ஆடிப்பாவை போல

ஆடிப்பாவை போல, தமிழவன், எதிர் வெளியீடு, பக். 404, விலை 350ரூ. தமிழவன் படைப்புகள் பொதுவாக, நவீனத்துவம் சார்ந்தனவாய் அமைவன. மேனாட்டு இலக்கிய உத்திகளை அறிந்து வைத்திருக்கிற அவர், தாம் படைக்கும் படைப்புகளில், அத்தகைய உத்திகளை அறிமுகப்படுத்துவதில், ஆர்வம் கொண்டிருப்பவர். பின் நவீனத்துவ வாசிப்பினுாடே, புதிய பரிமாணங்களில் நவீனத்தை மையப்படுத்தி, எழுதி வரும் அவர், பரிசோதனை முயற்சியாகப் படைப்பிலக்கியம் அமைய வேண்டும் என்ற, எதிர்பார்ப்பைத் தம் படைப்புகள் ஒவ்வொன்றிலும் பதிவு செய்து வருபவர். அந்த வகையில், ‘ஆடிப்பாவை  போல’ என்ற நாவலும் அமைந்திருக்கிறது. குறுந்தொகையில்  […]

Read more

தாய்

தாய், தொ.மு.சி.ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. உலகெங்கும் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்களால் அமரத்துவம் மிக்க புரட்சிகரமான நாவலாக அங்கீகரிக்கப்பட்ட நாவல், மார்சிம்கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலாகும். ஒரு புரட்சித்தாயின் வேட்டைத் தவமாக, என்றென்றும் அழியாத காவியமாக கார்க்கி இந்த நாவலைப் படைத்துள்ளார். இன்று வரை தொழிலாளி வர்க்கத்திற்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து, வீரத்தை ஊட்டி வரும் ஓர் உலக இலக்கியம் என்றே இந்த நாவலைக்கூறலாம். இந்த நாவல் உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. நாவலை தமிழில் எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன், அழகிய […]

Read more

நேற்று நான் இன்று நாம்

நேற்று நான் இன்று நாம், ஆர்.எம்.கிருபாகரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 110ரூ. இலங்கையில் உள்ள வவுனியா மற்றும் கொழும்புவில் நடந்த இனத் துவேச அடிப்படையில் நாம் எப்படியெல்லாம் பாதிப்படைகிறோம் என்பதை மையமாக இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது. பல பாத்திரங்கள் கொழும்பு நகரம், மலையகம் போன்ற இடங்களில் பயணிப்பதாக கதை செல்கிறது. நன்றி: தினத்தந்தி, 15/11/2017

Read more

கன்னடியர் மகள்

கன்னடியர் மகள், சுந்தரபாண்டியன், காவ்யா, பக். 160, விலை 100ரூ. கன்னடியர் மகள் என்னும் இந்நுாலில், கர்நாடக மாநில வரலாற்றுச் செய்தியையும், விஜய நகர வரலாற்றையும் நன்றாக அறிந்து, அந்த மக்களின் பண்பாடு, கலாசாரம், வீரம், மொழி உணர்வு, படைப்பிலக்கியம் போன்றவற்றை இந்நாவலில் ஆங்காங்கே இடம் பெறச் செய்திருக்கின்றனர். கதாபாத்திரத்தில் வருகிற ஒவ்வொரு செய்திகளும் வாசகர்களை மேலும் வாசிக்கத் துாண்டுகின்றன. இலக்கியங்கள், சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், கம்ப ராமாயணம், நந்திக்கலம்பகம், முத்தொள்ளாயிரம், திருக்குறள் போன்ற எடுத்துக்காட்டுகளுடன் நாடோடிப் பாடல்களை அமைத்திருப்பது, ஆசிரியரின் […]

Read more

துருக்கித் தொப்பி

துருக்கித் தொப்பி, கீரனூர் ஜாகிர்ராஜா, விஜயா பதிப்பகம், பக்.224, விலை ரூ.170. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் செல்வச் செழிப்போடு வாழ்ந்த ஓர் இஸ்லாமியக் குடும்பம், காலப்போக்கில் வறுமையின் பிடியில் சிக்கி எவ்விதம் நலிவடைந்தது என்பதை இந்நாவல் சித்திரிக்கிறது. நலிவு என்பது வெறும் செல்வக் குறைவாக மட்டுமல்லாமல், அக்குடும்பத்தை மதிக்கத் தகுந்ததாக வைத்திருந்த அனைத்தும் நலிந்து போனதை நாவல் சித்திரிக்கிறது. இஸ்லாமிய சமூகத்திலும் உள்ள ஏற்றத்தாழ்வுகள், பாலியல் சிக்கல்கள், குழந்தைகளின் மனரீதியான சிக்கல்கள், குடும்ப வன்முறை என அனைத்தையும் மிக நுட்பமாக, மிக இயல்பாகப் […]

