காசி இராமேசுவரம்

காசி இராமேசுவரம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 599, விலை 420ரூ. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் மிகப்பெரிய பாலமான காசியும் இராமேசுவரமும் மிகப் பழமையான புண்ணிய திருத்தலங்கள் மட்டுமல்ல, அவை நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாகவும் திகழ்பவை. இவருடைய படைப்புகளின் வியக்கவைக்கும் தனித்தன்மை என்னவென்றால், அவர் எழுத எடுத்துக்கொள்ளும் பொருளின் மேல் அவருக்கிருக்கும் ஆதிக்கம். அவரது பரந்த விரிந்த அறிவு வேட்கை நூல்களின் தலைப்புகளைப் பார்த்தாலே பிரமிக்க வைத்துவிடும். எடுத்தது எப்பொருளாயினும் அப்பொருளின் நுணுக்கங்களையும் விழுமியங்களையும், ஒன்றுவிடாது ஆழ்ந்து ஆராய்ந்து தக்க […]

Read more

அனுமன் கதைகள்

அனுமன் கதைகள், கே. குருமூர்த்தி (மாயூரன்), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 172, விலை 90ரூ. வாயு புத்திரனாக அவதரித்த ஆஞ்சநேயர், மாருதி என்றழைக்கப்பட்டு பின்னர் அனுமனாக மாற்றம் பெற்றதாக அஞ்சனை மைந்தனின் கதை துவங்குகிறது. சிறுவயதில் அபார சுறுசுறுப்பும் ஆற்றலும் கொண்டு விளங்கிய அனுமன், சூரிய பகவானிடம் வேத சாஸ்திரங்களையும், சகல கலைகளையும் கசடறக் கற்றுத் தேர்ந்ததின் காரணமாக, பிற்காலத்தில் இராமபிரானால், நவவியாகரன் என்ற பாராட்டைப் பெறுகிறார். அனுமனின் பராக்ரமங்களை மிக அழகாக எளிய நடையில் சிறுசிறு கதைகளாகச் சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. […]

Read more

சிகரம் தொடுவோம்

சிகரம் தொடுவோம், ப. முத்துக்குமார சுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 192, விலை 145ரூ. ஒரு மனிதனின் எண்ணத்தையும், செயலையும் செம்மைப்படுத்துவதற்கான வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது. ஒருவனின் மனதையும் செயலையும் எவ்வாறு தூய்மைப்படுத்துவது? தோல்வியிலிருந்து எதிர் நீச்சல் போட்டு எப்படி வெற்றி பெறுவது? துன்பங்களை எப்படிக் கடப்பது? என்பனவற்றைத் தெளிவுபடுத்தும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது. ஒரு செயலால் பிறருக்குத் துன்பம் ஏற்படக்கூடாது. விமர்சனங்கள் ஒருவருடைய முன்னேற்றத்திற்கு சாதகமாகவும் அமையும், பாதகமாகவும் அமையும். ஆகவே விமர்சனங்கள் எப்போதும் ஆரோக்கியமானவையாகவே இருக்க வேண்டும். செய்யும் செயலில் […]

Read more

தேம்பாவணி

தேம்பாவணி, வீரமாமுனிவர், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி, விலை 2000ரூ. இத்தாலியைச் சேர்ந்தவரான ஜோசப் பெஸ்கி, 1680ம் ஆண்டு பிறந்தவர். கிறிஸ்தவ தொண்டராக, 1710ல் இந்தியாவுக்கு வந்தார். தமிழின் சிறப்பில் மனதைப் பறிகொடுத்த அவர், தமது 30வது வயதில் தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து, சிறந்த கவிஞராக உருவானார். தமது பெயரையும் “வீரமாமுனிவர்” என்று மாற்றிக்கொண்டார். தமிழ் எழுத்துக்களுக்கு அழகிய வடிவம் கொடுத்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அவர் எழுதிய தமிழ்க்காவியம் தேம்பாவணி. மிகப்பெரிய நூல் அது. […]

Read more

அம்ருதா

அம்ருதா, திவாகர், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 448, விலை 335ரூ. கங்கை கொண்ட ராஜேந்திர சோழ சக்கரவர்த்தியின் மகளான அம்மங்கையின் வயிற்றில் பிறந்தவர் அபயன். தெலுங்கு ராஜாவான அபயன் சோழ தேசத்து ஆட்சியை எப்படிப் பிடித்தார், பரந்து விரிந்த சோழ தேசத்தை எப்படி ஆட்சி செய்தார் என்பதே கதைக்களம். சோழர்கள் காலத்தில் உறவுகளுக்குள் நெருக்கம் ஏற்படவும், நிலையான ஆட்சிக்கும் பயன்பட்டு வந்த திருமணம், எப்படி சோழர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக மாற்றியது, பெண்கள் அரசியலில் எவ்வாறெல்லாம் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டனர் என்பதை விளக்கும் […]

