விழித்தெழுக என் தேசம்

விழித்தெழுக என் தேசம், சி.ஜெயபாரதன், தாரிணி பதிப்பகம், விலை 250ரூ. அறிவியலாளரும், கவிஞருமான சி.ஜெயபாரதன் (கனடா) எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். “தாரணி எங்கும் நீர், நிலம் நெருப்பு, வாயு, வானமாகிய பஞ்ச பூதங்கள் ஆயுதங்களாய் மாறிக் கோர வடிவத்தில் பேரழிவு செய்யும்” என்ற வரிகள் புவி வெப்பமாதலின் அத்தனை அழிவுகளையும் கோடிட்டுக் காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 27/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அசையா சொத்து

அசையா சொத்து, கவிஞர் ஆ. முரகரசு, கவிஞர் பதிப்பகம், பக் 142, விலை 100ரூ. சமூக அக்கறை சார்ந்த கவிதைகளின் தொகுப்பு. சமூக அநீதிகளை சூடான வார்த்தைகளால் குட்டுவது பொருத்தம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.   —- மாறிச் செல்லும் மாற்றங்கள், ஜி.கே. தமிழ்ச்செல்வி, தாரிணி பதிப்பகம், பக். 132. விலை 100ரூ. மாற்றுத் திறனாளிகளின் கூக்குரல் வெளியே கேட்பதில்லை. அதை கேட்கச் செய்யும் முயற்சியே இந்நூல். மாற்றுத் திறனாளியின் சொந்த அனுபவங்கள் இவை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/4/2016.

Read more

உன்னை நீ மறந்ததேன்?

உன்னை நீ மறந்ததேன்?, அ. கீதன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 168, விலை 100ரூ. ஒரு தனிமனிதனின் வாழ்க்கைத் தேடல்கள், சவால்கள், ஆன்மிக விழிப்புணர்ச்சி இவை யாவும் ஒரு மனோதத்துவ நிபுணரின் எழுத்துக்களாக பிரதிபலிக்கின்றன. நன்றி: குமுதம், 28/3/2016.   —- பள்ளு இலக்கியமும் சமுதாயப் பார்வையும், முனைவர் அகிலா சிவசங்கர், தாரிணி பதிப்பகம், பக். 220, விலை 250ரூ. 17,18ம் நூற்றாண்டின் உழவர்கள், அவர்களின் உழைப்பு, களிப்பு, பக்தி என்று கழிந்த அவர்களின் வாழ்க்கை முறைக்கே உரிய நெறிமுறைகளை எடுத்துக்காட்டும் ஆய்வு நூல். […]

Read more

கம்பரும் வால்மீகியும்

கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தமிழை மறக்காத தமிழர் அரிசோனா மகாதேவன். கம்பனில் தோய்ந்தவர். அதேநேரம், வடமொழியிலேயே வால்மீகியையும் வாசித்தறிந்தவர். எனவே, வால்மீகியிலிருந்து எங்கெல்லாம் கம்பன் வித்தியாசப்படுகிறான், மூலக்கதையின் சம்பவங்களை தமிழ்ப்பண்பாடு கெடாமல் எப்படியெல்லாம் மாற்றி உருவகப்படுத்துகிறான் என்ற அருமையான ஒப்பீட்டு நோக்கில், தாம் ஆய்ந்து தெளிந்த விஷயங்களை, நான்கு கட்டுரைகளில் வடித்தெடுத்து வழங்கியுள்ளார். அகலிகை சாபவிமோசனம், ராமன் – சீதை முதல் சந்திப்பு, வனவாச காலத்தில் நிகழ்ந்த மாயமான் காணல், […]

Read more

தேவனின் திருப்பாடல்கள்

தேவனின் திருப்பாடல்கள், நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா, அருவி வெளியீடு, விலை 400ரூ. விவிலியத்தில் தாவீது மன்னன் பாடியதாகச் சொல்லப்படும் சங்கீத பாகத்தை மூலமாகக் கொண்டு இக்கவிதைத் தொகுப்பு எழுதப்பட்டுள்ளது. விவிலியம் தோன்றிய காலத்தில் இருந்து இப்படியோர் கவிதைத் தொகுப்பு உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி, இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் போன்ற இசை அமைப்பதற்கு ஏற்றவாறு பாடல்களை இயற்றியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 5/10/2015.   —- கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. பாரதநாட்டின் […]

