விடியலின் வெளிச்சம்

விடியலின் வெளிச்சம், கவிஞர் இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக். 72, விலை 90ரூ. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஆண்டவனுக்கு அருகில் போகலாமென்றால் ஆற்றல் மிக்கது பணமா? பகவானா? போன்ற விடைதேடும் வினாக்கள் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. ஒரு காதல் பூப்பதையும், அவஸ்தைப்படுவதையும் உணர வைக்க கவிஞரால் முடிகிறது. நன்றி: குமுதம், 31/8/2016.

Read more

அம்மாவின் கோலம்

அம்மாவின் கோலம், ஜெயதேவன், எழுத்து வெளியீடு, பக். 96, விலை 60ரூ. மரபின் உள் மூச்சை வாங்கி நவினத்துவ மூக்கில் சுவாசிக்கும் இவரது கவிதைகள், வாசிப்புச் சுகம் மிக்கவை. சமூக அக்கறையும் விசாரிப்பும் கலந்தவை. “பாக்கெட்டில் சுரட்டி வைக்கப்பட்டுள்ளது வாழ்க்கை உங்கள் பாக்குத்தூளைப் போல” -போன்ற வரிகள் இயல்பான அசலான சமூக பிம்பத்தைக் காட்டுகின்றன. ஒவ்வொரு கதவுக்குள் திரியும் மிருகத்தின் முதுகில் குத்தப்பட்டுள்ள முத்திரை என்னவோ ‘பெண்கள் ஜாக்கிரதை’ -இப்படியான கவிதைகளுடன் வாசகனை ஏமாற்றாத நூல் இது. நன்றி: கல்கி, 21/8/2016.

Read more

வாருங்கள் வெல்லலாம்

வாருங்கள் வெல்லலாம், மதுமிதா, மணிமேகலைப் பிரசுரம், விலை 40ரூ. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்ந்த மதுமிதா தன் அனுபவங்களையும், கற்பனை வளத்தையும் கலந்து கவிதைகளை எழுதியுள்ளார். சிறிய கவிதைகளிலும், பெரிய கருத்துக்கள் புதைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.   —- வெளிநாட்டு கல்வி வழிகாட்டி, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில எண்ணும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல். வெளிநாட்டுக் கல்விக்குத் தயாராவது எப்படி, வெளிநாடுகளில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள், கல்வி உதவித்தொகைகள் முதலான விவரங்கள் இதில் […]

Read more

நா. முத்துக்குமார் கவிதைகள்

நா. முத்துக்குமார் கவிதைகள், நா. முத்துக்குமார், பட்டாம்பூச்சி பதிப்பகம், பக். 272, விலை 225ரூ. கவிதை காலத்தின் கண்ணாடியாகவும், சமூகத்தின் முகமாகவும் தனிநபர் தன் அனுபவங்களை தீட்டிடும் சித்திரமாகவும் பார்க்கப்படுகிறது. கவிதைக்கு மொழிவளம், அனுபவச் செறிவு மிகவும் அவசியம். நா.முத்துக்குமாருக்கு அவை இரண்டுமே வாய்த்திருப்பது வரம். நா.முத்துக்குமார் கவிதை, உரைநடை, திரைப்பாடல் என்று எழுத்தின் பல தளங்களிலும் இயங்குபவர். என்றாலும் கவிதை அவருக்கு தாய்வீடு. அந்தத் தாய் வீட்டில் அவரது பால்ய கால அனுபவங்களை அவர் பதிவு செய்திருக்கிறார். கவிதை மனம் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. […]

Read more

அடையாளம் தேடி

அடையாளம் தேடி, மு. வித்யா பெனோ, சந்தியா பதிப்பகம், பக். 72, விலை 80ரூ. ஆற்றங்கரை, திருவிழா, கோவில் படித்துறை இங்கெல்லாம் சந்தித்து காதலர்கள் காதல் வளர்த்த காலம் மலையேறி விட்டது. அலைபேசி, வாட்ஸ் ஆப், இணையம் வழியாகத்தான் இப்பொழுது காதல் வழிகிறது. அப்படி வழியும்பொழுது, அவர்கள் அருகில் இருப்பவர்களை, பல நேரம் சங்கடத்தில் தான் ஆழ்த்துகிறது. அதனை, ‘சிநேகிதியின் தூக்கத்தையும் / சேர்த்து கெடுக்கிறது / நம் செல்போன் முத்தங்கள்’ என்று அழகாக பதிவு செய்திருக்கிறார் வித்யா பெனோ. வாழை இலை காற்றில் […]

