உயிர்ச்சொல்

உயிர்ச்சொல், த.சித்தார்த்தன், மேன்மை வெளியீடு, விலை 100ரூ. மனித இனம் பெருகிக்கொண்டு இருக்கிறது. அதேசமயம் மண்வளம் அழிந்து கொண்டிருக்கிறது. இருப்பவர்க்கே இயற்கையால் ஈடுதரமுடியாத சூழலில் இனி வருபவர்க்கு என்ன வளம் மீதம் இருக்கும்? இனியாவது இயற்கையைச் சீழிப்பதை நிறுத்தி அதைக் காப்போம் என சமுதாய அக்கறையுடன் வலியுறுத்தும் நூல். நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

கதை சொல்லி கே.எஸ்.ஆர். குறிப்புகள்

கதை சொல்லி கே.எஸ்.ஆர். குறிப்புகள், கலைஞன் பதிப்பகம், விலை 150ரூ. தமிழக அரசியலில் கடந்த 44 ஆண்டுகளாக வெறும் அரசியல் பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு சமுதாய பிரச்சினைகளையும் கையில் எடுத்து போராடியவர், ஐகோர்ட்டு வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். மனித உரிமை பாதுகாவலர், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தொடக்க முதலே போராடியவர். அவர் “கதை சொல்லி கே.எஸ்.ஆர்.குறிப்புகள்” என்ற நூலை எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பல சிறப்புக்குரிய மாமனிதர்கள், பல்வேறு வரலாற்று சிறப்புகள், யதார்த்த உண்மைகள், எல்லாவற்றையும் 157 பக்கங்கள் கொண்ட இந்த […]

Read more

மண்ணின் மரங்கள்

மண்ணின் மரங்கள், கா. கார்த்திக் தமிழ்தாசன், இயல்வாகை வெளியீடு, பக். 60, விலை 75ரூ. நீர் நிலை, மரங்களை அழித்து, நகரம் நிர்மாணிக்கப்படுகிறது. சாலை ஓர நிழலுக்காக, விரைவில் வளரும், வெளிநாட்டு மரங்கள் நடப்படுகின்றன. நாட்டு மரங்களை நம்பி வாழ்ந்த உயிரினங்கள், உணவு கிடைக்காமல் அழிகின்றன. இதனால், மகரந்த சேர்க்கையின்றி, காய்கறி, பழங்களும் அருகி, உயிர்ச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும், காற்று, மழை, வெயிலை தாங்க பழக்கமில்லாத, அயல் மரங்களும் மடிகின்றன. இதை விரிவாக பதிவு செய்கிறது, இந்நூல். நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

புத்தம் புது பூமி வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும், சு. ராஜு, உரத்தசிந்தனை பதிப்பகம், பக். 120, விலை 150ரூ. ஹைதராபாத்திலுள்ள தேசிய புவி இயற்பியல் ஆய்வுக்கூட முதன்மை விஞ்ஞானியான இந்நூலாசிரியர், நில அதிர்வு ஆய்வுகள் குறித்து இந்தியா முழுவதும் சென்று அரிய தகவல்களைத் திரட்டி வருபவர். இவரது பல ஆய்வு அறிக்கைகள் இத்துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயன்தரத்தக்கவையாக உள்ளன. விஞ்ஞானியாக இருந்தாலும், எளிய தமிழ் நடையில் எழுதும் ஆற்றல் மிக்கவர். உரத்த சிந்தனை என்ற மாத இதழில் இவர் எழுதிய புவி அறிவியல் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே […]

Read more

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி, ப. திருமலை, புதிய வாழ்வியல் பதிப்பகம், விலை 70ரூ. உலக நாடுகளின் குப்பைத் தொட்டி!? முன்னெல்லாம் மாட்டுவண்டிகளில் பயணம் செய்த ஆற்று மணலுக்கு இப்போது டிம்பேர் லாரிகளிலும் கப்பல்களிலும் போகும் ‘யோகம்’ வந்துவிட்டது. நிஜம்தான்! இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆற்று மணலின் இலக்கு 2016 ஆம் ஆண்டில் 10.26 லட்சம் டன்னாக உயர்ந்தது என்று இந்த நூலில் எழுதுகிறார் சுற்றச்சூழல் ஆர்வலரான ப. திருமலை. ‘ஆறுகளில் பத்து சென்டிமீட்டர் உயரத்துக்க மணல் படியவேண்டுமானால் தொடர்ந்து ஓராண்டுக்கு நீர் […]

Read more

இறவு நிலையில் இயற்கையின் அற்புதங்கள்

இறவு நிலையில் இயற்கையின் அற்புதங்கள், ஆர்.எஸ். நாராயணன், யூனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், பக். 160, விலை 125ரூ. 2012-2015ஆம் ஆண்டு காலகட்டத்தில் தினமணி, ஜனசக்தி, சொல்வனம் வலைப்பின்னல் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பனை, சந்தனம், யூகலிப்டஸ், செம்மரங்கள் குறித்த பல்வேறு வகையான செய்திகளை சங்க காலம், தொட்டு தற்காலம் வரை புள்ளி விவரங்களுடனும், அறிவியல் பூர்வமாகவும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இயற்கை வளங்களையும், சுற்றுச்சுழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், இயற்கையோடு ஒன்றி மனிதன் வாழ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. 1972-இல் பிரேசிலில் தொடங்கியு […]

Read more

சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு

சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு, ராமச்சந்திர குஹா, எதிர்வெளியீடு, விலை 250ரூ. சுற்றுப் பயணங்கள், ஆய்வேடுகளின் அடிப்படையில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா எழுதிய நூலின் தமிழாக்கம் இது. சுற்றுச்சூழல் பாதிப்பு, அரசுத் திட்டங்காளல் தமது நிலங்களை இழக்கும் பழங்குடியினர், விவசாயிகளின் நிலை என்று பல பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார் குஹா. நன்றி: தி இந்து, 28/5/2016.   —- ஏ.கே. செட்டியார் படைப்புகள், அறியப்படாத அரிய கட்டுரைகளின் முழுத் தொகுதி, சந்தியா பதிப்பகம், விலை 900ரூ. ஏ.கே. செட்டியாரின் படைப்புகள் முழுவதுமாகத் தொகுக்கப்பட்டு இரு […]

Read more
1 2 3