கடைசித் தீக்குச்சி

கடைசித் தீக்குச்சி, ராஜேஷ்குமார், அருணோதயம், விலை 150ரூ. கிரைம் கதை மன்னர் ராஜேஷ்குமார் தனது கைவண்ணத்தில் அடுக்கடுக்காக கோர்த்துவிடும் மர்ம முடிச்சுகளை வாசர்களை விட்டே அவிழ்க்க ஆர்வப்படுத்தும் மற்றொரு திகில் நாவல் ‘கடைசி தீக்குச்சி’. இது தினத்தந்தியில் தொடர்கதையாக வெளியானபோதே வாசகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. சித்தார்த் என்பவர் தலைமையில் குரங்குகளை கொண்டு பயோஜெனிக் எனும் ப்ராஜெக்டை இளம் ஆராய்ச்சியாளர்கள் சபரியும், பிரதாப்பும் மேற்கொள்கிறார்கள். இதற்கிடையே சபரியின் மனைவியான அஜந்தாவின் தோழி வாசுகி அவன் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். போலீசுக்கு […]

Read more

ஒரே தேசம் ஓர் ஊர் சிலமனிதர்கள்

ஒரே தேசம் ஓர் ஊர் சிலமனிதர்கள், வி.வி.ஆர், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ. பல கதைகளும், கட்டுரைகளும் எழுதி புகழ் பெற்ற எழுத்தாளர் வி.வி.ஆர். எழுதிய முதல் நாவல் இது. ஆனால் முதல் நாவல் என்று சொல்ல முடியாத அளவுக்கு திகைப்பூட்டும் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நாவலை எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

கன்னடியர் மகள்

கன்னடியர் மகள், சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 100ரூ. இது வள்ளியூரைக் களமாகக் கொண்டு ஐவர் ராஜாக்கள் கதையைத் தழுவி எழுதப்பட்ட நாவல். இதை சுந்தரபாண்டியன் என்ற புனைப் பெயரில் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம் எழுதியுள்ளார். கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றின் பண்பாடு, வீரம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு இணைப்பு பாலமாக இந்த நாவல் திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 12/7/2017.

Read more

ஆகாயத்தில் பூகம்பம்

ஆகாயத்தில் பூகம்பம், பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், பக். 264, விலை 200ரூ. ஆகாயத்தில் பூகம்பம் கதையை தொடராக குமுதத்தில் எழுதியபோது ப்ரியா கல்யாண ராமன் எனக்களித்த உற்சாகத்தையும், சுதந்திரத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். நான் பாட்டுக்கு எழுதிக்கொண்டேயிருந்தேன். பார்த்தால் 44 வயது அத்தியாயத்தில் தான் முற்றும் வந்து நிற்கிறது. ஆகவே இது நான் எழுதியதிலேயே மிக நீளமான தொடர்கதையானது என்கிறார் பட்டுக்கோட்டை. ஒரு பைலட், ஒரு பிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குனர்கள் என்று பலவகையான கதாபாத்திரங்கள். இவர்களது […]

Read more

பொய்யாமொழி

பொய்யாமொழி, முனைவர் மு. பழனிசாமி, நிவேதிதா பதிப்பகம், விலை 180ரூ கவிதைகள், கட்டுரைகள், வேளாண்மை நூல்கள் எழுதிப் புகழ்பெற்ற முனைவர் மு.பழனிசாமி “பொய்யா மொழி” நாவலை எழுதி வெற்றி பெற்றுள்ளார். நல்ல தமிழில் நாவலை சுவைபட எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. ‘நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

நீலகேசி

நீலகேசி, கயல் பரதவன், சக்தி மலர் பப்ளிகேஷன்ஸ், பக் 312, விலை 190ரூ. நெஞ்சை அள்ளும் சரித்திர நாவல். பாண்டியர் உபசேனாதிபதி இளைய நம்பியும் யவனப் பெண் ஹீராவும் அறிமுகமாகும் முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே நாவல் சூடு பிடித்து விடுகிறது! சின்னச் சின்ன அத்தியாயங்களில் வேக, வேகமாக நகர்ந்து கதை முடியும்போது சிறந்த ஒரு சரித்திர நாவலைப் படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது. சங்க காலம் தமிழகத்தின் பொற்காலம். அக்காலத்தில் சேர மண்ணை சீரும் சிறப்புமாக ஆண்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் காலத்தில் எரித்திரியக் […]

