குக்கூ குக்கூ ஹைக்கூ

குக்கூ குக்கூ ஹைக்கூ, டி.வி.எஸ்.மணியன், மணிமேகலைப் பிரசுரம், பக். 88, விலை50ரூ. ஜப்பானிய ஹைக்கூ இலக்கணம், பின்னாளில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், அவர்களுடைய மொழிகளில் ஹைக்கூ கவிதைகளாக எழுதும்போது, பின்பற்ற முடியாமல் போனது போலவே, நுாலாசிரியர், ஹைக்கூ வடிவத்தை தன் கருத்து வெளிப்பாட்டிற்கு ஏற்ப, சொல்லாட்சியுடன் திறம்பட எழுதியுள்ளார். ‘பாகன் வீட்டு அடுப்பெரிய/ தெருவில் யாசகம்/ யானை’ (பக்., 30’ என, யானையை வைத்து பிழைப்பு நடத்துவதையும், ‘மகன் கானகம்/ கணவன் வானகம்/ கைகேயி வரம்’ (பக்., 33) என ராமாயணச் சுருக்கத்தையும், ‘நுாறை விட/ […]

Read more

நட்சத்திரத் தோரணங்கள்

நட்சத்திரத் தோரணங்கள், கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு, புதுகை தென்றல் வெளியீடு, விலை 70ரூ. ஹைக்கூ கவிதைகள் தோன்றி 100 ஆண்டுகள் ஆகின்றன. அதையொட்டி, இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு எழுதியுள்ள அழகான ஹைக்கூ கவிதைகள், படங்கள் இடம் பெற்றுள்ளன. ஹைக்கூ கவிதைகளை ரசிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்கள் இந்த நூலை பெரிதும் ரசிப்பார்கள். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

பாரதிதாசன் கவிதைகள்

பாரதிதாசன் கவிதைகள், பாவேந்தர் பாரதிதாசன், D.S. புத்தகமாளிகை, பக். 496, விலை 300ரூ. இந்நுால், பாரதிதாசன் கவிதைகளின் தொகுப்பு. இது பொருளடக்கம், பாரதிதாசனின் வாழ்க்கைக்குறிப்பு, பாரதிதாசன் கவிதைகள் என்றவாறு அமைந்துள்ளது. பொருளடக்கத்தில் பாரதிதாசனது கவிதைகளை, 20 பகுப்புக்களாகப் பிரித்து, அப்பகுப்பில் அடங்கும் கவிதைகளின் முதல் குறிப்பும், பக்க எண்களும் முறைப்படி கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், நாம் தேடும் பாடுபொருளை ஒட்டியோ அல்லது நம் நினைவில் நிற்கும் கவிதை வரிகள் குறித்தோ விரைவாகக் கண்டறிய முடிகிறது. வாழ்க்கைக் குறிப்புகள் என்னும் பகுதியில் ஆண்டுகள் அடிப்படையில், 1891 முதல் […]

Read more

கேணி

கேணி, கோபால்தாசன், நீலம் பதிப்பகம், பக்கம் 120, விலை.120ரூ. கேணி கவிதை தொகுப்பு, கவிஞர் கோபால்தாசன் சிந்தனையின் ஊற்று . பல்வேறு பத்திரிகைகளில் அவர் எழுதிய கவிதைகளை தொகுத்து நூலாக தந்திருக்கும் கோபால்தாசன் கற்பனை வளமிக்கவர் என்பதற்கு இந்த தொகுப்பு ஒரு சான்றாகும். எழுகின்ற கற்பனையை எழுத்தில் அவர் கோர்த்திருக்கின்ற விதம் வாசிப்போரை நேசிக்க வைக்கும் என்றால் அது மிகையில்லை. கவிதை என்பது வாழ்வின் பிம்பம். காலத்தின் கண்ணாடி. மொழியின் சுவை, என்பதை இவரின் ஒவ்வொரு கவிதைகளிலும் கண்டு கொள்ள முடிகிறது. வாழவைக்கும் பண்டிகை என்ற […]

