மின்னல் பூக்கள்,

மின்னல் பூக்கள், எஸ். ஆழிவண்ணன், வெண்பா யாழினி பதிப்பகம், விலை 180ரூ. மரபு கவிதைகளின் தொகுப்பு. சமூக அக்கறையுடன் எழுதப்பட்டு உள்ளது. வேண்டாம் வரதட்சணை, ஒன்றே குலம், சாலியிலே சங்கடங்கள், நலனைக் கெடுக்கின்ற நாகரிகங்கள், ஓ காதலர்காள் உள்ளிட்ட ஏராளமான கவிதைகள் சிந்தனையை தூண்டுகின்றன. எதுகை மோனையை நயமாக பயன்படுத்தி கவிதைகளுக்கு மெருகேற்றி இருக்கிறார் நூலாசிரியர்.‘ நன்றி: தினத்தந்தி, 21/12/2016.   —-   கல்லைக்குறிச்சி கோட்ட நடுகற்கள் வரலாறு, சித்திரைச் செல்வி பதிப்பகம். கள்ளக்குறிச்சி என்று அழைக்கப்படும் கல்லைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கல்வராயன் […]

Read more

பின்னலில் அவிழ்ந்த முடிச்சுகள்

பின்னலில் அவிழ்ந்த முடிச்சுகள், சுபி. முருகன், வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 65ரூ. கவிஞர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள், சந்திப்புகள், ஒன்றையொன்று பின்னி கவிதை வரிகளாக உருவெடுத்து கவிதைத் தொகுப்பாக மலர்ந்துள்ளது. ‘எனக்குள்ளே பின்னிக் கொண்டிருந்த முடிச்சுகளை அவிழ்க்கையில், என்னையே பின்னிக் கொண்டன… கனவு முடிச்சுகள்! இப்படிப் பல கவிதை. நன்றி: குமுதம், 28/12/2016.   —-   பாரதியார் பெருமை, முல்லை பதிப்பகம், விலை 60ரூ. பாரதியாரின் வாழ்க்கை வரலாறும், பாரதியார் பற்றி பல பிரமுகர்கள் எழுதிய கட்டுரைகளும் கொண்ட அரிய […]

Read more

செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்

செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம், என். லிங்குசாமி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 110ரூ. நல்ல கவிதைகளின் பயண வழியில் காணக்கிடைக்கும் தரிசனங்கள் மனதை மகத்தான நிலைகளுக்கு இட்டுச் செல்லக்கூடியவை. “கவிதை எழுதுவது ஒரு கலை. அதை தேடிக் கண்டுபிடிப்பது அனுபவம்” என்பார்கள். அப்படிப்பட்ட அனுபவமான ‘ஹைக்கூ’ கவிதைகளை எழுதியிருக்கிறார் லிங்குசாமி. இரண்டு, மன்று வார்த்தைகளிலேயே சுள்ளென்று தைக்கும்வீரியம். சாவகாசமான மனநிலையில் படிக்க அமர்ந்தாலும் தரதரவென நம்மை ஆழமான பின் நினைவுகளுக்கு இழுத்துப் போகிறது. ‘என்னவொரு நுணுக்கம்’ என சில கணங்கள் யோசிக்கத் தூண்டுகிற போது […]

Read more

தண்ணீர் அஞ்சலி

தண்ணீர் அஞ்சலி, காகிதம் பதிப்பகம், பக், 64, விலை 50ரூ. ‘குழந்தையின் கண்ணில் தூசி உறுத்தியது அம்மாவுக்கு’ -இப்படி நிறைய ஹைக்கூ கவிதைகள் நூல் முழுக்க உள்ளன. தாய்மை உணர்வை ஹைக்கூவில் நமக்கு உணர்த்திய கவிஞர், உலக நடப்புகள் அனைத்தையும் தம் ஹைக்கூ கவிதை வழியே நமக்கு காட்சிப்படுத்திவிடுகிறார். இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். சொல்வளம் மிக்க கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

தெய்வத்தின் அருள்

தெய்வத்தின் அருள், தொகுப்பாசிரியர் கார்த்திகேயன், தங்கத் தாமரை பதிப்பகம், விலை 60ரூ, காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றிய பக்தர்களின் பரவச அனுபவங்களை எழுத்தாளர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கியுள்ளார். 1 முதல் 10 தொகுதிகள். ஒவ்வொன்றும் விலை 60ரூ. நன்றி: தினத்தந்தி, 28/12/2016.   —- புலவர் த. கோவேந்தனின் மொழிபெயர்ப்பு கவிதைகள், கொற்றவை வெளியீடு, விலை 400ரூ. கவிஞர், கட்டுரையாளர், திறனாய்வாளர் என்று பன்முகம் கொண்டவர், த.கோவேந்தன், அவர் வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அந்தக் கவிதைகளின் தொகுப்பே இந்த […]

