கருப்பு வெள்ளை கல்வெட்டு

கருப்பு வெள்ளை கல்வெட்டு, ஸ்ரீதர் பாரதி, எக்காளம், விலை 50ரூ. பரணில் தூசி மண்டிக்கிடக்கும் பாட்டன் பூட்டன் காலத்து கருப்பு வெள்ளை புகைப்படங்கள்போல், நகரப் பெருக்கத்தில் நாம் மறந்துபோன கிராமத்து கலாசாரத்தை காட்சிகளாய்க் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திடும், மண்மணக்கும் கவிதைகள். நன்றி: குமுதம், 16/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஈர்ப்பின் பெருமலர்

ஈர்ப்பின் பெருமலர், எஸ்.சண்முகம், போதிவனம், விலை 120ரூ. வாழ்வின் நேர்க்கோட்டுப் பாதையிலிருந்து சற்றே விலகிச் செல்லும் அகச் சொல்லாடலில் முகிழ்த்த கவிதைகளின் தேர்ந்த தொகுப்பு. எதையும் முழுமையாக சொல்லித் தீராத சொற்களிலிருந்து உயிர்க்கும் இக்கவிதைகளில் வெளிப்படும் இருண்மை மொழி வாசகனையும் அகவெழுச்சி கொள்ள வைக்கிறது. ‘காட்சியில் புதைந்திருக்கும் எல்லையின்மையோ மின்னி மின்னி அழைக்கிறது உடன் யாருமற்றிருக்கும் அத்தனியனை -எனும் வரிகள், நம்மையும் உடன் அழைத்துக்கொள்ளும் கவி வரிகளாக உள்ளன. நன்றி: தி இந்து, 12/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

அன்பின் பிரபந்தம்

அன்பின் பிரபந்தம், உலகக் கவிதைகள், மெொழிபெயர்ப்பாளர் கிருஷ்ண பிரசாத், காவ்யா, விலை 950ரூ. பிறமொழி இலக்கியங்கள் தமிழ் மொழியில் செய்தல் வேண்டும் என்று பாடினார் பாரதி. அந்த முண்டாசு கவிஞனின் அவாவை நிறைவேற்றும் வகையில் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் புகழ்பெற் கவிதைகளும், பாப்லோ நெருடா, அகமத் பராஸ் போன்ற உலக புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகளும் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள பெருநூல் இது. உலக கவிஞர்களின் நவரசம் ததும்பும் பாடல்களை ஒருசேர படிக்கும்போது வாசகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பிரவாகம் எடுப்பது திண்ணம். […]

Read more

அன்பென்று கொட்டு முரசே

அன்பென்று கொட்டு முரசே, கவிஞர் செல்லம் ரகு, தளிர் இலக்கியகளம், பக்.96, விலை 120ரூ. பண்புகளில் தலையாயது அன்பு. அதை தலையங்கமாக்கி முரசு கொட்டி கவிதை வடித்திருக்கிறார். சமூக அக்கறையின் பெருமூச்சு இந்நுாலில் இழையோடியிருக்கிறது. காதல், காதல் தோல்வி, பிரிவு, ஜாதி மதப் பிளவுகள், சமூக அவலங்கள், பெண்களின் சுதந்திரம் எனப் பல தளங்களை தொட்டிருக்கிறார் நுாலாசிரியர். ‘நிலைமாறும் உலகு…! போய் வா என்னுயிரே…! எங்கே போகிறாய்? நெஞ்சு பொறுக்குதில்லையே! காதலின் வண்ணங்கள்! ஆறைவிட ஐந்து பெரிது…!’ ஆகிய கவிதைகள், மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் […]

Read more

உப்புச்சாடிக்குள் உறையும் துயரக்கடல்

உப்புச்சாடிக்குள் உறையும் துயரக்கடல், தமிழ் உதயா, நன்செய் பிரசுரம், விலை 70ரூ. ‘எழுத்துகள் எனக்கு வெறும் எழுதுகோலின் பிரசவம் இல்லை. எல்லா உறவுகளாலும் நிராகரிக்கப்பட்ட என் ஏக்கங்களை கூர் உடைந்த பேனாக்களால் எழுதித் தீர்க்கிறேன்’ என்று சொல்லும் ஈழத்துக் கவிஞர் தமிழ் உதயாவின் ஐந்தாவது கவிதை நூல். துயர்மிகு வாழ்வின் வலிகளுக்கிடையே சுரக்கும் அன்பை மிகக் குறைந்த சொற்களால் கவிதையாக்கியுள்ளார். சிறகு செய்வோம் நாம் முடித்து பிரிந்து போகையில் அது பறக்க வேண்டுமல்லவா துயரங்களைத் தூக்கிக்கொண்டு -எனும் வரிகளில் கவனிக்க வைக்கிறார் தமிழ் உதயா. […]