Read more

அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள்

அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள், ஜீவன் பென்னி, மணல்வீடு வெளியீடு, விலை 90ரூ. உதிரி மனிதர்கள். ஜீவன் பென்னியின் இரண்டாவது கவிதைத் தொகுதி அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள். அளவில் சிறியதும் பெரியதுமான இக்கவிதைகள் நகர வாழ்வின் உதிரி மனிதர்களைப் பற்றித்தான் அதிகம் பேசுகின்றன. நீள அகலங்களில் சிக்காது நகர வாழ்வின் கீழ் அடுக்குகளில் சுற்றித் திரியும் மனிதர்கள் தன் அழுக்குத் தோலுடன் நடமாடுகிறார்கள். உண்கிறார்கள். உணவகங்களில் கோப்பை கழுவுகிறார்கள். சீருடைக் காவலாளியாக சூரியனுக்குக் கீழே நிற்கறிர்கள். சமயங்களில் வெறுமனே இருக்கிறார்கள். […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. கவி அனுபவம் ‘மின்மினிப் பூச்சிகளற்ற இரவை ஈடு செய்ய முடிவதில்லை நட்சத்திரங்களால்’ என்கிறது இத்தொகுப்பின் ஒரு கவிதை. அன்றாட வாழ்வின் சிறு சிறு சந்தோஷங்கள், துக்கங்கள், துக்க வீட்டில் அழும் காதலியைக் கண்டு கொள்ளும் காதல், எப்போதாவது பெய்யும் மழை மீதான கவிக்கோபம், குருட்டு பிச்சைக்காரியின் உடலைக் கொத்தும் கண்கள், குழந்தைகளின் குழந்தைத் தன்மை மீதான வாஞ்சை, சொற்களை செலவழித்துவிட்டனின் குரவளையை நெரிக்கும் மௌனம், தன்னிலை மீறும் வாழ்வின் யதார்த்தம் என […]

Read more

ஜான்சிராணியின் குதிரை

ஜான்சிராணியின் குதிரை, தேவராஜ் விட்டலன், வாசகன் பதிப்பகம், பக்.64, விலை 50ரூ. கைப்பேசிகளின் அலறல்களும், கணினிகளின் இரைச்சல்களும் பல்கியிருக்கும் அலுவலகப் பரபரப்புக்கு மத்தியில் கொஞ்சமாவது ரசிக்கத்தான் முடிகிறது வாழ்க்கையை… அந்தக் குதிரையின் காலடி சப்தத்தில் ஒளிந்திருந்தது பல நுாற்றாண்டுகளின் சோகம்… எப்போதோ தொலைத்த பொழுதுகளும், உறவுகளின் நினைவுகளும் மழையின் வழியாய் மனதில் உயிர்த்தெழுகிறது…!’ என்ற கவிதை வரிகள், இன்றைய சமுதாய சூழலை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. நன்றி: தினமலர், 12/11/2017.

Read more

என் கவிதைகள்

என் கவிதைகள்,கே. நடராஜன், ஸ்பீடு பிரிண்டர்,  பக்.106 விலை ரூ.90 சுவடுகள் தந்த அனுபவம் சுவடுகள் ஏற்றிடும் வாழ்வின் தொகுப்பு, என சித்தர் சுவாமிகளின் முகப்பு வரிகளுடன் கே. நடராஜனின் என் கவிதைகள் நூலுக்குள் நுழைந்தால். மணி மணியான நூறு தலைப்புகள், அத்தனையும் தினமணி கவிதை மணியில் கொடுக்கப்பட்ட தலைப்புகள், அதற்கு அவர் எழுதிய கவிதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார். கே.நடராஜன். விமான நிலைய ஆணையத்தில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அவரின் கவிதை தாகத்திற்கு தினமணி கவிதை மணி நீரூற்றியதாக அறிமுக உரையில் குறிப்பிட்டுள்ளார். […]

Read more

பசித்த சிந்தனை

பசித்த சிந்தனை, புவியரசு, அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், விலை 120ரூ. பூடக வேடம் பூணாத எதார்த்தம் – எளிமை விலகாத வெளிப்பாடு’ என கவிதை புனையும் கவிஞர் புவியரசு எழுதிய 68 கவிதைகளின் தொகுப்பு. சமூக விமர்சனப் பார்வையை எள்ளலோடு வெளிப்படுத்தும் கோபமான கவிதை மொழியால் கட்டமைக்கப்பட்டுள்ள கவிதைகளிவை. யாப்பு மரபைத் திறம்படக் கையாள்பவர் என்பதைச் சொல்லும் கவிதையொன்றும் உள்ளது. ‘எழுதுவதற்கு நீங்கள் ஒன்றும் கொடுப்பதில்லை’ என்று ஒரு கவிதையை தொடங்கியிருக்கும் கவிஞருக்கு, சமூக நிகழ்வுகள் ஏராளமான கவிதைகளைக் கொடுத்திருக்கின்றன. இவற்றைத் திங்கள் புரொமீதிசுகள், […]

Read more

திரும்ப வருமா என் குழந்தை மனது?

திரும்ப வருமா என் குழந்தை மனது?, நவுஷாத்கான், மணிமேகலைப் பிரசுரம், விலை 65ரூ. ரசிக்க வைக்கும் சின்னச் சின்ன கவிதைகள் கொண்ட புத்தகம். மாதிரிக்கு ஒன்று தமிழில் வல்லினம், மெல்லினம் இருந்தபோதும் இதயத்துக்கு அழகாய்த் தெரிவது என்னவோ உன் இடையினம்தான்! நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more
1 14 15 16 17 18 57