திருக்குறள் உவமைகள்

திருக்குறள் உவமைகள், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை – 40. விலை: ரூ. 50. கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல, 1330 திருக்குறள் பாக்களையும் ஆராய்ந்து, 150 – க்கு மேற்பட்ட உவமைகளைத் தொகுத்துத் தந்துள்ளார், முல்லை பி.எல்.முத்தையா. பாராட்ட வேண்டிய படைப்பு. விலை: ரூ.50. மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர் எழுதிய ஐந்து நீதிக்கதைகளை, மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர் நீதிக்கதைகள் என்ற பெயரில் எளிய நடையில் நூலாக வெளியிட்டுள்ளார், முல்லை முத்தையா. விலை: ரூ.35. —– சிறு தொழில் தொடங்கும் வழிமுறைகள், தி. ஜனநாயகம், […]

Read more

தமிழ் மகன் எழுதிய அமரர் சுஜாதா

தமிழ் மகன் எழுதிய “அமரர் சுஜாதா” , நாதன் பதிப்பகம், 72/43, கவேரி தெரு, சாலிகிராமம், சென்னை – 24; விலை ரூ. 120. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-812-1.html அட்டைப் படத்தைப் பார்த்தால், சுஜாதா எழுதிய அறிவியல் புனை கதைகளை எழுத்தாளர் தமிழ் மகன் தொகுத்துள்ளார் என்று எண்ணத்தோன்றும். ஆனால் அப்படியல்ல. சுஜாதாவைப் பின்பற்றி, தமிழ் மகன் எழுதிய அறிவியல் புனைகதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒரு கதையின் பெயர் அமரர் சுஜாதா. அந்தப்பெயரையே புத்தகத்துக்குத் தலைப்பாக்கி இருக்கிறார்கள். […]

Read more

கர்ம வீரர் காமராசரின் வரலாறு

கர்ம வீரர் காமராசரின் வரலாறு, முகிலை எம். மதுசூதனப் பெருமாள், மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-5.html கவிதை வடிவில் காமராஜர் வரலாறு. கல்விக்கண் திறந்த காமராசரின் வாழ்க்கை வரலாற்றை எளிய, ஆனால் இனிய கவிதை நடையில் ஆசிரியர் ஆக்கித் தந்துள்ளார். படிப்போர் உள்ளத்தை தொட்டு உணர்வை தட்டி எழுப்பும் கருத்துக்கள் நூல் முழுவதும் நிறைந்துள்ளன. நூலின் இறுதியில் பிரிவுத்துயர் என்னும் பாடல் தலைப்பிட்டு பத்துக்கும் மேற்பட்ட […]

Read more

ஒன்றுக்கும் உதவாதவன்

ஒன்றுக்கும் உதவாதவன், அ. முத்துலிங்கம், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-201-6.html ஒரு சிறந்த எழுத்தாளன் எப்போதும் ஒரு மைதாஸ் அரசனைப் போலத்தான். மைதாஸ் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்றால், ஒரு சிறந்த எழுத்தாளன் தொட்டதெல்லாம் வாழ்வாகவும் அனுபவமாகவும் கலையாகவும் மாறுகிறது. அப்படிப்பட்ட ஒரு கலைஞன்தான் அ. முத்துலிங்கம். நமது காலத்தில் இவ்வளவு துல்லியமான மொழியும் படைப்பின் ரஸவாதமும் கொண்ட இன்னொரு படைப்பாளியைக் காண்பது அரிது. தமிழில் ஒரு […]

Read more

மேஜர் ஜீவா

மேஜர் ஜீவா, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 325ரூ. கடமை உணர்ச்சி மிக்க நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியை கதைத் தலைவனாகக் கொண்ட நாவல். ஊழல்களை ஒழிக்கவும், மக்கள் நலனை பாதுகாக்கவும் அரசியல்வாதிகளுடனும், பணபலம் மிக்கவர்களுடனும் அவர் பெரும் போராட்டங்கள் நடத்தி வெற்றி பெறுகிறார். வேகமும், விறுவிறுப்பும் கொண்ட நடையில் கதையை நடத்திச் செல்கிறார் எஸ். விஜயராஜ். கதையைப் படிக்கும்போது, ஒரு அருமையான சினிமாப் பாடத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மேஜர் ஜீவா, […]