Read more

துவந்துவ யுத்தம்

துவந்துவ யுத்தம், தி.குலசேகர், தாமரை பிரதர்ஸ் லிமிடெட், பக்.96, விலை 20ரூ. பயணத்தின் போது வாசிப்பதற்கென்றே எழுதும் எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கின்றனர். முன்பெல்லாம் இவர்களின் எண்ணிக்கை அதிகம். குழந்தைகளுக்கான காமிக்ஸ், கார்ட்டூன் படக்கதைகள் முதல், அனைத்து தரப்பினரும் வாசிக்கும் கிரைம் நாவல்கள் என ரயில், பஸ் நிலையங்களில் முன்பெல்லாம் நிறைய புத்தகங்கள் கிடைக்கும். இப்போது அது குறைகிறது என்ற குறையை சரி செய்ய வந்துள்ளது, ‘துவந்துவ யுத்தம்’ புத்தகம். தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணிபுரிந்து, பின் திரைத்துறையில் நுழைந்த தி.குலசேகர் விறுவிறு நடையில் இதை […]

Read more

டர்மரின் 384

டர்மரின் 384, சுதாகர் கஸ்தூரி, கிழக்குப் பதிப்பகம், பக். 88, விலை 80ரூ. ஒரு நாவலை எடுத்தவுடன், அதை ஒரே மூச்சில் படித்து விட வேண்டும் என்ற மனநிலை வர வேண்டும். அவ்வகையில் சுதாகர் கஸ்தூரி எழுதிய, ‘டர்மரின் 384’ என்ற குறுநாவல், 24 தலைப்புகளில் விரிந்து செல்கிறது. அறிவியல் ஆய்வுலகில் நடக்கும் போட்டிகள், புகழ், பெருமை, பணத்திற்காக விலை போக கூடிய அறிவாற்றல் இது மட்டுமல்லாமல், நாட்டின் மரபு தந்த மருத்துவ அறிவை தனக்கென உரிமை கொண்டாட திட்டமிடும் குழுக்கள் இவற்றை கதைக் […]

Read more

சகத்திப்பூ

சகத்திப்பூ, ஆம்பல் கனகராஜ், தீவிகா பதிப்பகம், விலை 150ரூ. விவசாயக் கூலித் தொழிலாளர்களின் அவல நிலையை விளக்கும் நாவல். ஒவ்வொரு நாளும் நாளைய பிழைப்பைத் தேடி உண்மையாய் உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி இந்த நாவலில் ஆம்பல் கனகராஜ் சித்தரித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 25/5/2017.   —-   மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள், காளீஸ்வரி பதிப்பகம், விலை 110ரூ. மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்களின் வாழ்க்கை முறை பிரமிப்பைத் தரக்கூடியவை. அந்த சித்தர்கள் பல்வேறு நோய்களுக்கு சிறந்த மூலிகை மருத்துவ […]

Read more

உன்னைவிட்டு விலகுவதில்லை

உன்னைவிட்டு விலகுவதில்லை, எஸ். செல்வசுந்தரி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 160, விலை 120ரூ. திருநங்கைகள், திருநம்பிகளின் விமர்சனங்களை கேள்விகளாக்கி நாவலில் விடை தேடும் முயற்சி இது. மூன்றாம் பாலினத்தின் மூடப்பட்ட ரகசியங்களை நாவலில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். மூன்றாம் பாலினத்தின் மீது சமுதாயம் திணிக்கும் அழுத்தம், அவர்களின் வாழ்வைப் பற்றிய குறைந்தபட்ச புரிதல் கூட இன்றி அவர்களை ஏளனமாக கடந்து போவதைச் சுட்டிக்காட்டுகிறார். நன்றி: குமுதம், 21/6/2017.

Read more
1 20 21 22 23 24 66