காதல் ஒரு மின்னல் போர்

காதல் ஒரு மின்னல் போர், ப. குணசேகர், பண்புப் பதிப்பகம், பக். 128, விலை 70ரூ. உலகப் பெருங்கவிஞரான பாப்ளோ நெருதாவின் காதல் பாடல்களில் தனக்குக் கிடைத்தவற்றை தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் ப. குணசேகர். காதல் வாழ்க்கை தந்த அனுபவங்கள் கவிதை வடிவம் பெற்றுள்ளன. மக்கள் மொழியில் இருப்பதால் அவை மக்கள் மனதை எளிதில்கொள்ளை கொள்கின்றன. தமிழில் எழுதிய கவிதைகள் போலவே தந்து நெருதாவுக்கு சிறப்பு செய்துள்ளார் மொழிபெயர்ப்பாளர். நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

காட்டு நெறிஞ்சி

காட்டு நெறிஞ்சி, கவிமதி சோலக்சி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 128, விலை 110ரூ. கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு அர்த்தத்தை உணர்த்தும்விதமாக உள்ளன. நாம் கவனிக்கத் தவறிய, நாம் மறந்துபோன பல விஷயங்களை கவிதைகளாகப் படைத்து, படிப்போரை வியப்படைய வைக்கிறார் கவிஞர். கோபம், வலி, சுமை, ஏக்கம், என்று ஒன்றுவிடாமல் நிஜத்தை நிதர்சனமாக காட்டியுள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பேசும் கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை

கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை, சிற்பி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 96, விலை 80ரூ. சிற்பி தன் கவிதைக்கு வயது ஐம்பதைக் கடக்கும் என்கிறார். இந்த ஐம்பதாண்டுகளில் கவிதைகயின் அகமும் புறமும் பெருமளவு மாறிப்போயிருந்தாலும், யாப்புகளில் புதிய பரிசோதனைகளும் மாற்றங்களும் நிகழ்ந்திருந்தாலும், மரபு நீங்காத புதிய காலப் பதிவுகளோடு இன்றைக்கும் புது சிறகோடு பறக்கிறது அவரது கவிதைப் பறவை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 7/9/2016.

Read more

ஆங்கிலத்தில் பாரதியார் பாடல்கள்

ஆங்கிலத்தில் பாரதியார் பாடல்கள், டாக்டர் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்ய அகாடமி, விலை 950ரூ. மகாகவி பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் சாகித்ய அகாடமி ஈடுபட்டுள்ளது. இப்போது முதல் பாகம் வெளிவந்துள்ளது. பெரிய அளவில் 636 பக்கங்கள். பாரதியாரின் கவிதைகளை உலக மக்கள் படித்து ரசிக்க இந்நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

நா. முத்துகுமார் கவிதைகள்

நா. முத்துகுமார் கவிதைகள், பட்டாம்பூச்சி பதிப்பகம், விலை 225ரூ. கவிதையின் அனுபவ உலகத்தை அகம், புறம் என இரண்டாகப் பிரிக்கும் கோடு அத்தனை தெளிவானதல்ல. சமுத்திரமும் நிலமும் சந்திக்கும் கரை போன்றது அது. எளிய கருத்தாக்கங்களுடன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. வன்மமோ, புரியாத புதிரோ, புத்தகத்தை மூடிவிட்டு பொருள் தேடிப் புறப்படும் பயணமோ வேண்டியதில்லை. சித்திரம், சித்திரமாய் எழுதிப் போகிறார் நா. முத்துக்குமார். அருமையான நீரோட்டம் மாதிரி படிக்கும்போதே தெளிந்து உணரக்கூடியவை. அடர்த்தியாக, அடுத்தடுத்த பக்கங்களுக்கு தாவிப்போக எந்தத் தடையும் இல்லை. கவிதை எழுதுவது […]

Read more

அமரனின் கவிதாவெளி

அமரனின் கவிதாவெளி, ஓவியா பதிப்பகம், விலை 250ரூ. இது கவிஞர் அமரனின் 400 ஹைக்கூ கவிதைகளின் அழகான தொகுப்பு. பக்கங்கள்தோறும் கவிதைகள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அத்துடன் ஆங்காங்கே வண்ணவண்ணப் படங்கள் விதவிதமாக, இயல்கருதி, இருப்பினும் இயல்பில் பின்றி, நம் சட்டைகளைப்போல, புத்தக அட்டைகளைப் போல. இவரது கவிதைகள் எளிய உயிர்களின் மீது அன்பையும் இயற்கை நட்பையும் சமூகச் சாடல்களையும் ஆழ்மன்த் தேடல்களையும் கொண்டிருக்கின்றன. அலைகள் ஆர்ப்பரிப்பு கையில் தேநீர் கோப்பையுடன் அமைதியான நான்! இதுதான் அமரன் – அமரத்துவம் பகலில் அலைகளின் முன்பும் இரவில் […]

