உதிர்ந்த இலைகளின் பாடல்

உதிர்ந்த இலைகளின் பாடல், தமிழில் ப. கல்பனா, பரிசல் வெளியீடு, விலை 150 ரூ. 1999-ல் வெளியான கவிதைகள் என்னும் மொழிபெயர்ப்பு நூலின் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். மொழிபெயர்ப்பாளர் தமிழ் இலக்கிய மாணவியாக இருந்தபோது சீன இலக்கியம் எனும் காலாண்டிதழில் வாசித்த சீன கவிதைகளில் மனம் ஒன்றி 42 சீனக் கவிஞர்களின் 87 கவிதைகளையும், 6 நாட்டுப்புறப் பாடல்களையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். சீன மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வையும் அந்த நிலப்பரப்பையும் தனது மொழிபெயர்ப்பின் வழியாக மிக நெருக்கமாக தமிழ் வாசகர்களுக்கு கொண்டுவந்து […]

Read more

முதல் தலைமுறை மனிதர்கள்

முதல் தலைமுறை மனிதர்கள், சேயன் இப்ராஹீம், நிலவொளி பதிப்பகம், விலை 200 ரூ. முஸ்லிம் சமூகத்தில் பிறந்து குறிப்பிடத்தக்க ஆளுமைகளாக விளங்கிய 30 பேரின் வாழ்வை பற்றி விரிவான தொகுப்பு நூல் இது. அரசியல், கல்வி, சமூக சேவை எனப் பல தளங்களிலும் தங்களது சிறப்பான பங்களிப்பை செய்தவர்களின் அறிமுகமாக மட்டும் சுருங்கி விடாமல் அவர்களின் வாழ்வில் நடைபெற்றத சுவையான நிகழ்வுகளையும், அன்றைய கால தமிழக அரசியல் சூழலையும் இணைத்தெழுதியிருப்பது நூலுக்கு கூடுதல் அர்த்தத்தை தருகிறது. நன்றி: தி இந்து. 7/7/2018.   இந்தப் […]

Read more

ஆண்டாள் காவியம்

ஆண்டாள் காவியம், முனைவர் கோ. மா. கோதண்டம், மாணிக்கவாசகர் பதிப்பகம், விலை 125ரூ. நாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம், கவிதை என பல தளங்களிலும் எழுதிவரும் நூலாசிரியர், தெலுங்கு இலக்கியத்தின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றெனப் போற்றப்படும் கிருஷ்ண தேவராயர் எழுதிய ‘ஆமுக்தமால்யா‘ எனும் காவியத்தைத் தழுவி எழுதப் பட்டுள்ள கவிதை நூல் இது. தெலுங்கு காவியத்தில் வரும் துணைக் கதைகளையும் வர்ணனைகளையும் சற்றே குறைத்து, அனைவரும் படிக்கவேண்டுமென்கிற எண்ணத்தில் தமிழில் எளிய கவிதையாக்கித் தந்துள்ளார். நன்றி: தி இந்து, 7/7/2018.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் என்போர் யார்?

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் என்போர் யார்? திண்ணியத்தை முன்வைக்கிறது… ,பேராசிரியர் பி, எஸ், பன்னீர்செல்வம், மேன்மை வெளியீடு, விலை 400 ரூ. தமிழுக்கும் தலித்திய ஆளுமைகள் வழங்கிய பங்களிப்புகளையும் தலித்துகளின் கலாச்சார பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து தொடர்ந்து உரையாற்றி வருபவர் பேராசிரியர் பி.எஸ். பன்னீர்செல்வம். இந்த ஆய்வு நூலும் அவரது பயணத்தின் ஓர் அங்கமே. இந்த சமூகம் எதிர்கொள்ளும் அநீதியை எடுத்துச் சொல்வதாகவும், அதற்கான தீர்வை முன்னிறுத்துவதாகவும் இந்நூல் இருக்கிறது. திண்ணியம் சம்பவத்தை முன்வைத்து புறநானூற்றின் அடிப்படையில் உரையாடியிருக்கிறார் பி. எஸ். பன்னீர் […]

Read more

இருளர்களும் இயற்கையும்

இருளர்களும் இயற்கையும், முனைவர் இரா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  விலை 50 ரூ. இருளர் என்பது இருள் என்ற சொல்லுடன் தொடர்புடையது. காடுகளின் இருண்ட பகுதிகளில் வாழ்வதாலும், இந்த இனத்தை சேர்ந்தவர்கள் கறுப்பு நிறத்தில் இருப்பதாலும், இருளக்கிழங்குகளை உண்பதாலும் இந்தப் பெயரைப் பெற்றிருக்கிறார்கள் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள மொத்த பழங்குடி மக்களில் இருளர்கள் 25% தொன்மையான இருளர்களின் சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய அறிவு, அறிவார்ந்த சிகிச்சைத் திறன், தாவரங்கள் பற்றிய புரிதல் என சி.மஞ்சுளா மேற்கொண்ட ஆய்வின் தழுவல் […]

