பெண்களும் நலவாழ்வும்

பெண்களும் நலவாழ்வும், நா. மோகன்தாஸ், இமாலயா பதிப்பகம், விலை 100ரூ. மனிதனைக் கருக்கொண்டு உருவாக்கும் பெண் மக்கள் நோயின்றி வாழ்ந்தால்தான், நல்ல மக்கள் செல்வத்தை உலகிற்குத் தர இயலும். மனித இனத்தின் ஆற்றல் வாய்ந்த பெண் மக்களை மனதில் கொண்டு பெண்ணின் உடல்கூறு அமைப்புகளை விளக்கி அவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களைக் குறித்தும், அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பெண்கள் மிக எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் மருத்துவர் நா. மோகன்தாஸ் எழுதியுள்ள இந்நூல் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றாகும். நன்றி: தினத்தந்தி, 6/1/2016.   […]

Read more

வரலாற்றில் எம்.ஜி.ஆர்.

வரலாற்றில் எம்.ஜி.ஆர்., வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 784, விலை 500ரூ. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் பொதுவாழ்கையைப் பற்றி புரிதலை இன்றைய தலைமுறையினருக்கு நுட்பமாக எடுத்துச் சொல்லும் தொகுப்பு நூல் இது. கலைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் எம்.ஜி.ஆர். ஆற்றிய செயற்கரிய பணியை அவரோடு பழகியவர்கள் எழுத்தில் சொல்வது படிக்கப் படிக்க புதுமை. சிவாஜி, ம.பொ.சி., பழதுநெடுமாறன், கண்ணதாசன், சோ, சோலை, எம்.ஆர். ராதா, டைரக்டர் ஸ்ரீதர், நீதியரசர் இஸ்மாயில், மணியன், வாலி, பானுமதி என்று அவரோடு அன்பாக இருந்தவர்கள் பலரின் அரிய கருத்துக்களை […]

Read more

காமராஜ் புதிரா புதையலா

காமராஜ் புதிரா புதையலா, காமராஜ் விழிப்புணர்வு மையம், விலை 70ரூ. காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை வைத்து வரலாறு எழுதுவதென்பது, வரலாற்றை வாசகர் தெரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, அந்த வரலாற்றிலிருந்து வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியவற்றை கற்றுக் கொள்வதற்கும்தான். அந்த எதிர்பார்ப்பில்தான் நூலாசிரியர் எஸ்.பி. கணேசன் இந்நூலை தொகுத்து அளித்திருக்கிறார். வரலாற்று பதிப்பு என்பதால் கூட்டி, குறைத்து என்றில்லாமல் மிக கவனத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. செய்தி சேகரிப்பை வகைப்படுத்திய விதம் நேர்த்தியாக இருக்கிறது. வாசகரின் செய்தித் தேடலுக்குத் தகுந்தாற்போல் தலைப்புகள் அமைந்திருக்கின்றன. இந்த நூலை வாசித்தால், நம் மனதில் […]

Read more

இனி ஒரு வலியில்லா பயணம்

இனி ஒரு வலியில்லா பயணம், விஜயஸ்ரீ மகாதேவன், சூர்யா கம்யூனிகேஷன், சென்னை, பக். 70, விலை 50ரூ. ஆரோக்கியமுள்ள எவரும் முற்றிய நிலையிலுள்ள புற்று நோயாளி ஒருவருடன் ஒருநாள் துணைக்கு இருந்தாலே போதும் – அவருக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும். அந்தளவுக்கு உடலாலும், மனதாலும், அந்நோயாளி படும் வேதனை, கடின மனம் கெண்டவர்களையும்கூடக் கலங்கச் செய்துவிடும். இது தொற்றுநோய் வகையைச் சார்ந்தது அல்ல. என்றாலும், சொந்தக் குடும்பத்தினரேகூட இவர்களின் சீழ் வடியும் கட்டிகளைக் கண்டு அருவருப்பு அடைந்து அருகில் வர மாட்டார்கள். இத்தகைய புற்றுநோயாளிகளுக்கு அடைக்கலம் […]

Read more

சங்கு தியானம்

சங்கு தியானம், யோகி சிவானந்த பரமஹம்சர், விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், கிருஷ்ணகிரி, விலை 150ரூ. சங்குகளின் மகத்தான சக்தியை இந்நூல் விவரிக்கிறது. வலம்புரி சங்கு எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த இல்லத்தில் செல்வம் பெருகும். எல்லா தேவதைகளும் அங்கு வாசம் செய்வார்கள் என்று நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பல நாடுகளில் சேகரிக்கப்பட்ட அரியவகை சங்குகளின் வண்ணப்படங்கள் கண்ணைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, 21/10/2015.   —- சர்க்கரை (நீரழிவு) மீது அக்கறையா?, எஸ். காளிராஜ், சரணம் அறக்கட்டளை வெளியீடு, விலை 35ரூ. சர்க்கரை நோயாளிகள் […]

