மருதத்திணை

மருதத்திணை, மீனா சுந்தர், புதுப்புனல், பக். 100, விலை85ரூ. ஆண்டுதோறும் நடக்கிறது நதிநீர் கிரிக்கெட்; காவிரிப் பந்தை விரட்டி அடித்து எப்போதும் சதம் போடும் நடுவணரசு; மேன் ஆப் த மேட்ச் கருநாடகர்கள்; பீல்டு அவுட் ஆவதென்னவோ தமிழக விவசாயிகள்!’ என்ற கவிதை, இன்றைய தமிழக – கர்நாடக மாநில நதிநீர் பிரச்னையை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது. நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

அரங்கில் மலர்ந்த கம்பன்

அரங்கில் மலர்ந்த கம்பன், கவிஞர் அரு.நாகப்பன், மணிவாசகர் பதிப்பகம், விலை 100ரூ. நூலாசிரியரின் இலக்கியப் பணியின் பொன் விழா வெளியீடாக வந்துள்ள இந்நூலில், அவர் பங்கேற்ற கவியரங்கக் கவிதைகள் தொகுக்கப்பட்டு உள்ளன. கம்பன் கண்ட கருணை, பக்தி, சமுதாயம், மரவுரி, அரசியல் மாண்பு, வாலி, கணையாழி, அனுமன், கைகேயி, கம்பன் ஒரு தெய்வம் போல, பல தலைப்புகளில், பல்வேறு சான்றோர் தலைமையில் அரங்கேறிய கவிதைகள் இதில் அடக்கம். ‘தன்னையே இறைவனுக்குத் தானளித்தால் தானய்யா அன்னையாய் வந்திருந்து அருட்பாலைச் சுரந்திடுவான்’ (பக். 36) என பக்தி […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. புதுக்கவிதைகளின் தொகுப்பு. ஐஸ் பெட்டிக்குள் ஒருநாள் பிணமாக உறங்கப் போகிறோம் என்பதற்கான ஒத்திகைதான் இப்போது நாம் அனுபவிக்கும் ஏ.சி. சுகம் என்பதை “குளிரூட்டப்பட்ட அறையில் உறங்கி வாழ்வின் கடைசி நிமிடங்களுக்காக ஒத்திகை பார்ப்பது அனிச்சையாகி விட்டது” என்று கோ.வசந்தகுமாரன் அழகுற எடுத்துரைக்கிறார். “துக்க வீட்டில் நீ அழும் அழகைக் கண்கொட்டாமல் பார்த்து ரசிக்கிறது ஈவிரக்கமற்ற என் காதல்”, “கடல் பிரிய மனமில்லை. கைக்குட்டையில் நனைத்துக் கொண்டேன்” என்பன போன்ற சுவையான கவிதைகளை […]

Read more

யாருக்கும் வேணடாத கண்

யாருக்கும் வேணடாத கண், மலையாளமூலம் சிஹாபுதின் பொய்தும் கடவு, தமிழில் கே.வி. லஜா, வம்சி புக்ஸ், விலை 120ரூ. மகிழ்ச்சியை மட்டுமே தேடும் மனிதன், தான் மனிதத்தைத் தொலைத்திருப்பதை உணர்வதே இல்லை. மானுட வாழ்வை சரியான வழியில் செலுத்தும் அன்பு, கருணை போன்றவற்றை இதயத்தில் புகுத்தும் முயற்சியாக மலையாளத்தில் எழுதப்பட்ட கவிதைகளின் தமிழாக்கம். மொழி மாற்றத்தில் நயம் சிதையாமல் எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: குமுதம், 2/8/2017

Read more

அங்குசம் காணா யானை

அங்குசம் காணா யானை,பிச்சினிக்காடு இளங்கோ, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. நேயத்தைத் தேடி அலைகின்ற வாழ்வில், மாயத்தைப் பார்த்தே மயங்கியிருக்கிறது மானுடம். இயற்கையோ எங்கும் நேசத்தை நெசவுசெய்து வைத்திருக்கிறது. அது நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது என்பதை கவிமணத்துடன் சொல்லியிருக்கிறார். நெடுங்கவிதையும் உண்டு. குறுங்கவிதையான ஹைக்கூவும் இருக்கிறது. நன்றி: குமுதம், 26/7/2017