Read more

புயலிலே ஒரு தோணி

புயலிலே ஒரு தோணி, ஜி.அசோகன், விலை 40ரூ. ப. சிங்காரம் எழுதிய “புயலிலே ஒரு தோணி” தமிழின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றென போற்றப்படுகிறது. குடும்ப நாவல். தீபாவளி சிறப்பிதழில் அந்நாவல் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/11/2017.   —-   பொன்மொழிகள், முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 40ரூ. ராஜாஜி, பெரியார், கலைஞர் மு. கருணாநிதி ஆகியோருடைய பொன்மொழிகள் கொண்ட புத்தகம். தொகுத்தவர் முக்தா சீனிவாசன். நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

நாலேகால் டாலர்

நாலேகால் டாலர், ஜெயந்தி சங்கர், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. வாழ்க்கை போராட்டத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட நூல். மனித உளவியலை, உளைச்சலை மிகத் திறமையாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

உலகப் பணக்காரர் விஸ்வநாதன்

உலகப் பணக்காரர் விஸ்வநாதன், பி. விஸ்வநாதன், அசோக்ராஜா பதிப்பகம், விலை 90ரூ. தலைப்பைப் பார்த்தால், ‘பில்கேட்ஸ்’ போல உலகப்புகழ் பெற்ற ஒரு பெரிய பணக்காரர் விஸ்வநாதன் என்றும், இது அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் என்றும் எண்ணத் தோன்றும். அப்படியல்ல. இது ஒரு நாவல். இதை எழுதியவர் பெயர் பி.விஸ்வநாதன். அவர் எழுதியுள்ள 7 நாவல்களின் தலைப்புகளிலும் விஸ்வநாதன் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. நாவலைப் படிக்கும்போது, அவர் ஒரு புதுமையான எழுத்தாளர் என்பது புரிகிறது. நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more

கடல் முற்றம்

கடல் முற்றம், அருள் சினேகம், கடல்வெளி, விலை 80ரூ. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், உள்ளிட்ட வேணாட்டுக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் முக்குவர்கள் பேசும் வழக்கு மொழியில் எழுதப்பட்ட 9 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தின் இந்நூலுக்கு எழுதியுள்ள 18 பக்க சற்றே பெரிய முன்னுரை. கதைமாந்தர்களின் வாழ்க்கையோட்டங்களை புரிந்துகொள்ள நமக்கு வழித்துணையாக உள்ளது. ஊம சேசய்யன், பாதர் டாமி, கஞ்சிக் கலயம் உள்ளிட்ட கதைகள் தனித்த கவனிப்பை கோருகின்றன. வழக்கு மொழியிலேயே நகரும் கதையை வாசிப்பவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள பின்னிணைப்பில் […]

Read more

மாலைகள்

மாலைகள், போந்தூர் கனகசுந்தரம், மேன்மை வெளியீடு, விலை 170ரூ. மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கப்பட்ட திருநங்கைகள் பற்றிய சமூகப் பார்வைகள் இன்னும் பெரிதாக மாறிவிடவில்லை. மிகை அலங்காரத்தோடு நின்றபடி, சாலையில் செல்வோரிடம் கைதட்டிக் காசு கேட்பவர்கள் என்கிற ஒற்றைப் புரிதலிலிருந்து நாம் முதலில் விடுபட்டாக வேண்டும். சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’, திருநங்கைகளின் வாழ்வை இலக்கிய வெளியில் பரவலான பேசுபொருளாக மாற்றிய நாவல். போராட்டக் களத்திலிருந்து வேர்பிடித்துக் கிளம்பி, திருநங்கைகளின் மீதான வெற்று கரிசனங்களைப் புறந்தள்ளி, ஒழுங்கற்ற சமூக அமைப்பை ஒருங்கிணைக்கும் நோக்கத்தைத் திருநங்கைகள் வாழ்வின் வழியாக முன்மொழிந்துள்ள […]

Read more
1 18 19 20 21 22 66