Read more

நலம் காக்கும் சித்த மருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம், சித்த மருத்துவர் ப. செல்வசண்முகம், வலைத்தமிழ் பதிப்பகம், சென்னை, விலை 220ரூ. சித்தர்கள் கூறியுள்ள வாழ்வியல் நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலை மருத்துவர் ப. செல்வ சண்முகம் படைத்திருக்கிறார். நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளை தெளிவாகவும், எளிமையாகவும் விளக்கியுள்ளார். உடம்பைப் பற்றியி சித்தர்களின் விளக்கம், உடல் கட்டமைப்பு, குளிக்கும் முறை, உணவு அருந்தும் முறை, முறையான தூக்கம், தூக்கமின்மைக்கான தீர்வுகள் போன்ற தலைப்புகளில் பயனுள்ள கருத்துகளை வழங்கி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி. […]

Read more

ஈரம்

ஈரம், சிவசு, தென்றல் பதிப்பகம், புதுச்சேரி, பக். 91,விலை 100ரூ. எளிதில் புரியாத வரிகளைக் கொண்டு நவீனம் என்ற பெயரில் கவிதைகளாகப் படைக்கப்பட்டு வரும் தற்காலத்தில், எளிதில் புரியக்கூடிய தன்மை, ஆழமான சிந்தனை, உழைப்பின் வலியை, மேன்மையைச் சொல்லும் ரத்தினச் சுருக்கம் என்று கவிதைக்குரிய இலக்கணங்களைக் கொண்டு படைக்கப்பட்டிருப்பதால் ஈரம் நம் மனதில் ஒட்டிக்கொள்கிறது. எதிர்படும் வீடுகளை கட்டடங்களை/மரங்களை, தோட்டங்களை/ விழுங்கியபடியே ஊர்ந்து வருகிறது/ நெடுஞ்சாலைப் பாம்பு என்ற ஒரு கவிதை போதும் அவரது பாடுபொருள் எத்தகையது. அவரது பார்வையின் விலாசம் எவ்வளவு என்பதை […]

Read more

தலைவர் காமராஜரின் மறுபக்கமும் குமரி விடுதலைப் போரும்

தலைவர் காமராஜரின் மறுபக்கமும் குமரி விடுதலைப் போரும், முனைவர் ஏ. லாரன்ஸ்மேரி, ரா.செ. துரைராஜ் நாடார் நூற்றாண்டு விழா குழு வெளியீடு, நாகர்கோவில், விலை 100ரூ. தமிழக எல்லைப் பகுதிகளை, தாய் தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டங்களில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு குறித்து பலவிதமான செய்திகள் பரப்பப்படுகின்றன. அந்தச் செய்திகளின் உண்மைத் தன்மை என்ன என்பதை இந்த நூலில் முனைவர் ஏ.லாரன்ஸ் மேரி ஆராய்ந்து எழுதியுள்ளார். பல நூல்களில் இருந்து குறிப்புகளைத் திரட்டியும், குமரி விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களிடம் செய்திகளைச் சேகரித்தும் எழுதப்பட்ட இந்த […]

Read more

நலமா? நலமே!

நலமா? நலமே!, மருத்துவர் வே. வீரபாண்டியன், பிளாக் ஹோல் மீடியா, பக். 120, விலை 100ரூ. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ, மாண்புடன் வாழ, அனைத்துச் செய்திகளையும், எளிமையாகவும், விரிவாகவும் தந்துள்ளார் நூலாசிரியர். நலமாய் வாழ்வதற்கான அன்றாட வாழ்வியல் முறைகளான நடைபயிற்சி, விரல் முத்திரை பிடிப்பது, மூச்சுப்பயிற்சி, ஆசனம், சூரிய வணக்கம், உடற்பயிற்சி, இயற்கை உணவு மற்றும் மாற்று மருத்துவம், சுயபரிசோதனை என்று ஒவ்வொரு தலைப்பிலும் விவரமாக எடுத்துச் சொல்கிறார். நடைபயிற்சியின்போது அணிய வேண்டிய காலணிகள், முத்திரைகள் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை, ஆசன […]

Read more

வடலிமரம்

வடலிமரம், ஐரேனிபுரம் பால்ராசய்யா, முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், பக். 124, விலை 80ரூ. பனைமரத்தின் விடலைப் பருவத்தை வடலிமரம் எனக்கூறுவது உண்டு. அதே விடலைப் பருவத்தை ஒத்த இருவரின் காதலில், அந்த மரத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். சாதியைக் காரணம் காட்டி காதலைப் பிரிக்கிறார் கதை நாயகனின் தந்தை. இதனால் மதுவுக்கு அடிமையாகும் நாயகனை நல்வழிப்படுத்தும் முயற்சியாக காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். கர்ப்பமுற்ற நிலையில் நாயகி காதலனை ஏற்கிறாளா அல்லது மறுக்கிறாளா என்பதை திரைப்பட பாணியில் காட்சியாக எழுதியுள்ளார் நூலாசிரியர். இடையிடையே காதலை, கவிதையாக தர […]

Read more
1 14 15 16 17 18 32