Read more

கவிதை வானம்

கவிதை வானம், முனைவர் தி. நெல்லையப்பன், மணிபாரதி பதிப்பகம், விலை 180ரூ, 150ரூ. நெல்லையப்பனின் கவிதை வானமும் அம்மாதான் ஆசிரியரும் முனைவர் நெல்லையப்பன் நெல்லைக்காரர் என்றாலும் சிதம்பரம்வாசி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்வி இயக்கத் தமிழ்த்துணைப் பேராசிரியர். எனினும் எழுத்திலும் பேச்சிலும் இனிய அண்மையர். எட்டு நூல்களின் ஆசிரியர். கண்ணில் தெரியும் வானம் கைகளில் வருமா? வரும். கவிஞர்களுக்கு வரும். கவிதைகள் போலவே விதைகள் மண்ணில் விழுந்தாலும் விண்ணை நோக்கியே வாழும் – வளரும் என்பதை இவரது கவிதைகள் நிரூபிப்பன. “நாற்றுகள் தான் […]

Read more

மௌனத்தின் பிளிறல்

மௌனத்தின் பிளிறல், புதிய மாதவி, எழுத்து. புதிய மாதவி திருநெல்வேலிக்காரர் என்றாலும் தற்போது மும்பைவாசி. பன்னாட்டு வங்கிப் பணிக்குப் பின் விருப்ப ஓய்வில் விருப்பம் போல் கவிதை, சிறுகதை, பெண்ணிய நுண்ணரசியல், இலக்கிய விமர்சனம், மொழியாக்கம் என எழுதி வருகிறார். சாகித்ய அகாடெமி, மும்பைத் தமிழ்ச்சங்கம், பத்திரிகை, இலக்கிய மேடை, கருத்தரங்கு, எழுத்தாளர் சந்திப்பு, பல்கலைக்கழகம், மண்டலம் என்று பல தளங்களில் தன் இலக்கியப் பங்களிப்புகளைச் செய்து வருகிறார். பாரீஸ், இலங்கை என்று பெண்களின் சந்திப்பிலும் கலந்து வருகிறார். ‘மௌனத்தின் பிளிறல்’ இவரது புதிய […]

Read more

வசப்படாத வார்த்தைகளுடன்

வசப்படாத வார்த்தைகளுடன், கா. அமீர்ஜான், முரண்களரி படைப்பகம், விலை 100ரூ. உள்வெளிக் கவிதைகள் உள்ளிருந்து புறமும், புறமிருந்து உள்ளுமாய் வாழ்க்கையை விசாரணை செய்யும் கவிதைகளை ஐம்பதாண்டுகளாக எழுதிவரும் கவிஞர் கா. அமீர்ஜானின் முதல் கவிதை நூல் இவ்வளவு காலங்கடந்து இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. ‘அன்பென்று எதனையும் சொல்…’ என்ற முதல் கவிதை முடிவடையும் இடத்திலிருந்தும், ‘என் பிள்ளைகளின் நிமித்தம் எழுதப்படாத நாட்குறிப்பாய் நானும்..’ என்று கடைசிக் கவிதை முடிவடையும் இடத்திலிருந்தும் மட்டுமில்லாமல், தொகுப்பு முழுவதுமான கவிதைகளில் உள்ளும் வெளியுமாய் தன்னையே நிறுத்திப் பார்த்து எழுதியுள்ளார் கா. […]

Read more

அப்துல்கலாம் ஒரு சகாப்தம்,

அப்துல்கலாம் ஒரு சகாப்தம், ம. வசந்த், மணிமேகலைப் பிரசுரம், விலை 60ரூ. தனி மனித ஒழுக்கம், பெரியோர்களை மதிக்கும் பண்பு, கடமை உணர்ந்து செயல்படுதல், எப்படிப்பட்ட உச்ச நிலைக்குச் சென்றபோதும் பணிவையே தன் துணையாகக் கொண்டவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். அவரைப் பற்றிய புகழ்ப்பாக்களைக் கவிதை வடிவில் ஆக்கியுள்ளார் ம. வசந்த். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- நல்லகாலம் பிறக்குது, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ. ஊரில் அக்கிரமங்கள் செய்யும் மூன்று அயோக்கியர்களை, கதாநாயகன் கிறிஸ்தவ குருமார் வேடத்தில் […]

Read more
1 21 22 23 24 25 57