உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்

உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள், ஜி. பிரான்சிஸ் சேவியர், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக். 216, விலை 195ரூ. நூல் ஆசிரியர், இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னனி கல்வி நிலையங்களில் பேராசிரியராக, முதல்வராக பணியாற்றியவர். இவர்தான் பயணம் செய்த நாடுகளில் படித்த புத்தகங்களில், பெற்ற அனுபவங்களை கதை வடிவில் எழுதி உள்ளார். தான் சொற்பொழிவுகளில் கேட்டது முதல், தன் தாத்தா கூறியது வரையிலான 100 கதைகளை தொகுத்திருக்கிறார். கவலைக்கும் பரிதவிப்புக்கும் ஏற்ற சிறந்த மாற்று மருந்து, வேலை. எடிசனின் சில நிமிட பொறுமை, […]

Read more

முதல் தலைமுறை

முதல் தலைமுறை, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், பக். 184, விலை 110ரூ. நூலாசிரியர் வெ. இறையன்பு, டில்லியில் தன் பயிற்சிக் காலத்தில் இந்தி மொழியின் எதேச்சதிகாரத்தையும், பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டதையும் எதிர்த்து குரல் கொடுத்ததற்காக, குறைந்த எல்லையில் தேர்ச்சி பெற்றதை இந்திக்கார்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என சாடுகிறார். உச்சத்தில் இருந்த சோழ சாம்ராஜ்யம் பின்னடைவு கண்ட காலத்தில், கம்பன் வாழ்ந்ததால், சோழநாட்டு இளைஞர்களின் இதயத்தில் மறுபடியும் போர்க்குணத்தைப் பாய்ச்ச, யுத்த காண்டத்தில் மட்டும் 4000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை படைத்துள்ளார் என்பதும், ‘முதலில் […]

Read more

உங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும்

உங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும், சி.எஸ். தேவநாதன், விஜயா பதிப்பகம். அறிவாற்றல், நினைவாற்றல் எனும் இரண்டு ஆளுமை ஆற்றல் அடிப்படைகளை, அறிவியல் பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் ஆராய்ந்து எழுதி உள்ள நூல் இது. முறையான கல்வியும், புத்தக வாசிப்பும் அறிவாற்றலுக்கு ஆதாரமாக உள்ளது, நினைவாற்றல் பற்றிய உளவியல் பூர்வமான விவரங்கள், நினைவாற்றலுக்கு தேவையான சில செய்முறை குறிப்புகள் ஆகியவற்றை ஆசிரியர் விவரித்துள்ளார். நூல், ராஜா பர்த்ருஹரியின் சதகச் சாரத்தோடு துவங்குகிறது இடையில் விதுர நீதியைக் குறித்துப் பேசுகிறது. புத்தகப் பொக்கிஷமாக விளங்கும் புதுக்கோட்டை ஞானாலயாவை […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ. சமீபத்தில் மரணம் அடைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன், தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார். வாழ்க்கைக் குறிப்பு போல இல்லாமல் நாடகம், சினிமா, ஆகியவற்றில் தொடக்கத்தில் இருந்து தான் சந்தித்த அனுபவங்கள் மற்றும், தான் அறிமுகம் செய்துவைத்த நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை சுவைபட கொடுத்து இருக்கிறார். தன்னுடன் நடித்த ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் அவர் மயங்கிவிழுந்துவிட, அவரை கொலை செய்துவிட்டோமோ என்று பதறியதையும், பெரியார், முத்துராமலிங்கத்தேவர், […]

Read more

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும், ஜி.எஸ்.எஸ்., விகடன் பிரசுரம், பக். 150, விலை 90ரூ. வரலாற்றில் பல முக்கிய சம்பவங்களின் ரகசியங்கள் இன்னும் உடைக்கப்படவில்லை. பல கேள்விகளுக்கு, விடை கிடைக்கவில்லை. அவற்றில் 37 மர்மமுடிச்சுக்கள், இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நிலவில், ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்தாரா. நெப்போலியன் எப்படி இறந்தார். ஹிட்லரின் டைரி இருக்கிறதா, எவரெஸ்ட்டை முதலில் அடைந்தவர் யார், அழியா காவியங்களை எழுதியவர் ஷேக்ஸ்பியர் தானா, ராபின் ஹுட் கற்பனை கதாபாத்திரமா என, இதுவரை நாம் ஏற்றுக்கொண்டிருந்த கருத்துகளை, இந்த புத்தகத்தின் மூலம் சந்தேகிக்க […]

