துடியான சாமிகள்

துடியான சாமிகள், நா. இராமச்சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 292, விலை 240ரூ. நெல்லில் பதரைக் கலந்தோமோ? முக்கடல் சங்கமம் ஆகும் குமரி மாவட்டத்து கிராமக் கோவில்களில் நடக்கும் வில்லுப்பாட்டை, மிக விரிவாகக் கள ஆய்வு செய்கிறது இந்த நூல். வன்கொலை செய்யப்பட்டு தெய்வம் ஆக்கப்பட்ட நாட்டார் தெய்வங்களின் ஆறு கதைகள், ஆய்வு செய்யப்பட்டு, அதன் வழி வரலாறு, பண்பாடு, சமூகச் சூழல் ஆராயப்பட்டுள்ளன. கலப்பு மணமும், அதனால் எழும் சிக்கல்களும் முத்துப்பட்டன் கதை, மதுரைவீரன் கதை, சின்ன நாடான் கதையில் […]

Read more

கவுடலீயம் – பொருணூல்

கவுடலீயம் – பொருணூல், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், செண்பகா பதிப்பகம், பக். 664, விலை 400ரூ. கவுடல்யா, விஷ்ணு குப்தர் எனும் பெயர்களைக் கொண்டவர் சாணக்கியர். அவர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எனும் பொருள் நூலின் தமிழ் வடிவம்தான் கவுடலீயம். அர்த்தசாஸ்திரம் என்பது, பொருள் நூல் எனப்படும். இதன் மூன்று அதிகரணங்களைத் தமிழ் விளக்கவுரையுடன் பண்டிதமணி கதிரேச செட்டியார் படைத்துத் தந்துள்ளார். புலனடக்கத்தைத் துறவிக்கு உரியது என்று நாம் நினைப்போம். ஆனால் புலனடக்கம், மன்னனுக்கும் தேவை என்று உணர்த்தியுள்ளார் சாணக்கியர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவன், தொடுக்கப்பட்டவன் […]

Read more

நதி மூலம்

நதி மூலம் (நாவல்), விட்டல் ராவ், விஜயா பதிப்பகம், பக். 392, விலை 225ரூ. தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான நாட்களை, இந்த நாவல் பதிவு செய்கிறது. நீலனோ, காலனோ என்று அந்நாள் ஜனங்கள் சொல்லி நடுங்குமாறு, இந்தியர்களைக் கொன்று குவித்த, லெப்டினென்ட் கர்னல் நீல் துரையின் சிலை அகற்றும் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு மறியல், வாணிவிலாஸ் தியேட்டரில், வள்ளி பரிணயம் நாடகத்தில் மிஸ். ரத்னாபாய், பண்டித ஜவஹர்லால் நேருவைப் பற்றிப் பாடும்போது போலீஸ் தடுப்பது, போன்ற பல சரித்திர நிகழ்வுகளை நாவல் […]

Read more

மக்கள் சமூகத்தின் மனசாட்சி

மக்கள் சமூகத்தின் மனசாட்சி, பாரதி வசந்தன், பழனியப்பா பிரதர்ஸ், பக். 200, விலை 150ரூ. வீரமாமுனிவரின் ஒப்பற்ற தமிழ்தொண்டு அனைவரும் அறிந்தது. இத்தாலியில் இருந்து இந்திய மண்ணில், கிறிஸ்தவப் பணிபுரிய வந்த தொண்டரான அவரது இயற்பெயர், கான்ஸ்தன்ஸ் ஜோசப் எசோபியோ பெஸ்கி என்பதே. தமிழில் வீரவளன் என்றும், தைரியநாதர் என்றும், பின் வீரமாமுனிவர் என்றும் மாற்றம் கண்டது. தூயமுனிவர், இஸ்மத் சந்நியாசி, மலர்களின் தந்தை, புறநிலைக் காப்பியனார், குளுந்தமிழ்ச் சாத்தன், தெருட்குரு, வீர ஆரியவேதியன், திருமதுரைச் செந்தமிழ்த்தேசிகன், ராஜரிஷி, குருசாமியார் என்ற பெயர்களாலும் அவர் […]

Read more

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள்

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள், ச. சுப்பராவ், பாரதி புத்தகாலயம், பக். 95, விலை 70ரூ. ஆங்கில நாவல்கள் குறித்து, புத்தகம் பேசுது இதழில், நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள், தொகுப்பாக வெளிவந்துள்ளன. திரில்லர் நாவல்களில் தனக்கென்று தனி இடம் பிடித்த, அமெரிக்க எழுத்தாளரான, ராபின் குக் எழுதிய முதல் நாவலே, சிறுநீரகத் திருட்டைப் பற்றிய கோமா. அடுத்து, மருத்துவத் துறையின் மோசடி குறித்து எழுதிய, டெத் பெனிபிட் நாவல். கிரைட்டனின் கதைகளை விவரித்து, தமிழில் விஞ்ஞானக் கதைகள் ஏன் அதிகளவில் வரவில்லை என்ற தன் ஆதங்கத்தையும் […]

