எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், வாலி,

எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், வாலி, மணிவாசகர் பதிப்பகம், விலை 90ரூ. கவிஞர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோர் பாடல்கள் எழுத, எம்.ஜி.ஆர். நடித்த காலக்கட்டம், தமிழ்த்திரை உலகில் ஒரு பொற்காலம் என்று கூறலாம். சிறந்த பாடல்கள் வரிசையாக வந்தன. அருமையான பாடல்கள் அணிவகுத்தன. கவிஞர் பொன்.செல்லமுத்து எழுதிய இந்தப் புத்தகத்தில், எம்.ஜி.ஆர். படங்களில் கண்ணதாசனும், வாலியும் எழுதிய பாடல்கள் விவரம் இடம் பெற்றுள்ளன. எம்.ஜி.ஆருக்கு பாட்டு எழுதிய மற்ற கவிஞர்களின் விவரமும் உள்ளது. மொத்தத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அனைவரும் விரும்பி ரசிக்கும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 3/5/2017.

Read more

அம்மா

அம்மா, வாலி, வாலி பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 60ரூ. சினிமாவைத் தாண்டி வாலிக்கிருந்த இலக்கியச் சிந்தனையை சுவைக்க விரும்புவோர் இந்தத் தொகுதியைப் படித்தாலே போதும். தாயை, தந்தையை, காஞ்சிப் பெரியவர், குலகுரு என்று பாடிய அவரேதான் முடிதிருத்தும் முனியனையும் பாடுகிறார். சலவைத் தொழிலாளியை, விறகு வெட்டியை, பெண்ணின் எழிலை, மின்னலை இப்படி அவர் தொடாத பொருளில்லை. அவர் பாடலில் இடம்பெற்றால் அந்தப் பொருளுக்கும் புது அர்த்தம் வந்துவிடுகிறது. தாய் பற்றிய கவிதையில் அம்மாவின் ஆன்மாவையே தரிசிக்க வைத்துவிடுகிறார். நன்றி: குமுதம், 6/8/2014. […]

Read more

வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியம், கலியன் எதிராசன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 152, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-538-0.html வைணவத்தின்பால் கொண்ட பற்று காரணமாக, இந்நூலாசிரியர் பல்வேறு இடங்களில் நடத்திய சொற்பொழிவின் தொகுப்பே இந்த நூல். பொய்கை ஆழ்வாரின் சிந்தனைகள், திருமாலை, திருப்பாவை, ஆண்டாளும் மீராபாயும் உள்ளிட்ட 13 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆழ்ந்த கருத்துகள், பொருத்தமான திருவாய்மொழி, திருவந்தாதி பாடல்கள் அதற்கான விளக்கமுடன் அமைந்த கட்டுரைகளில் முழுமையான வைணவ இலக்கியத்தை நம்மால் நுகர முடிகிறது. […]

Read more

சிறுவர் கதைக் களஞ்சியம் (தொகுதி 1, 2)

சிறுவர் கதைக் களஞ்சியம் (தொகுதி 1, 2), வானொலி அண்ணா என்.சி. ஞானப்பிரகாசம், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்.112, விலை 85ரூ. கதை சொல்லிகள் காலந்தோறும் இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளை நல்வழிப்படுத்தி, அவர்களை அறநெறியில் செல்ல வழி ஏற்படுத்தித்தரும் கதைகளைச் சொல்லத்தான் பாட்டிமார்கள் இல்லை. அந்தக் குறையை நீக்கியிருக்கிறார் என்.சி. ஞானப்பிரகாசம். நம்காலத்தில் வாழ்ந்து மறைந்த அறிவாளர்கள், அன்பாளர்கள், அருளாளர்கள், ஞானிகள், தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை கதைகளாக்கி, சிறுவர்களின் மனதில் பதியவைக்கும் உத்தி சிறப்பு. குழந்தைகளும் குழந்தைகளுக்குக் […]

Read more

வாலி சிறுகதைகள்

வாலி சிறுகதைகள், வாலி, வாலி பதிப்பகம், 12/28, சௌந்தரராஜன் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-0.html சிறுகதையோ, நெடுங்கதையோ இருந்தால் சவுக்காயிருக்க வேண்டும் அல்லது சவுக்காரமாய் இருத்தல் வேண்டும். இதுதான் சிறுகதைகளுக்கு வாலி சொல்லும் இலக்கணம். இத்தொகுப்பு முழுதும் அந்த நெடிதான் தூக்கல். சங்கீதத்திற்கு ஜாதி மதம் கிடையாது என்பதை ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குருவை வைத்து, கோவிந்த நம்பூதிரியின் ஜாதி வெறியை சவுக்கால் அடித்திருக்கும் அது […]

Read more