தாய்

தாய், மாக்சிம் கார்க்கி, தமிழில் தொ.மு.சி. ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 608, விலை 350ரூ. 1906 இல் ரஷ்ய மொழியில் வெளிவந்த இந்த நாவல், உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1917 ரஷ்யப் புரட்சிக்கு முன்பு நடந்த 1905 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் காலத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. ரஷ்ய தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் தந்தையை இழந்த பாவெல் என்ற இளைஞன், புரட்சிகர சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்கிறான். அவனுடைய தாய்க்கு தொடக்கத்தில் இது உடன்பாடில்லை என்றாலும், சிறிதுநாளில் மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள். […]

Read more

இரண்டு விரல்கள்

இரண்டு விரல்கள், ராம்பிரசாத், வாதினி வெளியீடு, பக். 80, விலை100ரூ. சீராளன் போன்ற எண்ணற்றோரால் கட்டமைக்கப்படும் உலகில், சாம் போன்றோர் பாதிக்கப்படுபவர்களாகவே இருக்கின்றனர். தகுதியுடைய வாழ்வனுபவம் சரியானவர்களிடத்தே போய் சேர வைக்க, ஒரு குற்றத்தால் தான் முடியும் என்பது இக்காலகட்டத்தின் நிர்ப்பந்தமாக இருப்பதை இந்த குறுநாவல் பேசுவதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 8/10/2017.

Read more

விமலா கூறும் செவிச்செல்வம்

விமலா கூறும் செவிச்செல்வம், செ. க ணேசலிங்கம், குமரன் பப்ளிஷர்ஸ், விலை 90ரூ. கற்காலத்திலிருந்து மனித இனம் நாகரிகம் அடைந்தாலும் பெண் என்பவள் அடிமைப்பட்டவளாகவே இருப்பதைக் கதாசிரியர் தன்னுடைய நாவல்களில் குறிப்பிடத் தவறுவது இல்லை. இக்கதையின் நாயகி விமலா இசைக் கல்லூரி மாணவி. எனவே இசையின் தோற்றத்தையும், இருப்பையும், அதன் வணிக நோக்கத்தையும் பாத்திரங்கள் வாயிலாகவே விவரிக்கிறார். பெரும்பாலும் உரையாடல் வாயிலாகவே கதை நகர்கிறது. பாலின்பம், இசை இரண்டும் எப்படி வெறும் புலனின்பத்துக்காகவும், வணிக நோக்கத்துக்காகவும் மாற்றப்பட்டுவிட்டன என்று கதாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். நன்றி: தி […]

Read more

டார்ச்சர் கிங் 12ம் மணிமாறன்

டார்ச்சர் கிங் 12ம் மணிமாறன், பாலகணேஷ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலை 50ரூ. ‘இம்சை அரசன் புலிகேசி’யின், 12 விட்ட சித்தப்பாவின் வம்சமாக இருந்திருக்கலாமோ என நினைக்க வைக்கிறான் கதையில் வரும் மன்னன். அவன் ஆளும் நாட்டில், அரண்மனை வேலை ஆட்களுக்கு கூட மூன்று மாத சம்பள பாக்கி வைக்கும் அளவுக்கு, பஞ்சம், ‘பாப் டான்ஸ்’ ஆடுகிறது. இப்படியான சூழலில் இந்த மன்னனுக்கு ஒரு ஆசை வருகிறது. அது, நம்ம ஊர் ஷாப்பிங் மால்கள் மாதிரியான ஒரு கட்டடத்தை கட்ட வேண்டும் […]

Read more

பொழுதுக்கால் மின்னல்

பொழுதுக்கால் மின்னல், கா.சு. வேலாயுதன், சப்னா புக் ஹவுஸ், விலை 180ரூ. எழுத்தாளர் கா.சு.வேலாயுதன் எழுதிய நாவல். கோவை மண்ணின் மணம் கமழுகிறது. மானுட வாழ்வின் இருப்புக்கும், இலக்குக்கும் இடையே நிகழும் ஓயாத யுத்தத்துக்கும் மத்தியில் உறவுகளின் அர்த்தம் குறித்து இந்த நாவல் பேசுகிறது. நன்றி: தினத்தந்தி,19/7/2017.

