ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு, சுரானந்தர், சுரா பதிப்பகம், பக். 80, விலை 176ரூ. கடந்த, 1946ம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றதும், ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டதும், பின் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதும், இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு உணர்த்தியதுமான, ஹெர்மான் ஹெஸ் எழுதிய, ‘சித்தார்த்தா’வை தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளார் சுரானந்தா. வெறும் மொழிபெயர்ப்பு நூலாக மட்டும் படைக்காமல் ஓர் ஆய்வு நூலாகவும் மாற்றி ஆங்காங்கே தான் படித்தது, கேட்டது ஆகியவற்றையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. அந்தணர் குலத்தில் பிறந்த சித்தார்த்தன், […]

Read more

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு, சுரானந்தா, சுரா பதிப்பகம், பக். 176, விலை 80ரூ. 128 பக்கங்கள் மட்டுமே கொண்ட சித்தார்த்தா என்ற ஜெர்மானிய நாவல், 1946ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றது. இந்நூலின் ஆசிரியர் ஹெர்மான் ஹெஸ், இந்தியாவில் கேரள மாநில சர்ச் ஒன்றில் பணியாற்றிய பாதிரியாரின் பேரன். இது புத்தரின் போதனைகளையும், இந்திய கலாசாரத்தையும் மையமாக வைத்து புனையப்பட்ட நாவல். இதில் வரும் முக்கிய கதாபாத்திரமான சித்தார்த்தன் பிராமண குடும்பத்தில் பிறந்து, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டாலும், அவன் மனம் […]

Read more

அவ்வையார் நூல்கள்

அவ்வையார் நூல்கள் (ஆங்கில மொழியாக்கத்துடன்), செ. நாராயணசாமி, சுரா பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. நூலாசிரியர் கொங்கு நாட்டினர். குறையாத கல்வி நிரம்பியவர். அறிவியல், கணக்கு, தொழில்நுட்பம் ஆய்ந்து தேர்ந்தவர். இந்த நூலில் அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, கல்வியில் ஒழுக்கம், அவ்வைக்குறள், பிள்ளையார் அகவல், தனிப்பாடல் என, கிடைத்தவற்றைத் தொகுத்து, அந்த அடி அல்லது பாடலுக்குப் பொருள் விரிவுரை எழுதியும், மூலத்தை ஆங்கிலத்தில் எழுத்தாக்கம் செய்தும், ஆங்கில விளக்கமும் தந்து நூலை ஆக்கியுள்ளார். அவையார் பலர் வாழ்ந்திருந்தனர். சங்ககால அவ்வை […]

Read more

சித்தார்த்தா ஓர் ஆய்வு

சித்தார்த்தா ஓர் ஆய்வு, சுரா பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. சித்தார்த்தன் என்பது புத்தரின் இயற்பெயர். எனினும் இது புத்தரின் வாழ்க்கை வரலாறு அல்ல. புத்தர் காலப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். இதை எழுதியவர் ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்லி. இந்த நாவல் 1946ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றது. நான் விரும்பும் புத்தகங்கள் என்ற தலைப்பில் ஓஷோ ஒரு புத்தகம் எழுதினார். அதில் தன்னை மிகவும் கவர்ந்த நாவல் என்று சித்தார்த்தாவைக் குறிப்பிடுகிறார். அவரைப்போலவே இந்த நாவலில் மனதைப் பறிகொடுத்த சுரானந்தா, […]

Read more

அவ்வையார் நூல்கள்

அவ்வையார் நூல்கள், செ. நாராயணசாமி, சுரா பதிப்பகம், சென்னை, பிக். 336, விலை 150ரூ. சங்க காலம் தொடங்கி இன்று வரையிலான தமிழ்ப் பெண்பால் புலவர்களில் அவ்வைக்கு நிகர் யாரும் இல்லை என்று கூறலாம். ஆனாலும் அவ்வையார் ஒருவர் அல்ல, இப்பெயரில் வெவ்வேறு காலங்களில் நான்கு அவ்வையார்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஒருவர் சங்க காலத்து அவ்வையார். இவர் பாடியுள்ள 59 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் உள்ளன. இரண்டாவது அவ்வையார் இறைப்பற்றாளர். விநாயகர் அகவல் போன்ற பக்திப் பாடல்களைப் பாடியவர். மூன்றாவது அவ்வையார் ஆத்திசூடி, […]