Read more

உச்சி சூரியனில் முளைக்கும் பனை

உச்சி சூரியனில் முளைக்கும் பனை, திணடுக்கல் தமிழ்ப்பித்தன், வெற்றிமொழி வெளியீட்டகம், விலை 60ரூ. நவீன ஓவியராக அறியப்பட்டவரின் நான்காவது கவிதை நூல். கவிதை மொழிக்கான மெனக்கெடல்கள் ஏதுமின்றி, அச்சு அசலான வாழ்க்கையை தனது இயல்பான மொழியில் கவிதையாக்கியுள்ளார். மாட்டுக்கறி சுமந்து செல்லும் அம்மாவும், மலமள்ளிய வாடையை விரட்ட மதுவாடையோடு குழந்தையைக் கொஞ்சம் அப்பாக்களும் நம்மை நெஞ்சோடு சேர்த்தணைத்து நெகிழ வைக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: […]

Read more

ஆகாயத் தாமரை

ஆகாயத் தாமரை, பாரதி வசந்தன், பழனியப்பா பிரதர்ஸ், விலை 220ரூ. அற்புதமான சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்ற பாரதி வசந்தன், கவிதையாப்பதிலும் தனக்குள்ள வல்லமையை எடுத்துக்காட்டி இருக்கிறார், ஆகாயத்தாமரை நூலின் மூலம். எல்லாம் மரபுக் கவிதைகள். சமுதாயத்தின் கொடுமைகளை சாடும்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பும்போதும், அவருடைய கவிதைகள் நமது இதயத்தைத் தொடுகின்றன. கவிதைகளில் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கடல் அலைபோல் பொங்கி எழுகின்றன. மாதிரிக்கு ஒரு கவிதை, “என் இனம் என் மொழி என் நிலம் மீட்பது இதுவே வாழ்வின் லட்சியம் – என் […]

Read more

எல்லோரும் நலம் வாழ

எல்லோரும் நலம் வாழ, தொகுப்பாசிரியர் பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 170ரூ. கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களது சிந்தனையில் விளைந்த கவிதை மலர்களில் இருந்து, தேன் துளிகள்போல் தேர்ந்தெடுத்துக் கோத்திட்ட கவிதைகளின் தொகுப்பு நூல். நகைச்சுவை இழையோடுவது, வாசிப்பை நேசிக்க வைக்கிறது. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000026610.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 2/5/2018.

Read more

புலவர் உசேன் புதுக்கவிதைகள்

புலவர் உசேன் புதுக்கவிதைகள், புலவர் உசேன், உகரம் பப்ளிகேஷன்ஸ், பக். 160, விலை 100ரூ. சமூகத்தில் காணப்படும் வன்கொடுமைகள், அவலங்கள் ஆகியவற்றை அங்கதச் சுவையுடன் அரசியல் நையாண்டிக் கவிதைகளாக இத்தொகுப்பில் தருகிறார். கோணல் மனிதர்களைப் பற்றி சிரிப்பையும், கோபத்தையும் துாண்டும் கவிதைகளும் உள்ளன. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: தினமலர், 6/5/2018.

Read more

சாஅய்

  சாஅய், சாமானியன், சந்தியா பதிப்பகம், விலை 95ரூ. கவனம்கோரும் கவிதை கோ.சாமானியன் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பு சாஅய். பட்டினியில் இருக்கும் மனிதனுக்கு கடவுள் மேல் எழும் தார்மீகக் கோபம், கணேஷ் பீடியும் கடன் தொல்லையுமாய் தெருக்கூத்தில் ராஜா வேஷம் கட்டும் கலைஞனின் வறுமை, தமிழர்களை சக அடிமைகள் என விளிக்கும் அறச்சீற்றம் என ஆரம்பநிலைக் கவிஞர்களின் முதல் தொகுப்பில் இருக்கும் சமூகக் கோபமும் அதே அளவிலான சமூக அக்கறையும் நிறைந்த தொகுப்புதான் இது. முதல் தொகுப்பிலேயே கவனம் ஈர்க்கும் கவிஞராக இருப்பதால் […]

Read more
1 11 12 13 14 15 57