தோள் சாயும் பொழுது

தோள் சாயும் பொழுது, இ.எஸ்.லலிதாமதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 80,விலை 60ரூ. ஆணும், பெண்ணும் நண்பர்களாகவே எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்… பள்ளி வரை அல்லது கல்லூரி வரை… அதற்கும் மேல் திருமணம் வரை… அதிகபட்சம் பேரால் இவ்வளவு தான் கடந்திருக்க முடியும்… ஆனால், ‘தோள் சாயும் பொழுது’ நாவல், மேற்சொன்ன எல்லாவற்றையும் கடந்த ஆண், பெண் நட்பை நம் மனக் கண்ணில் பிரதிபலிக்கிறது. இளமை காலத்தில், ‘புரியாத உறவு’ உணர்வுடன் இருந்ததை, இருவருக்குமான உறவின் முரண்களை பேசுகிறது. திருமணத்திற்கு […]

Read more

சங்கப் பெண் கவிதைகள்

சங்கப் பெண் கவிதைகள், சக்தி ஜோதி, சந்தியா பதிப்பகம், விலை 400ரூ. சங்கப் பெண் புலவர்கள் 45 பேர் எழுதிய கவிதைகளை வரலாற்றுப் பின்புலத்தோடும் இன்றைய நோக்கிலிருந்தும் ஆராய்ந்து பார்க்க உதவுகிறது இந்நூல். நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

கொஞ்சம் கனவு கொஞ்சம் கவிதை

கொஞ்சம் கனவு கொஞ்சம் கவிதை, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 75ரூ. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன். இந்நூல் அவர் எழுதிய கவிதைத் தொகுப்பு. ‘பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திடச் சொன்னாயே பாரதி… நோட்டுத் திறமல்லவா இந்த நாட்டை நடத்துகிறது‘ என்று இன்றைய நாட்டு நடப்பைத் தோலுரித்துக் காட்டுகிறார். ‘தேடுதல் இல்லா வாழ்க்கையில் யார்க்கும் தெய்வ தரிசனம் கிடைப்பதில்லை’ ‘விதைகளை அலட்சியப்படுத்தாதீர்கள். வருங்காலம் ஒரு விருட்சத்தை இழந்துவிடும்’ போன்றவை நெஞ்சில் விழிப்புணர்வை விதைக்கின்றன. ‘பிள்ளை மனமும் […]

Read more

மின் கம்பியில் குருவிகள்

மின் கம்பியில் குருவிகள்,  சாரதா. க. சந்தோஷ், நீலநிலா பதிப்பகம் வெளியீடு, இந்த நூலின் ஆசிரியர் சாரதா. க. சந்தோஷ் சமூக வலைதலங்களிலும் இலக்கியம் சார்ந்த அமைப்புகளிலும் முனைப்போடு இயங்கி வரும்அவர் சமீபத்தில் கவியுலகப் பூச்சோலை அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழாவில் இந்நூலை வெளியிட்டார். மின் கம்பியில் குருவிகள் என்ற இந்த நூல் ஹைக்கூ கவிதை தொகுப்பாக வெளிவந்துள்ளது. <p style=”text-align: justify;”>கவிஞரின் இரண்டாவது நூல் இது. இந்த நூலில் பொது சிந்தனை, சமூக அக்கரை மனித நேயம் என பல தளங்களில் தன் […]

Read more

வெளிச்சத்தைத் தேடி

வெளிச்சத்தைத் தேடி, கோ.ராமகிருஷ்ணன், வாசகன் பதிப்பகம், பக். 106, விலை 80ரூ. இந்த கவிதை தொகுப்பு நுாலில், பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக உருவாக வேண்டும். இளைஞர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக இந்த சமுதாய மாற்றத்திற்கு, போராடுபவர்களாக இருக்க வேண்டும். ஜாதி, மதம் இல்லாத மனித மனம் வேண்டும் என்ற கருத்துக்களை, இவரது கவிதை முன்வைக்கிறது. குறிப்பாக, அருகம்புல் என்னும் கவிதை தலைப்பில், ‘மண்ணின் ஆதி மைந்தர்களே அருகம்புல்லாய் துளிர்த்தெழுவீர்! அகிலம் போற்ற வாழ்ந்திடுவீர்’  (பக்., 20) என்று இளைஞர்களை எழுப்பும் வரிகள் பாராட்டப்பட வேண்டியது. காவல் […]

