பிஞ்சு மலர்கள்

பிஞ்சு மலர்கள், சி. வீராகு, சத்யா பதிப்பகம், விலை 120ரூ. இந்த நூலில் கதை வடிவில் 40 கட்டுரைகள் இடம்பெற்று இருக்கின்றன. அவை அனைத்தும் சிறுவர்கள் ஆர்வத்துடன் படிக்கும்வகையில் உள்ளன. அந்தக் கட்டுரைகள் சொல்லும் நீதி என்ன என்பது விளக்கப்பட்டு இருப்பதோடு, பொது அறிவுத் தகவல்களும் தந்து இருப்பதால் சிறுவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 12/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: ‘மேலும்’ சிவசு, சாகித்திய அகாதெமி, பக்.288, விலை ரூ.240. மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் இடம் பெற்றுள்ள கல்யாணி சிறுகதையில் வரும் இளம் பெண் கல்யாணி தன் வீட்டருகே உள்ள இளைஞர்களைக் கவர முயற்சிக்கிறாள். அரசுப் பணியில் இருக்கும் காசிநாதனுடன் திருமணம் நடக்கிறது. பிரிவும் நேர்கிறது. தந்தை வீட்டுக்குத் திரும்பும் கல்யாணி, மீண்டும் தன் வீட்டருகே உள்ள இளைஞர்களைக் கவர நினைக்கிறாள். ‘மலருக்கு மலர் தாவும் வண்டுகள் ஆண்கள் என்று குற்றம் […]

Read more

அன்பே அமிழ்தம்

அன்பே அமிழ்தம், ஞா.சிவகாமி, முல்லை பதிப்பகம், விலை 120ரூ. நேரில் பார்த்து படித்தது, அவற்றில் மனைதப் பாதித்தது ஆகிய உணர்ச்சிகளை 23 சிறுகதைகளாகக் கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். மாமனாரை வெறுக்கும் மருமகள், குடிக்கு எதிராகப் போராடும் பெண்கள், கொரோனாவின் தாக்கம் போன்ற சிறுகதைகள் மனதைத் தொடும் வகையில் இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி,5/9/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031626_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நட்சத்திரப் பெண்

நட்சத்திரப் பெண் – விஞ்ஞான சிறுகதைகள், ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200 நிஜமா, கற்பனையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞானத்துடன் கதை பேசி வடிவம் கொடுத்துள்ளார் ஆர்னிகா நாசர். இளமை துள்ளும் எழுத்துக்கு காதலும், அறிவியலும் கைகோர்த்து வெற்றி மகுடம் சூட்டுகின்றன. காலக் கடிகாரத்தை கொண்டு நல்லதை முடிக்கப் போகிறார் என்று நினைக்கும் போது, முடிவிலும் நிஜத்தைப் போலவே சோகத்தை தருகிறார். ரோபோ குழந்தையை பேச வைத்து அதிரச் செய்கிறார். பூனையும், எலியுமான ‘டாம் அண்டு ஜெர்ரி’ கதை […]

Read more

ஆத்திச்சூடி கதைகள்

ஆத்திச்சூடி கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலைரூ.200. உலகப் பெண் கவிஞர்களில் தலைமை இடத்தை வகிக்கும் அவ்வையாரின் அறம் செய விரும்பு எனத் துவங்கி, வோரம் சொல்லேல் என முடியும் 109 அடிகளை உடைய ஆத்திச்சூடிக்கு, அழகிய பொருத்தமான கதைகள் மூலம் விளக்கமளிக்கும் ஆத்திச்சூடி கதைகள் ஓர் அரிய ஆவணம் என்றால் மிகையல்ல. உலகியல் சார்ந்த செய்திகளைப் பொருத்தப்பாட்டுடன் இணைத்து, ஆத்திச்சூடி ஒவ்வொன்றுக்கும் அழகிய ஓவியங்களால் விளக்கமளிக்கும் நுாலாசிரியரின் உழைப்பு போற்றுதற்குரியது. சிறுவர் முதல் பெரியவர் வரை, யாவரும் படித்து போற்றி பாதுகாக்க வேண்டிய […]