Read more

2020 ஆண்டுக்கு அப்பால்

2020 ஆண்டுக்கு அப்பால், ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், ய.சு. ராஜன், தமிழில் சிற்பி, டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு, பக். 312, விலை 180ரூ. இந்த நூலை, கலாமின் இந்தியா 2020 என்ற நூலின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம். நூலின் தமிழ் வடிவத்தை பார்க்கும் முன்பே கலாம் காலமாகிவிட்டார். இதில் 2014ல் இந்தியா என்ற தலைப்பில் இருந்து, இந்தியாவில் முடியுமா? என்ற தலைப்பு வரை, மொத்தம் 15 பிரிவுகளில், விஷயங்கள் அலசப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, நான்கு குறிக்கோள்களை, நூலாசிரியர்கள் முன்வைக்கின்றனர். அவற்றின் விவரம் […]

Read more

நாட்டார் சிந்து கதைப் பாடல்கள்

நாட்டார் சிந்து கதைப் பாடல்கள், தொகுப்பாசிரியர் பா. சுபாஷ், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 240, விலை 160ரூ. கோவை, சேலம், ஈரோடு பகுதிகளில் நடந்த கொலைகள் பற்றிய, 14 பாடல்களைப் பதிவு செய்து, ஆய்வு நூலாக வழங்கிய நூலாசியர் முயற்சி பாராட்டிற்கு உரியது. கிராமியப் பழங்கலையை மீட்டுருவாக்கம் செய்கிறார் நூலாசிரியர். ஏறக்குறைய முற்றிலும் ஆதரவின்றி அழிந்து வருகிறது. இந்த தெருப்பாடல் கலை கொலைச்சிந்து. அம்மானை, கும்மி, வில்லுப்பாட்டு, உடுக்கடிப் பாட்டு போன்றவை குழுக்களாகப் பாடப்படுபவை. இந்த கொலைச்சிந்து, டேப் அடித்து தனியே நின்று பாடுவது. […]

Read more

ஸ்ரீமத் வால்மீகி இராமாயண இரத்தினங்கள்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயண இரத்தினங்கள், டி.எம்.சுந்தரராமன், திருவரசு புத்தக நிலையம், பக். 224, விலை 100ரூ. இந்திய திருநாட்டின் இரு கண்களாக ராமாயணம், மகாபாரதம் என்ற இரு இதிகாசங்கள் விளங்குகின்றன. வால்மீகியின் ராமாயணத்தில், முத்தான சில பகுதிகளை, இந்த நூல் தருகிறது. பரதனுக்கு ராமன் சொன்ன அறிவுரைகள், இன்றைக்கும் பொருந்துவதாக இருப்பதும் (பக். 10), நிதிக்குவியல் போன்ற நீதிக் கருத்துகளும் (பக். 13-39), மகாவிஷ்ணுவிற்கே சாபம் கிடைத்ததும் (பக். 64), வால்மீகி ராமாயணத்தில் வரும் பல பழமொழிகளும் (பக். 87 -93), எக்காலத்திற்கும் பொருந்தக் […]

Read more

நதிகள் இணைப்பு சாத்தியமா

நதிகள் இணைப்பு சாத்தியமா, குன்றில் குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 112, விலை 70ரூ. உ.பி., ஆந்திரா, கேரளா மாநிலங்களில் நதிகள் இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளதை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். நதிநீர் இணைப்பு திட்டம் பேரழிவு திட்டம் (பக். 68) என, ராகுலும், நதிகள் இணைப்பு என்பது ஒரு குப்பையான திட்டம் (பக். 70) என மேனகாவும் கூறியதை சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர். அதேநேரம் ஆந்திராவுக்கு தண்ணீர் தர ஒடிசாவும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கேரளாவும் விரும்பவில்லை. பீஹாரும், மேற்கு வங்கமும் கங்கை நீரை திசை […]

Read more

ஸ்காலர்சிப்

ஸ்காலர்சிப், ந. குமரன், போதி பதிப்பகம், திருப்பூர், பக். 302, விலை 250ரூ. கல்வி கடன் பெறுவது எப்படி? இணையத்தில் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் நமக்கு வேண்டியதை தேடித் தர கூகுள் இருக்கிறது. அதேபோல, அரசு மற்றும் தனியார் துறைகளில் மாணவ, மாணவியருக்குக் கிடைக்கும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் கல்விக் கடன்களைப் பற்றிய தகவல்களும், எட்டுத் திக்கும் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை தேடிப் பிடித்து தருகிறது இந்த நூல். இதுவரை தமிழில் இப்படி ஒரு விரிவான தொகுப்பு வராதது ஆச்சரியமே. ஒரு பக்கம் […]

Read more
1 154 155 156 157 158 240