Read more

தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுத் தடத்தில்

தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுத் தடத்தில், மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 60ரூ. ஹைக்கூ என்று அழைக்கப்படும் நவீனகால சுருக்கமான கவிதைகள் எப்போது, எவ்வாறு தோன்றியது? கடந்த நூறு ஆண்டுகளில் ஹைக்கூ எவ்வாறு தனது பயணத்தை வரலாற்றில் தடம் பதித்தது? ஹைக்கூ தமிழில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்று அனைத்தையும் விரிவாக அலசி ஆய்ந்து, ஹைக்கூக்களின் பொக்கிஷமாகத் தந்து இருக்கிறார், கவிஞர் மு.முருகேஷ். அவரை கவர்ந்த 100 ஹைக்கூ கவிதைகள் படித்து சுவைக்கத் தகுந்தவை. நன்றி: தினத்தந்தி, 28/12/2016.

Read more

எப். எம். ரேடியோ புகழ் யாழ் சுதாகர் கவிதைகள்

எப். எம். ரேடியோ புகழ் யாழ் சுதாகர் கவிதைகள், மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ. இலங்கையில், யாழ்ப்பாணத்தில் பிறந்த யாழ் சுதாகர் தமிழ்நாட்டில் குடியேறி, “எப்.எம்.” ரேடியோ ஒன்றில் இசைப்பாடல்களைத் தொகுத்து வழங்குவதில் புகழ் பெற்று விளங்குகிறார். அவர் கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர் என்பதை, இந்த நூல் மூலம் நிரூபித்திருக்கிறார். அதைவிட ஒரு சிறப்பு இந்த நூலுக்கு இருக்கிறது. “என்னுரை” என்ற தலைப்பில், யாழ் சுதாகர் தன்னைப் பற்றி எழுதியுள்ள குறிப்புதான் அது. ஒரு சிறந்த சிறுகதையைப்போல் அது உள்ளது. புகழ் பெற்ற ஒரு […]

Read more

மறையாத வானவில் மகாகவி பாரதி

மறையாத வானவில் மகாகவி பாரதி, ஆசுகவி ஆராவமுதன், திராவிடமணி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. பாரதியாரின் படைப்புகளில் ஆழ்ந்து தோய்ந்தவர் நூலாசிரியர் என்பதை இம்மரபுக் கவிதை நூல் விளக்குகிறது. பாரதியாரின் சில கவிதைகளையும், சில உரைநடை நூல்களையும் எடுத்துக்கொண்டு அதை மரபு வழுவாமல் மரபுக் கவிதைகளாகப் புனைந்துள்ளார். “அரிய உதயம் அவசர அஸ்தமனம்‘’ எனும் தலைப்பில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை இருபத்து நான்கு எண்சீர் விருத்தப் பாக்களில் பாடியுள்ளார். பாரதியார் கடலூர் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர், ஊர் ஊராகச் சுற்றித் திரிந்ததை சில […]

Read more

வான் தொட்டில்

வான் தொட்டில், முனைவர் ஆ. மணிவண்ணன், வானதி பதிப்பகம், பக். 192, விலை 125ரூ. தன்னை உணர்ந்தவன் ஞானி. சமுதாயத்தை உணர்ந்தவன் மனிதன். இந்த இரண்டையும் உணர்ந்தவன் கலைஞன் என்ற கவிதையாய் கொட்டுகிறது இந்நுல். நன்றி: தினமலர், 06/11/2016.   —-   வளர்பிறைகளும் தேய்பிறைகளும், கழனியூரன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. ஆசிரியர் தன் முதல் நாவலில் அனைத்து வகை சுவைகளையும் கூட்டி எழுதியுள்ளார். நன்றி: தினமலர், 06/11/2016.

Read more

ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 330ரூ. ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. கவிதை அதன் சிந்தனையின், அனுபவத்தின் ஆழத்தையே பலமாகக் கொண்டிருக்க வேண்டும். எதையும் பிரசாரம் செய்கிற மனோபாவம் கொண்டிருக்கக்கூடாது. குறிப்பாக நீதி போதனை அறவே கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். இதில் பிரான்சிஸ் பிரமாண்டமாகத் தனித்துத் தெரிகிறார். அவரது கவிதைகள் முழுமையான பயிற்சியால் காணக் கிடைப்பவை. அனுபவ உலகத்தை புறம், அகம் என இரண்டாகப் பிரிக்கும் கோடு அத்தனை தெளிவானது அல்ல. சமுத்திரமும், நிலமும் […]

Read more
1 19 20 21 22 23 57