காற்றடைத்த பையடா

காற்றடைத்த பையடா, ஜி.எஸ்.குமாரதேவி, வனிதா பதிப்பகம், பக். 328, விலை 250ரூ. தாம் விரும்பும் கல்வியையே தன் மகனோ மகளோ பயில வேண்டும் என்ற திணிப்பு. தாங்கள் விரும்பும்படியே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வற்புறுத்தல் இப்படியான குழப்பமான கலாச்சார யுகத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளுக்குமான போராட்டக்களமாக வெடித்துள்ளது இந்நாவல். நட்பும் காதலும் அதன் ஊடுபயிராய் இருந்து சிறப்பிக்கின்றன. நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

கோமணம்

கோமணம், சுப்ரபாரதிமணியன், முன்னேற்றப் பதிப்பகம், பக். 112, விலை 80ரூ. முருகனை தரிசிக்கச் செல்லும் பாத யாத்திரையில், பக்தர்கள் அனுபவித்த அனுபவங்களை சமகால நிகழ்வுகளுடன் பேசும் நாவல் இது. கடவுள் நம்பிக்கை, சடங்குகள், பழங்கதைகள், நாத்திகம் என்று எல்லாமே அலசப்பட்டுள்ளன. பொதுமக்களின் மனதைப் புரிந்துகொண்டு அவர்களின் பிரச்னைகளை அலசி, சமூகம் சார்ந்த அக்கறையை வெளிப்படுத்துகிறார் நாவலாசிரியர். நன்றி: குமுதம், 5/4/2017.

Read more

நினைவுச் சின்னம்

நினைவுச் சின்னம், வரலாற்று நாவல், அ. ரெங்கசாமி, தமிழோசை பதிப்பகம், பக். 464, விலை 400ரூ. சயாம் – பர்மா மரண ரயில் பாதைத் திட்டத்தின் போது, ஜப்பான் இழைத்த கொடுமைகளால், 2.5 லட்சம் தமிழர்கள் உயிர் இழந்த சம்பவத்தை ஒட்டி மலேயத் தமிழர்களுக்காக, போர் நினைவுச் சின்னம் ஒன்றைப் போல எழுப்ப முடியாததால், இந்நாவலுக்கு பேனா முனை கொண்டு ‘நினைவுச் சின்னம்’ எழுப்பியுள்ளதாகக் கூறும் இந்நாவலாசிரியரின் எழுத்தோவியம், இன்றைய தலைமுறையினர் மூதாதையர்களின் அவல வரலாற்றைத் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. மலேஷியத் தமிழ்த் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி […]

Read more

தமிழ் கற்பித்தல்

தமிழ் கற்பித்தல், டாக்டர் பி. இரத்தின சபாபதி, சாந்தா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் கையேடு இது. நன்றி: தினத்தந்தி, 1/3/2017. —- புலி வாலைப் பிடித்தால், வெங்கட் பிரசாத், மணிமேகலைப்பிரசுரம், விலை 85ரூ. சென்னையில் ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர வரும் இரண்டு இளைஞர்கள் ஒரு ஆபத்தில் சிக்கிக்கொள்வது பற்றிய கதை. மர்மம் எதிர்பாராத திருப்பம், சாகசம், காதல்… இப்படி பல்சுவை கொண்ட நாவலை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் வெங்கட் பிரசாத். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

உன்னை விட்டு விலகுவதில்லை

உன்னை விட்டு விலகுவதில்லை, இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 120ரூ. எழுத்தாளர் எஸ். செல்வசுந்தரிக்கு இது முதல் நாவல். ஆயினும், வார்த்தைகளையும், சம்பவங்களையும் செதுக்கிச் செதுக்கி, இதை ஒரு நல்ல நாவலாக உருவாக்கியிருக்கிறார். கதையில் முக்கிய பாத்திரங்களாக வருகிறவர்கள் திருநங்கைகள். அவர்களுடைய வாழ்க்கையை கண்ணாடி போல் பிரதிபலித்துக் காட்டுகிறது இந்த நாவல். முதல் நாவலையே வெற்றி நாவலாக உருவாக்கியுள்ள செல்வசுந்தரி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more

