பஞ்ச தந்திரக் கதைகள்

பஞ்ச தந்திரக் கதைகள், ஜெ. குமணன், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், 167, கந்தசாமி வீதி, ஒலம்பஸ், இராமநாதபுரம், கோவை – 45. விலை ரூ. 156 மகிளாரூப்பியம் நகரை ஆண்ட அமரசக்தி என்ற திறமையான மன்னனுக்கு மூன்று புதல்வர்கள். இம்மூவரும் சர்வ முட்டாள்கள். வருத்தம் அடைந்த மன்னன், தனது ராஜகுருவின் ஆலோசனைப்படி, சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த விஷ்ணு சர்மனை அணுகி, தனது பிள்ளைகளைப் புத்திசாலிகளாக மாற்றித் தர கோரினான். விஷ்ணுசர்மன் அதை ஏற்று ஆறே மாதங்களில் சாதித்துக் காட்டுகிறார். அதற்கு அவர் […]

Read more

உங்கள் மனசு

உங்கள் மனசு, மனநல ஆலோசகர் வி. சுனில்குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை – 14. விலை  ரூ. 200 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-1.html பள்ளி, கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் இன்ஜினியர், வாலிப வயதுள்ள ஆண், பெண், கணவன் – மனைவி, அரசு அதிகாரிகள் ஆகியோரின் வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களைக் குறிப்பிட்டு அவை எவ்வாறு தீர்க்கப்பட்டன என்றும் கூறியுள்ளார். அவரவர் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பிடும்போது அழகிய உரைநடையில் கதைபோலவே சுவைபட விளக்கியுள்ளார். விறுவிறுப்புடன் […]

Read more

எப்படி ஜெயித்தார்கள்?

எப்படி ஜெயித்தார்கள்? ரமணன், புதிய தலைமுறை வெளியீடு, 25 ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டு தாங்கல், சென்னை – 32, விலை 100 ரூ. தொழில் முனைவோரின் வெற்றிக் கதைகளை தம்பட்டக் கதைகளாகத் தராமல் வியூகங்களாக விரிக்கிறது நூல். தமிழ் தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகள் என்றாலே அவை தொழில்முனைவோரின் குடும்பக் கதை என்கிற அளவிலேயே சுருங்கி இருக்கும் என்பது எழுதப்படாத விதி. மாறாக, அத்தொழில்முனைவோர் எத்தகைய வியூகங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆராய்கிறது இந்நூல். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், யுனிவர்செல், ராம்ராஜ் காட்டன், […]

Read more

வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்)

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம், பத்மஜா நாராயணன், டிஸ்கவரி புக் பேலஸ் (பி)லிட், விலை 70 ரூ கவிஞர் பத்மஜா நாராயணனின் கவிதைத் தொகுப்பைப் படிக்கும்போது, ஒவ்வொரு கவிதையும் அவரவர் தம் சுய அனுபவங்களோடு ஒத்துப் போகிற பாதிப்பை ஏற்படுத்துகிறது. ‘உனக்கும் எனக்கும் நடுவே அலைகின்றன, நமக்கான வார்த்தைகள்’ என்கிற வரிகள், வாழ்வின் ஏதாவது ஓர் இடத்தில் தவிர்க்க முடியாததுதானே… ‘எல்லாப் பொறிகளிலும் இலகுவாய் போய் சிக்கிக் கொள்கிற சுயம். எந்தப் பொறிக்கும் வேண்டப்படாத வஸ்துவாய் பொறியிலிருந்து இடதுகையால் தூக்கி எறியப்படும் நானானது மற்றொரு பொறியில்தான் […]

Read more

கூடுகள் சிதைந்தபோது

கூடுகள் சிதைந்தபோது ஆசிரியர் – அகில் பதிப்பு – வம்சி புக்ஸ் சாரோன் திருவண்ணாமலை மு. ப. டிச. 2011 பக்கங்கள் 184 விலை 120ரூ போரும் புனைவும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அகிலின் கூடுகள் சிதைந்த போது என்ற சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 14 சிறுகதைகள் உள்ளன. ஈழத்தைச் சார்ந்த ஓர் எழுத்தாளர் யுத்தத்தைத் தாண்டி சிந்திப்பபெதன்பது இனி முடியாது என்றே தோன்றுகிறது. அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் போர் நெறியைக் கொஞ்சமும் பின்பற்றாத ஈழத்தில் […]

Read more

இனி நான் டைகர் இல்லை

இனி நான் டைகர் இல்லை, உயிரெழுத்து பதிப்பகம், திருச்சி. பக்கங்கள்: 80, விலை: 60 ரூ சாளரங்களை திறக்கும் கதையாளி வெவ்வேறு வடிவங்களில் குறுகிய பக்கங்களில் நகர்கின்றன சமயவேலின் கதைகள். — சா. தேவதாஸ் காற்றின் பாடல் என்னும் கவிதைத் தொகுதியின் மூலம் பரவலாக அறியப்பட்டுள்ள கவிஞர் சமயவேலின் சிறுகதைத் தொகுதி, இனி நான் டைகர் இல்லை. 16 சிறுகதைகளைக் கொண்டுள்ள இந்த நூல், சிறுகதைகளின் பல்வேறு வடிவங்களை வாசகர்களுக்கு பரிச்சயமாக்குகிறது. கட்டுரை வடிவில் ஒரு கதை என்றால் அறிவியல் புனைவாக இன்னொரு கதை. […]

Read more

இந்தியச் சிறுகதைகள் (1900-2000)

இந்தியச் சிறுகதைகள் (1900-2000), தொகுப்பாசிரியர்-இ.வி.ராமகிருஷ்ணன், தமிழில்-பிரேம், பக்.549, சாகித்ய அகாதெமி, தேனாம்பேட்டை, சென்னை-18. இருபத்து ஏழு இந்திய மொழிகளில் இருந்து மிகச்சிறந்த கதைகளை தேர்வு செய்து வாசகர்களுக்கு புதிய வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது இந்நூல். ஒவ்வொரு மாநிலங்களிலும் வாழும் மக்களின் வேறுபட்ட தன்மைகள், சிக்கல்களை பிரதிபலிக்கும் கதைகள். புனிதங்கள், புனிதமற்றவை, மேல்தட்டு சிந்தனைகள், ஒடுக்கப்பட்டவர்களின் சிந்தனைகள் எனப் பல நிலைகளைத் தெளிவாகப் படம் பிடித்து காட்டுகின்றன இந்தக் கதைகள். இந்திய மொழிகளில் இந்நூற்றாண்டின் சில பத்தாண்டுகளில் எழுதப்பட்ட இச் சிறுகதைகள் கொந்தளிப்பில் இருந்த ஒரு தேசத்தின் […]

Read more
1 78 79 80