இந்தக் கணத்தில் வாழுங்கள்

இந்தக் கணத்தில் வாழுங்கள், கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயம், பக். 144, விலை 90ரூ. எதையாவது உபதேசிப்பதற்காகவோ, ஏதாவது ஒன்றை உங்களுக்குள் திணிப்பதற்காகவோ எழுதப்படவில்லை. உங்களை நீங்களே உணர்ந்துகொள்வதற்கு ஒரு கண்ணாடியாக உதவுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/7/2017.   —-   இட்டாரிச் சீமை, தீபிகா முத்து, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. ‘கடிகாரங்களின் துடிப்புகள் பொதுநலம் காண்கிறது. மனிதர்களின் துடிப்புகள் சயநலம் காண்கிறது’ என்ற கவிதை வரி, நிதானமற்ற மானுட சமுதாயத்தின் இன்றைய நிலையைக் கூறுகிறது. நன்றி: […]

Read more

நீங்களும் கிடைப்பீர்கள்

நீங்களும் கிடைப்பீர்கள், ம. சக்தி வேலாயுதம், விஜயா பதிப்பகம், பக்.144, விலை 75ரூ. “பத்தே அடியில் தண்ணீர் கிடைக்கிறதாம்… விளைநிலம்… விலை நிலம் ஆனபின்பு” இப்படி சமூகத்தில் புரையோடிப்போன ஏமாற்றுக்களை எளிய தமிழில் ஆழமாகப் பதியவிட்டு, வாசகனை விழித்து எழச் செய்யும் உத்தி கவிதைகள் தோறும் காண முடிகிறது. கவியின் உள்ளமும் சொல்லாட்சியும் படிப்போரைக் கவரும். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 232, விலை 200ரூ. “பிரமிக்காதே பூமியில் தானிருக்கிறது மலையின் உச்சி” மலைமேல் ஏற, மலை உச்சியிலிருந்து பயணத்தைத் தொடங்கச் சொல்லும், அனுபூதி உத்தி இக்கவிதைத் தொகுப்பில் அதிகம். படிமத்தின் ஆட்சியில் சொல்ல வரும் கருத்துக்களை காட்சிப்படுத்திவிடுகிறார் கவிஞர். சமூகம், காதல், நடப்பியல் ஆன்மிகம், எள்ளல், பிரபஞ்சத் தேடல்கள் என்று அடர்த்திமிக்க கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

இட்டாரிச் சீமை

இட்டாரிச் சீமை, தீபிகா முத்து, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. சொற்களைத் தேடிப் பிடித்து இழுத்து வந்து, இங்கேதான் உட்கார வேணடும் என்ற அதிகார மொழி இக்கவிதைகள்ல இல்லை. எல்லாம் இயல்பாய், வட்டார மொழியின் அசைக்க முடியாத மண்வாசனையாய் கவிதைகள் தடம் பதித்துள்ளன. இட்டாரிச் சீமை வழி ஒரு கிராமத்தில் வாழ்ந்து பார்த்த வாழ்க்கையைச் சுமந்து செல்லும் ஒவ்வொரு மனிதர்களையும் மனங்களையும் நமக்குத் துணையாக அனுப்பியுள்ளார் கவிதை வரிகளால். நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

நீயும் நானும்

நீயும் நானும், கோபால்தாசன், ஆரம் வெளியீடு, பக். 138, விலை 100ரூ. கவிதையில் நெய்த கதை! காதலைக் கவிதையில் சொல்லுவர், இவரோ கவிதையில் ஒரு இனிய காதல் கதையைத் தருகிறார். இம்முயற்சி பாராட்டுக்குரியதாகும். எளிய தமிழ் நடையில் யதார்த்தமான பின்னணியில் சென்னைக் காதலின் மணம் வீசுகிறது. நடுத்தரக் குடும்பத்திலிருந்து வேலைக்குச் செல்பவர்களின் பின்னணியில் கதை பயணிக்கிறது. எளிய நடையில் வழக்கத்தில் உள்ள சென்னைத் தமிழ் மற்றும் ஆங்காங்கே ஆங்கிலம் கலந்த வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி இருப்பது, இப்புத்தகம் அனைவரும் படித்து இன்புறக்கூடிய ஒன்று என்று […]

