வெளிச்ச விதைகள்

வெளிச்ச விதைகள், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 120ரூ. முற்போக்கு சிந்தனைக் கொண்ட நூலாசிரியர், உணர்வு பூர்வமான, சிந்திக்க கூடிய தலைப்புகளில் கவிதைகள் தொகுப்பை வெளியிட்டு உள்ளார். குறிப்பாக விழிகளை விற்று ஓவியம் வாங்கலாமா? வாக்குகளை விற்று பணம் வாங்கலாமா? என்ற ஆழமான பல்வேறு கருத்துகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

அங்குசம்

அங்குசம், தவசிக்கருப்புசாமி, மணல்வீடு ஏர்வாடி, பக். 60, விலை 80ரூ. ‘கூடிவிட்டது சந்தை; துண்டுபோட்டு மூடி தடையற நடக்குது தரங்கெட்ட வணிகம்’ என்ற கவிதை வரி, இன்றைய சமூகத்திற்கு சாட்டையடி கொடுப்பதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 5/3/2017.   —- இலையுதிர்க் காலம், டாக்டர் எஸ்.ஆர். கிஷோர் குமார், தாமரை பப்ளிகேஷன்ஸ், பக். 102, விலை 80ரூ. பிள்ளைகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, முதியோர் இல்லங்களில் அடைக்கலமான பெற்றோர் கண்ணீருடன் காலம் கழிக்கும் அவலநிலையை கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 5/3/2017.

Read more

அழுவதற்கா பிறந்தோம்?

அழுவதற்கா பிறந்தோம்?, புலவர் மு. சொக்கப்பன், உமா பதிப்பகம், பக். 104, விலை 100ரூ. புதுக்கவிதைகளின் ஆதிக்கம் மிகுந்த இக்கால கட்டத்தில் மரபுக் கவிதைகள் வாயிலாக கோலோச்சியிருக்கிறார் இக்கவிஞர். மரபுக் கவிதைகள் என்றாலும் பெண் சிசுக்கொலை, பெண்மை, புதுச்சட்டம் போன்ற புத்துலக கருத்துக்கள்தான் அதிகம். அதுவும் சொல்ல வந்ததை எழுச்சியுடன் வெண்பா வடிவிலும் அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்த வடிவிலும் படிக்கப் படிக்க உற்சாகம் தரும் வகையில் உள்ளது. ‘துன்பத்தில் துவளாதிரு, உச்சத்தில் மமதை தவிர், மக்களில் பலருக்கு வாழ்வில்லை என்பது விதியெனில் அதை […]

Read more

தண்ணீர் அஞ்சலி

தண்ணீர் அஞ்சலி, தில்பாரதி, காகிதம் பதிப்பகம், பக். 64, விலை 50ரூ. குழந்தையின் கண்ணில் தூசி உறுத்தியது அம்மாவுக்கு இப்படி நிறைய ஹைக்கூ கவிதைகள் நூல் முழுக்க உள்ளன. தாய்மை உணர்வை ஹைக்கூவில் நமக்கு உணர்த்திய கவிஞர், உலக நடப்புகள் அனைத்தையும் தம் ஹைக்கூ கவிதை வழியே நமக்கு காட்சிப்படுத்தி விடுகிறார். இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். சொல்வளம் மிக்க கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்

செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம், என். லிங்குசாமி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 110ரூ. நல்ல கவிதைகளின் பயண வழியில் காணக்கிடைக்கும் தரிசனங்கள் மனதை மகத்தான நிலைகளுக்கு இட்டுச் செல்லக்கூடியவை. “கவிதை எழுதுவது ஒரு கலை. அதை தேடிக் கண்டுபிடிப்பது அனுபவம்” என்பார்கள். அப்படிப்பட்ட அனுபவமான ‘ஹைக்கூ’ கவிதைகளை எழுதியிருக்கிறார் லிங்குசாமி. இரண்டு, மூன்று வார்த்தைகளிலேயே சுள்ளென்று தைக்கும் வீரியம். சாவகாசமான மனநிலையில் படிக்க அமர்ந்தாலும் தரதரவென நம்மை ஆழமான பின் நினைவுகளுக்கு இழுத்துப் போகிறது. ‘ என்னவொரு நுணுக்கம்’ என சில கணங்கள் யோசிக்கத் […]