Read more

போட்டுத்தள்ளு

போட்டுத்தள்ளு, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்குப் பதிப்பகம், சென்னை, பக். 200, விலை 170ரூ. தொழிலில், விற்பனையில் போட்டியை வெல்லும் கலையை சொல்லி தருகிறார் சதீஷ். நாம் செய்யும் தொழிலின் அடிப்படையை நாமே சரியாக தெரிந்துகொள்ளவில்லை என்றால், போட்யை எப்படி சரியாகக் கணிப்பது? போட்டியாளர் யார் என்பதை எப்படி அறுதியிடுவது, நம் தொழிலின் துவக்கமே நான் யார், எந்தத் தொழிலில் இருக்கிறேன், யார் என் வாடிக்கையாளர், அவரின் எந்தத் தேவையை நான் பூர்த்தி செய்கிறேன் என்ற ஆதார கேள்விகளுக்கு விடை காண்பதுதான். நீங்கள் சுய தொழில் […]

Read more

உங்களின் முன் மாதிரி யார்?

உங்களின் முன் மாதிரி யார்?, பேரா. கு. நல்லதம்பி, விஜயா பதிப்பகம், கோவை. ஆசிரியர் பணி ஓர் அறம் என்ற நமக்குப் பரிச்சயமான தத்துவத்தை ஒரு புதிய கோணத்தில் புதிய வடிவத்தில் இந்த நூல் விவரிக்கிறது. அதே நேரத்தில் ஆசிரியரின் இலக்காகிய நன் மாணாக்கரையும் இணைத்துப் பேசுகிறது இந்த நூல். இருவரின் பரிணாம வளர்ச்சி பூரணத்துவம் பெறுவது எப்படி, எப்போது என்பதை ஆசிரியர் விரித்துரைத்துள்ளார். ஓர் அநை நூற்றாண்டுக்கும் முந்தைய கல்விக்கூடச் சூழலில், தமக்குக் கிடைத்த அனுபவங்களின் சாறு பிழிந்து, தம் ஆசிரியர்கள், மாணக்கர்களின் […]

Read more

சித்தரைத் தேடி

சித்தரைத் தேடி, கயிலை புலவர் சீ. சந்திரசேகரன், விஜயா பதிப்பகம், கோவை, பக். 592, விலை 400ரூ. ஸ்வீடன் நாட்டில் பிறந்தவர் சித்தரான கதை தெரியுமா? சித்தம் என்பது மனம். கடிவாளம் இல்லாத குதிரையைப்போல், கிளைக்குக் கிளை தாவிக்கொண்டே இருக்கும் குரங்கைப்போல், ஓய்ச்சல் ஒழிவே இல்லாமல் சதா அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை, தவம் எனும் பெருமுயற்சியால் தன்வயப்படுத்தியவர்களே சித்தர்கள். சித்தர்களைப் பற்றிய புத்தகங்கள், சமீபத்தில் பெருமளவில் வந்துள்ளன. ஆனால் இந்த நூலில் ஆசிரியர் மிக முயன்று, அருளாளர்கள், ஞானிகள், சித்தர்கள் என்று 200பேர்களது வாழ்க்கை […]

Read more

அறிவுரைகள் ஜாக்கிரதை

அறிவுரைகள் ஜாக்கிரதை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 80, விலை 45ரூ. வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கலுக்கு, கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு அவை வருகின்றன. வாயிலே ஒரு மரக்குச்சியை கவ்விக்கொண்டு மனம் நிறைய நம்பிக்கையோடு பறந்து வரும் பறவையின் நம்பிக்கை, நம்மில் எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது? தயவுசெய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும் அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்தி விடுங்கள். குப்பைகளைக் கொட்டிவைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கையுடையவர்களையே […]

Read more

கடைசிக்கோடு

கடைசிக்கோடு, ரமணன், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 80ரூ. இந்தியாவின் வரைபடம் முதன் முதலாக 1806ம் ஆண்டு எவ்வாறு தயாரிக்கப்பட்டது? அதன் மூலம் இமயத்தின் உயரமான சிகரம் எவரெஸ்ட் என்பது எப்படி கண்டறியப்பட்டது? என்பது போன்ற பல தகவல்கள் நாவல் போல சுவைபட தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/1/2014.   —-   உடல் உண(ர்)வு மொழி, தே. சவுந்தரராஜன், விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர் 1, விலை 80ரூ. எப்போது உண்ணக்கூடாது, எதை […]

Read more
1 6 7 8 9 10