கடாரம்

கடாரம், மாயா, வானதி பதிப்பகம், சென்னை, பக். 704, விலை 350ரூ. பதினோராம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை அரசாண்ட முகலாம் இராஜேந்திர சோழனின் காலத்தில் இக்கதை பயணிக்கிறது. இராஜேந்திர சோழன் படையெடுத்து கைப்பற்றிய கடாரம் எப்படி இருந்தது? அதை ஆண்ட அரச மரபினர் யார்? என்பவை நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் இராஜே3திர சோழன் கடாரம் நோக்கிப் படையெடுத்ததையும் அவனுடைய மெய்கீர்த்தியும் திருவாலங்காட்டுப் பட்டயம் மூலம் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கடாரம், தற்போதைய மலேசிய தீபகற்பத்தில் இருக்கும் கெடா பகுதி என்பதை அறியும்போது அது தற்போது […]

Read more

தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும்

தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும், மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 144, விலை 80ரூ. தாயுமானவர் பாடிய பாடல்கள் அவர் பெயராலே தாயுமானவர் பாடல்கள்என வழங்குவதை போலவே வேதாத்திரி மகரிஷியின் பாடல்கள் உரைகள் எல்லாம், வேதாத்திரியம் என்று அவர் பெயராலேயே வழங்கப்படுகின்றன. இருவருமே குரு அருள் தேவை என்று கூறினர். எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற தாரக மந்திரத்தை தந்தவர் மகரிஷி. உடலோம்பல் இறை […]

Read more

மாணவர்களுக்கு வள்ளுவர்

மாணவர்களுக்கு வள்ளுவர், என். வீரகண்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 168, விலை 100ரூ. இந்த நூலில், அறத்துப் பால், பொருட்பால் ஆகியனவற்றில் இடம் பெற்றுள்ள, 108 அதிகாரங்களில் உள்ள, 1080 குறட்பாக்களின் எளிய, இனிய உரைகள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, கற்கக் கசடற என்ற குறளை, கற்க வேண்டிய நூல்களை மிகத் தெளிவுடன் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் கற்ற கல்விக்குத் தக்கபடி நல்வழியில் வாழ வேண்டும் என்று சொல்கிறார். மாணவ, மாணவியர் படித்துப் பயன் […]

Read more

தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்

தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும், சா. காந்தி, முகம் வெளியீடு. தமிழக மின்வெட்டின் 50 ஆண்டு வரலாற்றைத் துல்லியமான தரவுகளுடன் சரியான அரசியல் நிலைப்பாட்டில் இருந்து தொகுத்து வழங்குகிறது இந்த நூல். மின்மிகை மாநிலமாக விளங்கிய தமிழகத்தில், 28/11/2008ம் தேதிக்குப் பின்னர்தான் அசுர மின்வெட்டு தொடங்கியது என்று துல்லியமான தரவுகளுடன் விவரிக்கிறார் சா. காந்தி. மின்சார அரசியலின் பன்முகங்களை, அரசு மின்வாரியத்தை அழித்து தனியார் துறையினர் ஆக்கிரமிப்பதையும், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரத்தை சகாய விலையில் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும் நெஞ்சம் பதைபதைக்க […]

Read more

மகாபாரதம் ஒரு கண்ணோட்டம்

மகாபாரதம் ஒரு கண்ணோட்டம், டி.ஆர்.குப்புசாமி, பக். 552, விலை 350ரூ. மகாபாரதத்தின் நீள அகலங்களில் ஆழங்கால் பதித்துள்ள நூலாசிரியர், 40 அத்தியாயங்களில், இந்தக் காப்பியத்தின் இதிகாசத்தின் அற்புதச் சொல்லாடங்களை, கருத்துச் செல்வங்களை எழுதியிருக்கிறார். படிப்பதற்கு சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கிய மகாபாரதத்தில் தர்ம-அதர்ம யுத்தம் கவனத்தை கவரக்கூடியது. படிக்கப் படிக்க இனிக்கும் மகாபாரத நூல் வரிசையில், இந்தப் புத்தகத்திற்கு முன்னுரிமை வழங்கலாம். குறிப்பாக சமஸ்கிருத சுலோகங்களைத் தமிழிலேயே எழுதி அதற்கான விளக்கம், விரிவுரையே பழகு தமிழில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதிகாசங்கள் மீது நூலாசிரியருக்கு உள்ள ஈடுபாடும், […]