Read more

பால்வெளி (பேரண்டர் கவிதைகள்),

பால்வெளி (பேரண்டர் கவிதைகள்), கவிஞர் சி. ராமலிங்கம், மேன்மை வெளியீடு, பக். 192, விலை 150ரூ. மக்கள் மொழியில் மக்கள் பிரச்னையை முதன் முதலில் தமிழ்க் கவிதையில் பேசியவர் என்ற சிறப்பு பாரதிக்கே உண்டு. எதிலும் நடந்த வழியே நடந்து செல்லாமல் புதிய வழியில் செல்வோரைத்தான் வரலாறு பதிவு செய்யும், அந்த வகையில் தமிழ்க் கவிதையில் முதன் முதலில் அறிவியல் கருத்துக்களைப் பேசிய சிறப்பு இந்த நூலாசிரியர் கவிஞர் சி. ராமலிங்கத்தையே சேரும். பேரண்டம் குறித்த செய்திகளை இன்றைய செய்யுள் வடிவமான புதுக்கவிதையாகச் சொல்ல […]

Read more

திண்ணைகளற்ற பெரு நகரங்களில்

திண்ணைகளற்ற பெரு நகரங்களில், நர்மதா, பாப்லோ பதிப்பகம், பக். 82, விலை 80ரூ. தொலைந்து போன் மனித மனங்களைத் தேடும் ஒரு முயற்சி இது. ‘எல்லோர்க்கும் எல்லாம் கிட்டும் நல்வாழ்வு தேடும் நல்லோர் நிறை சமூகம் வேண்டும்’ என்பது கவிஞரின் அன்றாடப் பிரார்த்தனை. அதுவே படிப்போரை நாளைய உலகம் நல்லோரின் கை சேரலாம் என்ற நம்பிக்கை கொள்ள வைக்கிறது. -இரா. மணிகண்டன், நன்றி: குமுதம் 1/2/2017.

Read more

வெளிச்ச விதைகள்

வெளிச்ச விதைகள், கவிஞர் இரா. இரவி, வானதி பதிப்பகம், பக். 190, விலை 120ரூ. ‘உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் பெற்ற அம்மாவிற்கு, நிகர் ஏதுமில்லை’ என்று தாயையும் உலகை உணர்த்தும் ஆசான் என்று தந்தையையும் போற்றும் கவிஞர் இரவியின் கவிதைகள் போற்றுதலுக்குரியவை. பெண்மை, தமிழர், தமிழ்மொழி, இயற்கை, தன்னம்பிக்கை, சமூக அவலங்கள் என்று படிப்போர் மனதில் கவிதை கொண்டு உழவிட்டு வெளிச்ச விதைகளை கவிதைதோறும் விதைத்துப் போகிறார். -இரா. மணிகண்டன், நன்றி: குமுதம், 25/1/2017.

Read more

ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்

ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம், பிருந்தாசாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், பக். 200, விலை 180ரூ. கவிதையைப் பாராட்டாமல் அதை எழுதிய வரை ஆதி அந்தம் வரை பாராட்டுவது தமிழில் அதிகம். அந்த வகையில் கவிதைகளைப் பாராட்டத்தூண்டும் வகையில் உள்ளது, பிருந்தாசாரதியின் கவிதைகள். தலைப்புகளிலேயே கவிதைகளின் அடர்த்தி உணரப்பட்டுவிடுகிறது. “வெட்டப்பட்ட ஆட்டுத்தலை வெறித்துப் பார்க்கிறது தோலுரித்துத் தொங்கவிடப்பட்டிருக்கும் தன் உடலை” பக்கம் பக்கமாக சொல்ல வேண்டியதை ‘அந்நியமாதலை’இதைவிட நாலுவரியில் பொட்டிலடித்த மாதிரி சொல்ல முடியாது. கவிதைகளுடனேயே நம்மையும் பயணப்பட வைக்கும் ஈர்ப்பு இக்கவிதைகளில் உண்டு. -இரா. மணிகண்டன். […]

Read more

கடற்கரை காவியம்

கடற்கரை காவியம், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 15, விலை 150ரூ. கடலோரக் காவியம் தமிழ் திரையுலகில் நிலவும் சிக்கல்களையும் அன்னை வேளாங்கன்னி மாதாவின் அருளையும் புதுமைகளையும் சித்திரித்து, சினிமா கலைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, காதல் பிரச்னைகளை அன்னை அருளால் தீர்த்துவைத்து வெற்றியடையச் செய்வதை சித்திரிக்கும் நாவல் இது. நன்றி: குமுதம், 21/12/2016.   —-   எட்டுத் திக்கும் எங்கள் பாட்டு, தொகுப்பாசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி, நம்மொழி பதிப்பகம், பக். 152, விலை 200ரூ. பல்வேறு கலைஞர்களின் கவிதைகள் ஒரு […]

Read more
1 18 19 20 21 22 57