வெள்ளைக் காகிதத்தில் ஓர் எறும்பு

வெள்ளைக் காகிதத்தில் ஓர் எறும்பு, பால்முகில், கவிஞன் பதிப்பகம், பக். 62, விலை 80ரூ. எதார்த்தமான கவிதை வரிகள் படிப்போரை மேலும் மேலும் படிக்கத் தூண்டுகிறது. ‘என் பெட்டிக்கடைக்கும் வயதாகிறது, என் வாடிக்கையாளர்களுக்கும் வயதாகிறது, எனக்கும் வயதாகிறது, எப்போது சாயுமென்று சிலர் எதிர் பாத்திருக்கலாம்’. இது வெறும் கவிதை அல்ல. நிஜ வாழ்வின் முழுக்காட்சி. நன்றி: குமுதம், 28/9/2016.

Read more

ஊமை அலைகள்

ஊமை அலைகள், ரா.பிரடிசன், காவ்யா, பக். 108, விலை 100ரூ. தமிழக மீனவ மக்களின் வாழ்வியல் யதார்த்தங்கள், இலங்கை கடற்படையால் மீனவர்கள் படும் உயிர் வேதனை, இயற்கைச் சீற்றத்தால் அம்மக்கள் சந்திக்கும் இன்னல்கள் இவைகளே ‘ஊமை அலைகள்’ கவிதைத் தொகுப்பின் பாடுபொருள்களாக நம்மை கவனிக்க வைக்கின்றன. நன்றி: குமுதம், 10/8/2016.

Read more

குழந்தைகள் மன நலம்

குழந்தைகள் மன நலம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 160ரூ. இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்த அறிவாற்றலைக் கொண்டிருக்கிறார்கள். அதை எவ்வாறு உணர்வது, எப்படி அவர்களது மனநலத்தைப் பாதுகாப்பது? எப்படி சரியான வழியில் சரியான திசையில் கொண்டு செல்வது என்ற வழிகாட்டலுக்குத் தகுதி படைத்த நூலாக படைத்திருக்கிறார் மருத்துவ உளவியலாளர் ஏ. வினோத்குமார். நன்றி: தினத்தந்தி, 28/9/2016.   —-   தமிழே என்னுயிரே, சு. திருநாவுக்கரசு, தேன்பழனி பதிப்பகம், விலை 150ரூ. காலத்திற்கு ஏற்ற வகையில் 76 வெவ்வேறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டு உள்ள மரபுக் […]

Read more

வெள்ளத் தாண்டவம்

வெள்ளத் தாண்டவம், வரலாற்று மகா காவியம், நீதிபதி மு. புகழேந்தி, செல்லம் & கோ புத்தகப் பதிப்பாளர், பக். 300, விலை 300ரூ. மரபுக் கவிதை எழுதுவது அருகிப் போன இக்காலத்தில், மரபுக் கவிதையில் ஒரு காவியமே படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால், அது உண்மை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த பெருமழை, ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, உடமைகள் இழப்பு இவற்றை மையப் பொருளாக வைத்து இந்தக் காவியம் படைக்கப்பட்டிருக்கிறது. இன்று நமது […]

Read more

நிழலின் வாக்குமூலம்

நிழலின் வாக்குமூலம், பொன்.வாசுதேவன், அகநாழிகை பதிப்பகம், பக். 96, விலை 90ரூ. கவிதைகள் ஒவ்வொன்றும் கவிதைக்கான ஆழத்தைத் தேடிப் பயணிக்கிறது. இடையிடையே வாழ்க்கைக்கான ஆதாரங்களைக் கண்ட பெருமிதங்களையும் தொட்டுச் செல்கிறது. சில சமயம் கவிஞருக்கு அது ஒரு ஞாபக மீட்டலாக மீண்டு வந்து காட்சிப்படுத்துகிறது. அதுவே வாசிப்பினரின் அடையாளத் தேடலாகவும் கடந்து போகிறது. ஒன்றமில்லாததில் எல்லாம் இருந்தது போன்ற வரிகளில் அனுபூதியியலை நோக்கிய பயணம் தெரிகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 12/10/2016.