Read more

இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும்

இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும், பா.கமலக்கண்ணன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 368, விலை 200ரூ. அருட்பிரகாச வள்ளலாரின் வரலாற்றையும், அவர் அருளிய திருஅருட்பாக்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் தாங்கிய விரிவான ஆய்வுப் புத்தகம் இது. வள்ளலார் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்கள், அவரது சத்திய ஞான வாக்குகள், அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இராமலிங்கர் சென்னை, ஏழுகிணறு, வீராசாமிப்பிள்ளை தெருவில் பழைய கதவு எண் 39இல் வசித்தது முதல் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் உள்ள அறைக்குள் […]

Read more

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை

ஓய்வுக்குப்பிறகும் உற்சாக வாழ்க்கை, மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 272, விலை 155ரூ. பணி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமின்றி 60 வயதை எட்டிய அனைவருமே ஓய்வு பெற்றவர்களே. இவர்களில் பலர் தங்களது சுறுசுறுப்பான வாழ்க்கையும், சம்பாத்தியமும் நம்மைக் கடந்துவிட்டது. இனி பிறர் தயவில்தான் வாழ வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மையால் உந்தப்பட்டு விரக்தி அடைகிறார்கள். அந்த விரக்தியிலிருந்து விடுபட்டு முதியவர்கள் உற்சாகத்துடன் வாழவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் தங்களை அணுகாமல் இருக்க இளைஞர்கள் எச்சரிக்கையுடன் வாழவும் […]

Read more

திருவள்ளுவர் திருவுள்ளம்

திருவள்ளுவர் திருவுள்ளம், பெருவெளிராமன், கணபதி பதிப்பகம், பக். 144. திருக்குறளில் வீடு பேறு பற்றிச் சொல்லப்படவில்லை என்னும் கருத்தை மாற்றி, ஆதிபகவானை அறிதலே வீடு பேற்றை நல்கும் என்று நூலைத் தொடங்கியுள்ளார். பாயிரம் திருவள்ளுவர் எழுதவில்லை என்ற கருத்தையும், வன்மையாக மறுத்து எழுதியுள்ளார். திருவள்ளுவரின் திருவுள்ளத்தை ஊடுருவி பல குறட்பாக்களுக்கான நுண் பொருளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கிய நூல்கள், தமிழ் மற்றும் வட மொழியில் உள்ள ஆன்மிக நூல்கள் பலவற்றின் துணையும் கொண்டு, இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பல்வேறு நூலறிவும், […]

Read more

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள்,வையவன், தாரிணி பதிப்பகம், பக். 418, விலை 450ரூ. சிறுகதை என்ற இலக்கிய முயற்சி, எதிர் காலத்தில் எங்கே இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கும் நேரத்தில், வெளிவந்திருக்கிறது இந்த சிறுகதை தொகுப்பு. ஆசிரியர் அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தமிழ்ச் சிறுகதைகள் உலகில் தனி முத்திரை பதித்தவர் என்று போற்றப்படுபவர். 418 பக்கங்களில் 80 சிறுகதைகள் அடங்கிய இந்த பிரம்மாண்டமான தொகுப்பு சிறுகதைப் பிரியர்களுக்குக் கொடுத்த விருந்து என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு கதையுமே படித்து ரசிக்க வேண்டியவை. -மயிலை சிவா.   —- […]

Read more

பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்

பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும், ஞா. தேவநேயப் பாவாணர், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32, பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, பக். 192, விலை 95ரூ. தமிழ் மொரீ, தமிழர் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் தொன்மை சிறப்புகளை ஆராய்ந்து நிறுவ முயலும் பல கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. முன்னுரையின் விரிவாக ஆறு தலைப்புகளிலான கட்டுரைகளும், பண்டைத் தமிழ் நாகரிகம் பற்றி, 14 தலைப்புகளிலான கட்டுரைகளும், கலைகள் வரிசையை விவரிக்கும், 23 கட்டுரைகளும், தமிழர் அறிவியலை போற்றும் 24 கட்டுரைகளும் […]

Read more
1 7 8 9 10