மனோவசியம்

ஹிப்னாசிஸ்(ஆங்கிலம்), பெர்னாண்டஸ், மனோவசியம், டாக்டர் எம்.பீட்டர், லிப்கோ பப்ளிஷர்ஸ், பக். 310, விலை 300ரூ. கலவரப்படுத்தும் வார்த்தை மனோவசியம் ஹிப்னாடிசம் (மனோவசியம்) – சற்றே நம்மை கலவரப்படுத்தும் வார்த்தை. மனோவசியம் மூலம் நாம் மற்றவரின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக சென்று விடுவோம் என்ற அச்சம் பொதுவாக நமக்கு உண்டு. அதனாலேயே, ஹிப்னாடிசம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஹிப்னாடிசம் , ஹிப்னோதெரபி என்பதெல்லாம் நேர்மையான செய்கை கிடையாது என்ற அபிப்ராயம் பொதுவாக இருப்பதால், பெரும்பாலான மனோதத்துவ நிபுணர் இதை ரகசியமாக பயன்படுத்தினர். 1958ல்தான் ‘ஹிப்னாடிசம்’ ஒரு மருத்துவ […]

Read more

நீரழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள்

நீரழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள், இ.எஸ்.எஸ்.ராமன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 250ரூ. மருத்துவர், எழுத்தாளர், அரசியல்வாதி என்று, பன்முகம் கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், எழுதி இருக்கும் இந்த நூல், நீரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். நீரழிவுக்கான அறிகுறிகள், அந்த பாதிப்பைக் கண்டறியும் முறைகள், சிகிச்சை முறைகள், தனக்குத் தானே இன்சலின் எவ்வாறு போட்டுக் கொள்வது போன்ற அனைத்தையும் மிக விரிவாக அதே சமயம் படிப்பதற்கு சுவாரசியமாகத் தந்து இருக்கிறார். நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கான உணவு முறைகள், மற்றும் அதற்குரிய […]

Read more

குழந்தைகளின் மனநலம்

குழந்தைகளின் மனநலம், ஏ.வினோத்குமார்,கண்ணதாசன் பதிப்பகம், பக்.245, விலை ரூ.160. கரு உருவானது தொடங்கி அவற்றில் ஏற்படும் மனவளர்ச்சி, குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான பயம், இடதுகைப் பழக்கம், தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது போன்றவை, குழந்தைகளின் படிப்பு தொடர்பான உளவியல் என 3 பகுதிகளாக இந்தப் புத்தகம் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் பிறந்த பின்பு தன் முழு வாழ்நாளில் உடலளவிலும், மனதளவிலும் எத்தனை உயிரியல் மாற்றங்களைக் கடக்கிறானோ, அதைவிட அதிகமான உயிரியல் மாற்றங்களை அவன் கருவறையில் இருக்கும் 10 மாதங்களில் கடக்கிறான். எனவே ஒரு பெண் தாய்மை […]

Read more

ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட்

ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட், நியாண்டர் செல்வன், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலை ரூ150. இன்றைய நமது உணவுமுறை உடல் நலனுக்கு எதிராக உள்ளது. எனவே இன்றைய உணவுமுறையை மாற்றி ஆதி மனிதன் உண்ட உணவுகளை உட்கொண்டால் (அதுதான் பேலியோ டயட்) இன்று நாம் சந்திக்கும் பல உடல்நலப் பிரச்னைகள் பலவற்றைத் தீர்த்துவிடலாம் என்று கூறும் நூல். நூலில் கூறப்படும் பல கருத்துகள் மிகவும் வித்தியாசமாகவும், பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்துபவையாகவும் இருக்கின்றன. இட்லி, சப்பாத்தி உடலுக்கு நல்லது என்பதற்கு மாறாக, “இட்லி, […]

Read more

உயிர் பிழை (புற்றுநோயை வென்றிட)

உயிர் பிழை (புற்றுநோயை வென்றிட), மருத்துவர் கு. சிவராமன், விகடன் பிரசுரம், விலை 150ரூ. சித்த மருத்துவர் என்ற அடையாளத்தில் இருந்து சமூக மருத்துவர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர் கு. சிவராமன். சித்த மருத்துவத்தை மற்றவர்களைப் போல இவரும் முதலில் ஆர்வமாக, தொழிலாகப் படிக்கத் தொடங்கி இருப்பார். ஆனால், அவர் பார்த்த சமூகம் அவரை அப்படி இருக்க விடவில்லை. தொழிலைத் தாண்டி வரவைத்தது. வந்த சிவராமன், இன்றைய தமிழ்ச் சமூகத்துக்குச் செய்துவரும் சேவை என்பது இன்னொரு கால் நூற்றாண்டுகள் கழித்துத்தான் முழு முக்கியத்துவத்தை அடையும். […]