Read more

பரதாயணம்

பரதாயணம், சொ.அருணா, கபிலன் பதிப்பகம், விலை 200ரூ. மானுட இதிகாசமாகிய ராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமும், காவியத் தலைமையேற்கும் கம்பீரமான பாத்திரங்கள். ராமனையும் விஞ்சும் பாத்திரமாகக் கண்டு, கம்பனே தன் கதைப் பாத்திரங்களைக் கொண்டு பாராட்டும் பாத்திரம், பரதன். கம்பநதி அடிநாதமாக, அதன் மீது எழுந்தோடும் தெளிந்த நீரோடையாக பரதாயணம் ஓடுகிறது. நன்றி: தினமலர்17/9/2017

Read more

ஒற்று

ஒற்று, அண்டோ கால்பட், வாசகன் பதிப்பகம், பக்.112, விலை 80ரூ. இந்தச் சின்னஞ்சிறு நாவல் நம்மை உருவாக்கிவிடுகிறது; உலுக்கி விடுகிறது. அம்மாவிடம் மகன் வைத்துள்ள உயர்ந்த அன்பைச் சொல்லும் உன்னதப் படைப்பு இது! ‘அம்மாவுக்கு இப்ப கேன்சர் ரொம்ப அட்வான்ஸ்டு ஸ்டேஜ்ல இருக்கு… அதிகபட்சம் இன்னும் மூணு மாசம் தான். குணப்படுத்துற கட்டத்தை அவங்க தாண்டிட்டாங்க’ என்கிறார் டாக்டர். தாயின் மரணத் தேதியை முன்கூட்டியே அறிந்து, வாழ்வதை விட ஒரு மகனுக்கு வேறு என்ன கொடுமை வாழ்வில் நேர்ந்துவிடும் என்று மகன் அழுகிறான். அம்மாவுக்கு […]

Read more

ஆடிப்பாவை

ஆடிப்பாவை, ப. தமிழவன், எதிர் வெளியீடு, பக்.408, விலை ரூ.350. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான மக்களின் மனங்களில் மின்னிக் கொண்டிருந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் மண்ணில் உதிர்ந்து கிடக்கும் காலம் இது. அப்போதைய சமூகப் பிரச்னைகள் இன்னும் தீர்வு காணப்படாமல் இப்போதும் தொடர்கின்றன. இப்போது பேசப்படும் மாநில உரிமைப் பிரச்னை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, இப்போதும் நடைபெறும் சாதி வெறிக் கொலைகள்… என தீர்க்கப்படாத பிரச்னைகள் உக்கிரமடைந்திருக்கின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், அவற்றை நடத்திய அரசியல் கட்சியினரின் செயல்கள், […]

Read more

வாழ்ந்தவர் கெட்டால்

வாழ்ந்தவர் கெட்டால், க.நா. சுப்ரமண்யம், நற்றிணை பதிப்பகம், விலை 60ரூ. ‘எனக்கு 200, 600 பக்கங்கள் என்று நாவல்கள் எழுதுவதைவிட, சிறிய சிறிய நாவல்கள் எழுதுவதில் ஒரு அலாதியான திருப்தி’ என்று சொல்லும் க.நா.சு. எழுதிய, 75 பக்கங்களே கொண்ட நாவல் இது. நாவலின் பரப்பும், அதில் வலம்வரும் பாத்திரங்களும் நிகழ்வுகளும்கூட மிகக் குறைவு. ஆனாலும், நாவலை வாசிக்கும்போது வாசகன் பெறும் சுகமான அனுபவம் நம்மைப் பெரும் வியப்பிலாழ்த்துகிறது. கதைதக்களனில் புதிய உலகம், புதிய பாணி எனத் தொடர்ந்து தனது நாவல்களில் புதுமை படைத்துவந்த […]

Read more

கார்காலம்

கார்காலம், என்.சொக்கன், கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. மென்பொருள் வல்லுநராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்ட என். சொக்கன், திருமணத்துக்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட பயண அனுபவத்தையும் பிரிவின் வலிமையையும் விறுவிறுப்பான மொழிநடையில் எழுதியுள்ளார். எப்போதும் முகம் பார்த்தபடியே அருகிருக்கும் கணவன் – மனைவி இருவரில், யார் ஒருவரேனும் சற்றே பிரிந்து சென்று, மீண்டும் கூடுகையில் அன்பின் நெருக்கம் இன்னும் அதிகமாவது நிச்சயம். பயண நாட்களின் அனுபவங்களை நாட்குறிப்பில் எழுதுவதுபோல் பதிவுசெய்துள்ள இந்நாவல், வெளியூர் பயணம் முடிந்து கார்காலத்தில் வீடு திரும்பாதவர்களின் பிரிவின் வலியை மெல்லிய குரலில் […]

Read more
1 19 20 21 22 23 66