இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்,  அசோகமித்திரன், சா.கந்தசாமி; சாகித்திய அகாதெமி, பக்.127; ரூ.50;  சாகித்திய அகாதெமியின் “இந்திய இலக்கியச் சிற்பிகள்” வரிசையில் தமிழின் நவீன எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றிய இந்த நூல், அவருடைய வாழ்க்கை, எழுத்து குறித்த ஒரு சிறந்த அறிமுகம். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் அசோகமித்திரனின் அருகிலிருந்து அவரது எழுத்தையும் வாழ்க்கையையும் எழுத்தாளராகவும் நண்பராகவும் கண்டுள்ள சா.கந்தசாமி, இந்நூலை எழுதியிருப்பது மிகப் பொருத்தம். அசோகமித்திரன் எழுத்துலகம் தனித்துவமானது. சிறுகதை, நாவல் என புனைகதை வடிவ எழுத்தில் அவர் பெரும் வெற்றி பெற்றவர் என்பதில் […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்: குரு கோவிந்த் சிங்

இந்திய இலக்கியச் சிற்பிகள்: குரு கோவிந்த் சிங்!, மஹீப் சிங் (மூல ஆசிரியர்), தமிழாக்கம் அலமேலு கிருஷ்ணன், சாகித்திய அகாடமி, பக். 126, விலை 50ரூ. சீக்கிய மதத்தின், 10வது குருவாக விளங்கியவர் குரு கோவிந்த் சிங். இவர் பிறக்கும் போது, முகலாய அரசு தன் அரசியல் வலிமையின் உச்சத்தில் இருந்தது. அவுரங்கசீப் தன் தந்தையை கைதாக்கி, சகோதரர்களை கொன்று தானே, ‘ஆலம்கீர்’ – உலகை வென்றவன் என்ற பட்டத்தை ஒட்டிக் கொண்டு, முகலாய இந்தியாவின் பேரரசனாக, எட்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. அவுரங்கசீப் பின்பற்றிய […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்

இந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன், ஆ. பூமிச்செல்வம், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. ‘எழுத்தாளர்களின் எழுத்தாளர்’ என்று புகழப்படும் நகுலனின் இயற்பெயர் டி.கே.துரைசாமி. கும்பகோணத்தில் பிறந்து, திருவனந்தபுரத்தில் எழுத்தாளராக நிலை கொண்டவர். திருவனந்தபுரம், ‘மார் இவானியஸ்’கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர். நகுலன், நவீனன், எஸ்.நாயர், ஜான் துரைசாமி என பல பெயர்களில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நூல் தொகுப்பு, மொழிபெயர்ப்பு என, நவீனத் தமிழ் இலக்கியத்தின் சகல தளங்களிலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதியவர். ஆங்கிலத்திலும் […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், கே.எஸ். சுப்பிரமணியன், பக். 80, விலை 50ரூ. ஜெயகாந்தனின் முக்கிய பரிமாணங்களாக பரந்த மனித நேயம், மானுடத்தில் ஆரோக்கிய நம்பிக்கை, அறிவு நேர்மையில் விளைந்த கம்பீரம், மனித உள்ளத்தின் ஆழங்களில் நிழலாடும் மெல் அதிர்வுகளை படம் பிடிக்கும் லேசர் பார்வை, ஆன்மிகச் சாய்மானத்தை முன்னிறுத்திய அறிவியல் கண்ணோட்டம் உள்ளிட்ட சிறப்புகளைக் குறிப்பிடுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 27/8/2017.