Read more

நீரிழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள்

நீரிழிவு நோயாளிக்கு வாழ்க்கை முறைகள், டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன், சஞ்சீவியார் பதிப்பகம், பக். 272, விலை 250ரூ. எனக்கு டயாபடிக்’ என்று சொல்வது, ‘இன்று வெயில் அதிகம்’ என்பது போல இயல்பான ஒன்றாகி விட்டது. சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்; செய்யக் கூடாது என்பது போன்ற பொதுவான கேள்விகளுக்கு நண்பர்கள் உள்ளிட்டோர், நாம் எதிர்பார்த்ததற்கும் மேலாக, தகவல்கள் தருவர். ஆனால் அப்படியும் சர்க்கரை நோயாளிகளின் சந்தேகம் தீர்ந்திருக்காது. இந்த நூல், அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. அவர்களுக்கு, சுய கட்டுப்பாடும் மனோ […]

Read more

நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்?

நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்? டாக்டர் பெ. போத்தி, குமுதம் பு(து)த்தகம், பக். 168, விலை 135ரூ. நோயை அண்டவிடாமல் இருக்க ஒரு நெறியுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் டாக்டர்போத்தி இந்நூல் வழி விளக்கிச் செல்கிறார். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இந்நோய்களால் ஏற்படும் பிரச்னைகள், இரவில் மூச்சுவிட முடியாத நிலை, நச்சு உணவுப் பொருட்களால் ஏற்படும் தீங்குகள், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் என்று எதையும் விடாமல் உதாரணத்துடன் விளக்கியிருப்பது சிறப்பு. -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.     […]

Read more

வலம்

வலம், விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், விலை 310ரூ. இந்தியாவின் முதல் அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டு சமூகநீதிக்கான முதல் குரல் ஒலிக்கத் தொடங்கிய பின் புலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல், நம்பிக்கைக்கும் துரோகத்துக்கும் இடையில் ஊசலாடும் மனிதர்களின் தவிப்பை வெளிக்காட்டும் நூலாகும். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.   —- தைராய்டு, மரு.கு.கண்ணன், பாப்பா பதிப்பகம், விலை 100ரூ. மிகினும் குறையினும் நோய் செய்யும் தைராய்டு நோய் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிமையான நடையில் 17 தலைப்புகளில் தொகுக்கப்பட்ட நூலாகும். அனைவரும் படித்து […]

Read more

என் உடல் என் மூலதனம்

என் உடல் என் மூலதனம், போப்பு, சந்தியா பதிப்பகம், பக். 120, விலை 90ரூ. தன் உடலைக் குறித்த புரிதல், வணிக மருத்துவத்தை நிராகரித்தல், இயற்கையைச் சார்ந்திருத்தல், உணவு பற்றிய எளிய ரகசியங்கள் ஆகியனவற்றை இந்நூலில் பகிர்ந்து கொள்கிறார் நூலாசிரியர். இயற்கைக்கு எதிரான பயணத்தில் ஒரு முறிப்பை ஏற்படுத்துகிறது இந்நூல். வெளியேறாமல் தேங்கிய கழிவுகளை நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆண்டுக்கு ஒரு முறையோ உடல் காய்ச்சலை உருவாக்கி மொத்தமாக ஓர் எரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறது. காய்ச்சல் என்பது உடல் கொண்டாடும் போகிப்பண்டிகை. இறைச்சி […]

Read more

சித்தா மருந்துகளின் செய்முறை விளக்கம்

சித்தா மருந்துகளின் செய்முறை விளக்கம், தொகுப்பு: அரவிந்த் ஹெர்பல் ஆரோக்கிய நிலை மருத்துவர் குழு, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 344, விலை ரூ.200. இந்நூலில் சித்த மருத்துவத்துக்கான களிம்புகள், லேகியங்கள், கேப்சூல்கள், டானிக்குகள், சர்பத்கள், சூரணங்கள், பற்பங்கள் மற்றும் பல்பொடி, சாக்லேட், மாத்திரைகள் செய்யும் முறை பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது. சித்தர்களான போகர், புலிப்பாணி, இராமதேவர் முதலியவர்களைத் தவிர, பெரும்பாலான சித்தர்கள் தமிழர்களே. ஆதலால், இச்சித்த வைத்தியம் தமிழ்நாட்டுக்கே உரியதென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அதனால்தான் அவர்கள் இயற்றிய நூல்களெல்லாம் தமிழ்ச் செய்யுளில் […]

Read more
1 12 13 14 15 16 32