வடைய எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள், திரைத்துறையில் நுழைவதற்காக குதிரையேற்றம், வாள் சண்டை, சிலம்பம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டும் கூட சிறு சிறு வேடங்களே கிடைக்க, தன்னை நாயகனாக நிலைநிறுத்திக் கொள்ள அவர் பட்ட […]

Read more

கானலால் நிறையும் காவிரி

கானலால் நிறையும் காவிரி, உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், பக்.104, விலை ரூ.120. காவிரி பிரச்னை குறித்து உணர்வுப்பூர்வமான கொந்தளிப்புகளும், போராட்டங்களும் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில் அப்பிரச்னை பற்றி மிகவும் உயிரோட்டமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றத்தால் 2007 இல் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 192 டி.எம்.சி., தண்ணீரில் இருந்து 14.75 டி.எம்.சி., தண்ணீரைக் குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு ஒதுக்கி, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு உத்தரவிட்டது. தமிழகத்தின் நிலத்தடி நீரை கணக்கில் […]

Read more
1 7 8 9 10 11 44