உரிமைக்குரல்

உரிமைக்குரல், சுந்தரம் வெளியீடு, விலை 350ரூ. 2006-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 144-வது வட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சு.மங்களராஜ். அவர் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடுத்த உரிமைக்குரல்”களையும் அதற்காகமேயர் மா. சுப்பிரமணியன் அளித்த பதில்களையும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள நூல். அதன் விளைவு, சென்னை வாழ்மக்களுக்கு மட்டுமின்றி மாநகராட்சியை சார்ந்த பல்வேறு துறை ஊழியர்களும் பயன் பெற்றனர் என்பதை அறிய முடிகிறது. அத்தகைய ஜனநாயகம் மீண்டும் வருமா? நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

கேட்டதும் கிடைத்தது

கேட்டதும் கிடைத்தது, ‘பதின் கவனகர்’ இராமையா, தொகுப்பு கனகசுப்புரத்தினம், கற்பகம் புத்தகலாயம், விலை 150ரூ. இந்நூல் வினா- விடை வாயிலாகத் திருக்குறளுக்கு விளக்கம் அளிக்கிறது. சில வினாக்கள் வேடிக்கையாகக் கேட்கப்பட்டவைபோல் தோன்றினாலும் அதற்குரிய விடையை விளக்கமாகவும் பொருத்தமாகவும் தந்திருக்கிறார் பதின் கவனகர் இராமையா. கொம்புக்குறி இடம் பெறாத குறள் ஒன்றைக் கூறுமாறு கேட்க, அதற்கு 17 குறளைக் காட்டுகிறார் ஆசிரியர். அதேபோல் நீட்டலளவை, நிறுத்தல் அளவைக்கு ஒரு குறள், விதையில்லாப் பழம் உள்ள குறள், தோல்வியே வெற்றி ஆகின்ற குறள், ஐந்து உவமைகள் இடம் […]

Read more

இதய ஒலி

இதய ஒலி, பழனி ஜி. பெரியசாமி, வானதி பதிப்பகம், விலை 350ரூ. இன்று தமிழ்நாட்டின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக விளங்கும் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, சில காலத்துக்கு முன் அமெரிக்காவில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர். தமிழக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லவும், புரூக்களின் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகளை முன்நின்று செய்தவர். அதனால் எம்.ஜி.ஆர். இதயத்தில் தனி இடம் பெற்றவர். எம்.ஜி.ஆர். பற்றிய பல அபூர்வ தகவல்கள் இந்த நூலில் இடம் […]

Read more

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும்

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும், முனைவர் வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், விலை 110ரூ. சங்க இலக்கியங்கள், ஆழமான கருத்துக்களைக் கொண்டவை. அவற்றைப் படிப்போருக்கு பல ஐயங்கள் எழுவது இயல்பு. அந்த ஐயங்களைப் போக்கும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வாணி அறிவாளன். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

ஈழத்தில் தமிழ் இலக்கியம்

ஈழத்தில் தமிழ் இலக்கியம், கார்த்திகேசு சிவத்தம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 240ரூ. ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கட்டங்களையும், வெவ்வேறு காலநிலைகளில் வெளியான இலக்கிய ஆக்கங்களைப் பற்றிய நூல். பழமையான வரலாற்றை கொண்ட ஈழத்தமிழ் இலக்கியத்தை ஆழமாக ஆய்வு செய்து நூலாசிரியர் எழுதியிருப்பது பல்வேறு கட்டுரைகள் மூலமாக தெரிகிறது. இலக்கியப்படைப்புகள், ஈழத்துக் கவிதைப் போக்கு, நாடகங்களின் வகைகள், இலக்கிய விமர்சனம், இலக்கிய அரசியல் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய கருத்துகள் இதில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும், […]

Read more

ஆங்கிலத்தில் பாரதியார் பாடல்கள்

ஆங்கிலத்தில் பாரதியார் பாடல்கள், டாக்டர் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்ய அகாடமி, விலை 950ரூ. மகாகவி பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் சாகித்ய அகாடமி ஈடுபட்டுள்ளது. இப்போது முதல் பாகம் வெளிவந்துள்ளது. பெரிய அளவில் 636 பக்கங்கள். பாரதியாரின் கவிதைகளை உலக மக்கள் படித்து ரசிக்க இந்நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

