சித்தர் கைகண்ட மருந்து

சித்தர் கைகண்ட மருந்து, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வி. பலராமய்யா, அமராவதி, விலை 80ரூ. பல்வேறு நோய்களுக்கு சித்தர் மருந்துகள் உடனடியாக பயன் அளிக்கும். அந்த மருந்துகள் செய்யும் விதத்தை விவரமாகக் கூறுகிறார், “வைத்திய ரத்தினம்” என்று புகழ் பெற்ற ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வி. பலராமய்யா. நன்றி: தினத்தந்தி, 29/3/2017.   —- ஒரு தளிரின் தாகம், கவிஞர் வமூர் பால. ஞானசேகரன், ஞானகுரு பதிப்பகம், விலை 75ரூ. பக்தி கவிதைகள் கொண்ட புத்தகம். ஆன்மிகவாதிகளின் இதயத்தைத் தொடும். நன்றி: தினத்தந்தி, […]

Read more

வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன்

வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன், கோ. ராஜசேகர், வாசகன் பதிப்பகம், பக். 64, விலை 50ரூ. எரியும் அடுப்பாக அவள் வயிறும் அணைந்த நெருப்பாக அவள் கல்வியும் – என்று பெண் கல்வியின் நிலையை இதைவிட ஆணி அடித்த மாதிரி சொல்ல முடியாது. இப்படி நிறைய கவிதைகள் நிறைந்த நூல். இளம் கவிஞர்களுக்குப் பிடிக்கும். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

நந்தவனங்கள் பேசுகின்றன

நந்தவனங்கள் பேசுகின்றன, மரியதெரசா, தென்றல் நிலையம், பக். 112, விலை 50ரூ. கல்வி, சாதி, முதியோர் இல்லம், குடிப்பழக்கம், உழைப்பு, நகம், கூந்தல், நா, வாழை, குழந்தை போன்ற தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 100-ம், 50-ம் ஆக ஹைகூ வடிவில் கவிதைகள் படைத்துள்ளார். படிக்கப் படிக்க நற்பயன் நல்கும் கவிதைகள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

எரியத் துவங்கும் கடல்

எரியத் துவங்கும் கடல், அ.வெண்ணிலா, அகநி, விலை 275ரூ. பெண்முகம் ‘நானும் கவிதையும் வேறுவேறல்ல, கவிதை பெயரிடப்படாத நான், நான் பெயரழிந்த கவிதை’ என்ற நூலின் முகப்பிலேயே குறிப்பிடும் கவிஞர் வெண்ணிலா இந்த கவிதைத் தொகுப்பில் தன் மொத்த கவியுலகத்தையும் பார்வைக்கு வைக்கிறார். பொதுவாக கவிதை என்பதை மொழி தெரிந்த யார் வேண்மாடுனாலும் எழுதிவிடக்கூடும். ஆனால், அதன் பின்னால் இயங்கும் பித்துப்பிடித்த கவிமனம் தான் கவிஞருக்கும் ‘தொழில் நுட்பவாதிகளுக்கான’ வித்தியாம். வெண்ணிலாவின் கவி உள்ளம் நெகிழ்ச்சியானது. உறவுகளை, உணர்வுகளை, வாழ்வை, சூழலை நெகிழ்வோடு காண்கிறார். […]

Read more

மௌனத்தின் மொழிபெயர்ப்பாளன்

மௌனத்தின் மொழிபெயர்ப்பாளன், ஜெயசிவா, நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. மனித வாழ்வின் யதார்த்தத்தையும் சமூகத்தின்மேல் உள்ள கோபத்தையும் நமக்கு மொழிபெயர்த்துத் தந்து மனதின் ஆழத்தில் பதித்துவிட்டுச் செல்கிறார் கவிஞர் ஜெயசிவா. தவிக்கிறது தமிழ்க் குழந்தை தாய்பாலுக்காக ஆங்கிலப்பள்ளிகளில் -கவிஞரின் தவிப்பு நம்மையும் தவிக்க வைக்கிறது. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

