முன்னத்தி ஏர்

முன்னத்தி ஏர், பாமயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 130ரூ. வேளாண் வழிகாட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘நிலமும் வளமும்’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. இயற்கை வேளாண்மையைத் தொடர்ந்து மேற்கொண்டுவரும் பாமயனின் இக்கட்டுரைகள், முன்னோடிகள் உருவாக்கிய இயற்கை வேளாண் நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது. முன்னோடிகளின் கடும் உழைப்பையும் தியாகத்தையும் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார் பாமயன். நன்றி: தி இந்து,24/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027150.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

கதை திரைக்கதை வசனம் இயக்கம்

கதை திரைக்கதை வசனம் இயக்கம், இரா. பார்த்திபன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 250ரூ. திரைக்கதை திரையான கதை எதையும் வித்தியாசமாகச் செய்யும் முனைப்பே ஒரு படைப்பாளியாக பார்த்திபனின் அடையாளம். அவர் எழுதி இயக்கி வெற்றி பெற்ற ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ சினிமா அப்படியான முயற்சிக்கு ஓர் புத்தகம் இப்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் திரைக்கதை, திரைக்கதை எழுதுபவர்களைப் பெரிதும் ஈர்த்திருந்தது. குறிப்பிட்ட கதாபாத்திரம் எந்த நிலையில் இருக்க வேண்டும், என்ன ஆடையை எப்படி அணிந்திருக்கவேண்டும் என்பது உட்பட அனைத்து விவரங்களும் நூலில் தரப்பட்டிருக்கின்றன. […]

Read more

மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை

மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை, தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம், விலை 40ரூ. கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு. அரசியல் சட்டத்தின் வாயிலான மாநில உரிமைகள், இந்தியக் கல்வி வரலாறு என்று இருவேறு கோணங்களில் கல்வி உரிமையை அணுகும் கட்டுரைகள். நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தாமஸ் பெய்யின் பொது அறிவு

தாமஸ் பெய்யின் பொது அறிவு, தமிழில் வெ.ஜீவானந்தம், மேன்மை வெளியீடு, விலை 50ரூ. அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலத்தில் அரசியல் சிந்தனையாளர் தாமஸ் பெய்ன் எழுதி ‘காமன் சென்ஸ்” நூலின் மொழிபெயர்ப்பு. சுதந்திரம், சமத்துவம் முதலிய மக்களாட்சியின் அடிப்படைகளையும் அவசியத்தையும் உணர்த்தும் நூல். நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பழந்தமிழில் காலங்கள்

பழந்தமிழில் காலங்கள், ச.சுபாஷ் சந்திரபோஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 160ரூ. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற காலப்பகுப்பை தொல்காப்பியர் காலம் தொட்டு விரிவான ஆதாரங்களுடன் விளக்கும் பழந்தமிழ் இலக்கண ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. மொழியில் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள நூல். நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அரிதார உலகில் அரிதாக வந்த அவதாரமே எம்.ஜி.ஆர்.

அரிதார உலகில் அரிதாக வந்த அவதாரமே எம்.ஜி.ஆர்., நாஞ்சில் பி.சி. அன்பழகன், கண்மணி பதிப்பகம், விலை 250ரூ. திரைப்பட இயக்குநரும் அதிமுக பேச்சாளருமான பி.சி.அன்பழகனின் கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகளின் தொகுப்பு. சினிமா, ஆன்மிகம், வரலாறு என்ற கூட்டுக் கலவையில் நடப்பு அரசியலின் காரமும் நெடியும் கொஞ்சம் தூக்கலாகவே உண்டு. நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அறிவியல் 1000

அறிவியல் 1000, அ.சப்பையா பாண்டியன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 300ரூ. அறிவியலை ஒரு விளையாட்டு போல எடுத்துச்சொல்வதில் கைதேர்ந்தவர் அ.சுப்பையா பாண்டியன். மாணவர்களுக்கு அறிவியலில் ஆர்வம் ஏற்படுத்தும்விதமாகப் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான தொடரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. அறிவியலின் அடிப்படையை விளையாட்டாகப் பரிசோதனைகள் மூலம் அறிந்துகொள்ள இந்நூல் உதவும். நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

டொரினா

டொரினா, கார்த்திக் பாலசுப்ரமணியன், யாவரும் பதிப்பகம், விலை 100ரூ. புதிய களத்தில் புதிய கதைகள் கார்த்திக் பாலசுப்ரமணியனின் முதல் தொகுப்பான டொரினாவிலுள்ள 12 கதைகளும் எளிய கதைகள் அல்லது 12 உண்மைகள். வீட்டைவிட்டு வெளியேறிய சொந்தங்கள், யோசிக்காமல் எதிர்வினையாற்றுபவர்கள், துணை இழந்த முதியவர்கள் என நமக்குத் தெரிந்திருக்கும் ஜீவன்கள்தான் இத்தொகுப்பின் பாத்திரங்கள். பின் ஏன் டொரினா? ஏனென்றால், நம்மிடமிருந்து பிரிந்தவர்கள், தொலைத்தவர்களை, நினைவுகளின் ஓரத்தில் கிடக்கும் விஷயங்களை எடுத்துவந்து நம் முன் நிறுத்துகிறது. இத்தொகுப்பின் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கதைகள் முக்கியமானவை. ஐடி துறையில் […]

Read more

சிவாஜியின் அரசியல் அத்தியாயம்

சிவாஜியின் அரசியல் அத்தியாயம், மு.ஞா.செ.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 350ரூ. சிவாஜி ஆளுமை 3-வது பாகத்தில் சிவாஜியின் அரசியல் பிரவேசம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. மிகச் சிறந்த இந்திய நடிகரான சிவாஜிக்கு அரசியலில் நடிக்கத் தெரியாது என்பதை அவரது ஒவ்வொரு அரசியல் முடிவுகளும் எடுத்துக்காட்டுகின்றன. காமராஜரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸை ஆதரித்தது தவறான முடிவு என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் பேசுகிறது. ‘ஏற்றுக்கொண்ட தலைமைக்கு சிவாஜி இறுதிவரை விசுவாசமாக இருந்தார். காங்கிரஸ் தன்னை மட்டம் தட்டியபோதெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல் அவமானங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தலைமைக்கு […]

Read more

மெய்ப்பொய்கை பாலியல் பெண்களின் துயரம்

மெய்ப்பொய்கை பாலியல் பெண்களின் துயரம், தொகுப்பு ருச்சிரா குப்தா, தமிழில் சத்தியப்பிரியன், கிழக்கு பதிப்பகம், விலை 325ரூ. சதை தின்னும் கழுகுகள் மனித வாழ்வில் துயரங்களும் ஒரு அங்கமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சிலருக்கோ துயரங்களே வாழ்க்கையாகிப்போகிறது. பெண்களுக்குத் துயரங்கள் பெண்ணாக இருப்பதாலேயே வந்தடைகின்றன. பெண்ணின் உடல் ஆணின் வக்கிரத்தால் எந்தளவுக்குச் சீரழிக்கப்படும் என்பதை சராசரியான வாழ்விலுள்ளவர்களால் கற்பனை செய்யவே முடியாது. இந்த நேரத்தில் சின்னச் சின்ன சந்துகளிலும் மறைவிடங்களிலும் பூட்டிய அறைகளுக்குள்ளும் பாலியல் தொழிலிடங்களிலும், உறவினர்களாலும் நண்பர்களாலும் காமுகர்களாலும் எத்தனையெத்தனை உடல்கள் வன்முறைக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றனவோ. பெண்களின் […]

Read more
1 6 7 8 9 10 36