Read more

தண்டவாளங்கள்

தண்டவாளங்கள், டாக்டர் பாலசாண்டில்யன், குவிகம் பதிப்பகம், விலைரூ.120 கலைமகள் மாத இதழ், இலக்கியப்பீடம் போன்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்ததும், போட்டிகளில் பரிசுகள் பெற்ற 21 சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுகதைகளுக்கான இலக்கணங்களுடன் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூகப்பார்வை, மனிதநேயம், விமர்சனங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. குடும்ப சிக்கல்களை மையமிட்டு அதற்கான தீர்வாக சிறுகதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகு தேவதைகள் என்ற சிறுகதையில் ஆசிரியருக்கும், மாணவர்களுக்குமான உறவைச் சிறப்பாக வடித்துள்ளார் நுாலாசிரியர். குடும்பம் தொடர்பான சிக்கல்களை வித்தியாசமான கோணத்தில் அமைத்தும், அதற்கான தீர்வுகளையும் வழங்குகிறது. நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த […]

Read more

தெய்வம் நின்று கொல்லும்!

தெய்வம் நின்று கொல்லும்!, கவிமாமணி அழகு சக்தி குமரன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100. செறிவான கருத்துகளுடன் ஒரே மூச்சில் படிக்க ஏற்ற 20 சிறுகதைகள் அமைந்துள்ளன. கணவனும், மனைவியும் மாறி மாறி பொய் பேசி நடிக்கும் காட்சியை காட்டும் சிறுகதை, நல்ல காரியத்திற்காக பொய் சொன்னால் தவறில்லை என்ற திருக்குறள் கருத்தோடு கதை முடிகிறது. ஊரார் பணத்தைக் கொள்ளையடித்தவன் விபத்தில் மாட்டி மாய்கிறான் என்ற கருத்தை மையமாக வைத்து புனையப்பட்டுள்ளது. பாதை தவறிய சிறுவனை நல்வழிப்படுத்திய பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்ற சிறுகதை, […]

Read more

ஜே.வி.நாதன் சிறுகதைகள்-2

ஜே.வி.நாதன் சிறுகதைகள்-2, ஜே.வி.நாதன், அந்தரி பதிப்பகம், விலை: ரூ.300 மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜே.வி.நாதன் இதுவரை 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். இவருடைய 70 சிறுகதைகள் கன்னடம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. சிறந்த சிறுகதைக்கான ‘இலக்கியச் சிந்தனை’ விருதை ஜே.வி.நாதன் மூன்று முறை பெற்றிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை உலகின் முன்னோடிகளில் ஒருவரான மௌனியைப் பற்றி ‘மௌனியின் மறுபக்கம்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் இரண்டாவது தொகுப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ஆனந்த விகடன், குமுதம், மாலைமதி, சிநேகிதி, குமுதம் பக்தி […]

Read more

நதியின் கடவுள்

நதியின் கடவுள் (சீன நாட்டுப்புறக் கதைகள்) , ரெவ்.ஜான் மேக்காவன், தமிழில்: திருமலை சோமு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,  பக்.200 ,  விலை ரூ.235. சீன வானொலியில் “கதைத்தேன்’ என்ற தமிழ் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான சீன நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பே இந்நூல். துறவி, நகரத்தின் கடவுள், நதியின் கடவுள், அழகு மகள், விதவை, கன்பூசியசின் பழங்கதை என்பன உள்ளிட்ட 15 சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. சீனாவில் அக்காலத்தில் நடைபெற்ற திருமணச் சடங்குகள், பண்டிகைக் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், தெய்வ நம்பிக்கை, முன்னோர் […]

Read more

ஆகச்சிறந்த வீரன்

ஆகச்சிறந்த வீரன், துரை ஆனந்த் குமார், வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.100. அபுதாபி ஒழுங்குமுறை ஆணையத்தின் சூழலியல் அமைப்பு திட்டப்பணிக் குழுத் தலைவரான துரை ஆனந்த் குமார் சிறார்களுக்கான கதைகளை எழுதுவதோடு, சிறார் எழுதிய கதைகளையும் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். குழந்தைகள் தன்னிடம் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்குப் பதில் அளிக்கும் விதமாகத் தன் சொந்த அனுபவங்களையும் தான் தெரிந்துகொண்ட விஷயங்களையும் அறிவியல் கருத்துகளையும் சேர்த்து அவர் எழுதியுள்ள 12 கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 22/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more
1 2 3 4 80