கம்பரச ஆராய்ச்சி

கம்பரச ஆராய்ச்சி, கு. பாலசந்திர முதலியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 160, விலை 150ரூ. கடந்த, 1949ல் அண்ணாதுரை எழுதிய, ‘கம்பரசம்’ என்ற நுாலுக்கு மறுப்பு நுாலாக வெளிவந்த இந்த நுால் ஒரு மறுபதிப்பாகும். எதிர்வினைத் திறனாய்வு செய்ய சரியான சான்றுகளும், தரவுகளும் வேண்டும். அப்போது தான், ஒருவர் கூறியுள்ள கருத்திற்கு மறுப்பான கருத்தை முன்வைக்க முடியும். இந்த நுால், அண்ணாதுரை எழுதிய கம்பரசத்தை அடி முதல், நுனி வரை ஆழ்ந்து படித்து ஆராய்ந்து, தம் கருத்தை நுாலாசிரியர் தடை விடைகளால் பதிவு […]

Read more

நாம் திராவிடர்

நாம் திராவிடர், முனைவர் ப.கமலக்கண்ணன், காவ்யா, பக்.408, விலை 400ரூ. கொள்கையில் விடாப்பிடியாக இருந்து சாதனைகள் பல செய்தவர் ஈவெ.ரா., அதற்காக எத்தகைய தியாகங்களையும் செய்யத் தயங்காதவர். நுால் முழுவதும் அவரது எண்ணம், கொள்கை, விளக்கம் பெறுகின்றன. இந்த நுாலில், ‘மொழி பற்றிய தமது எண்ணங்களில், தமிழ் மொழியைச் செம்மை செய்து, உலக அரங்கில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரவேண்டும் (பக். 53) என்கிறார். ஆனால் ‘காட்டுமிராண்டி’ என்ற அவரது கருத்தையும், தாய்மொழி குறித்த அவரது புலமையையும் இதில் எழுதியிருந்தால், ‘திராவிடக் கண்ணோட்டம்’ எது […]

Read more

இராகவம் தொகுதி 2

இராகவம் தொகுதி 2, தொகுப்பும் பதிப்பும் கா.அய்யப்பன், காவ்யா வெளியீடு, விலை 900ரூ. உவேசா வழித்தடத்தில் நாட்டுடமையான தமிழறிஞர்களின் படைப்புகளை முழுமையாகத் தொகுத்து வெளியிட்டுவரும் காவ்யா பதிப்பகம், ரா.இராகவையங்காரின் படைப்புகளை ‘இராகவம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. சங்கத் தமிழ் ஆய்வின் முன்னோடிகளான உ.வே.சாமிநாதையர், ச.வையாபுரிப் பிள்ளை இருவராலும் பாராட்டப்பட்டவர் ரா.இராகவையங்கார். ‘இராகவம்’ இரண்டாம் பாகத்தில் அவர் எழுதிய குறுந்தொகை உரைவிளக்கமும் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆராய்ச்சி உரைகளும் இடம்பெற்றுள்ளன. 1946-1951 காலகட்டத்தில் வெளியான முதல் பதிப்புகளின் அடிப்படையில் இத்தொகுப்பைத் தொகுத்திருக்கிறார் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப […]

Read more

மாற்றுத்திறனாளிகள் வாழ்வியல் சூழல்

மாற்றுத்திறனாளிகள் வாழ்வியல் சூழல், கோ.மாலினி சீதா, வாசகன் பதிப்பகம், விலை 100ரூ. உடலாலும் மனதாலும் சவால் விடப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நிலை புராதன காலம் முதல் இன்றுவரை எப்படியெல்லாம் உயர்வு பெற்றிருக்கிறது என்பதைச் சொல்லும் ஆய்வு ரீதியான நூல். உடல் சோதனையையும், மன வேதனையும் கடந்து சாதனை படைத்தவர்கள் பற்றிப் படிக்கும்போது மனதுக்குள் இனம்புரியாத நெகிழ்வு ஏற்படுவது நிஜம். நன்றி: குமுதம், 13/3/2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கூடல் நூல்களில் ஆடல்

கூடல் நூல்களில் ஆடல், ஆ.எஸ்தர் பிரதீபா, பக்.172, விலை ரூ.175. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் பரதநாட்டியப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் நூலாசிரியரின் சங்க இலக்கியம் சார்ந்த நூலறிவு நம்மை வியக்க வைக்கிறது. கி.மு.300 – கி.பி.300 வரையிலான காலத்தில் நான்மாடக் கூடல் நகரில் கடைச்சங்கம் செயல்பட்டு வந்தது. அக்காலத்தில் தோன்றிய சங்க இலக்கியங்களான நற்றிணை, பரிபாடல், குறுந்தொகை, பதிற்றுப்பத்து, கலித்தொகை, அகநானூறு, புறநூனூறு, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவற்றில் காணப்படும் இசை, […]

Read more

யார் தமிழர்?