Read more

என் உளம் நெற்றி நீ

என் உளம் நெற்றி நீ, ஞனக்கூத்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 184, விலை 160ரூ. பயப்பட வைக்கும் கவிதைகளின் தொகுப்பு என் உளம் நெற்றி இன்றைக்கு, 43 வருடங்களுக்கு முன்னால், ‘அன்று வேறு கிழமை’ என்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியானது. எழுதியவர் ஞானக்கூத்தன். அந்தப் புத்தகம் ஏறக்குறைய பொன்விழா கொண்டாடவிருக்கும் காலத்தில், இப்போது ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் கவிஞர். தலைப்பு: ‘என் உளம் நிற்றி நீ’. தலைப்பே வாசகருக்கு ஒரு செய்தியைச் சொல்லி நிற்கிறது. ‘இது ‘நெஞ்சுக்குள் நீ’ பாணி கவிதைகள் […]

Read more

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம்

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், விலை 90ரூ. தமிழ்க் கவிதைகளிலும் கதைகளிலும் நாடகங்களிலும் தாகூரின் தாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்த நூல். பாரதியார், வ.வே.சு. ஐயர், உ.வே.சாமிநாதையர், த.நா.குமாரசுவாமி, விபுலானந்த அடிகள், கி.வா.ஜ., போன்ற இலக்கிய அறிஞர்களின் வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் தாகூரின் தாக்கத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தந்துள்ளார் நூலாசிரியர். தாகூரின் கவிதைகள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வரலாற்றையும்  அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தமிழ்மொழிபெயர்ப்பையும் தந்துள்ளதால், தமிழ் வாசகர்கள் பயன் பெறுவார்கள் என்பது உறுதி. […]

Read more

சிந்தனைக் கீற்றுகள்

சிந்தனைக் கீற்றுகள், கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், விலை 100ரூ. மாணவப் பருவம் முதல் கவிதைகள் எழுதி வருபவர் கா. வேழவேந்தன். தமிழ் இலக்கியப் பூங்காவில், புதுக்கவிதை என்ற சூறாவளி வீசியபோதும், இவருடைய மரபுக் கவிதைகள் தென்றலாய்த் தவழ்ந்தன. அதனால் ‘கவிவேந்தர்’ என்று போற்றப்பட்டார். அமைச்சர் பதவி வகித்தபோதும், இவருடைய கவிதைத் தொண்டு தொய்வில்லாமல் தொடர்ந்தது. “சிந்தனைக் கீற்றுகள்” என்ற இந்த நூல் அவருடைய சிந்தனைச் சிறப்புக்கும், கவிதைப் புலமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மொத்தம் 147 கவிதைகள் உள்ள இந்த நூலில், முதல் […]

Read more

சிந்தனையின் சிற்பங்கள்

சிந்தனையின் சிற்பங்கள், கவிஞர் சொ.பொ. சொக்கலிங்கம், பூம்புகார் பதிப்பகம், விலை 80ரூ. சிந்தனையில் தோன்றிய கருத்துக்களை, கவிதைகளாக வடித்துத் தந்துள்ளார் கவிஞர் சொ.பொ. சொக்கலிங்கம். அந்தக் கவிதைகள், அழகிய சிற்பங்கள் போல நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27 கவிதைகள், “இனப்பற்றும், மொழிப்பற்றும், இந்நாட்டுப் பற்றும் விட்டு, இளைஞர் எல்லாம் வெளிநாட்டில் இடர்ப்படுதல் யார் குற்றம்?” என்று கேட்டு, தம் சிந்தனையைத் தூண்டுகிறார். கவிதைகள் உண்மையில் அழகிய சிற்பங்கள்தான். இந்த நூலில், ஆசிரியரின் 4 சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன. சிறுகதைகள் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக, “பள்ளிப்படைச் […]

Read more

கல்லோ காவியமோ

கல்லோ காவியமோ, மருத்துவர் வ. இன்பசேகரன், ஏ.வி.எஸ். வடிவேல்-ஜெயலட்சுமி பதிப்பகம், விலை 150ரூ. ஊர் சுற்றினாலும் உலகம் சுற்றினாலும் இன்றளவும் மக்களிடையே கல்வி, பண்பாட்டு ஊடாட்டங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. வரலாறுகளையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. பயணம் என்பது மகிழ்வுக்காக மட்டுமல்ல, அறிவு மற்றும் புரிதல் பகிர்வுக்குமாகவே, இப்பயண நூல் அதற்கு சான்றாக உள்ளது. இந்நூல், கம்போடியா நாட்டின் இயற்கை மற்றும் பூகோள அமைப்பு, தொன்மை வரலாறு, மன்னர்தம் மாண்பு, நுண்மையான கலையியல் சான்றுகள், அங்கு திகழும் கட்டங்களின் மாட்சி என பல்துறை செய்திகளை தாங்கி […]

Read more
1 22 23 24 25 26 57