Read more

அழியும் மரங்கள்

அழியும் மரங்கள், சுப்ரபாரதிமணியன், சப்னா புக் ஹவுஸ், விலை 100ரூ. நம் நாட்டில் 365 விலங்கினங்களும், 1236 தாவர இனங்களும் அழியும் தருவாயில் இருப்பதாக இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் கூறி உள்ளது. அவ்வாறு அழிந்து வரும் தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கும் பணியை இந்த நூல் செய்துவருகிறது. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   தேவதைகளால் தேடப்படுபவன், படி வெளியீடு, விலை 60ரூ. புதுக்கவிதைகள் கொண்ட புத்தகம். தங்கம் மூர்த்தி மிகச்சிறந்த கவிஞராக வருவார் என்பதற்கு முன்னோட்டமாக விளங்குகிறது இந்த நூல். […]

Read more

கவிதை என்றால் என்ன

கவிதை என்றால் என்ன, வே.த.யோகநாதன், அனைத்துலகத் தமிழ் மாமன்றம், பக். 80, விலை 100ரூ. பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை ஒரு குடையின் கீழ் வாசிக்கும் வாய்ப்பைத் தரும் நூல். ‘கவிதை என்றால் என்ன?’ என்ற தலைப்பின் கீழ் சுமார் 80 கவிஞர்களின் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. படைப்போருக்கும் படிப்போருக்கும் ஒரு பாலமாக விளங்கும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

ஆடவும் பள்ளுப் பாடவும்

ஆடவும் பள்ளுப் பாடவும், நர்மதா, பாப்லோ பதிப்பகம், பக். 96, விலை 150ரூ. ‘நீயுமா பாரதி… விடுதலையைப் பாட நாங்கள்தான் குனிந்து கும்மியடிக்க வேண்டுமா? என்ற கவிதைகளின் வரிகளிலேயே இக்கவிதைத் தொகுப்பு எதைப் பற்றியது என்பதை உணர்த்திவிடுகிறது. பெண், பெண்ணியம், பெண் விடுதலை, பெண் உரிமை இவற்றின் தேவைகளும், கட்டாயமும் என்பது போன்ற உணர்வை ஊட்டும் கவிதைகள் இவை. நன்றி: குமுதம், 3/5/2017

Read more

வானதியின் எண்ணச் சிறகுகள்

வானதியின் எண்ணச் சிறகுகள், வானதி சந்திரசேகரன், விஜயா பதிப்பகம். கல்லூரி காலத்தில், கவிதாயினியாக மலர்ந்தவர்; பின், குடும்பத்திற்காக, 24 ஆண்டுகளை ஒதுக்கி, கவிதையை ஒதுங்கியிருந்தவர், குடும்பத்தார் தந்த உற்சாகம் காரணமாக, தற்போது, நிறைய கவிதைகள் எழுதி வருகிறார். இடைப்பட்ட, 24 ஆண்டுகளில் நீர்த்துப் போகாதிருக்கும் இவரது வளமான தமிழால், பல விஷயங்களை பாடியிருக்கிறார். அதிலும், கரிசல் காடு, களிறுகளும், கயவர்களும் உள்ளிட்ட, பல கவிதைகள் அருமை! கவிதையை, வெறும் அலங்காரத்திற்கு பயன்படுத்தாமல், சுற்றுப்புறச்சூழல், மதுவின் பாதிப்பு, தவறான உணவு வகை, வனங்கள் அழிப்பின் அவலங்கள் […]

Read more

கனவுகளின் கையெழுத்து

கனவுகளின் கையெழுத்து, மு.மேத்தா, கவிதா, பக்.112, விலை 75ரூ. தேசப்பற்றுக்குப் புதுமையும், புனிதமும் குழைத்து, புது இலக்கணம் வகுத்து, வாசலைத் திறக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 30/4/2017.   —-   சிறுவர்களுக்கான சிறந்த கதைகள், வைரவமணி, மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 70ரூ. இளம் மாணவர்களை சிரிக்க வைத்து சிந்தனையை தூண்டும் வகையில், 84 சிறுகதைகள் இடம் பெற்று சிறப்பு சேர்க்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 30/4/2017.

Read more
1 16 17 18 19 20 57