அகப்பறவை

அகப்பறவை, பூங்குழலி வீரன், அகம் பதிப்பகம், விலை 100ரூ. மரங்களைப் பாடுதல் மரங்கள், மழை, கவிதை குறித்த அனுபவங்கள் இவற்றால் ஆனது மலேசியக் கவிஞர் பூங்குழலி வீரனின் அகப்பறவை என்னும் இக்கவிதைத் தொகுப்பு. மரங்களை தன் உறவுகளாகவும், அவற்றின் பதியன்களை பிரியத்தோடும் நோக்கும் இவரது உலகில் இலைகள் வீழ்வதும் சூரியன் மேற்கே வீழ்வதும் ஒருங்கே நிகழ்கையில் அன்பு முகிழ்கிறது. தொலைபேசியில் இருக்கும் எண்களில் இருந்து இறந்தவர் யாராவது அழைத்துவிடும் அச்சம் மட்டும் அவ்வப்போது வந்து போகிறது -என்கிறார் பூங்குழலி. நம் தொலைபேசியில் இருக்கும் இறந்துபோனவர்களின் […]

Read more

உதிர்ந்த இலைகளின் பாடல்

உதிர்ந்த இலைகளின் பாடல், தமிழில் ப. கல்பனா, பரிசல் வெளியீடு, விலை 150 ரூ. 1999-ல் வெளியான கவிதைகள் என்னும் மொழிபெயர்ப்பு நூலின் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். மொழிபெயர்ப்பாளர் தமிழ் இலக்கிய மாணவியாக இருந்தபோது சீன இலக்கியம் எனும் காலாண்டிதழில் வாசித்த சீன கவிதைகளில் மனம் ஒன்றி 42 சீனக் கவிஞர்களின் 87 கவிதைகளையும், 6 நாட்டுப்புறப் பாடல்களையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். சீன மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வையும் அந்த நிலப்பரப்பையும் தனது மொழிபெயர்ப்பின் வழியாக மிக நெருக்கமாக தமிழ் வாசகர்களுக்கு கொண்டுவந்து […]

Read more

மக்கள் கவிஞரின் வைர வரிகள்

மக்கள் கவிஞரின் வைர வரிகள், பா.உத்திராபதி, மேன்மை வெளியீடு, விலை 100ரூ. பாடல்களின் மேற்கோள்களால் மக்கள் மனதில் நிரந்தரமாக வாழும் மகா கவிஞன். சமத்துவ சிந்தனையில் மலர்ந்து, சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பட்டுக்கோட்டையாரின் முத்திரை வரிகள் முத்துக்களாகத் தொகுக்கப் பெற்று மின்னுகின்றன நன்றி: தினமலர், 12/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818                       […]

Read more

அகமுகம்

அகமுகம், குட்டி ரேவதி, காஞ்சனை நூலாறு, ஆழி பதிப்பகம், விலை 70ரூ. உள்ளத்தின் உரையாடல்கள் கூர் அலகுகளுடன் கம்பியில் வந்தமரும் மதியக் காகங்கள் எவ்வளவு கருமையை ஊற்றிப்போகின்றன இந்நாளைய பொழுதுக்கு -இதுபோன்ற அபூர்வமான காட்சிகளால் நிறைந்துகிடக்கிறது குட்டி ரேவதியின் புதிய கவிதைத் தொகுப்பு ‘அகமுகம்’. கூர்மையான மொழியால் தன் அகத்தின் குரலைத் திரட்டி உரையாட முயலும் உள்ளத்தின் எத்தனிப்பை இதில் காணமுடிகிறது. நிலாவும் புலியும் உலாவரும் கவிதைகளில் இருக்கும் இறுக்கமான உணர்வும், அகத்தனிமையின் கூர் நோக்கும் சில்லிட வைக்கின்றன. அத்திரமரத்தைப் பற்றிய கவிதையொன்று அந்த […]

