நீதி நூல்கள்

நீதி நூல்கள், சி. நிவேதா, ஆர்.ஆர். நிலையம் வெளியீடு, விலை 40ரூ. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, உலக நீதி, நன்னெறி ஆகிய நீதிநூல்களின் மூலமும், உரையும் கொண்ட புத்தகம். சிறிய நூல் என்றாலும், மிகப் பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- உலகின் முதல் சாதனைகள், சா. அனந்தகுமார், பூங்கொடி பதிப்பகம், விலை 50ரூ. பொதுவாக மாணவ-மாணவிகளும் பொதுப்பரீட்சை எழுதுபவர்களும் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களை கேள்வி – பதில் ரூபத்தில் கொடுத்துள்ளார் சா. அனந்தகுமார். மொத்தம் 1012 கேள்வி […]

Read more

சித்தர் பாடல்கள் பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்கள்,

சித்தர் பாடல்கள் பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்கள், புலவர் அடியன்மணிவாசகன், சங்கர் பதிப்பகம், விலை 240ரூ. பட்டினத்தாரின் பைந்தமிழ்ப் பாடல்களையும், அவற்றுக்கான உரை விளக்கமும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்ட நூல். ஒவ்வொரு பாடல்களிலும் பொதிந்துள்ள இன்பத்தை நாம் பாடல்களை படிப்பதன் மூலம் அனுபவிக்க முடியும். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- தேடல், எஸ். கண்ணன், திருவரசு புத்தக நிலையம், விலை 80ரூ. அனைவருக்கும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்ட 23 சிறுகதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Read more

மாந்தரீகச் சித்தர்கள்

மாந்தரீகச் சித்தர்கள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 75ரூ. பதினெண் சித்தர்கள் பற்றி இந்த ஒரே புத்தகத்தில் முழு விவரங்களையும் கொடுத்துள்ளார் ஜெகாதா. மச்சமுனி, சட்டமுனி, அகப்பைமுனி ஆகியோருக்கு தலா 10 மனைவிகள். குதம்பை, தன்வந்தரி ஆகியோருக்கு தலா 16 மனைவிகள். போகருக்கு மனைவியரும், குழந்தைகளும் ‘கணக்கில் அடங்காதவர்கள்’ என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். சித்தர்களின் தாய், தந்தை, குரு, சாதி, தலைமுறை, பிறந்த நட்சத்திரம் முதலிய விவரங்களம் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Read more

அதிர்வுகள்

அதிர்வுகள், இலங்கை ஜெயராஜ், விகடன் பிரசுரம், விலை 160ரூ. இலங்கையில் புகழ் பெற்ற தமிழறிஞர் ஜெயராஜ். தலைசிறந்த பேச்சாளர், “கம்வாருதி” என்று புகழ் பெற்றவர். அவர் எழுதிய சிறந்த கட்டுரைகள் கொண்ட இந்த புத்தகத்தை, சிறந்த பெக்கிஷம் என்று கூறினால் அது மிகையல்ல. சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளும், மெய்சிலிர்க்கச் செய்யும் கட்டுரைகளும், நெஞ்சை ஊடுருவும் கட்டுரைகளும் பொன்னும் வைரமுமாக ஜொலிக்கின்றன. கம்பவாருதி ஜெயராஜின் பேச்சைக் கேட்டு மயங்கியவர்கள், இந்தக் கட்டுரையைப் படித்தால் நெகிழ்ந்துவிடுவார்கள் என்பது நிச்சயம். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Read more

108 தென்னக சிவஸ்தலங்கள்

108 தென்னக சிவஸ்தலங்கள், பொன்னம்மாள், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 250ரூ. எந்நாட்டவருக்கும் இறைவனாகி, தென்னகத்தை தன்னகத்தாய் கெண்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அனைத்தினையும் தனதாக்கிக் கொண்ட சிவபெருமானுக்கும் நம் முன்னோர்களால் எண்ணற்ற சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. அவைகளில் பிரதானமான 108 சிவாலயங்களைப் பற்றிய முழு விவரங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான கோவில்களோடு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலுள்ள புகழ்பெற்ற கோவில்களும், பின் இணைப்பாக காசி, கேதாரேஸ்வர கோவில்களும் ஸ்தல புராணம், ஆலய அமைப்பு, அமைவிடத்தோடு அரிய […]