Read more

அன்பில் ஓங்கிய வையகம்

அன்பில் ஓங்கிய வையகம், தொகுப்பு ஸ்ரீரசா, வர்தினி, காலம் வெளியீடு, விலை 60 ரூ. ‘ஒருவரையொருவர் காதலியுங்கள். ஆனால் அது அடிமைத்தனம் ஆகிவிட வேண்டாம். உங்கள் ஆன்மாவின் கடலோரங்களுக்கிடையில் அசைந்து கொண்டிருக்கும் கடலாய் இருக்கட்டும் அது’ என்னும் கல்லில் ஜிப்ரானின் கவிதை வரிகளோடு தொடங்கும் இந்நூலில் அளவிலான நேயமும், வாழ்தலுக்கான இருப்பும் ஒன்றையொன்று பின்னிப் கொண்டிருப்பதன் அவசியத்தை சொல்லும் அழகான குறுங்கவிதைகள், சிறு கட்டுரைகள், சோவியத் நாட்டு சிறுகதை, கொஞ்சம் வரலாறு என கதம்ப மணம் வீசுகிறது. ‘உன் செயலே உன் நேசத்தின் அழகாய் […]

Read more

வாய்மொழி அல்ல வாழ்க்கை முறை

வாய்மொழி அல்ல வாழ்க்கை முறை, ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், விலை 250 ரூ. தமிழிலக்கிய வெளியில் கவிஞராக அறியப்பட்டவரின் 25 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நிகழ்காலத் தமிழ் சமூகம் அடைந்து வருகின்ற அவலங்களே என் கட்டுரைகளாக விரிந்துள்ளன என நூலாசிரியர் சொல்லுவது முற்றிலும் சரி என்பதை நூலின் அனைத்துக் கட்டுரைகளும் உணர்த்துகின்றன. வென்றால் தான் மக்கள் சேவையா?, வெற்றி முழக்கமா வெற்று முழக்கமா?, அறிவியலா அழிவியலா?, வேளாண்குடிகளின் மீது வணிகக் கொடிகள், மருத்துவத் துறைக்குச் சிகிச்சை தேவை உள்ளிட்ட கட்டுரைகளின் குரல்கள் சமூகத்தின் மனசாட்சியை […]

Read more

கீழடி மதுரை

கீழடி மதுரை, க த காந்திராஜன், கருத்து பட்டறை, விலை 50 ரூ. மதுரையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள், தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றியும் சமீபத்தில் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வு குறித்த தகவல்களையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற பேராவலின் விளைவே குறு நூல். தமிழகத் தொல்லியல் அகழாய்வுகள் ஒரு முக்கிய ஆதாரமாக அமைந்த கீழடி அகழாய்வில் கிடைத்த செங்கல் கட்டுமானங்கள், விலை உயர்ந்த அணிகலன்கள், உலோகம் ஆகியவை சுமார் 2000 முதல் 2, 500 ஆண்டுகள் முந்தைய தமிழர் நாகரிகத்தின் சாட்சியங்களாக […]

Read more

இரவு

இரவு, கலைச்செல்வி, என்சிபிஎச், விலை 140 ரூ. பிடித்த கதைகளில் சில ரகசியங்கள் கட்டவிழ்க்கப்பட்ட மேலும் மேலும் மர்மப் புன்னகையுடன் அவை நழுவிக் கொண்டு தான் இருக்கின்றன. அகமும் புறமுமான தேடல்களை கதைகள் ஆகி இருக்கிறேன் என்று சொல்லும் நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. இந்தக் கிளி கூண்டில் தொடங்கி அம்மாவும் தனமும் உள்ளிட்ட 15 கதைகள் அடங்கியுள்ளன. சராசரியான வாழ்க்கைச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் மனித மன ஓட்டங்களை வெகு யதார்த்தமாக பதிவு செய்துள்ள கதைகளாகவே அனைத்துக் கதைகளும் உள்ளன. எளிமையான […]

Read more

ராமராஜ்யா

ராமர் ராஜ்யமும் மக்கள் நலனும், ஜக்மோகன் சிங்ராஜு, எக்செல் புக்ஸ்,விலை 199 ரூ. ராமர் ராஜ்யமும் மக்கள் நலனும் இன்றைய வாழ்வில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி பெறுகின்றன என்பது குறித்த ஆய்வு மிக முக்கியமானதாக அமைகிறது. இத்தகைய ஆய்வுகளை அரசின் திட்டங்களுக்கும் அவ்வகையில் மக்கள் நல அரசின் இலக்கணத்தை ராம ராஜ்ஜியம் என்ற கருத்தாக்கத்தின் மூலம் பொருத்திப் பார்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஜக்மோகன் சிங் ராஜு, ராஜு மேற்கொண்ட ஆய்வு தான் நூலாக வெளிவந்துள்ளது. […]

Read more
1 8 9 10 11 12 36