காச்சர் கோச்சர்

காச்சர் கோச்சர், விவேக் ஷான்பாக், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ. நகர வாழ்நிலை பட்டம்விடும் நூல் உருண்டைகள் சிக்கிக் கொண்டதை சிறுவன், ‘கோச்சர் காச்சர் ஆயிருச்சு’ என்கிறான். நகரவாழ்வின் இத்தகு சிக்கல்களைப் பேசும் கன்னட நாவலே ‘காச்சர் கோச்சர்’ இதை எழுதிய பொறியியலாளர் விவேக் ஷான்பாக். யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் மருமகன். புதுமையையும் எளிமையையும் குழைத்து எழுதியிருக்கிறார். பெங்களூரின் பழைய காப்பி ஹௌஸ் கம்பாரில் கதை துவங்குகிறது. சோம்பேறியான பணக்கார இளைஞனே கதை சொல்லி. முதல் காட்சியிலேயே ஓர் இளம்பெண் கோபத்தில் தண்ணீர் கிளாஸையெடுத்துத் தன் நண்பன் […]

Read more

நொய்யல் நதிக்கரைத் தீரன்

நொய்யல் நதிக்கரைத் தீரன், விண்மீன் மைந்தன், வானதி பதிப்பகம், பக். 280, விலை 200ரூ. இருநுாறு ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் போராட்டத்தைத் துவங்கிய வீரர்கள் பலர் மாநில அளவில் சுருக்கிப் பார்க்கப்பட்டது ஒரு வரலாற்று சோகம். 1805ல் மறைந்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு முழுமையாகக் கிடைக்காத நிலையில், வழக்காறு கதைகளிலும், செவிவழிச் செய்திகளிலும், பல சரித்திரக் குறிப்புகளிலும், காலக்கோட்டு அடிப்படையிலும் கிடைத்தவற்றைப் பல்லோரும் புனைந்தனர். அவற்றைத் தழுவி, வீரமும், விவேகமும், தீரமும், தியாகமும் நிறைந்த தீரன் சின்னமலையின் வாழ்க்கையைக் கற்பனைக் கதாபாத்திரங்களோடு புனையப்பட்ட […]

Read more

காற்றாய் வருபவள்

.காற்றாய் வருபவள், இ.எஸ்.லலிதாமதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட், விலை 60ரூ. இருக்கு ஆனா இல்லை. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியில் ஒளிந்திருக்கும் ஒரு மர்ம முடிச்சுத் தேடுதலில் பல திடுக் சம்பவங்களுக்கு நடுவே தன் சொந்தத்தின் சூட்சும உருவைக் கண்டறியும் காதல், சென்டிமென்ட் கலந்த பேய்க் கதை. நன்றி: குமுதம், 14/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026798.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

முத்தன் பள்ளம்

முத்தன் பள்ளம், அண்டனூர் சுரா, மேன்மை வெளியீடு, விலை 150ரூ. புதினப் படைப்பில் ஒரு புதுமையாய், மறந்துபோனதால் மறைந்து போயிருக்கும் ஒரு சின்னஞ் சிறு கிராமத்தை வெளிக்கொணரும் முயற்சியாக எழுதப்பட்டிருக்கும் நாவல். விளையாட்டுப் பூச்சி தேடிச்செல்லும் பயணமாய் கதையை நகர்த்தியிருக்கும் விதம் வித்தியாசமானது. நன்றி: குமுதம், 14/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026694.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

போதிதர்மா

போதிதர்மா(நான்கு பாகங்கள்), கயல் பரதவன், நர்மதா பதிப்பகம்,விலை 1700ரூ.(நான்கு பாகங்களும் சேர்த்து). போதிதர்மா – இந்தப் பெயரைச் சொன்னாலே பலரிடமும் ஒரு பரபரப்பும் ஆர்வமும் தொற்றிக் கொள்ளும். பல ஆயிரம் வருடம் கடந்தும் உலகம் முழுக்க பேசப்படும் போதிதர்மா இந்தியரா? சீனரா? அவர் வாழ்ந்தது உண்மையா? பொய்யா? முழுமையான வரலாறை, அந்தக் கால நாகரிகம், வாழ்வு முறைக்கு ஊடாக நகர்த்தி, உணர்வுகளோடு பிணைத்து எழுதப்பட்டிருக்கும் விறுவிறுப்பான சரித்திர நாவல். நன்றி: குமுதம், 7/3/2018.

