நல்ல நட்பு

நல்ல நட்பு, இரா. குழந்தை அருள், சங்கர் பதிப்பகம், பக்.160, விலை 145ரூ. ஒவ்வொரு வாழ்விலும் தனிமை என்பது தவிர்க்க முடியாதது என்றே பலரும் எண்ணுகின்றனர். தனிமை, மனிதனின் இயல்பு நிலையைச் சிதைக்கிறது; மகிழ்ச்சியை வற்றி போகச் செய்கிறது. இத்தகைய கொடிய நிலையை இல்லாமல் செய்யும் வரம் தான் நம் நண்பர்கள். நட்புறவு என்பது சொர்க்கச் சுகத்தை முன்னதாகவே சுவைக்க உதவும் தருணங்களின் உருவாக்கம். ஒழுங்கை கடைபிடித்து வாழ்வது எத்துணை இன்றியமையாதது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 12/11/2017.

Read more

நீங்களும்  ஆகலாம்

நீங்களும்  ஆகலாம், அ.டோமினிக் சேகர்கா, காகிதம் பதிப்பகம், விலை 50ரூ. மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகள் கொண்ட புத்தகம். “முயற்சி செய்தால் நீங்களும் ஆப்துல் கலாம் ஆகலாம்” என்று மாணவர்களை உற்சாகப்படுத்துகிறார் ஆசிரியர் அ.டோமினிக் சேகர். படிப்பில் சாதனை புரிந்த பல மாணவ மாணவிகள் பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. “இரத்தப் புற்றுநோயுடன் தேர்வு எழுதிய மாணவி”, “அன்று குழந்தை தொழிலாளி, இன்று முதல் மாணவர்”, “பார்வையற்ற மாணவரின் சாதனை” இதுபோன்ற தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளான மாணவர்கள் எத்தகைய அரிய சாதனைகள் […]

Read more

புனைவுவெளி

புனைவுவெளி, நா. விச்வநாதன், பேசும் புதிய சக்தி வெளியீடு, விலை 150ரூ. படைப்புலகு தமிழ் இலக்கிய ஆளுமைகளை அவர்களின் எழுத்து வழியே அணுக முயற்சிக்கும் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நகுலன், ப. சிங்காரம், லா.ச.ரா., எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை ப்ரகாஷ், ஜி. நாகராஜன் என எழுதிய காலத்தில் அதிகம் அறியப்படாத எழுத்தாளுமைகளின் மீது வாசக வெளிச்சம் பாய்ச்சும் முயற்சி இது. நகுலன் என்ற பெயர்க்காரணம், நகுலன் படைப்புகளின் அகவுலகப் பயணம், தத்துவ தரிசனம், சுயத்தை அழித்தல் பற்றிப் பேசும் நகுலனின் கவிதைகள் பற்றிய கட்டுரை தொகுப்பின் […]

Read more

எண்ணங்கள்

எண்ணங்கள், வத்ஸலா சங்கர், ஹை லைப் என்டர்பிரைசஸ், இதிகாசங்களும் காப்பியங்களும், ஆன்ம நேயமும் மனித நேயமும், மேன்மை தரும் ஒழுக்கம், அன்பினால் இந்த உலகை ஆளலாம், பெண்கள் நாட்டின் கண்கள், தீதும் நன்றும், காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை, நேப்பாள், துவாரகா, திருக்கேதார் – பத்ரிநாத், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட கட்டுரைகள், நுாலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. நன்றி: தினமலர், 5/11/2017.

Read more

360 டிகிரி

360 டிகிரி, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, பக் 172, விலை 150ரூ. சமகால உணர்வுகளை பற்றிய தீவிர சிந்தனையை முன் வைக்கும்படியான பல கட்டுரைகள் இந்நுாலில் அடங்கியுள்ளன. நடப்பு அரசியல், சமூக பிரச்னை, இலக்கியம், இயக்கங்கள் ஆகியன பற்றிய கண்ணோட்டங்களை ஆழமான பார்வையில் வெளிப்படுத்தியிருக்கிறது. நடுநிலையாகவும், துணிவு மிக்க நெஞ்சுரத்தோடும் கட்டுரைகளைத் தார்மீகமான கருத்துக்களின் பின்னணியில் தன்னிலை நோக்கில் சொல்லிச் செல்கிறது இந்நுால். மாநில அரசியல் முதல், மத்திய அரசியல் வரையிலான அலசல் பார்வைகளைச் சித்திரித்து காட்டும்படியான இந்நுால், அண்மைக் காலத்திய நிகழ்வுகளின் […]

