கனவோடு நில்லாமல்

கனவோடு நில்லாமல், முனைவர் ஜெ. சதக்கத்துல்லாஹ், வானதி பதிப்பகம், விலை 150ரூ. இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான மண்டல இயக்குநர் முனைவர் ஜெ. சதக்கத்துல்லாஹ். மிக சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவராலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பதற்கு இவர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. தனது வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், அதைச் சாதனைகளாக மாற்றிய நிகழ்வுகளையும் அவர் இந்த நூலில் எளிய இனிய நடையில் சுவையாக விவரித்துள்ளார். இளம் வயதில் தந்தையை இழந்த அவர், தன் கல்வியைத் தொடர பட்ட பெரும்பாடுகளையும், […]

Read more

அச்சம் தவிர்

அச்சம் தவிர், வெ. இறையன்பு, ஸ்ரீ துர்க்கா பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. பொதுவாக மாணவ – மாணவிகள் எல்லோருக்கும் உள்ள ஒரு பெரிய மனக்குறை, ‘நான் ஆண்டு முழுவதும் நன்றாக படிக்கிறேன். ஆனால் தேர்வு எழுத போகும்போது மட்டும் என் கை கால்கள் நடுங்குகின்றன. நான் ஏற்கனவே படித்தவை எல்லாம் மறந்துவிடுகின்றன. மதிப்பெண்களும் நான் எதிர்பார்த்த அளவு எனக்கு கிடைக்கவில்லை. நான் என்ன செய்வேன்’ என்று கவலைப்படுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் தேர்வின் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம். அந்த அச்சத்தை தவிர்க்க என்ன வழிமுறையை […]

Read more

பொய்கைக்கரைப்பட்டி

பொய்கைக்கரைப்பட்டி, எஸ். அர்ஷியா, புலம், விலை 130ரூ. ஏழை விவசாயிகளின் நிலங்களை லாபநெறி கொண்ட மனிதர்களால் அபகரிக்கப்பட்டு, சமூகத்தின் சொத்துடமையாளர்களிடம் மறுபங்கீடு செய்கிற அவலநிலையை சமகாலத்தின் அதிர்வுகளோடு எழுதப்பட்ட நாவலாகும். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.   —- ஒரு சாமானியனின் பார்வையில் கம்பன், மணிமேகலைப் பிரசுரம், விலை 120ரூ. தன் வாழ்வில் எப்போதோ நடந்த நிகழ்வுகளையும், சமூக நிகழ்வுகளையும் கம்பன் பாடலுடன் கொண்டு வந்து பொருத்திப் பார்த்து இந்நூலை படைத்துள்ளார் அந்தமான் கிருண்ணமூர்த்தி. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

இவர்தாம் பெரியார்

இவர்தாம் பெரியார், 8.திருமணம், புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், விலை 70ரூ. பெரியார் வரலாறு தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை “இவர்தாம் பெரியார்” என்ற தலைப்பில் தொடர்ந்து புத்தகங்களாக புலவர் நன்னன் எழுதி வருகிறார். எட்டாவது புத்தகம், “திருமணம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. திருமணம் என்றால் அது பெரியாரின் திருமணம் பற்றியது அல்ல. பல்வேறு திருமணங்கள் பற்றி பெரியார் வெளியிட்ட அறிக்கைகளும், நிகழ்த்திய சொற்பொழிவுகளும் கொண்டது. மாதிரிக்கு ஒன்று- 24/2/1932-ல் “குடியரசு” பத்திரிகையில் பெரியார் வெளியிட்ட அறிக்கை: “புதுவை முரசு” ஆசிரியர் தோழர் பொன்னம்பலனார் […]

Read more

வாழ்வை வளமாக்கும் பூஜை விரதமுறைகள்

வாழ்வை வளமாக்கும் பூஜை விரதமுறைகள், தினத்தந்தி பதிப்பகம், விலை 180ரூ. விரதமும், பூஜையும் இந்து மதத்தின் இரு கண்கள். மனிதன் முழுமையாக வாழ்வதற்கும், உயிர்கள் ஆனந்தமாக வாழ்வதற்கும் விரதங்கள் இன்றியமையாதவை. ஜம்புலன்களை அடக்கி இறைவனிடம் சரணாகதி நிலையை அடைய விரதங்கள் உதவுகின்றன. இந்த நூலில் துன்பங்கள் நீங்க, செல்வம் பெருக, திருமணத் தடை நீங்க, தம்பதியர் ஒற்றுமை ஓங்க, குழந்தை வரம் கிடைக்க, கல்வி சிறக்க, தொழில் தடைகள் நீங்க, பகை விலக, நவக்கிரக தோஷம் நீங்க, தீர்க்க சுமங்கலி வரம் அருள, எதிரிகளை […]