Read more

பாரதியார் கதைக் களஞ்சியம்

பாரதியார் கதைக் களஞ்சியம், தொகுப்பு – டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை -35, பக்கங்கள் 816 விலை 350ரூ. ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-8.html பாரதியார் படைத்த ஐம்பத்தொன்பது கதைகளையும் ஒரே நூலில் தொகுத்து தந்துள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி. சந்திரிகையின் கதை என்னும் நாவல், நவதந்திர கதைகள் என்னும் தொகுப்பு முதலாக, எல்லாக் கதை படைப்புகளையும் தொகுத்திருப்பதோடு, அவர் எழுதிய ஆங்கிலக் கதையையும் இணைத்திருப்பது நூலாசிரியரின் தொகுப்புக்கு முத்தாய்ப்பு வைக்கிறது. […]

Read more

ஒலிக்காத இளவேனில் – ஈழக் கவிஞர்களின் கவிதைகள்

 ஒலிக்காத இளவேனில், தொகுப்பு – தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன், வடலி வெளியீடு, 10வது குறுக்குத் தெரு, ட்ரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 135ரூ. மரணத்துள் வாழ்வோம், சொல்லாத சேதிகள் முதல் மரணத்தில் துளிக்கும் கனவு வரை ஈழக்கவிஞர்களின் கவிதைகள் தொகுதிகளாக வந்து, முக்கியமான அதிர்வுகளை அந்தந்தக் காலகட்டங்களில் ஏற்படுத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து ஈழத்தில் எழுந்த போர் நெருக்கடி காரணமாக வெவ்வேறு நாடுகளில் இடம்பெயர்ந்த பெண்களின் குரலாய் ஒலிக்காத இளவேனில் தொகுதியை வடலி வெளியிட்டுள்ளது. கனடாவைக் களமாகக் கொண்டு இக்கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் […]

Read more

வண்ண நிலவன் சிறுகதைகள் – தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை

தாசன் கடைவழியாக அவர் செல்வதில்லை (வண்ண நிலவன் சிறுகதைகள்), நற்றிணை பதிப்பகம், 243ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-471-0.html நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் நிறைய எழுதி, இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தேடிக்கொண்டிருப்பவர் வண்ண நிலவன். சில இலக்கியப் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். ருத்ரையாவின் அவள் அப்படித்தான் திரைப்படத்தில் வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். பல துறைகளில் பணிபுரிந்தாலும், சிறுகதை ஆசிரியராக உச்சத்தைத் தொட்டவர். இப்போது, […]

Read more

கொடைக்கானல் மர்மம்

கொடைக்கானல் மர்மம், ஆர்னிகா நாசர், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை 17, பக்கங்கள் 104, விலை 55ரூ. மேலை நாடுகளில், சிறுவர் இலக்கியம் வளர்ந்திருக்கும் அளவில், தமிழில் இல்லையே என்பது பலரின் ஆதங்கம். அந்தக் குறையை போக்குவதுபோல் வந்திருக்கிறது இந்தப் புத்தகம். பொதுவாகவே, சிறுவர்களுக்கு சாகசம், மர்மம், துப்பறிதல் போன்ற நூல்களில் ஈர்ப்பு அதிகம். அக்கா மீனா(11), தம்பி சுரேஷ் (9), இருவரும் அடிக்கும் லூட்டி, இவர்களின் அப்பா காட்டிலாகா அதிகாரி, கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டு, அங்கு பெருமாள் மலை என்னும் கிராமத்தில் இருக்கும், மர வீட்டிற்கு […]

Read more

வலது காலை எடுத்துவைத்து வா…

வலது காலை எடுத்துவைத்து வா… ‘பொம்மை’ சாரதி, அஸ்வினி புக் கம்பெனி, விலை ரூ. 65 பல பேர் நல்ல கதைகளை எழுதியிருந்தால் உரிய வெளிச்சம் கிடைக்காமலேயே போய்விடுகிறது. ‘மங்கை’, ‘சுமங்கலி’ இதழ்களில் ஆசிரியராக இருந்த ‘பொம்மை’ சாரதியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது. முக்கியமாக 1951-ஆம் ஆண்டில் அப்போது பிரபலமாக இருந்த ‘காவேரி’ மாத இதழில் வெளியான ‘முதல் பிச்சை’ என்னும் தலைப்பிலான சிறுகதையைச் சொல்லவேண்டும். அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் சிரஞ்சீவியாகத் தோற்றமளிக்கிறது. ‘தமிழின் முதல்தரமான சிறுகதைகளுள் இது ஒன்று’ என்று […]

Read more
1 77 78 79 80