தொண்டர் கோவே

தொண்டர் கோவே, வீ. செல்வராஜ், குமுதம் வெளியீடு, விலை 200ரூ. தொண்டர்கோவே என்றழைக்கப்படும் கோ. வேங்கடாசலபதியின் வாழ்க்கை வரலாற்ற நூல். அவரது வாழ்க்கை முழுவதும் சமுதாயத் தொண்டுகள் நிறைந்ததாகவே உள்ளது. காந்தியடிகளைப் போல அவரும் ஒரு சமுதாய விஞ்ஞானியாகத் திகழ்ந்திருக்கிறார். அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையை உற்று நோக்கினால் அவர் ஒரு பிறவித் தொண்ட என்ற உண்மையை அறிய முடிகிறது என விவரிக்கிறார் நூலாசிரியர் வீ. செல்வராஜ். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more

இளவரசியின் சபதம்

இளவரசியின் சபதம், அய்க்கண், திருவரசு புத்தகநிலையம், விலை 60ரூ. சங்க காலத்தில் ஒரு பெண்ணின் சபதம் பற்றிய ஒரு வரலாற்று நாவல். இதனை செய்தியாகவும், உவமையாகவும், சுவையோடும் நூலாசிரியர் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.   —-   மலரும் மனங்கள், கலைமாமணி ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன், கங்கை புத்தக நிலையம், விலை 100ரூ. ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை மீது ஈடுபாடு கொண்ட நூலாசிரியர், ஆன்மிகச் சிந்தனைகள், கடவுள் நம்பிக்கைக் கொள்கையை எளிய தமிழில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

அப்துல்கலாம் – ஒரு கனவின் வரலாறு

அப்துல்கலாம் – ஒரு கனவின் வரலாறு, சேவியர், அருவி வெளியீடு, விலை 250ரூ. ‘ஏவுகணை மனிதர்’ ‘மக்கள் ஜனாதிபதி’ ‘மாணவர்களின் நண்பன்’ ‘அணு விஞ்ஞானி’ போன்ற அடைமொழிகளால் அடைகாக்கப்பட்டவர் அப்துல் கலாம். அப்துல்கலாமுடைய புகழுக்கும் பெருமைக்கும் அவரது எளிமையும், பணிவும் நேர்மையுமே காரணம். இந்தப் பண்புதான் அவரை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வழிகாட்டியாக மாற்றியது. இன்றைய தலைமுறையும், அடுத்த தலைமுறையும் கலாமிடம் இருந்து எதைக் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ இந்த மூன்று பண்புகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத்தாஒர் சேவியர் இந்த நூலை […]

Read more

நா. முத்துகுமார் கவிதைகள்

நா. முத்துகுமார் கவிதைகள், பட்டாம்பூச்சி பதிப்பகம், விலை 225ரூ. கவிதையின் அனுபவ உலகத்தை அகம், புறம் என இரண்டாகப் பிரிக்கும் கோடு அத்தனை தெளிவானதல்ல. சமுத்திரமும் நிலமும் சந்திக்கும் கரை போன்றது அது. எளிய கருத்தாக்கங்களுடன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. வன்மமோ, புரியாத புதிரோ, புத்தகத்தை மூடிவிட்டு பொருள் தேடிப் புறப்படும் பயணமோ வேண்டியதில்லை. சித்திரம், சித்திரமாய் எழுதிப் போகிறார் நா. முத்துக்குமார். அருமையான நீரோட்டம் மாதிரி படிக்கும்போதே தெளிந்து உணரக்கூடியவை. அடர்த்தியாக, அடுத்தடுத்த பக்கங்களுக்கு தாவிப்போக எந்தத் தடையும் இல்லை. கவிதை எழுதுவது […]

Read more
1 83 84 85 86 87 223