Read more

பாரதி காவியம்

பாரதி காவியம், நெல்லை சு. முத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 300ரூ. மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த “பாரதி காவியம்” என்ற நூல் இப்போது வெளிவந்துள்ளது. இதை எழுதிய நெல்லை சு.முத்து, இந்திய விண்வெளித்துறை முதல் நிலை விஞ்ஞானி என்றாலும், இலக்கியத்தில் மூழ்கித் திளைப்பவர். தமிழில் 140 நூல்கள் எழுதியுள்ள சாதனையாளர். பாரதி வரலாற்றை அருமையான கவிதைகளில் வடித்துத் தந்துள்ளார். படிப்பவர்கள் “நிச்சயமாக இது ஒரு காவியம்தான்” என்று ஒப்புக்கொள்வார்கள். அந்த அளவுக்கு அருமையும், […]

Read more

சிந்தனை மலர்கள்

சிந்தனை மலர்கள், கவிஞர் தாரை வடிவேலன், நிவேதிதா பதிப்பகம், விலை 70ரூ. மரபில் திளைத்த தமிழ்ப்பற்று இது மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு. எல்லாப் பக்கங்களிலும் நிரம்பியிருப்பது ஆழமான தமிழ்ப்பற்றுதான் என்பதில் மிகையில்லை. உலகம் போற்றும் தமிழ், தமிழும் முதன்மை பெற வேண்டும். தமிழா தூங்கும் புலி என இராதே, நீரின்றித் தவிக்கும் தமிழகம், என அதிகமும் தமிழர் நலம் பேசும் மரபுக்கவிதைகள். சுற்றுச்சூழல் குறித்த மரபுக்கவிஞரின் அக்கறை கவனத்துக்குரியது. நன்றி: அந்திமழை, ஜுலை, 2017.

Read more

முகமறை

முகமறை, அகத்தியா, இனிய நந்தவனம், விலை 80ரூ. சாதாரணங்களின் பரவசம் ‘சமையலறைப் பாத்திரங்களையும் கழிவறைச் சாதனங்களையும் கழுவி முடித்த பின் அவளுக்குத் தரப்பட்டது தனித்தம்ளரில் தேநீர்.’ என்பது போன்ற புதுக்கவிதைகள் அடங்கிய நுல் இது. இது கவிஞரின் முதல் தொகுப்பு. அன்றாடங்களின் சாராம்சத்தை மெல்லிய உணர்ச்சிகளால் கவிதையாக்க முயன்றிருக்கிறார் கவிஞர். நன்றி: அந்திமழை, ஜுலை, 2017.

Read more

விதானத்துச் சித்திரம்

விதானத்துச் சித்திரம், ரவி சுப்பிரமணியன், போதி வனம், விலை 100ரூ. அழகிய ஓவியம் ‘விதானத்துச் சித்திரம்’ – கவிஞர் ரவி சுப்பிரமணியனின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு. தொகுப்பில் மொத்தம் 44 கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் கற்பனையும் அழகான சொல் முறையும் கொண்ட கவிதைகள். அதனாலேயே நம் கவனம் ஈர்க்கின்றன. கோயிலும் கோயில் சார்ந்த வாழ்வும், அந்த வாழ்வு சார்ந்த கடந்தகால நினைவுகளும்தான் பாடுபொருள்கள். தொகுப்பில் ஆங்காங்கே சில அரசியல் பகடிக் கவிதைகளும் உண்டு (கேயாஸ் தியரி, மாண்புமிகு). பிரெய்லி விரல்களின் ஆரோகணத்தில் மறையும் […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமார், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. மனிதனால் படைக்கப்பட்டது மொழி. ஆனால் மனிதனிலிருந்து கவிஞனைப் படைப்பது கவிதை. மொழி கருவி. கவிதையோ படைப்பாளி. அருமையான கவிதை தளத்தின் மேலிருந்து தகித்து ஒளிர்கிறார் வசந்தகுமாரன். தனித்தனி அனுபவங்களின் வெளியீடு அல்ல இக்கவிதைகள். ஒரே நீண்ட அனுபவச் சங்கிலியின் வெவ்வேறு கண்ணிகள். கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டு, கருத்துகளாகவே மீந்துவிடும் மேஜைக் கவிதைகளிலிருந்து வேறுபடுபவை. வசந்தகுமாரனின் மொழி ஆரவாரமற்று வெளிப்பாட்டுக்குத் தேவையான அளவு மட்டுமே கைக்கொள்ளப்படுகிறது. வெளிப்பாடு, அனுபவம் இரண்டும் தீவிரம் பெறும்போது […]

Read more
1 15 16 17 18 19 57