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள் ராஜாஜி

இந்திய இலக்கியச் சிற்பிகள் ராஜாஜி, ஆர்.வெங்கடேஷ், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. தாம்புக் கயிறும் ராஜாஜியும் ராஜாஜியோடு இலக்கியப் பயணத்தில் உடனிருந்தவர், மீ.ப.சோமு. ராஜாஜி அவ்வப்போது மீ.ப.சோமுவின் வீட்டிற்குப் போவது உண்டு. மாடியில் வீடு. உயரமான சுழல் படிகள்.கைப்பிடி இருக்காது. ராஜாஜி ஏறி வருவதற்கு வசதியாக ஒரு தாம்புக் கயிற்றைத் தொங்கவிட்டிருப்பார்கள். தள்ளாத வயதில், தாம்புக் கயிற்றை பிடித்துக்கொண்டு ஏறி,மாடிக்கு வருவார் ராஜாஜி. காரணம், இலக்கிய நட்பு . . . ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி என்று மதிப்பிடுகிறார்கள் அவருடைய அபிமானிகள். இல்லை,அவர் ஒரு […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள் – குமுதினி

இந்திய இலக்கியச் சிற்பிகள் – குமுதினி, பிரேமா நந்தகுமார், சாகித்ய அகாடமி, பக். 135, விலை 50ரூ. பிரிட்டிஷ் காலத்திய பெண்ணிய எழுத்தாளர்‘ பெரும்பாலான இந்திய பெண்கள் கல்வியறிவில்லாமல் இருந்த காலகட்டத்தில், மிகவும் ஆச்சாரமான அய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர், குமுதினி என்று தமிழுலகால் அறியப்பட்ட, ரங்கநாயகி தாத்தம். அவரது குடும்பத்தில், ஆண்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்களாக இருந்தும், பெண்கள் கல்வியறிவற்றோராக வாழ்ந்தனர். அந்தக் கால குழந்தை திருமணத்திற்கு, குமுதினியும் விதிவிலக்கில்லை. இருந்தும் தன் தணியாத கல்வி தாகத்தாலும், தந்தையின் உதவியாலும், கணவரின் ஆதரவாலும், தானே […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா

இந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா, டாக்டர் இரா.மோகன், சாகித்ய அகாதெமி, பக். 112, விலை 50ரூ. பேராசிரியர் மீரா எப்படி கவிஞராய், போராளியாய், கட்டுரை ஆசிரியராய், பத்திரிகையாளராய், பதிப்பாளராய் பல்வேறு அவதாரங்கள் எடுத்து, அதில் வெற்றியும் கண்டார் என்ற வரலாற்றை டாக்டர் இரா. மோகன், நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து எழுதியுள்ளார். மீரா கவிதைகளில் அவரது மரப்புத் திறமையும் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் நூலில் அவரது வசன கவிதைத்திறனையும், குக்கூ, ஊசிகள் அங்கதச் சுவையின் அணிவகுப்பையும், கட்டுரைகளில் அவரது மொழி வீச்சையும், இந்நூலாசிரியர் ஆய்வுக் கண்ணோட்டத்தில் தந்துள்ளது மீரா பற்றிய […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், அ.ச. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 128, விலை 30ரூ. பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் என்று பல பெருமைகளைக் கொண்ட முதுபெரும் தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தனைப் பற்றி, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளார் நிர்மலா மோகன். அ.ச.ஞா.வின் வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரையில் அவர் இலக்கியச் சிற்பியாக செதுக்கப்பட்டு உருமாறி வந்த வளர்ச்சிப்பாதை தொகுக்கப்பட்டுள்ளது. வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி, திரு.வி.க. தெ.பொ.மீ. […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், ஆபிரகாம் பண்டிதர், நா. மம்மது, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 112, விலை 50ரூ. திருநெல்வேலி மாவட்டத்தில் வறுமையான குடும்பத்தில் 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்து 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் வாழ்ந்து இசைத் தமிழுக்கு தன்னிகரில்லா தொண்டாற்றி மறைந்த ஆபிரகாம் பண்டிதரைப் பற்றி எடுத்துரைக்கிறது இந்த நூல். இசை, வேளாண்மை, ஜோதிடம், சித்த மருத்துவம், அச்சுத் தொழில் பல துறை வித்தகராக விளங்கிய ஆபிரகாம் எதிர்கால இளைஞர்களுக்கு ஓர் உதாரண புருஷன் என்பதை நூலின் ஆசிரியர் விளக்கியுள்ளார். இசை […]

Read more