அரசியல் அறிவியல்

அரசியல் அறிவியல், டாக்டர் S.இராமநாதன், டாக்டர் K. செந்தில்குமார், நோசன் பிரஸ், பக். 140, விலை 175ரூ. இந்நூலின் ஆசிரியர்கள் இருவரும் அரசியல் அறிவியல் (Political Science) துறையில் மட்டுமின்றி மற்ற சில துறைகளிலும் ஆராய்ச்சி பட்டங்களைப் பெற்றவர்கள். NET/SLET. IAS மற்றுமுள்ள போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களை மனதில் கொண்டு இந்நூலை உருவாக்கியுள்ளார்கள். அரசியல் என்பது வெறும் நிர்வாகத்துறையை மட்டுமின்றி, சட்டத்துறை, நீதித்துறை, அறிவியல், பொருளாதாரம், விவசாயம், தொழிற்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை, விளையாட்டுத்துறை… என்று அனைத்து துறைகளையும் ஒழுங்கப்படுத்தி செல்லும் ஆளுமை […]

Read more

கூடிவாழ்வோம்

கூடிவாழ்வோம், கண்ணன் கிருஷ்ணன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 223, விலை 150ரூ. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை ‘கலைக்கூடம்’ என்ற மூன்று பத்துமாடிக் கட்டிடங்களில் வசிக்கும் ஃபிளாட் வாசிகளை வைத்து சொல்லியிருப்பது புதிய உத்தி. ‘காவியம்’, ‘ஓவியம்’, ‘இலக்கியம்’ என்ற பெயர் கொண்ட அந்த குடியிருப்பு மனிதர்கள் கண்ணப்பன் முதல் பேத்தி தேவிகா, சாந்தா அம்மாள், சோமசுந்தரம், தாமரை, பார்வதி, ஆறுமுகம், சண்முகநாதன், குற்றாலிங்கம் என்று அத்தனை பேரும் நம் அக்கம் பக்கம் வாழும் நிஜ மனிதர்களின் வார்ப்புகள். ‘கலைக் கூடத்தை’ நிர்வகிப்பதில் எழும் […]

Read more

சார்த்தா

சார்த்தா, கன்னடம் எஸ்.எல். பைரப்பா, தமிழில் ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் பதிப்பகம், பக். 408, விலை 300ரூ. “சார்த்தா‘’ – இந்த நாவல் ஒரு கற்பனைதான் என்றாலும் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் சரித்திரப் பின்னணியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. வியாபாரம் செய்வதற்காக பொருள்களை ஏற்றிக்கொண்டு தொலைதூர நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்வதை சார்த்தா என்று சொல்வார்கள். நீண்ட நெடிய சரித்திரத்தின் ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த அபூர்வமான சம்பவங்கள் உயிரோட்டமுள்ள நாவலாக மலர்ந்திருக்கிறது. கொள்ளை, வழிப்பறிகளுக்கு அஞ்சி அதற்கு தக்க காவல் மறவர்களின் துணையோடு வியாபாரம் […]

Read more

அக்னிசாட்சி

அக்னிசாட்சி, மலையாளம் லலிதாம்பிகை அந்தர்ஜனம், தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, பக். 128, விலை 100ரூ. கேரளத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நம்பூதிரி குடும்பங்களில் நிலவி வந்த இறுக்கமான நம்பிக்கைகள், சடங்குகள் பற்றியும், பெண்ணடிமைத்தனம் பற்றியும் மிகவும் யதார்த்தமாகச் சொல்லும் நாவல். நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும் கூட சுதந்திரமற்றவர்களாக, குடும்பத்தில் மூத்தோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, வழிபாடு, சடங்குகளைச் செய்து கொண்டு வாழ்பவர்களாக இருந்திருக்கின்றனர். அப்படி வாழ்ந்த ஒரு நம்பூதிரியின்மனைவி, அங்கிருந்த அடக்குமுறைகள் பிடிக்காமல், கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீடு […]

Read more

நரகம்

நரகம், டான் பிரவுன், தமிழில் இரா.செந்தில், எதிர் வெளியீடு, பக். 760, விலை 550ரூ. அமெரிக்க எழுத்தாளரான, டான் பிரவுனின், ‘டாவின்சி கோட்’டுக்கு பின் வெளிவந்து, உலக ரசிகர்களை ஈர்த்துள்ளது நரகம். வலுவான கதாபாத்திரங்கள், தந்திரக்குவியலால் பின்னி இருக்கிறார் பிரவுன். ‘தூசடைந்த புத்தகங்களும், பயன்படாத பாதை வழிகளும், புராதன உலகின் சதித்திட்டங்களை மூடி மறைத்திருக்கின்றன‘ என, வாசகர்களை நம்ப வைத்து விடுகிறார். நன்றி: தினமலர், 16/1/2017.

Read more
1 22 23 24 25 26 66