Read more

மகாகவியும் இசைப் பேரரசியும்

மகாகவியும் இசைப் பேரரசியும், முனைவர் மு. கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. இசையில் சிகரத்தைத் தொட்டு புகழின் உச்சத்தை அடைந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. மகாகவி பாரதியார் பற்றியும், எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றியும் பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம் இது. மொத்தம் 40 கட்டுரைகள், பாரதியார் பற்றியும், எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றியும் அறிந்து கொள்ள இந்த ஒரு புத்தகம் போதும். அந்த அளவுக்கு, அந்த இரு மேதைகளையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் கட்டுரைகள் அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

தனிநாயக அடிகளாரின் தமிழியல் பங்களிப்பு

தனிநாயக அடிகளாரின் தமிழியல் பங்களிப்பு, இரா. காமராசு, சாகித்திய அகாதமி, விலை 200ரு. இலங்கியின் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்த சேவியர் நிக்கோலஸ் எனும் இயற்யெருடைய தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. ப. மருதநாயகம், மு.இராமசாமி, வீ.அரசு, அ.க.இளங்கோவன், அமுதன் அடிகள், இரா. காமராசு உள்ளிட்டோர் எழுதிய 19 கட்டுரைகள் தனிநாயகம் அடிகளாரின் பன்முகப்பட்ட படைப்பாளுமையை பறை சாற்றுகின்றன. பேரா.கி. நாச்சிமுத்துவின் பதிவுகளும், பின்னிணைப்பிலுள்ள தனிநாயகம் அடிகளாரைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகளும் அவரது படைப்புகள் குறித்த பட்டியலும் மிகுந்த […]

Read more

உயிர்ச்சொல்

உயிர்ச்சொல், த.சித்தார்த்தன், மேன்மை வெளியீடு, விலை 100ரூ. மனித இனம் பெருகிக்கொண்டு இருக்கிறது. அதேசமயம் மண்வளம் அழிந்து கொண்டிருக்கிறது. இருப்பவர்க்கே இயற்கையால் ஈடுதரமுடியாத சூழலில் இனி வருபவர்க்கு என்ன வளம் மீதம் இருக்கும்? இனியாவது இயற்கையைச் சீழிப்பதை நிறுத்தி அதைக் காப்போம் என சமுதாய அக்கறையுடன் வலியுறுத்தும் நூல். நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

காப்பியங்கள் அணிந்த காலணிகள்

காப்பியங்கள் அணிந்த காலணிகள், தாமல் கோ.சரவணன், கோமல் பதிப்பகம், விலை 50ரூ. கம்பராமாயணத்தில் இடம்பெறும் பாதுகை, சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காற்சிலம்பு ஆகிய இரண்டையும் பற்றிய இந்த நூல், பல விவாதங்களை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது. ராமாயணத்தில் பாதுகை பற்றிய இடங்களை நுட்பமாக ஆராய்ந்து, அதை எந்தெந்த கோணங்களில் வெளிப்படுத்த முடியும் என்பதை தடைவிடைகளோடு ஆழமாகச் சிந்தித்துள்ளார் ஆசிரியர். பரதன் பாதுகையை ராமனிடத்திருந்து பெற்றமை பற்றி நுணுக்கமாக ஆராயும் நூலாசிரியர், பாதுகையும், காற்சிலம்பும் என்ற முதல் கட்டுரையில், ‘பாதுகை என்ற காலணி மனிதனாய் பிறந்து தெய்வத்திற்கு உரியது. […]

Read more

பன்முக நோக்கில் புறநானூறு

பன்முக நோக்கில் புறநானூறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், பக்.252, விலை ரூ.160. புறநானூறு தொடர்பான நாற்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதிலுள்ள கட்டுரைகள் பன்முக நோக்கு, வாழ்க்கை வெளிச்சங்கள், சான்றோர் அலைவரிசை, கண்ணீர் ஓவியங்கள், உரை வளமும் பா நலமும் ஆகிய ஐந்து தலைப்புகளில் பகுக்கப்பட்டிருக்கின்றன. புலவர் பொன்முடியார் பாடிய ஒரு பாடலுக்கு, அற்புதமான விளக்கம் கூறுவதுடன் பொன்முடியார் கூறாத ஒரு கருத்தையும் கூறியிருக்கிறார் நூலாசிரியர். கணியன் பூங்குன்றனாரின்  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலுக்கு சூஃபி கதையும், கவிஞர் கண்ணதாசனின் […]

Read more
1 68 69 70 71 72 88