Read more

அதிசயங்களின் ரகசியங்கள்,

அதிசயங்களின் ரகசியங்கள், நெய்வேலி பாரதிக்குமார், தினத்தந்தி பதிப்பகம், விலை 160ரூ. உலகில் இறைவன் படைத்த அதிசயங்கள் ஒருவகை, மனிதன் உருவாக்கிய அதிசயங்கள் இன்னொரு வகை. உலக அதிசயங்கள் குறித்தும், அதில் புதைந்து கிடக்கின்ற ரகசியங்கள் பற்றியும் அதில் புதைந்துகிடைக்கின்ற ரகசியங்கள் பற்றியும் எழுத்தாளரும், பொறியாளருமான நெய்வேலி பாரதிக்குமார், தினத்தந்தி முத்துச்சரம் பகுதியில், ‘அதிசயங்களின் ரகசியங்கள்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார். பல சுவாரஸ்யமான வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கிய இந்தக் கட்டுரைத் தொடர் வாசகர்களின் அபரிமிதமான ஆதரவைப் பெற்றது. தொடராக வந்ததைக் காட்டிலும் […]

Read more

1000 செய்திகள் (பாகம் 1)

1000 செய்திகள் (பாகம் 1), முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ. 1000 செய்திகளை (சிறிய துணுக்குகள்) 4 புத்தகங்களாக வெளியிட ‘முக்தா’ சீனிவாசன் முடிவு செய்து, அதில் முதல் புத்தகத்தை (247 செய்திகளுடன்) கொண்டு வந்துள்ளார். பாராட்டத்தக்க முயற்சி. படங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நலம். உதாரணமாக 25-வது பக்கத்தில் நாமத்துடன் காட்சியளிப்பவர் எஸ்.ஏ.பி. அல்ல. நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

Read more

பிம்பச் சிறை

பிம்பச் சிறை, பாண்டியன், தமிழில் பூ.கொ. சரவணன், பிரக்ஞை பதிப்பகம், விலை 225ரூ எம்.ஜி.ஆர். பற்றிய ஆய்வு நூல் தமிழ்நாட்டில் முதலில் சினிமாவிலும், பிறகு அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் எம்.ஜி.ஆர். அவரைப்பற்றி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஆய்வு செய்து, ஆங்கிலத்தில் எழுதிய நூல், இப்போது தமிழில் “பிம்பச் சிறை” எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும், அரசியலிலும் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. தமிழில் மொழி பெயர்த்தவர் பூ.கொ. சரவணன். திரை உலகில் எம்.ஜி.ஆர். பெற்ற வெற்றியை விரவாகக் கூறும் பாண்டியன், அவருடைய […]

Read more

என். கிருஷ்ணசாமி-படிக்காத மேதை பட அதிபரின் வாழ்க்கை வரலாறு

என். கிருஷ்ணசாமி, படிக்காத மேதை பட அதிபரின் வாழ்க்கை வரலாறு, கலைஞன் பதிப்பகம், விலை 130ரூ. சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று “படிக்காத மேதை”. பல கட்டங்களில், படம் பார்ப்பவர்களின் கண்களை கலங்கச் செய்து விடுவார் சிவாஜி. அந்தப் படத்தை தயாரித்தவர் “பாலா மூவிஸ்” என். கிருஷ்ணசாமி. படத்தைத் தயாரிக்கவும், ரிலீஸ் செய்யவும் அவர் எதிர்நீச்சல் போட வேண்டி இருந்தது. படம் பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்த போதிலும், அதனால் லாபம் அடைந்தவர்கள் விநியோகஸ்தர்கள்தான். என்.கிருஷ்ணசாமி வேறு பல சாதனைகளுக்கும் சொந்தக்காரர். […]

Read more

லீ குவான்யூ சிங்கப்பூரின் சிற்பி

லீ குவான்யூ சிங்கப்பூரின் சிற்பி, எஸ்.எஸ்.வி, மூர்த்தி, கிழக்கு பதிப்பகம், விலை 250ரூ. இன்று சிங்கப்பூர் ஒரு சொர்க்கபுரியாக மாறி இருக்கிறதென்றால் அதற்கு ஒரே காரணம் லீ குவான் யூ. அந்த நாட்டின் பிரதமராக இருந்த அவர், தரமான கல்வி, நல்ல வாழ்க்கைத்தரம், வலுவான பொருளாதாரம், ஒழுங்கு, தூய்மை என உலகத்துக்கே ஒரு முன்மாதிரி நாடாக சிங்கப்பூரைக் கட்டமைத்தார். அவரது மன உறுதி, தொலை நோக்குப் பார்வை, திட்டமிடும் திறன் ஆகியவற்றை உலகமே வியந்து பாராட்டுகிறது. அத்தகைய லீ குவான் யூ வரலாற்றை, சிங்கப்பூரின் […]

Read more
1 86 87 88 89 90 223