மனசெல்லாம்

மனசெல்லாம், கா.ந.கல்யாணசுந்தரம், வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. கொக்கும் தூண்டிலும் அருகருகே தடுமாறும் மீன்கள் – என்ற ஹைக்கூ கவிதையில் உள்ள சிந்தனை ஒன்றுபோதும், சமூகத்தின் அதிகார வர்க்கத்தின் நிலையையும் அப்பாவி மக்களின் தடுமாறும் நிலையையும் எடுத்துக்காட்டு. அன்பு, சமூகம், உலகம், ஆன்மீகம், அறிவியல் என்று பலதரப்பட்ட சிந்தனைகளின் வெளிப்பாடு இக்கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

எண்ணும் எழுத்தும்

எண்ணும் எழுத்தும், பிருந்தா சாரதி, படி வெளியீடு, பக். 88, விலை 70ரூ. எண்களுக்குள் நுழைந்து வாழ்க்கையைத் தேடும் உத்தி. ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்தும் இன்னொன்றைச் சேர்த்தும் காணும் வாழ்வியல் தத்துவம் இக்கவிதைகளுக்குள் உட்புகுந்து பயணிக்கின்றன. ஒரே சிகரத்தில் இருந்து உருண்டு வந்து இரண்டான கூழாங்கற்களின் சந்திப்பும், எரிந்து கொண்டு இருக்கும் இரண்டு ஊதுவத்திகளின் புகை ஒன்றாய்க் கலப்பதும், வெற்றிடத்தில் ஒன்றைத் தேடுவதும் என வாழ்வின் பல கோணங்கள் ஆராயப்படம் களமாக இக்கவிதைகள் அலசப்படுகின்றன. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள்

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 330ரூ. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் மனைவி சுகந்தி. சிற்நத கவிஞரான அவர், கவிதைகளுடன் சிறுகதைகளும் எழுதினார். அற்புதக் கவிஞராக புகழ் பெற்ற சுகந்தி திடீரென மனநிலை பாதிக்கப்பட்டார். அதன் பிறகும் கவிதைகள் எழுதினார். 11/2/2009ல் காலமானார். அவர் முன்பு எழுதிய ஆழமான கவிதைகளும், பிற்காலத்தில் எழுதிய கவிதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சுகந்தியின் கணவர் சுப்ரபாரதிமணியன் இந்நூலை தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017

Read more

மறுதாம்பு

மறுதாம்பு, தோழன் மபா., மேய்ச்சல் நிலம் பதிப்பகம், பக். 104, விலை 90ரூ. வெட்டப்பட்ட பின்னரும் துளிர்விடும் எந்த ஒன்றும் ‘மறுதாம்பு’தான். ‘சாமிதானே நானு என்னை ஏன்டா சமுத்திரத்தில் கரைக்கிற?’ என்று கேட்டும் சாமிக்கும் ஒரு ‘மறுதாம்பு’ உண்டு என்பதை உணர்த்தும் சமூகப்பதிவுகள் மபாவின் ஆக்கங்கள். விளிம்பு நிலை மாந்தர் மட்டுமன்று, பெரும் வலியை தினந்தோறும சுமந்து நகரும் நாட்களும் கால்களும்கூட தனக்கான செய்தியை கவிதைகளாகப் பதிந்துவிட்டுச் செல்லும் நிகழ்வு இதில் உண்டு. நன்றி: குமுதம், 5/4/017.

Read more

யுகபாரதி கவிதைகள்

யுகபாரதி கவிதைகள், நேர்நிரை, விலை 500ரூ. யுகபாரதியின் ஏழு கவிதைத் தொகுப்புகளை ஒன்று சேர்த்து இறுக்கிய நூல். நல்ல கவிதைகள் பள்ளிக்கூடத்து பிள்ளைகள் மாதிரி ‘காச்மூச்’ சென கத்தக்கூடாது’ என்பார் நகுலன். அப்படியே சத்தம் இல்லாமல் யுகபாரதி கொண்டு சேர்க்கும் எளிமைக்கும், அர்த்தத்திற்கும் தேய் வழக்கற்ற சொல் ஆளுமைக்கும் கட்டியம் கூறுகின்றன கவிதைகள். அவரது கவிதைகளில் கண்டடையும் உண்மை என்பது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அவரின் கவிதைகளைத் தனித்தனியாக பார்க்கும்போதும் ஒவ்வொன்றிலும் ஒரு விசேஷமான பார்வை, கூர்மை, தெளிவு புலப்படுகிறது. எளிமையாக இருப்பதாலேயே இவை சாதாரணமானவை […]

Read more
1 17 18 19 20 21 57