Read more

ஏறு தழுவுதல்

ஏறு தழுவுதல், கவிஞர் அ.முத்துவேலன், வசந்தா பதிப்பகம், விலை 90ரூ. இந்நுாலில், இறந்தபட்ட காளைக்கும், வீர விளையாட்டு நிகழ்வுகளில் பல்வேறு திறன் கொண்ட காளைகளை அடக்கிய மானுடக் காளையின் மரணம் குறித்தும், ‘தாலிக்கயிறு உமக்கு… தாம்புக்கயிறு எமக்கென்று…’ என்ற கவிதை வரி, தன்னை வளர்த்த பெண்ணிடம், முல்லை நிலக் காளை கூறுவதாக அமைந்துள்ளது. ‘கரந்தை வீரர் நடுகல், மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, அடலேறே மடலேறு’ உள்ளிட்ட கவிதைகள் ஆற்றுநீராய் பெருக்கெடுத்து, இந்நுாலுக்கு வளம் சேர்க்கின்றன. நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

உதிரிலைகள்

உதிரிலைகள், ஹரணி, எழுத்து, விலை 80ரூ. காற்றில் சலசலக்கும் இலைகளாய் இல்லாமல், ஒவ்வொன்றாகத் தனித்தனியே உள்ளத்தில் உதிர்ந்து உருகச் செய்யும் அறுபத்தேழு கவிதைகள். வாசிக்க, யோசிக்க, நேசிக்க, பெருமூச்சுவிட்டு சுவாசிக்க என அனைத்துக்குமான கவிதைகள். நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026785.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 “

Read more

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்

புலம்பெயர்ந்தோர் கவிதையும், வலியும்,  ஈழபாரதி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக்.72, விலை ரூ.80. இலங்கையின் இனப் பிரச்னை காரணமாக தமிழர்கள்அந்நாட்டை விட்டு புலம் பெயரும் நிகழ்ச்சி நீண்டகாலமாக நடந்து வருகிறது. 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏராளமான தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். இடம் பெயர்ந்த மக்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாதவை. தமிழக அகதி முகாம்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குடியமர்த்தப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்கள் படும் சிரமங்களை இந்நூல் விவரிக்கிறது. அகதி முகாம்களில் உள்ள […]

Read more

உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்

உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன், கவிக்கோ அப்துல் ரகுமான், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 384, விலை 300ரூ. நம்மைச் சுற்றிலும், உலகிலும் கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெளிச்சங்களைக் காணப் பொழுதில்லாத நமக்கு, ரகுமான் திறந்து வைத்துள்ள சாளரங்கள், வெளி உலகைப் பார்க்கும் கண்களாய் இல்லை, நம் மீது சுகந்தம் இறைக்கும் புதிய காற்றாய் ததும்புகின்றன’ என, இந்த நுாலைப் புகழ்கிறார், கவி சிற்பி! உருது கவிஞர், கைபி ஆஸ்மி பற்றி, அப்துல் ரகுமான் சொல்கிறார்: உருது கவிஞர், கைபி ஆஸ்மி அற்புதமான கவிதைகளை […]

Read more

புலம்பெயர்ந்தோர் கவிதையும், வலியும்

புலம்பெயர்ந்தோர் கவிதையும், வலியும்,  ஈழபாரதி, இனிய நந்தவனம் பதிப்பகம்,  பக்.72, விலை ரூ.80. இலங்கையின் இனப் பிரச்னை காரணமாக தமிழர்கள்அந்நாட்டை விட்டு புலம் பெயரும் நிகழ்ச்சி நீண்டகாலமாக நடந்து வருகிறது. 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏராளமான தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். இடம் பெயர்ந்த மக்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாதவை. தமிழக அகதி முகாம்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குடியமர்த்தப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்கள் படும் சிரமங்களை இந்நூல் விவரிக்கிறது. அகதி முகாம்களில் உள்ள […]

Read more

கவிதைப் பேழை

கவிதைப் பேழை, ஆ.கோ.குலோத்துங்கன், குகன் பதிப்பகம், விலை 350ரூ. காதல், அழகு, மழை, தனிஈழம் என மொத்தம் 82 தலைப்புகளில் 350க்கும் மேற்பட்ட கவிஞர்களின் கற்பனையில் உதித்த ‘ஹைக்கூ’ கவிதைகளின் தொகுப்பு. கருத்து மணம் பரப்பும், தமிழ் இன உணர்வை உரசும் கவிதைகள் சமகால நிகழ்வுகளை படம்பிடித்து காட்டும் வகையில் அமைந்துள்ளது. கண்ணியம் இதழில் வெளிவந்த கவிதைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027068.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more
1 10 11 12 13 14 57