Read more

வெள்ளத் தாண்டவம்

வெள்ளத் தாண்டவம், வரலாற்று மகா காவியம், நீதிபதி மு. புகழேந்தி, செல்லம் & கோ புத்தகப் பதிப்பாளர், பக். 300, விலை 300ரூ. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை நகரிலும், சுற்றுப்புறங்களிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட நிகழ்ச்சியாகும். இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும் கண்டு மனம் நொந்த நீதிபதியும், கவிஞருமான மூ.புகழேந்தி, அந்த நிகழ்ச்சியை கவிதை வடிவில் கண்ணீர்க் காவியமாகவே வடித்துத் தந்துள்ளார். ஒரு துயர நிகழ்ச்சியை காவியமாக வடித்துள்ள நீதிபதி புகழேந்தி பாராட்டுக்கு உரியவர். பல சம்பவங்களை […]

Read more

சிச்சிலி

சிச்சிலி, லீனா மணிமேகலை, நற்றிணை பதிப்பகம், விலை 100ரூ. லீனாவின் 100 காதல் கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. கவிதை உலகின் எந்த நிலப்பரப்பையும் கடந்து வெளிவரக்கூடிய அசாத்திய திறமை கூடிய கவிதைகள். வாழ்வின் எந்த ரகசியங்களுக்குள்ளும் அகப்படாத காதலின் பக்கங்கள் வீரியமாகத் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. அனுபவப்பட்ட, துரோகத்தில் இழைந்த, பிரியப்பட்ட காதலின் உணர்வுகளைப் படிக்க நேர்வதே ஒரு அனுபவம். இதுவரை நாம் கண்டுவந்த காதலின் பிதற்றலான பக்கங்கள் துறக்கப்பட்டு, ரத்தமும் சதையுமான உண்மை முன்வைக்கப்படுகிறது. படிக்கும்போது லீனாவோடு உரையாட முடிகிறது. அவரிடம் பாசாங்குகள் […]

Read more

எது தர்மம்

எது தர்மம், சுகி. சிவம், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ. நமக்குப் பிறர் என்னென்ன நன்மைகளெல்லாம் செய்ய வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அந்த நன்மைகளை நாம் பிறருக்குச் செய்வோம். நமக்குப் பிறர் என்னென்ன தீமைகளெல்லாம் செய்யக்கூடாது என்று நாம் கருதுகிறோமோ, அந்தத் தீமைகளை நாம் பிறருக்குச் செய்யாமல் இருப்போம். அவ்வளவுதான். இதற்குள்ளேயே எல்லாத் தர்மங்களும் அடங்கிவிட்டன என்று தர்மத்திற்கு விளக்கம் அளிக்கிறார் சுகி. சிவம். நன்றி: தினத்தந்தி, 14/9/2016.   —-   கவி வானம், தமிழ்மணி புத்தகப்பண்ணை, விலை 200ரூ. பல்வேறு பொருள்கள் […]

Read more

நனைந்த நதிகள்

நனைந்த நதிகள், கவிஞர் தமிழ்தாசன், காவ்யா பதிப்பகம், பக். 120, விலை 100ரூ. நனைந்த நதிகள் புத்தகம் முழுவதும் கவிதை துளிகளை தெளித்திருக்கிறார் கவிஞர் தமிழ்தாசன். ரத்தத் துளிகளால் எழுதப்பட்டது நம் சுதந்திர இந்திய வரலாறு தூசி படர்ந்து கிடக்கிறது என இது எங்கள் தேசம் என்ற தலைப்பில்(பக். 57) அவர் எழுதியுள்ள கவிதைகள் நடந்தவற்றை படம் பிடிக்கின்றன. சொல்லவந்த கருத்தை சுருங்கச் சொல்லி இருக்கும் முயற்சி பாராட்டுதற்குரியது. நன்றி: தினமலர், 2/10/2016

Read more

குருவிவனம்

குருவிவனம், எம். கமலசேகர், ஊஞ்சல் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. இயந்திரத்தனமும் நகர மயமாக்களும் எப்படி மனிதனையும் மற்ற ஜீவராசிகளையும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளன என்ற யதார்த்தத்தை பேசும் இவரது கவிதைகளுக்கு பாராட்டு நிச்சயம். பெண்கள் பற்றிய கவிதைகளில் அவரது சமூக பிரக்ஞை பலருக்கு உதாரணம். நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more
1 20 21 22 23 24 57