Read more

ராமச்சந்திர ரகசியம்

ராமச்சந்திர ரகசியம், குமரவேல்,முல்லை பதிப்பகம், விலை 150ரூ. எம்.ஜி.ஆரின் சித்தாந்த சிறப்பை, பண்பாற்றைல பலர் சொல்ல மறந்த நுட்பங்களை எடுத்துக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர் வே. குமரவேல். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.   —-   நின்று ஒளிரும் சுடர்கள், உஷா தீபன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 130ரூ. சிவாஜி கணேசன், எஸ்.வி. ரங்காராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, நாகேஷ் உள்பட 11 நடிகர்களின் சிறப்பை வர்ணிக்கும் நூல். எம்.ஜி.ஆர். பற்றியும் எழுதி இருக்கலாமே. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

உபசாரம்

உபசாரம், சுகா, தடம் பதிப்பகம், விலை 130ரூ. திரைப்பட இயக்குனரும், பாலுமகேந்திராவின் மாணவருமான சுகா, பல்வேறு தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள் அடங்கிய புத்தகம். சொல்ல விரும்பும் விஷயத்தை தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்கிறார் “தூங்காவனம்” படத்துக்கு வசனம் எழுதியவர் அல்லவா? எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு பற்றியும், இறுதிச் சடங்கு பற்றியும் எழுதியுள்ள கட்டுரை உள்ளத்தை உருக்குகிறது. மயானத்தில் கூடியிருந்தவர்கள் சுமார் நூறு பேர்தான் என்பதை படிக்கும்போது நெஞ்சம் கனக்கிறது. எனினும், “மகாகவி பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை விட சுமார் 6 மடங்கு அதிகம்தான்” […]

Read more

ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட்

ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட், நியாண்டர் செல்வன், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலை ரூ.150. ஆராக்கியத்தோடு வாழ வேண்டுமானால் தற்போதைய உணவு முறையை மாற்றி, ஆதிமனிதன் சாப்பிட்ட உணவுக்கப் போக வேண்டும் என்கிறார் “பேலியோ டயட்” நூலின் ஆசிரியர் நியாண்டர் செல்வன். அவர் கூறுகிற உணவு – காலையில் 10 பாதாம் கொட்டைகள், மதிய உணவு 4 முட்டைகள். மாலை சிற்றுண்டி ஒரு கோப்பை பாலுடன் கால் கிலோ காய்கறிகள். இரவு உணவு பசி அடங்கும் வரை இறைச்சி. நன்றி: தினத்தந்தி, […]

Read more

அப்துல்கலாம் ஒரு சகாப்தம்,

அப்துல்கலாம் ஒரு சகாப்தம், ம. வசந்த், மணிமேகலைப் பிரசுரம், விலை 60ரூ. தனி மனித ஒழுக்கம், பெரியோர்களை மதிக்கும் பண்பு, கடமை உணர்ந்து செயல்படுதல், எப்படிப்பட்ட உச்ச நிலைக்குச் சென்றபோதும் பணிவையே தன் துணையாகக் கொண்டவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். அவரைப் பற்றிய புகழ்ப்பாக்களைக் கவிதை வடிவில் ஆக்கியுள்ளார் ம. வசந்த். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- நல்லகாலம் பிறக்குது, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ. ஊரில் அக்கிரமங்கள் செய்யும் மூன்று அயோக்கியர்களை, கதாநாயகன் கிறிஸ்தவ குருமார் வேடத்தில் […]

Read more

தமிழர் சமூக வாழ்வு

தமிழர் சமூக வாழ்வு, இர. ஆலாலசுந்தரம், தமிழில் ம. இளங்கோவன், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 260ரூ. தமிழர்களின் மூத்த குடிகள் – மூதாதையர் பற்றிய அடையாளங்களை இந்த நூல் வாயிலாக அறிந்து கொள்ளும் வகையில் பல அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- 1000 செய்திகள், முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ. பட அதிபர் “முக்தா” சீனிவாசன், 1000 செய்திகளை (தகவல்கள்) தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டு, ஏற்கனவே முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். 2-வது, 3-வது , […]

Read more
1 85 86 87 88 89 223