Read more

மணிமகுடம்

மணிமகுடம், ஜெய் சீதாராமன், விருட்சம், பக். 130, விலை 120ரூ. குவிகம் மின்னிதழில் தொடராக வெளிவந்து, பலராலும், கவனிக்கப்பட்ட இந்த சரித்திர குறுநாவல், தற்போது அச்சாகி உள்ளது. பாண்டியர்களின் வம்சாவளி பொக்கிஷங்களான, விலை மதிக்க முடியாதமணிமகுடத்தில் இருந்தும், ரத்தின மாலையில் இருந்தும், இந்த கதை எழுகிறது. இலங்கை மன்னன் மகிந்தன், ஈழத்தில் மறைத்த மதுரை பாண்டியர்களின் பொக்கிஷங்களைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

நான் அவள் கேபுச்சினோ

நான் அவள் கேபுச்சினோ, ஹரிஷ் குணசேகரன், பாரதி பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. தகவல் தொழில்நுட்ப அரங்கில் பணிபுரியும், இளைய தலைமுறையினரின் விதிக்கப்பட்ட தினசரி வாழ்க்கை. வயதின், சூழலின் நெருக்கத்தில் வரும் காதல்கள், பிரிவின் துயரங்கள், இந்தக் கதையில் விரவிக்கிடக்கின்றன. நவீன கால வாழ்க்கையைப் பேசும் இலக்கியம், அமுத கண்ணும், சிந்திய மூககுமாய் இருக்க வேண்டும் என்பதை, இந்நாவல் மறுத்து ஒதுக்குகிறது. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

மணிமகுடம்

மணிமகுடம், ஜெய் சீதாராமன், விருட்சம், பக். 130, விலை 120ரூ. குவிகம் மின்னிதழில் தொடராக வெளிவந்து, பலராலும், கவனிக்கப்பட்ட இந்த சரித்திர குறுநாவல், தற்போது அச்சாகி உள்ளது. பாண்டியர்களின் வம்சாவளி பொக்கிஷங்களான, விலை மதிக்க முடியாதமணிமகுடத்தில் இருந்தும், ரத்தின மாலையில் இருந்தும், இந்த கதை எழுகிறது. இலங்கை மன்னன் மகிந்தன், ஈழத்தில் மறைத்த மதுரை பாண்டியர்களின் பொக்கிஷங்களைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

ஆசிர்வாதத்தின் வண்ணம்

ஆசிர்வாதத்தின் வண்ணம், அருண்சர்மா, எம். சுசீலா, சாகித்ய அகாடமி, பக். 366, விலை 225ரூ. சுதந்திரத்திற்கு முந்தையதும், பிந்தையதுமான அசாம் கிராமங்களின் சூழலை விளக்கும் நாவல். அசாம் மனிதர்களின் உள்ளம், பழக்க வழக்கங்கள், கிராமிய பண்பாடு என, அங்குலம் அங்குலமாக அசாமியர்களின் வாழ்வியலை வர்ணிக்கிறது. வானொலி நிலைய மைய இயக்குனராக இருந்த அருண் சர்மா, இந்நாவலை, சாதாரண இளைஞரின் வழியாக வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினமலர், 11/1/2018.  

Read more

பூனைக்கதை

பூனைக்கதை, பா.ராகவன், கிழக்கு பதிப்பகம், பக். 382, விலை 350ரூ. கற்பனையும், எதார்த்தமும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் விலகியும், கலையுலகம் பற்றிய கதையம்சத்துடன் புனையப்பட்டுள்ள நாவல். ஒரு பூனை எனும் பாத்திரம், இரண்டு உலகங்களை நம் முன் விரிக்கிறது. அந்த உலகத்தின் அரிதார முகங்களை, அந்த பூனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. கதைக்குள் கதையாய் விரியும் இந்நாவல், நவீன தமிழ் நாவல்களின் வரிசையில் இடம் பிடிக்கும். நன்றி: தினமலர், 11/1/2018.

Read more
1 16 17 18 19 20 66