Read more

பாரதிதாசன் கவிதைகள்

பாரதிதாசன் கவிதைகள், பாவேந்தர் பாரதிதாசன், பக். 496, விலை 300ரூ., இந்நுால், பாரதிதாசன் கவிதைகளின் தொகுப்பு. இது பொருளடக்கம், பாரதிதாசனின் வாழ்க்கைக்குறிப்பு, பாரதிதாசன் கவிதைகள் என்றவாறு அமைந்துள்ளது. பொருளடக்கத்தில் பாரதிதாசனது கவிதைகளை, 20 பகுப்புக்களாகப் பிரித்து, அப்பகுப்பில் அடங்கும் கவிதைகளின் முதல் குறிப்பும், பக்க எண்களும் முறைப்படி கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், நாம் தேடும் பாடுபொருளை ஒட்டியோ அல்லது நம் நினைவில் நிற்கும் கவிதை வரிகள் குறித்தோ விரைவாகக் கண்டறிய முடிகிறது. வாழ்க்கைக் குறிப்புகள் என்னும் பகுதியில் ஆண்டுகள் அடிப்படையில், 1891 முதல் 1972 வரை […]

Read more

கொஞ்சம் பயமாய் இருக்கிறது

கொஞ்சம் பயமாய் இருக்கிறது, நர்மதா, படிவெளியீடு, விலை 90ரூ. சுற்றி நடக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க முயலாமல், உள்ளுக்குள் நொறுங்கி வெளியே தைரியசாலியாய் வேஷம் போடும் மனத்தின் மனக்குரலாய் ஒலிக்கும் கவிதைகள். நேசம், பாசம், பரிதவிப்பு, நெகிழ்ச்சி என்று ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு உணர்வின் வெளிப்பாடு. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும், கவிஞர் ஈழபாரதி, இனிய நந்தவனம், விலை 80ரூ. காதலும் வேதனையும் மட்டுமே கவிதைகள் ஆவதில்லை. சாதலும் புலம் விட்டுச் சென்று மனம் நோதலும்கூட ஆழமான கவிதைகளாய் உருவெடுத்து மனதை அசைக்கக் கூடும் என்று நிரூபிக்கும் வண்ணம், புலம்பெயர்ந்தோர் எழுதிய கவிதைகளை ஆய்வு செய்து அதில் மறைந்திருக்கும் வலியைப் படம் பிடித்துக் காட்டும் தொகுப்பு! -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

மழைக்குருவி

மழைக்குருவி, கயல், வாசன் பதிப்பகம், பக்.96, விலை 85ரூ. ‘விளைநிலங்களில் வீட்டு மனைகள் பணப்பயிராய்க் கல்வி! கள்ளின்றி எல்லைச்சாமிகள் டாஸ்மாக் கடைகளில் காத்திருக்கும்… எட்டு மாதப் பெண் சிசுவையும் விட்டு வைக்காத கயமை அட! யாராவது செத்துப் போனால் இன்னமும் நாம் அழுகிறோம்… ‘வனமிழந்து, உறவிழந்து கூட்டங் கூட்டமாய் வழியறியாது அலையும்’ என்ற கவிதை வரிகள், இன்றைய சமுதாய சூழலில் விவசாய நிலங்கள் வீடுகளாகவும், மனைகளாகவும் மாறிக் கொண்டு இருப்பதையும், ‘டாஸ்மாக்’கில் குடிக்காக காத்திருக்கும் அவலத்தையும் சுட்டிக்காட்டுகிறது இந்நுால். நன்றி: தினமலர், 26/11/2017.

Read more

இயேசு அந்தாதி

இயேசு அந்தாதி, வா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், பக்.48, விலை 100ரூ. இயேசுவின் இறையருளைப் பற்றியும், மானிடக் குலத்துக்கு எடுத்துக் கூறும் போதனைகளையும் நல்ல கவிநயத்துடன் தன் கவிதை யில் ஓட விட்டுள்ளார் நுால் ஆசிரியர். நல்ல சொல்வளம், கவித்துவம், காவியம் முழுவதும் நிரம்பி, கவிமணம் வீசுகிறது. உலகைப் படைத்தவரே உவந்து மனித உருவில் வந்தார். தன் மானுடவதாரத்தின் முக்கிய மனிதன் நல்லவனாக வாழ வேண்டும்; தீமையை விட்டு விலக வேண்டும். அதுவே, இம்மையிலும் மறுமையிலும் மனிதனுக்கு நன்மை பயப்பதாக அமையும் என்கிறது இந்நுால். நன்றி: […]

Read more
1 13 14 15 16 17 57