கவிதை ஒளி

  கவிதை ஒளி, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 130ரூ. பேராசிரியர், பேச்சாளர், திறனாய்வாளர் என்று பன்முகம் கொண்டவர் இரா.மோகன். அவர் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதில் கவி ஆளுமைகள் என்ற தலைப்பில் வ.சு.ப.மாணிக்கனார், ஈரோடு தமிழன்பன் போன்றோரின் ஆளுமைகள் குறித்தும் கவிதைக் கீற்றுகள் என்ற தலைப்பில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ பற்றியும் சுவைபட எழுதியுள்ளார். சங்கச் சித்திரங்கள் என்ற தலைப்பில் சங்க கால இலக்கியத்தின் சிறப்பை விவரிக்கிறார். இலக்கிய அன்பர்களுக்கு இனிய விருந்து. நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Read more

வயிறு மட்டும் வாழ்க்கையல்ல

வயிறு மட்டும் வாழ்க்கையல்ல, ஏகலைவன், வாசகன் பதிப்பகம், விலை 70ரூ. கேள்விகள் கேட்கப் பழகுவோம், ஏளனங்களை ஏளனப்படுத்துவோம், தோல்விகளைத் தூர்வாருவோம், கோடுகளும் ஓவியமாகும், சாதனைகள் சாத்தியமே என்பன போன்ற தலைப்புகளில் கவிஞர் ஏகலைவன் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகளால் நம் நெஞ்சில் நம்பிக்கை ஊட்டுகிறார். நன்றி: தினத்தந்தி, 4/10/2017.

Read more

நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்

நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம். நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது? நேரத்தின் முக்கியத்துவம், நேரத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பது, எதிலெல்லாம் நேரத்தைமிச்சம் பிடிக்கக்கூடாது? என, நேரம் குறித்து பல செய்திகளைச் சுவைபட, தனக்கே உரிய எளிய நடையில், 94 சிறு தலைப்புகளில் எடுத்துரைத்துள்ளார், லேனா தமிழ்வாணன். முதல் தலைப்பில், நாம் நிர்வகிக்க வேண்டிய மூன்று அம்சங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவை நேரம், பணம், வாழ்க்கைத் துணை. இம்மூன்றையும் நாம் நிர்வகிக்க அறிந்து கொள்ளாவிடில், அவை நம்மை நிர்வகித்துவிடும் என்று கூறி, நேரத்தை […]

Read more

ஆண்டாளம்மா தேசம் (கட்டுரைகள்)

ஆண்டாளம்மா தேசம் (கட்டுரைகள்), எஸ்.ரமேஷ், ஷேக்ஸ்பியர்ஸ் டெக்ஸ், விலை 150ரூ. ஆண்டாள் அரசுபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூரை மையமாக வைத்து அங்கே நடப்பது போன்ற பல நிகழ்வுகளை கற்பனையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு கட்டுரையையும் படித்து முடிக்கும்போது நிஜமாக இருக்குமோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியாது. மெல்ல நகைக்கவைக்கும் நடையில் கதைபோல் இருப்பது கூடுதல் சுவாரஸ்யம். நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

நெசவு

நெசவு, சுப்ரபாரதிமணியன், சிற்பி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மனிதர்களின் மானத்தைக் காக்கும் துணியை நெய்திடும் நெசவாளர்கள், தங்கள் தன்மானத்தைத் தக்கவைத்துக் கொள்ள நடத்திடும் போராட்டமான வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் கதைகள், சில கட்டுரைகள். நெய்யும் ஆடையின் தரம் நாளுக்குநாள் உயர்வதும், நெய்பவன் வாழ்வாதாரம் தாழ்வதும் அருமையாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகள்

அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகள், மவ்லவி பி.எம்.கலீலூர் ரஹ்மான், எஸ்.கே.எஸ். பப்ளிஷர்ஸ், பக். 192, விலை 100ரூ. சென்னை பள்ளிவாசல் ஒன்றில் இமாமாகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்கள் பல எழுதி பிரசித்திப் பெற்றவர். இவர் முன்னாள் ஜனாதிபதியான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகளைச் சேகரித்து இந்நூலில் தொகுத்துள்ளார். அப்துல் கலாம் இஸ்லாமியராக இருந்தும், அந்த முறையில் அவர் வாழவில்லை என்ற கோணத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சில எழுப்பிய விமர்சனங்கள், எவ்வளவு தவறானவை என்பதை தக்க ஆதாரங்களோடு, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையிலும் […]

Read more

அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும்

அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும், நீதிநாயகம் து.அரிபரந்தாமன், நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் அறக்கட்டளை, பக். 88, விலைரூ.75. ‘அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும் 39’ – இந்நூலின் முதல் கட்டுரை. இது தவிர இன்னும் ஏழு கட்டுரைகள் உள்ளன. சென்னை ஐ.ஐ.டி.யில் நூலாசிரியர் ஆற்றிய உரை, அவர் நீதிபதியாகப் பதவியேற்றபோது ஆற்றிய உரை, பணிநிறைவு பெற்ற போது ஆற்றிய உரை, ‘பொதுபள்ளிக்கான மாநில மேடை 39’ அமைப்பு நீட் பற்றி வெளியிட்ட துண்டறிக்கை, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ரத்து செய்யக் கோரி நடந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை, இயற்கை […]

Read more

பணமே ஓடிவா

பணமே ஓடிவா, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் பணத்தை எப்படி சேமிப்பது, அதை எப்படி பெருக்குவது என்பது பலருக்குத் தெரிவதில்லை. பணத்தை ‘குட்டி போட வைப்பது‘ எப்படி என்பதை இந்தப் புத்தகத்தில் தெளிவாகவும், சுவைபடவும் எழுதியுள்ளார் சோம. வள்ளியப்பன். ‘லட்சாதிபதி ஆவதற்கு நிச்சயமான வழி என்ன தெரியுமா? ஒவ்வொரு மாதமும் கட்டாயமாக ஒரு தொகையைச் சேமிப்பது மட்டுமல்ல. சேமிப்பதை ஏதாவது ஒரு லாபகரமான இடத்தில் முதலீடு செய்து வருவதும்தான்’ இப்படி பல […]

Read more

சிந்தையில் விளைந்த சீரிய மு(வி)த்துக்கள்

சிந்தையில் விளைந்த சீரிய மு(வி)த்துக்கள், ஹஜ்ஜா ஏ. யாஸ்மின் ஆலிமா, எஸ்கேஎஸ் பப்ளிஷர்ஸ், விலை 100ரூ. பல்வேறு பத்திரிகைகளில் வெளியா இஸ்லாமிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்த நூலில் ரமலான், ஹஜ், முகரம் மாதங்களின் மகிமை, சமுதாயம் உயர்வடைய வழிகாட்டும் உன்னத இஸ்லாமிய வழிமுறைகள், சமுதாய அவலங்கள் – அதைச் சரி செய்ய தீர்வுகள் என்பன போன்ற தலைப்புகளில் நூலாசிரியர் ஹஜ்ஜா ஏ. யாஸ்மின் ஆலிமா எளிய தமிழில் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி,19/7/2017.

Read more

ஹைட்ரோ கார்பன் – இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத்திட்டம்

ஹைட்ரோ கார்பன் – இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத்திட்டம், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், பக்.288, விலை ரூ.225. உலக இயக்கத்திற்குத் தேவையான எரிசக்திக்கு ஆதாரமாக இருப்பது ஹைட்ரோ கார்பன். அதில் இருந்து எடுக்கப்படும் கச்சா பொருளைச் சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் போன்றவற்றை நாம் பெறுகிறோம். அப்படிப்பட்ட ஹைட்ரோ கார்பனை நமது நாட்டின் தேவைக்கு ஏற்ற அளவில் உற்பத்தி செய்ய முடியாததால், அதற்குத் தேவையான கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்த இறக்குமதியைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் […]

Read more
1 69 70 71 72 73 88