Read more

முக்கோணக் கிளிகள்

முக்கோணக் கிளிகள், சி.ஜெயபாரதன்(கனடா), தாரிணி பதிப்பகம், சென்னை, பக். 92, விலை 75ரூ. முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணலாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இம்முக்கோணக் காதல் கதை படக் கதையாக நூல் வடிவம் பெற்றுள்ளது. கனடா எழுத்தாளர் சி. ஜெயபாரதன், சிவா-சித்ரா-அவள் தாய் புனிதா ஆகியோரின் முக்கோணக் காதலில் ஜெயிப்பது யார்? என்ன காரணம்? அது சரியா? என்பதை சுவைபட எழுதியுள்ளார். ஓவியர் தமிழின் ஓவியங்கள் கதைக்கு உயிரூட்டுகின்றன. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/6/2015.   —- மனஅலசல், க. செல்லப் […]

Read more

கம்பரும் வால்மீகியும்

கம்பரும் வால்மீகியும், அரிசோனா மகாதேவன், தாரிணி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ.   To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024576.html வெளிநாட்டு வாழ் தமிழரான இந்நூலாசிரியர், இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றின் மீது தனக்குள்ள ஈடுபாடு எத்தகையது என்பதை இந்நூலின் மூலம் உணர்த்தியுள்ளார். வடமொழியில் ராமாயணத்தை படைத்த வால்மீகிக்கும், அதை தமிழில் உருவாக்கிய கம்பருக்கும் ஆயிரக்கணக்கான வருட இடைவெளியுண்டு. ஆயினும், இவ்விருவரின் கவித் திறனும், கற்பனைத் திறனும் கற்றோரால் இன்றும் ஒப்பிட்டுப் புகழப்படுகிறது. இந்நூலாசிரியரும் அந்த ஒப்பீட்டு […]

Read more

ஜோன் ஆஃப் ஆர்க்

ஜோன் ஆஃப் ஆர்க், தமிழில் சி. ஜெயாரதன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. உயிருடன் எரிந்த உத்தமப் பெண்மணி என்றைக்குமே பெண்கள் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும் போராடும் குணமுள்ளவர்களை விட்டு வைப்பார்களா என்ன? பதினைந்தாம் நூற்றாண்டில், தன்னுடைய பத்தொன்பது வயதில், பிரிட்டனுடன் மோதிப் பிரான்சு நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டான் ஜோன் ஆஃப் ஆர்க். அவளைச் சூனியக்காரி என்று முத்திரை குத்தி உயிரோடு எரித்துக் கொன்றது ஆண்களின் அதிகார வர்க்கம். பிற்காலத்தில், 1920ம் ஆண்டில் இந்தப் பெண்மணிக்குக் கிறிஸ்துவத் திருச்சபையினரால் புனிதப் பெண்மணி என்ற […]

Read more

கோரா

கோரா, தாகூர், சாகித்திய அகாதெமி, சென்னை, விலை 350ரூ. தாகூர் எழுதிய நாவல் கோரா கோரா என்னும் இந்நாவல் இரவீந்திரநாத் தாகூரின் உலகப் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். நாடு, சாதி, மதம், ஆண் பெண் உறவுகள் மற்றும் முற்போக்கு, பிற்போக்குச் சிந்தனைகள் என வாழ்க்கையின் அடிப்படை அடையாளச் சின்னங்களை அலசி, ஆராய்ந்து, வெளிச்சம் போட்டுக்காட்டி நம்மைச் சிந்திக்க வைக்கும் ஒரு மகத்தான நாவல் இது. வங்க மொழியில் தாகூர் எழுதிய நாவல் மகர்ஜியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அந்த மொழிபெயர்ப்பிலிருந்த தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார் […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 500ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-229-9.html வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்தும் தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் வையவன். வைரமணிக் கதைகள் என்ற பெயரில் வந்திருக்கும் அவரது 497 பக்க சிறுகதைத் தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் புரியும் உண்மை இது. தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த கூர்ந்த கவனிப்பு. இது சரி-தவறு என்பது குறித்த தெளிவான நிலைபாடு, சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான […]

Read more
1 2