Read more

அகிம்சையின் சுவடுகள்

அகிம்சையின் சுவடுகள், ப. முத்துகுமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 360, விலை 260ரூ. மகாத்மா காந்தியடிகள், மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் ஆகிய இரு தலைவர்களைப் பற்றி விவரிக்கிறது இந்நூல். காந்திஜியின் கொள்ளையால் ஈர்க்கப்பட்ட லூதர் கிங், 1895 ஆம் ஆண்டில் தொடங்கி 1965 ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஆப்ரிக்க மக்களின் உரிமைகளுக்காக நடத்திய எண்ணற்ற போராட்டங்கள் காந்திய வழிப் போராட்டங்கள்தாம். காந்திஜியின் வழிமுறை, அமெரிக்காவில் பயன்படுத்தக் கூடியத என்பதை 1920களிலேயே அமெரிக்க கறுப்பின மக்கள் உணர்ந்திருந்தனர். இந்தப் போராட்டத்தின்போது பள்ளிச் […]

Read more

ஆன்மாவின் பயணங்கள்

ஆன்மாவின் பயணங்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 280, விலை 210ரூ. நம் உடலை இயக்கும் ஆன்மா குறித்து, இந்த நூல் தெளிவாகக் கூறுகிறது. இந்த நூலில் கூறப்பட்டுள்ள சில பயிற்சிகள், தனக்கும் கடினமாக இன்று வரை இருந்து வருவதாகவும், வாசகர்கள் சலிப்படைய வேண்டாம் என்றும் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார் (பக். 19). ஆன்மா உடலை விட்டு நீங்கியபின், பல்வேறு உணர்வு நிலைக்கு செல்கிறது, தலைகீழாக எண்ணுவது ஒரு சிறந்த ஆழ்நிலை ஏற்படுத்தும் உத்தி, நெற்றியில் தட்டுவதன் மூலம், மனோவசிய நிலை மேலும் ஆழமாகி, […]

Read more

வெல்லுங்கள் இந்த வழிச் செல்லுங்கள்

வெல்லுங்கள் இந்த வழிச் செல்லுங்கள், மனிதவள மேம்பாடுட நிபுணர் மல்லியம் வெ. ராமன், புத்தகச் சோலை, மயிலாடுதுறை, விலை 80ரூ. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடிப்பவர்கள் படிக்க வேண்டிய நூல் இது. மனிதவள மேம்பாட்டு நிபுணரான மல்லியம் வெ. ராமன் வெற்றியின் ரகசியத்தை எளிய தமிழில் சுவைபட எழுதியுள்ளார். வெற்றியடைய வேண்டுமானால் முதலில் தேவை வெற்றி மனப்பான்மை. நிதானமாக, பொறுமையாக, அதே சமயம் விடாப்பிடியாகத் தொடர்ந்து லட்சியத்தை நோக்கி நடந்தால், ஒருநாள் வெற்றி சாத்தியமாகும் என்கிறார் ஆசிரியர். இது இவருடைய முதல் நூல் […]

Read more

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கல்வியை கடல் என்பார்கள். ஆனால் நூலாசிரியர் கல்வியை பூங்கா என்று புதிய சிந்தனையுடன் அணுகியுள்ளார். கல்வி களஞ்சியமாக திகழும் இந்த நூலில், சுமையான கருத்துக்களுக்கும், நீதிக்கதைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. நூலில் உள்ள கல்விச்சிந்தனை, குரு வணக்கம், இளைஞர்கள், பெண்கள், கல்வித் தத்துவங்கள் ஆகிய தலைப்புகள் வாசிப்பவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நாட்டை வல்லரசாக்கும் வலிமையும், புத்திக் கூர்மையும் இளைஞர்களுக்கு அவசியம் வேண்டும் என்று நூலாசிரியர் முனைவர் மு.ராசாராம் ஐ.ஏ.எஸ். வலியுறுத்துகிறார். […]

Read more

லெமுரியா குமரிக்கண்டம்

லெமுரியா குமரிக்கண்டம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, விலை 130ரூ. லெமுரியா – ஆராய்ச்சியாளர்கள் பலரை ஈர்த்த பெயர். தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியாக, உலக மக்கள் பலரும் கூறும் நிலப்பரப்பு. பூமிபந்தின் பல்வேறு இடங்களிலும் லெமுரியா இருந்ததாக அவரவர்கள் அடையாளம் காட்டினார்கள். ஆயினும், உண்மையில் லெமுரியா எங்கிருந்தது? பண்டைய தமிழர்களின் குமரிக்கண்டத்திற்கும், லெமுரியாவிற்கும் என்ன தொடர்பு? இரண்டும் ஒன்றா? தென் திசையே முன்னோர்களின் திசை என்றும், முன்னோர் வழிப்பாட்டைத் தென்திசை நோக்கியே செய்ய வேண்டும் என்பதும் இந்தியர்களின் நம்பிக்கை. இத்தகைய நம்பிக்கைக்கு, குமரிமுனைக்குத் தெற்காக […]

Read more
1 3 4 5 6 7 10