Read more

வடகரை

வடகரை, டாக்டர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். அகநி, வந்தவாசி, விலை 400ரூ. ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் மு. ராஜேந்திரன் எழுதியுள்ள வடகரை என்ற ஒரு வம்சத்தின் வரலாறு நூல். அவரது குடும்பத்தினரின் 600 ஆண்டு வம்ச வரலாறு மட்டுமல்ல, தென் மாவட்டங்களின் குறிப்பாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி போன்ற மாவட்டங்களின் கலாச்சார வரலாறு. ஏதோ காதில் விழுந்த செய்தியாக எழுதாமல் 600 ஆண்டு சம்பவங்களையும், ஆதாரத்தோடு அத்தனை விவரங்களையும் திரட்டி எதையும் ஒளிக்காமல் எழுதியிருக்கிறார். குடும்பங்களில் இன்று இழந்து கொண்டு இருக்கும் பாசப்பிணைப்புகள் […]

Read more

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு, டாக்டர் லக்ஷ்மி விஸ்வநாதன், சுரா பதிப்பகம், சென்னை, விலை 110ரூ. எல்லா நோய்களுக்கும் மூல காரணம் மனக்கவலையே. இது அதிகரிக்க அதிகரிக்க அது மன அழுத்த நோயாக உருமாறுகிறது. இந்த மன அழுத்தம் உருவாக பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதில் முதன்மையானது, தாழ்வு மனப்பான்மையே. இதை வெற்றி கொள்ள எதையும் ஆக்கபூர்வமாக சிந்திக்கும் தன்னம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொள்வது மிக அவசியம் என்பது மனநல மருத்துவர்களின் கருத்தாகும். நற்சிந்தனை மற்றும் நல்ல செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் இந்த தன்னம்பிக்கையைப் பெற […]

Read more

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு, சுரா பதிப்பகம், சென்னை, விலை 110ரூ. நம்மில் பலர் மிக அழகான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். ஆனால் துயரங்களால் மனதை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். மன அழுத்தங்களை மாற்றி மகிழ்வுடன் வாழ நீங்கள் ஒன்றை மட்டும்தான் செய்யவேண்டும். அது உங்களை நீங்களே சீர்திருத்திக் கொள்வதுதான். இதனை மையமாக வைத்து நூலாசிரியர் டாக்டர். லட்சுமி விஸ்வநாதன் 400 சிறிய தலைப்புகளில் எளிய நடையில் கூறியிருப்பது நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம், […]

Read more

சிறுவாடு

சிறுவாடு, மாலிறையன் (இரா. கிருட்டிணமூர்த்தி), சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. மரபுக் கவிதை நூல்கள் அரிதாகி வருகிற இன்றைய நிலையில் பல விஷயங்களை பாடுபொருளாகக் கொண்ட சிறுவாடு கவிதை நூலைப் படைத்திருக்கிறார் கவிஞர் மாலிறையன். பாடல்கள் அனைத்திலும் இயல்பான சந்தமும், அழகும் கொஞ்சுகின்றன. கவிஞரின் தமிழ்ப் பற்றை நூல் முழுவதும் காண முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 23/4/2014.   —- காணாமல் போன கவிதைகள், தங்கத்தாய் பதிப்பகம், புதுக்கோட்டை, விலை 140ரூ. பஞ்சபூதம், ஆறாம் அழிவு, இரக்கத்தின் சிலுவைகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் […]

Read more

ஏன் எதற்கு

ஏன் எதற்கு, டி.வி. பாலசர்மா, நர்மதா பதிப்பகம், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-640-6.html திருநீற்றின் மகிமை என்ன? ஜபத்தினால் என்ன பயன்? வழிபாட்டு தத்துவம் என்ன? இவை போன்ற ஆன்மிக சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் புத்தகம். மொத்தம் 350 கேள்விகளுக்கு பதில்கள் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/4/204.   —- டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சுரா பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. எழுத்தாளர் செ. சசிகலாதேவி, 25 தலைப்புகளில் சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை […]

Read more
1 2 3