யார் தமிழர்?, ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 200, விலை 140ரூ. ஆர்யமாம் திராவிடமாம் அத்தனையும் புளுகே’ என துவங்கி, ‘பாரதி பார்வையில் பிராமணர்கள்’ ஈறாக, 13 கட்டுரைகள் பெரும்பாலும் திராவிட இயக்க எதிர்ப்புக் கருத்துக்களை உள்ளடக்கியவையாகும். கடந்த, 1965ல் காங்கிரசை வீழ்த்த ராஜாஜி தான் ஹிந்தியை எதிர்ப்பதாக நாடகம் ஆடினார் -– பக்., 56. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் தேதியை, ராஜ்யோத்சவ நாளாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழக அரசு கொண்டாடவில்லை – பக்., […]

Read more

இஸ்லாமும் வீரசைவமும்

இஸ்லாமும் வீரசைவமும், டாக்டர் ஏவி.எம்.நசீமுத்தீன், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், விலை 140ரூ. இஸ்லாத்தின் கொள்கைகளும், நடைமுறைகளும் தென்னக மக்களைப் பெரும் மாற்றங்களுக்கும், புதிய சிந்தனைகளுக்கும் கொண்டுசென்றன. இதன் விளைவாக சமய மறுமலர்ச்சியை நோக்கமாகக் கொண்டு வீரசைவம் தோன்றியது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் பசவண்ணர், வீரசைவத்திற்குப் புத்துயிர் அளித்தார். அவர் ஒரு சமூகப் போராளியாக – வீரசைவம் என்ற பதாகையின் கீழ் இந்திய நாட்டின் சமூக அமைப்பில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார். பசவண்ணரின் சமூகப்புரட்சிக்குப் பக்கபலமாக அமைந்தது, இஸ்லாமிய மார்க்கத்தின் தனிச்சிறப்பான கொள்கைகளும், நடைமுறைகளும் என்பது ஆராய்ச்சியாளர்களின் […]

Read more

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர், பக்தவத்சல பாரதி, பாரதி புத்தகாலயம், விலை : ரூ.60 தமிழ்ச் சமூகத்தில் சாதி அமைப்பு எவ்வாறு உருவாகியிருக்க வேண்டும் என சங்க இலக்கியப் பாடல்களை முதன்மைத் தரவாகக் கொண்டு ஆராய்கிறது, 72 பக்கங்கள் கொண்ட இந்த நூல். குடி என்னும் தன்னாட்சி சமூக முறையிலிருந்து, சுற்றுவட்ட சமூக முறையின் ஊடாக செங்குத்து படிநிலை சமூக முறைக்கு தமிழ்ச் சமூகம் மாறி வந்திருப்பதாக இந்த நூலில் விளக்கியுள்ளார் பக்தவத்சல பாரதி. சங்க காலச் சமூகம் குடி அடிப்படையிலான சமூகமாக இருந்தது […]

Read more

ஞாபகம் வருதே மதுரை ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே மதுரை ஞாபகம் வருதே, எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக்.180, விலை ரூ.100. தூங்கா நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை இப்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டினால் இரவு 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டு தூங்கும் நகரமாகிவிட்டது; ஆனால் தூங்கா நகரமாக இருந்தபோது இரவு நேரத்தில் சாப்பிட என்னென்ன கிடைத்தன? நல்ல ருசியான முறுக்குக் கடைகள் எங்கிருந்தன? சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள முக்கியமான சாலைகளான மாரட் வீதிகளுக்குஅப்பெயர் எப்படி வந்தது? மதுரையில் உள்ள காக்கா தோப்பு, வில்லாபுரம், மதிச்சியம், சொக்கிகுளம் ஆகியவற்றுக்கு […]

Read more

விதுர நீதியும் வள்ளுவ நீதியும்

விதுர நீதியும் வள்ளுவ நீதியும், டி.வி.ராதாகிருஷ்ணன், திருவரசு புத்தக நிலையம், பக். 246, விலை 150ரூ. விதுர நீதியும் வள்ளுவ நீதியும் என்னும் இந்த நுால், விதுரர், திருதராஷ்டிரருக்கு சொன்ன நீதியையும், திருவள்ளுவர் உலகப் பொதுமறையான தன் திருக்குறளில் உலகத்திற்கு சொன்ன வற்றையும் ஒப்பாய்வு செய்யும் விதமாக அமைந்திருக்கிறது. இந்த நுாலில், 50 தலைப்புகளில் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும். செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும் என்பது உட்பட பல கருத்துக்கள் பொதிந்துள்ளன. மகாபாரத கதையோடு வள்ளுவரின் […]

Read more
1 11 12 13 14 15 84